6 மாத குழந்தைகளுக்கான உணவுகள்!

Written by
Last Updated on

குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாத காலத்திற்கு தாய்ப்பாலை மட்டுமே அருந்தி வருவார்கள்.குழந்தைகளின் தேகம் மிகவும் மெல்லியதாக, வளர்ச்சி நிலையில் இருப்பதால் அவர்களின் வளர்ச்சிக்கு உதவி தேவைப்படுகிறது.அந்த வகையில் தாயின் உடலில் உற்பத்தியாகும் அமிர்தமான ‘தாய்ப்பால்’,அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்த ஆறு மாத காலத்திற்கு பின், குழந்தையின் உடல் மற்றும் மனநல வளர்ச்சிக்குத் தாய்ப்பாலில் அடங்கியுள்ள சத்துக்களுடன், கூடுதல் சத்துக்களும் தேவைப்படுகின்றன.அதை குழந்தைகள் பெறும் பொருட்டு, அவர்கள் ஆறு மாத வயதை அடைந்தவுடன், அவர்களுக்குத் திட உணவுகளை அறிமுகப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைப்பர். இந்த பதிப்பில் 6 மாத குழந்தைகளுக்கான என்னென்ன உணவுகளை அளிக்கலாம் என்பது குறித்து,’மாம்ஜங்ஷன்’ விரிவான அலசலை அளித்துள்ளது. வாருங்கள் படித்தறியலாம்.!

திட உணவுகளுக்குக் குழந்தை தயார் என்பதை அறிவது எப்படி?

வெறும் வயதை காரணம் காட்டி குழந்தைகளுக்குத் திட உணவுகளை அழித்துவிட முடியாது. குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை ஆறு மாத காலத்திற்குள் அடைந்து இருக்க வேண்டியது அவசியம். அப்படி குறிப்பிடத்தக்க வகையில், குழந்தைகளிடம் காணப்பட வேண்டிய வளர்ச்சி நிலைகள் யாவை எனக் கீழே காணலாம்:

  1. குழந்தைகளால் 6 மாத கால கட்டத்தில் நாற்காலியில் அமர இயல வேண்டும்.
  1. குழந்தைகளின் தலை மற்றும் கழுத்து நேராக நிற்க வேண்டும்.
  1. குழந்தைகளின் வாய் ஸ்பூனை நோக்கி திறந்து மூடும் அளவிலான வளர்ச்சி நிலையைப் பெற்றிருக்க வேண்டும்.
  1. குழந்தைகள் உணவை மெல்லக் கூடிய திறன் கொண்டிருக்க வேண்டும்.
  1. உணவுகளைப் பறித்து வாயில் இட்டுக்கொள்ளும் ஆர்வம் குழந்தைகளிடம் காணப்பட வேண்டும்.
  1. குழந்தைகள் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் பருகிய பின்னரும் பசித்திருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு திட உணவு அளிக்கையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பிள்ளைகளுக்குத் திட உணவு கொடுக்கையில் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்; அவ்விஷயங்கள் என்னென்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

  1. குழந்தைகளுக்குத் திட உணவு அளிக்க தொடங்குகையில் பழத்தைக் கூழாக்கி அளிக்க ஆரம்பியுங்கள்; இது செரிமானமாக எளிதாக இருக்கும்.
  1. எப்பொழுதும் ‘3 நாட்கள்-காத்திருப்பு-விதி’யைப் பின்பற்றுங்கள்.
  1. அதாவது ஒவ்வொரு இரு புது உணவின் அறிமுகத்திற்கும் இடையில், மூன்று நாட்கள் இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.
  1. இவ்விதி மூலம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவினால் ஒவ்வாமை ஏற்படுகிறதா? என்பதை சோதித்தறியலாம்.
  1. அளிக்கும் உணவுகளால், குழந்தைகளின் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டால், அந்த உணவினை அளிப்பதை தற்காலிகமாக நிறுத்தி விடுங்கள்.
  1. உங்கள் மடியில் அல்லது நாற்காலியில் குழந்தையை அமர வைத்து குழந்தைக்கு திட உணவினை அளியுங்கள்; குழந்தைகள் படுத்திருக்கையில் திட உணவுகள் அளிப்பதை தவிருங்கள்.
  1. குழந்தைகளுக்கான திட உணவுகளைச் சமைக்கையில் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பாலை சேர்த்தல் கூடாது; குழந்தைக்கான உணவினை சமைத்த பின்னர், அந்தச் சமைத்த உணவில் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பாலை சேர்த்து குழந்தைக்கு அளிக்கலாம்.
  1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் உணவு மிக மிருதுவானதாக, சரியான முறையில் சமைக்கப்பட்டதாக, மென்று விழுங்க எளிதானதாக இருக்க வேண்டும்.
  1. முதலில் குறைந்த அளவு உணவை ஊட்ட ஆரம்பித்து, மெதுவாக உணவின் அளவை அதிகரிக்கவும்.
  1. தாய்ப்பாலை மறக்கடிக்க உதவும் இந்தத் திட உணவு, ஒரு ஒற்றை தானிய உணவாக இருத்தல் வேண்டும்.
  1. குழந்தைகளின் உணவில் உப்பு, சர்க்கரை, தேன் போன்றவற்றை சேர்ப்பதைத் தவிருங்கள்.
  1. குழந்தைகள் வீட்டில் இருக்கும் சமயங்களில் மட்டும் புது உணவுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
  1. சில குழந்தைகளுக்கு திட உணவுகளின் அறிமுகத்தால் மலச்சிக்கல் ஏற்படலாம்.
  1. குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் முன் சில வகை உணவுகளை அளிக்கையில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
  1. குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி உணவுகளை ஊட்ட வேண்டாம்; அவர்கள் படிப்படியாகத் திட உணவுகளை உட்கொள்ள பழகிக்கொள்வர்.

தாய்ப்பால் மறக்கடிக்கும் உணவிற்கான 3 நாட்கள்-காத்திருப்பு-விதி

குழந்தைகளுக்கு திட உணவுகளை இரவில் அறிமுகப்படுத்துவதையும் அளிப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு புதிய திட உணவுகளை எப்பொழுதும் காலை அல்லது மதிய வேளைகளில் அளியுங்கள்; இவ்வாறு அளிப்பதால், அளிக்கப்பட்ட உணவால் குழந்தைகளின் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக சோதித்தறிந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

3 நாட்கள்-காத்திருப்பு-விதி:

நாள்அளவுவேளை
நாள் 11 மேஜைக்கரண்டிமதிய வேளை மட்டும்
நாள் 22 மேஜைக்கரண்டிமதியம் மற்றும் காலை வேளைகளில்
நாள் 33 மேஜைக்கரண்டிமதியம் மற்றும் காலை வேளைகளில்

6 மாத குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் தேவை; அப்படி குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய சத்துக்கள் என்னென்ன என்பதை பற்றி இங்குப் படித்து அறியலாம்.

தாய்ப்பால்

குழந்தைகளின் ஆறு மாத வயது கால கட்டத்தின் பொழுது அவர்களுக்கு தாய்ப்பால் ஒரு இன்றியமையாதத் தேவையாகவே இருக்கும். ஏன் எனில் குழந்தைகள் தாய்ப்பாலின் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வைட்டமின் ஏ சத்துக்களை அதிகம் பெறுவர்.
அன்னையின் தாய்ப்பாலில் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புகள், தாதுக்கள் என உடல் வளர்ச்சிக்குத் தேவையான அத்தனைச் சத்துக்களும் நிறைந்து உள்ளன.

இரும்பு

குழந்தைகள் ஆறு மாத வயதை அடைந்த பின்னர் அவர்களுக்குக் கட்டாயமாக அளிக்கப்பட வேண்டிய ஒரு சத்து ‘இரும்பு’ ஆகும்; குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றல் வளர்ச்சிக்கு இரும்பு சத்து மிகவும் அவசியம்.

மேலும் குழந்தைகளின் உடலில் இரத்த சிவப்பு அணுக்களை அதிகரித்து, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்பு சத்து அதிகம் உதவும்.

ஜிங்க்

குழந்தைகளுக்கு ஆறு மாத வயதிற்கு பின் ஜிங்க் நிறைந்த உணவுகளை அளிப்பது அவசியம்; இவ்வாறு அளிப்பதால், குழந்தைகள் தங்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையானத் தாது சத்துக்களைப் பெறுவர்.

கால்சியம்

குழந்தைகளுக்கு ஆறு மாதகாலத்திற்கு பின் தினமும் 500 மில்லி கிராம் அளவு கால்சியத்தை அளித்து வர வேண்டியது அவசியம்; இது குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

வைட்டமின்கள்

குழந்தைகளின் வளர்ச்சிக்கு ‘வைட்டமின்கள்’ மிக முக்கியமானவை; குழந்தைகளின் முழு உடல் வளர்ச்சி மற்றும் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி, செயல்பாட்டிற்கு வைட்டமின்கள் அவசியம்.

  • வைட்டமின் ஏ – குழந்தைகளின் கண் பார்வை மற்றும் வளர்ச்சி மேம்பட உதவும்; ஆரோக்கியமான சருமம் கிடைக்க உதவும்; இது குழந்தைகளின் உடலில் ‘மாலைக்கண்’ எனும் நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.
  • வைட்டமின் பி – குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டல வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவும்.
  • வைட்டமின் சி – குழந்தைகளின் பல் மற்றும் தோல் வளர்ச்சிக்கு உதவும்; இது குழந்தைகளின் உடலில் ‘ஸ்கர்வி’ எனும் நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.
  • வைட்டமின் டி – குழந்தைகளின் எலும்பு மற்றும் தேகத்தைப் பலப்படுத்த உதவும்; இது குழந்தைகளின் உடலில் ‘ரிக்கெட்ஸ்’ எனும் நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.
  • வைட்டமின் இ – இதில் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை நிறைந்து உள்ளது; இது குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு உதவும்; வைட்டமின் இ சத்துக்கள் குழந்தைகளின் தலைமுடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
  • வைட்டமின் கே – இது குழந்தைகளின் இரத்தம் உறைதல் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவும்; இது குழந்தைகளின் உடலில் ‘இரத்த சோகை’ எனும் நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

ஒமேகா 3

குழந்தையின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஒரு அவசிய தேவை ஆகும். இச்சத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு ஒரு அத்தியாவசியமானத் தேவை ஆகும். ஒமேகா 3 சத்துக்களைக் குழந்தைகள் அவசியம் பெற, அச்சத்து நிறைந்துள்ள உணவுகளைத் தாய்மார்கள் தொடர்ந்து அளித்து வருதல் அவசியம்.

குழந்தைகள் எந்த அளவு உணவைக் கட்டாயமாக உட்கொள்ள வேண்டும்?

முதலில் குழந்தைகளுக்கு 1 தேக்கரண்டி அல்லது 5-10 மில்லி அளவிலான திட உணவுகளைக் கொடுக்க தொடங்குங்கள்; குழந்தைகள் உண்ண மறுத்தால், அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம். குழந்தைகள் அளிக்கப்படும் ஒரு தேக்கரண்டி உணவில், அரைத் தேக்கரண்டி அளவு உணவு உண்டால் கூடப் பரவாயில்லை; முதல் முயற்சியில் அதுவே பெரும் வெற்றி. படிப்படியாகக் குழந்தைக்கு அளிக்கும் திட உணவின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

திரவ உணவுகளை மட்டுமே உட்கொண்டிருந்த குழந்தைகள், திடீரென திட உணவினை உட்கொள்வது கடினம்; உணவு சரியான பதத்தில் இல்லாமல் இருந்தால், அது குழந்தைகளின் வயிற்றை காயப்படுத்தலாம். ஆகையால் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவு சரியானப் பதத்தில் உள்ளதா? என்பதை நன்கு உறுதி செய்த பின், உணவைக் குழந்தைகளுக்கு அளிக்கத் தொடங்குங்கள்.

6 மாத குழந்தைக்கு அறிமுகப்படுத்த தகுந்த உணவுகள்

பால்

குழந்தைகள் பிறந்து முதல் 6 மாத காலத்திற்கு தாய்ப்பால் அளிப்பது போல, தாய்ப்பால் சுரப்பு இருக்கும் வரையில் அவர்களுக்குத் தாய்ப்பால் அளித்து வருவது நன்று (1); குழந்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் அளித்து வருதல் நல்லது. தாய்ப்பால் இல்லாத பட்சத்தில், ஒரு நாள் விட்டு மறுநாள் என 24-37 அவுன்ஸ் ஃபார்முலா பாலைக் குழந்தைக்கு அளித்து வரவும். பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை.

நிலை 1 பழங்கள்

ஆப்பிள்கள், அவகேடோ, ஆப்ரிகாட், வாழைப்பழம், மாம்பழம், நெக்டரின்ஸ், பீச் பழங்கள், பப்பாளி, பியர்ஸ், பிளம்ஸ், ப்ரூனேஸ், சப்போட்டா, பூசணி மற்றும் கிவிப் பழம் போன்ற பழ வகைகளைக் கூழாக்கிக், குழந்தைகளுக்கு தவறாமல் அளிக்க வேண்டும்.

நிலை 1 காய்கறிகள்

வேகவைத்து மற்றும் மசித்த காய்களைக் குழந்தைகளால் எளிதில் செரிக்க முடியும்; அவ்வகையில், பீன்ஸ், கேரட்கள், இனிப்பு உருளைக் கிழங்கு, ஸ்குவாஷ், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்குகள் போன்ற காய்களை வேகவைத்து, மசித்து குழந்தைகளுக்கு அளிக்கலாம்.

தண்ணீர்

குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 3 முறை எனத் தண்ணீரை அளித்து வருதல் நல்லது.

தானியங்கள் மற்றும் பருப்புகள்

அதிக ஊட்டச்சத்துக்கள், புரதம் மற்றும் தாதுக்கள் அடங்கிய தானிய வகைகளான அரிசி, பார்லி, ஓட்ஸ், பாசிப்பயறு மற்றும் பருப்பு வகைகளைக் குழந்தைகளுக்கு அளிக்கலாம்.

இறைச்சி

வேகவைத்து, கூழாக்கப்பட்ட கோழி, மீன் வகை இறைச்சிகளைக் குழந்தைகளுக்கு அளிக்கலாம்; இவ்வுணவுகளை குழந்தைகளின் உணவு டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த இறைச்சி வகைகளைக் குழந்தைகளுக்கு அளிக்கையில், எலும்பு அல்லது முள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

6 மாத குழந்தைகளுக்கான வார ரீதியான உணவு அட்டவணைகள்

ஆறு மாத வயது நிரம்பிய குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய உணவுகள் வார ரீதியாக பட்டியலிடப்பட்டு இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன; வார ரீதியான உணவு அட்டவணை விவரம் குறித்து இங்குக் காணலாம்.

வாரம் #1

Week 1

முதல் வாரத்தில் குழந்தைகளுக்கு திட உணவுகளை அறிமுகப்படுத்துகையில் ‘3 நாட்கள்-காத்திருப்பு-விதி’யை நிச்சயம் பின்பற்ற வேண்டும்; குழந்தைகளுக்குத் திட உணவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அளிக்க வேண்டும். இந்த வாரத்தில் குழந்தைகளுக்குதன தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பாலைக் கண்டிப்பாக அளிக்க வேண்டும். இந்த வாரத்தில் குழந்தைக்கு உணவு அளிப்பது, குழந்தையின் உடல் உணவை எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதை சோதிக்கவே என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

வாரம் #2

Week 2

முதல் வாரத்திலேயே அரை-திட வகை உணவுகளை அளித்து குழந்தையின் உடல் நிலையைப் பரிசோதித்து ஆகிவிட்டது; தற்பொழுது இரண்டாவது வாரத்தில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய மேலும் இரு புதிய வகை உணவுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

இரண்டாவது வார கடைசியில் குழந்தைகளுக்கு நான்கு புதிய உணவுகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தாய்மார்களின் கவனத்திற்கு:

குழந்தைகளின் உண்ணும் நேரம், உறங்கும் நேரம், விளையாடும் நேரம் என்று சரியாக இவற்றை பிரித்து தீர்மானித்து, அதை பின்பற்றுங்கள்; இது குழந்தையின் வளர்ச்சியைச் சீராக்க உதவும்.

வாரம் #3

Week 3

மூன்றாவது வார இறுதியில் குழந்தைகள் ஆறு திட உணவுகளைச் சுவைத்து இருக்க வேண்டும்; அவர்களுக்கு ஏதேனும் கூழ் அல்லது உணவு வகைப் பிடிக்கவில்லை எனில், அந்த உணவுகளைக் கட்டாயப்படுத்தி அளிப்பதைத் தவிருங்கள். தாய்மார்கள் குழந்தை உணவை மறுக்கையில், பொறுமையைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

வாரம் #4

Week 4

நான்காவது வார இறுதியில் குழந்தைகள் எட்டு திட உணவுகளை ருசித்திருக்க வேண்டும். குழந்தையின் சரியான வளர்ச்சிக்காகத் திட்டமிட்ட நேரத்தில் உணவுகளை அளிக்க முயலுங்கள்; குழந்தையின் ஆற்றல் மற்றும் செயல்பாடுகளுக்குத் தகுந்த வகையில், திட உணவுகளின் நேரத்தை மாற்றி கூட அளித்து கொள்ளலாம். அதாவது திட உணவை இரவில் கூட அளித்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு நன்கு மசித்த அல்லது கூழாக்கப்பட்ட உணவு வகைகளை அளித்து வரவும்.

6 மாதங்கள் பூர்த்தியானக் குழந்தைக்கான உணவு ரெசிபிக்கள்

ஆறு மாத வயதே பூர்த்தியான குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய முக்கிய உணவு ரெசிபிக்கள், மூன்று வேளைக்கும் பொருந்தக்கூடிய வகையில் இங்கு அளிக்கப்பட்டு உள்ளன; வாருங்கள் படித்து அறியலாம்.

காலை உணவு ரெசிபிக்கள்

ஆப்ரிகாட் கூழ்

Apricot pulp
Image: Shutterstock

இது குழந்தைகளுக்கு அதிக சத்துக்களைத் தரக்கூடிய ஒரு உணவு.

தேவையான பொருட்கள்

  • 1 பவுண்ட் காய்ந்த ஆப்ரிகாட்
  • 2 கப்கள் பேரிக்காய், வெள்ளை திராட்சை சாறு அல்லது ஆப்பிள் சாறு

தயாரிக்கும் முறை

  • 15 நிமிடங்களுக்கு இந்த தேவையான பொருட்கள் அனைத்தையும் நன்கு வேக வைத்து கொள்ள வேண்டும் .
  • வேக வைத்த பொருட்களை ஒவ்வொன்றாக நன்கு மசித்து கொள்ள வேண்டும்.
  • பின்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து, கூழ் பதம் கிடைக்கும் அளவுக்கு சாறு சேர்த்து கூழ் தயாரிக்கவும்; தயாரித்த கூழை குழந்தைக்கு அளிக்கவும்.

ஆப்பிள் சாஸ்

Apple pulp
Image: Shutterstock

தேவையான பொருட்கள்

  • 1 தோல் நீக்கி நறுக்கப்பட்ட ஆப்பிள்
  • 2 கப் நீர்

தயாரிக்கும் முறை

  • நறுக்கிய ஆப்பிள்களை வேக வைக்கவும்; வேக வைக்கும் ஆப்பிள்கள் தண்ணீரில் நன்கு வேகுமாறு பார்த்துக் கொள்ளவும்.
  • வேக வைத்த ஆப்பிளை நன்கு மசித்து, கூழாக்கி குழந்தைக்கு அளிக்கவும்.

வாழைப்பழக் கூழ்

Banana pulp
Image: Shutterstock

தேவையான பொருட்கள்

  • 1 தோல் உரித்த – பழுத்த, நறுக்கப்பட்ட வாழைப்பழம்

தயாரிக்கும் முறை

  • தோல் உரித்த – பழுத்த, நறுக்கப்பட்ட வாழைப்பழத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்; பின் அதை நன்கு மசித்து கொள்ள வேண்டும்.
  • மசித்த வாழைப்பழத்தை மிருது தன்மைக்காக, 25 நொடிகள் லேசாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
  • பின்பு சூடாக்கப்பட்ட வாழைப்பழத்தில் பால் அல்லது தண்ணீர் கலந்து கூழாக்கிக் குழந்தைக்கு ஊட்டவும்.

மாம்பழச் சாறு

Mango pulp
Image: Shutterstock

தேவையான பொருட்கள்

  • 1 தோல் உரித்த – பழுத்த, நறுக்கப்பட்ட மாம்பழம்

தயாரிக்கும் முறை

  • மாம்பழ துண்டுகளை நன்கு மசித்து கொள்ள வேண்டும்.
  • பின் இந்த மசித்த கலவையில் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் சேர்த்து கூழ் பதத்திற்கு கொண்டு வந்த பின், குழந்தைகளுக்கு அளிக்கலாம்.

மதிய உணவு ரெசிபிக்கள்

அரிசிக் கூழ்

Rice powder
Image: Shutterstock

தேவையான பொருட்கள்

  • ¼ கப் அரிசி
  • 1 கப் தண்ணீர்
  • 2 தேக்கரண்டி ஃபார்முலா அல்லது தாய்ப்பால்

தயாரிக்கும் முறை

  • அரிசியை நன்கு சமைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் சமைத்த அரிசியுடன் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் சேர்த்து, மை போன்று இருக்கும் வகையில் மசித்து கொள்ள வேண்டும்.

பார்லி கஞ்சி

Barley porridge
Image: Shutterstock

தேவையான பொருட்கள்

  • 1/4 கப் பார்லி
  • 3.5 கப் நீர்
  • 2 தேக்கரண்டி ஃபார்முலா அல்லது தாய்ப்பால்
  • 1 கப் தோலுரித்து நறுக்கப்பட்ட ஆப்பிள்

தயாரிக்கும் முறை

  • பார்லியை நீரில் சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
  • இதை 10 நிமிடங்களுக்கு நன்கு சமைத்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
  • இதில் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து, குறைவான வெப்பத்தில் இரண்டும் நிமிடங்களுக்குச் சமைத்து கொள்ள வேண்டும்.
  • பின் சமைத்த கலவையை நன்கு மசித்து குழந்தைக்கு ஊட்டவும்.

ஓட்ஸ் கஞ்சி

Oatmeal porridge
Image: Shutterstock

தேவையான பொருட்கள்

  • 1/3 கப் நீர்
  • ¼ கப் ஓட்ஸ்
  • 2 தேக்கரண்டி ஃபார்முலா அல்லது தாய்ப்பால்
  • ½ நறுக்கப்பட்ட வாழைப்பழம்

தயாரிக்கும் முறை

  • ஓட்ஸினை நீரில் கலந்து, 10 நிமிடங்களுக்கு வேக வைத்து கொள்ள வேண்டும்.
  • ஓட்ஸ் நன்கு வெந்த பின், அதில் வாழைப்பழத்தைச் சேர்த்து நன்றாக மசித்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் இந்த கலவையில் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் சேர்த்து கஞ்சியாக்கி குழந்தைக்கு அளிக்க வேண்டும்.

பேக் (bake) செய்யப்பட்ட ஆப்பிள்

தேவையான பொருட்கள்

  • 1 தோல் உரித்த மற்றும் வட்டமாக நறுக்கப்பட்ட ஆப்பிள்

தயாரிக்கும் முறை

  • தோல் உரித்த மற்றும் வட்டமாக நறுக்கப்பட்ட ஆப்பிளின் மீது வெண்ணெய் தடவி, அதை தண்ணீர் நிரம்பியுள்ள ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும்.
  • 400°F அளவு வெப்பத்தில் பாத்திரத்தை ஓவனில் வைத்து சூடு செய்ய வேண்டும்.
  • ஆப்பிளை 30 நிமிட கால அளவிற்கு பேக் (bake) செய்ய வேண்டும்.
  • பேக் (bake) செய்த பின் ஆப்பிளை நன்கு கூழ் பதத்திற்கு மசித்து கொள்ள வேண்டும்.

இரவு உணவு

பூசணிக் கூழ்

Puree
Image: Shutterstock

தேவையான பொருட்கள்

  • 1 மிதமான அளவுள்ள இனிப்பு பூசணி – இதைப் பாதியாக அறுத்து விதைகளை வைத்து கொள்ள வேண்டும்

தயாரிக்கும் முறை

  • மிதமான அளவுள்ள, விதைகள் எடுக்கப்பட்ட இனிப்பு பூசணியைத் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும்.
  • இந்தப் பாத்திரத்தை 400°F ஓவனில் வைத்து 40 நிமிடங்களுக்குப் பேக் (bake) செய்ய வேண்டும்.
  • பேக் (bake) செய்த பூசணியை நன்கு மிருதுவான நிலையில் இருக்கும் வகையில், கூழ் பதத்திற்கு மசித்து கொள்ள வேண்டும்.

பச்சை பீன்ஸ் கூழ்

Green beans puree
Image: Shutterstock

தேவையான பொருட்கள்

  • 1 கப் புதிதான பச்சை பீன்ஸ்

தயாரிக்கும் முறை

  • பச்சை பீன்ஸ்களைத் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் வைத்து விடவும்.
  • இவற்றை நன்கு நீராவியில் வேக வைத்து கொள்ள வேண்டும்.
  • வேக வைத்த பீன்ஸ்களை நன்கு மிருதுவாக இருக்கும் வகையில் மசித்து குழந்தைகளுக்கு அளிக்கவும்.

கேரட் கூழ்

Carrot pulp
Image: Shutterstock

தேவையான பொருட்கள்

  • 1 கப் இனிப்பான, தோலுரித்த, நறுக்கப்பட்ட கேரட்கள்

தயாரிக்கும் முறை

  • இனிப்பான, தோலுரித்த, நறுக்கப்பட்ட கேரட்களை, நீர் நிரம்பிய பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும்.
  • கேரட் நன்கு வேகுமாறு நீராவியில் அதை வேக விட வேண்டும்; தேவைப்பட்டால் நீர் சேர்த்து கொள்ள வேண்டும்.
  • வேக வைத்த கேரட்களை நன்றாக மசித்து குழந்தைகளுக்கு ஊட்டவும்.

காய்கறி கலவை

Vegetable mixture
Image: Shutterstock

தேவையான பொருட்கள்

  • 1/8 கப் புதிதான பச்சை பீன்ஸ்
  • 1/8 கப் பட்டாணிகள்
  • ¼ கப் ஜூச்சினி ஸ்குவாஷ்
  • 1/8 கப் நறுக்கப்பட்ட கேரட்கள்

தயாரிக்கும் முறை

  • தேவையான அனைத்துப் பொருட்களையும் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் இட்டு கொள்ள வேண்டும்.
  • காய்கறிகள் அனைத்தும் நன்றாக வேகும் அளவிற்கு இவற்றை சமைக்க வேண்டும்.
  • கூழ் பதம் கிடைக்க, தேவையான அளவு நீர் சேர்த்து கொள்ள வேண்டும்.
  • பின்பு வேக வைத்த காய்கறி கலவையை நன்கு மசித்து குழந்தைக்கு ஊட்டவும்.

குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டால் என்ன செய்வது?

குழந்தைக்கு அளிக்கப்படும் உணவுகளில், ஒரு குறிப்பிட்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டால் இருக்க, அந்தக் குறிப்பிட்ட உணவை குழந்தைக்கு அளிப்பதைத் தவிர்த்து விட வேண்டும்; பின்னர் குழந்தையின் உடல் நலம் குறித்து மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது.

குழந்தைகளின் உடலில் உணவு ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய பொதுவான அறிகுறிகள் ஆவன:

  • மூக்கு ஒழுகுதல்
  • தடிப்புகள்
  • வயிற்று வலி
  • குழந்தையின் உடல் அசாதாரணமான நிலையில் இருத்தல்
  • இடைவிடாது அழுதல்
  • வயிற்றுப்போக்கு
  • வாந்தி
  • குழந்தைக்கு அளிக்கக்கூடாத உணவு வகைகள் என்னென்ன?

ஆறு மாத வயது பூர்த்தியான குழந்தைக்குக் கீழேக் கொடுக்கப்பட்டு உள்ள உணவு வகைகளை மறந்தும் கூட அளித்தல் கூடாது; அப்படி என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.

தேன்

குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்தில் தேனை உட்கொள்ள அளிக்க கூடாது; குழந்தைகளுக்குப் பன்னிரண்டு மாதங்கள் முடிந்த பின்னரே தேனினை, அவர்கள் உட்கொள்ள அளிக்கலாம்.

மாட்டுப்பால்

மாட்டுப் பாலை குழந்தைகளுக்கு அளிக்க கூடாது; குழந்தைகள் திட உணவு உட்கொள்வதில் நிலை தன்மையை அடைந்த பின் அவர்களுக்கு மிருதுவான வெண்ணெய், தயிர் போன்ற உணவுகளை அளிக்கலாம்.

ஆனால் பாலினை ஒரு வயது முடிந்த பின்னர் தான் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.

பெரிய உணவுகள்

ஆறு மாத குழந்தைகளுக்கு மசித்த, வேக வைத்த, கூழாக்கிய உணவுகளை மட்டுமே அளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு அளவில் பெரிய உணவுப் பொருட்களை உண்ண அளிப்பதை கட்டாயமாகத் தவிர்த்து விட வேண்டும்.

சில மீன் வகைகள்

சில மீன் வகைகளில் மெர்க்குரி அதிகமாக இருக்கலாம்; ஆகையால் அவற்றை குழந்தைகளுக்கு அளிக்காமல் தவிர்ப்பது நல்லது.

சால்மன்,வைட் ஃபிஷ், டியூனா மீன் வகைகளைக் குழந்தைகளுக்கு அளிக்கலாம்; ஆனால், இவற்றை கூட மருத்துவ ஆலோசனைக்குப் பின் அளிப்பது சால சிறந்தது.

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles