கர்ப்பத்தின் ஏழாவது மாதம் – நீங்கள் செய்ய வேண்டியதும்

Written by Sruti Bhattacharjee
Last Updated on

கர்ப்பத்தின் ஏழாவது மாதம் என்பது நம் பெண்களுக்கு சிறப்பான மாதமாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த நேரங்களில் வளைகாப்பு நடத்தப்பட்டு பெண் தாய் வீட்டிற்கு செல்கிறாள். ஏழாவது மாதம் குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால்தான் பெண்ணைப் பெற்ற தாயானவள் மகளையும் அவள் வயிற்றில் வளரும் குழந்தையையும் மிக ஆரோக்கியமான முறையில் கவனித்துக் கொள்கிறாள்.

இது கர்ப்பிணிகளின் மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலத்தின் ஆரம்ப நேரமாகும். இந்த நேரத்தில் தான் குழந்தையின் வளர்ச்சியானது வேகமாக நடைபெறும். வளர்ந்து வரும் வயிறு காரணமாக பல அசௌகரியங்களை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நெருங்கி வரும் பிரசவம் பற்றிய மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு மனநிலை என இந்த காலகட்டம் கர்ப்பிணிகளுக்கு மகத்தானது.

ஏழாவது மாத கர்ப்பத்தின் அறிகுறிகள்

இந்த மாதம் வயிறு அதன் அளவை விட பெரிதாக மாறுகிறது. இதனால் கூடுதல் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன (1) (2) (3). அது பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள்.

  • வயிற்றில் வளரும் குழந்தையின் உடல் வளர ஆரம்பிப்பதால், உங்கள் சிறுநீர்ப்பை மற்றும் கால்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் நீங்கள் இயல்பாக நடப்பதற்கு சிரமப்படுவீர்கள்.
  • வயிற்றில் ஏற்படும் கூடுதல் அழுத்தம் மற்றும் அதிகரித்த எடை காரணமாக உங்கள் கீழ் முதுகில் வலியை அனுபவிக்க முடியும்.மேலும் உங்களுக்கு மனநிலை மாற்றங்கள் மற்றும் கவலை வேதனைகள் இருக்கலாம்.
  • நீளும் கருப்பை தசைகள் , உங்கள் வயிற்றை பிழிகிறது. இதனால் அடிக்கடி சுருக்கங்கள் மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • அதிகரித்து வரும் வளர்சிதை மாற்றம் உடலை வெப்பமாக்குகிறது, மேலும் குளிர்ந்த காலநிலையிலும் கூட நீங்கள் வெப்பமாக உணரலாம். அதனால் நீங்கள் சில நேரங்களில் வியர்வை மற்றும் மூச்சுத் திணறலை அனுபவிக்க ஆரம்பிக்கலாம்.
  • உடலின் மைய பகுதி வளர்ந்து வரும் குழந்தையுடன் கீழ்நோக்கிய திசைக்கு மாறுகிறது, மேலும் கருப்பையின் அழுத்தம்  காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரலாம்.

சில கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த மாதத்தில் இரத்த சோகை, மூல நோய், வயிறு சிக்கல்கள், அடிக்கடி நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் பிடிப்பு போன்றவை  ஏற்படலாம்.

கர்ப்பத்தின் ஏழாவது மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி

இந்த மாதத்திலிருந்து, உங்கள் குழந்தை ஒரு தனித்துவமான சிறிய நபராக மாறி வருகிறது. குழந்தையின் ஆளுமை மற்றும் புத்திசாலித்தனம் மிகவும் ஆச்சர்யமானவை எனலாம். (4) (5) (6).

மூளை மற்றும் நரம்பு மண்டலம் – செயல்படத் தொடங்குகிறது

தூங்கும் மற்றும் விழித்திருக்கும் வடிவங்கள் – அதிக மாற்றங்களை சந்திக்கின்றன

கண்கள் – கண் இமைகள் மெதுவாகத் திறக்கப்படுகின்றன, கண்கள் ஒளி மற்றும் இருளுக்கு ஏற்றவாறு பதில் சைகைகள் காட்டுகிறது.

பூனை முடிகள் – குழந்தைக்கு தகுந்த வெப்ப நிலை கொடுத்த பூனை முடிகள் உதிர ஆரம்பிக்கின்றன.

சருமம் – சிவப்பு மற்றும் சுருக்கங்கள் கொண்டதாக இருக்கும். அம்னியோடிக் திரவத்தில் இருந்து சருமத்தைக் காப்பாற்றும் கொழுப்பு குவிப்பு தொடங்குகிறது.

நாக்கு – குழந்தையின் நாக்கில் வெவ்வேறு சுவைகளை வேறுபடுத்தக்கூடிய சுவை மொட்டுகள் அதிகமாக உருவாகின்றன.

ஜீரண பாதை – வேலை செய்ய ஆரம்பிக்கிறது.

எலும்புகள் – வலிமையடையத் தொடங்குகின்றன.

மண்டை ஓடு – மென்மையோடு இருக்கிறது

ஏழாவது மாதத்தில் குழந்தையின் இயக்கம்

இந்த மாதத்தில் நீங்கள் வயிற்றில் உங்கள் குழந்தை அடிக்கடி உதைத்தல் மற்றும் கை கால்களை நீட்டித்தல் இயக்கங்களை அனுபவிப்பீர்கள். இந்த நேரத்தில், தொடுதல் மற்றும் ஒலி மூலம் உங்கள் குழந்தையுடன் நீங்கள் இணையலாம் (5).

ஏழாவது மாதத்தில் குழந்தையின் நிலை

குழந்தை பிறப்புக்குத் தயாராவதற்காக, கர்ப்பப்பை வாய் பகுதியை நோக்கி தலையுடன் செங்குத்தாக படுத்துக் கொள்கிறது. இது சுகப் பிரசவத்திற்கான பாதுகாப்பான நிலையாக கருதப்படுகிறது (7).

ஏழு மாத கர்ப்ப நேரத்தில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்

நீங்கள் மூன்றாவது ட்ரைமெஸ்டரில் நுழையும்போது, ​​உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் (8) (9).

இந்த நேரங்களில் நீங்கள் செய்ய வேண்டியது

  • உங்கள் நடைப்பயிற்சியை தொடருங்கள், தேவையான இடைவெளி தந்து மெல்ல நடைப் பயிற்சி செய்யவும்.
  • மேலும், நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்று உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்கவும். உங்கள் உடலை சுறுசுறுப்பாகவும் நெகிழ்வாகவும் வைத்திருங்கள்.
  • உங்கள் மருத்துவரின் ஒப்புதலுடன் வழக்கமான உடற்பயிற்சியைத் தொடரவும். வழக்கமான நடைபயிற்சி, யோகா, நீச்சல் அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு எந்த பயிற்சிக்கும் செல்லுங்கள். சுறுசுறுப்பான வாழ்க்கை முறை எளிதான பிரசவத்திற்கும் பிரசவத்திற்குப் பிறகு வேகமான மீட்பிற்கும் உதவுகிறது. குறைந்த பட்சம் அடிப்படை உடல் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளாவது செய்வது நன்மை தரும்.
  • ஒரு பொழுதுபோக்கை பின்பற்றுங்கள். ஒரு புத்தகத்தைப் படியுங்கள், வண்ணம் தீட்டவும், பாடவும் அல்லது தோட்டக்கலை முயற்சிக்கவும். இது உங்களை அமைதியாகவும், நிதானமாகவும் வைக்கும். தேவையற்ற எண்ணங்களையும் பதட்டங்களையும் அகற்றும்.
  • முடிந்தவரை ஓய்வெடுக்கவும். வளர்ந்து வரும் வயிற்றின் காரணமாக நேராகத்  தூங்குவது கடினமாக இருக்கலாம், எனவே ஒருக்களித்து படுத்து தூங்க முயற்சிக்கவும். உங்கள் வயிற்றுக்கு ஒட்டியும் , உங்கள் கால்களுக்கு இடையிலும்  தலையணைகளை வைப்பது மிகவும் வசதியாக இருக்கும்.
  • பருத்தி உடைகள் வசதியாகவும் சுவாசமாகவும் இருப்பதால் அவற்றை அணியுங்கள், ஏனெனில் அடிப்படை உடல் வெப்பநிலை அதிகரிப்பதால் அதிகமாக வியர்வை ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட எளிய டியோடரண்டுகளைப் பயன்படுத்துங்கள்.
  • இந்த நேரத்தில் இரத்த பரிசோதனைகள் செய்ய வேண்டும். குறிப்பாக நீங்கள் Rh-  நெகட்டிவ் இரத்தக் குழுவைச் சேர்ந்தவராக இருந்தால், உங்கள் ஹீமோகுளோபின் அளவை சரிபார்க்கவும்.

கர்ப்பத்தின் ஏழாவது மாதம் முதல் நீங்கள் செய்யக் கூடாதவை இவைதான்

  • புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை முற்றிலும் விட்டுவிடுங்கள். மேலும், புகைபிடிப்பவர் அருகிலும் இருக்க வேண்டாம். ஏனெனில் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் புகை ஆபத்தானது.
  • வளர்ந்து வரும் வயிற்றின் காரணமாக, இப்போது உடலை வளைப்பது கடினம். குனிந்து பொருளை எடுப்பது போன்ற முயற்சிகளைச் செய்யாதீர்கள், எப்போதும் சரியான பொசிசனைப் பராமரிக்கவும்.
  • கனமான பொருட்களை தூக்க வேண்டாம், ஏனெனில் இது வயிற்றுக்கு அழுத்தம் கொடுக்கும் மற்றும் கருவின் வளர்ச்சியை பாதிக்கும்.
  • உரத்த இசை மற்றும் அதிக சத்தத்தினைத் தவிர்க்கவும். உங்கள் குழந்தையின் செவிப்புலன் இப்போது முழுமையாக உருவாகியுள்ளது, அதிக சப்தங்கள் குழந்தையை திடுக்கிட வைக்கும்.

ஏழாவது மாதத்திற்கான டயட் டிப்ஸ்

  • குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்துவதால் உணவில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சேர்க்கவும். குழந்தை அறிவாற்றல் மற்றும் காட்சி திறன்களை வளர்க்கும் காலமும் இதுதான். முட்டை, கடல் உணவு மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற உணவுகள் அதற்கு உதவுகின்றன.
  • இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். கீரை, முட்டை, இறைச்சி மற்றும் பச்சை இலை காய்கறிகள் போன்ற இயற்கை இரும்பு சத்து கொண்ட உணவினை எடுக்கலாம்.
  • லேசான மற்றும் சத்தான உணவை அடிக்கடி இடைவெளியில் சாப்பிடுங்கள். கனமான உணவு மற்றும் எண்ணெய் உணவைத் தவிர்க்கவும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ்கள், கெட்ச்அப், சிப்ஸ்கள்  மற்றும் ஊறுகாய் ஆகியவற்றிலிருந்து உப்பு உட்கொள்ளலை குறைக்கவும். இது உடல் நீரைத் தக்கவைத்தல் மற்றும் கால் வீக்கத்திலிருந்து விடுபட உதவுகிறது.
  • பழங்கள் மற்றும் காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்க்கவும். அவை மலச்சிக்கலைத் தடுக்க உதவுகின்றன.
  • அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் அறிகுறிகளை ஏற்படுத்தும் காரமான, அமில மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.

கர்ப்பத்தின் ஏழாவது மாதத்தில் அதிகம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பின்வரும் சூழ்நிலைகளை நீங்கள் சந்தித்தால்,  அசௌகரியம்  அல்லது வலியை ஏற்படுத்தும் வேறு ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகவும்.

  • கீழ் முதுகில் அதிக அழுத்தம் அல்லது வலி
  • சிவப்பு பழுப்பு நிற திசுக்கள் பிறப்புறுப்பு வழியாக  வெளியேறுவது
  • ஈறுகளில் இரத்தப்போக்கு
  • அதிகப்படியான சளி உருவாக்கம் மற்றும் உமிழ்நீர் சுரப்பு
  • தலைவலி, சோர்வு, தலைச்சுற்றல்
  • இரைப்பை பிரச்சினை மற்றும் மலச்சிக்கல்
  • அடிக்கடி மறதி
  • நெஞ்செரிச்சல் மற்றும் மூல நோய்

எப்போதும் உங்கள் உடல் நிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் உங்கள் அருகில் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள். பிரசவ நேரத்தை சுகமானதாக்க இது உதவி செய்யும்.

References

1. Pregnancy: Signs, Symptoms and Health by REGIS
2. Stages of pregnancy by  U.S. Department of Health and Human Services (2018)
3. Pregnancy by NCBI
4. Pregnancy by California State University Long Beach (2019)
5. How Your Fetus Grows During Pregnancy by American College of Obstetricians and Gynecologists (2018)
6. The Complete Book of Mother and Babycare by Elizabeth Fenwick
7. Antenatal Care Module: 11. Assessing the Fetus; The Open University (2019)
8. Do’s and Don’ts During Pregnancy by  Sutter Health (2008)
9. Caring for Yourself During Pregnancy and Beyond by UCSF Medical Center
Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles