உங்கள் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா என்பதைச் சொல்லும் 10 அறிகுறிகள் மற்றும் அதன் உண்மைத்தன்மைகள்!

Written by Sruti Bhattacharjee
Last Updated on

பொதுவாகத் தாய்மை அடைதல் என்பதே மிகப்பெரிய வரம். ஒரு உயிரை பொறுப்பாக சுமக்க பெண்களால் மட்டுமே முடியும் என இறைவனும் அவன் படைத்த இயற்கையும் முடிவு செய்திருப்பது பெண்களாகப் பிறந்த அனைவருக்குமே கிடைத்த ஒரு ஆசிர்வாதம்.

இதில் தாய்மை தருணங்களில் பெண்களுக்கு உடல் ரீதியாகத் தென்படும் சில அறிகுறிகள் கொண்டு அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை நமது பாட்டிமார்கள் அழகாகக் குறி சொல்வது போலச் சொல்வது வழக்கம். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை வயிற்றில் வளர்வது ஆணா பெண்ணா என அறிய அனைவருமே ஆவலாகத்தான் இருக்கின்றனர். ஆனால் சில சமயங்களில் சொல்லப்படும் அறிகுறிகள் எல்லாமே ஆண் குழந்தைக்கான அறிகுறியா என்பதில் நிறைய குழப்பங்கள் இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.

குழந்தையின் பாலினத்தை வரையறுக்கும் கூறுகள் என்னென்ன

இனப்பெருக்கத்தின் போது உருவாகும் க்ரோமோசோம்களின் எண்ணிக்கை மூலமாகவே பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் முடிவு செய்யப்படுகிறது. வயிற்றில் உருவாகும் கருவானது இரண்டு பெற்றோரிடம் இருந்தும் 23 க்ரோமோசோம்களைத் தனித்தனியாக உள்வாங்குகிறது. இரண்டு எக்ஸ் க்ரோமோசோம்கள் கொண்ட குழந்தை பெண்ணாகப் பிறக்கிறது. ஒரு எக்ஸ் ஒரு ஒய் க்ரோமோஸ்ம்களைத் தன்னகத்தே கொண்ட குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கிறது என்பது அறிவியல். இது கர்ப்பத்தின் ஏழாவது வாரத்தில் இருந்து கணிக்கப்படுகிறது.(1)

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா – கட்டுக்கதைகளும் உண்மைகளும்

இங்கே சில பொதுவான அறிகுறிகள் பற்றி கூறியிருக்கிறோம். அதில் பெரும்பாலான அறிகுறிகள் இருந்தால் உங்களுக்குப் பிறக்கபோவது ஆண் குழந்தையாக இருக்கலாம் எனப் பெரும்பாலானோர் நம்புகின்றனர். அதன் உண்மைத்தன்மையை கண்டறியுங்கள்.

1. காலை நேர ஒவ்வாமை

கட்டுக்கதை : தாய்மை அடைதலின் முதல் மூன்று மாதங்களில் காலை நேரத்தில் ஏற்படும் வாந்தி , தலைசுற்றல் போன்றவை உங்களுக்கு இல்லாமல் இருந்தால் உங்களுக்குப் பிறக்கப் போவது ஆண் குழந்தையாக இருக்கலாம்.

உண்மை : காலை நேர ஒவ்வாமையான வாந்தி மற்றும் தலைசுற்றல் என்பது உலகளவில் 70 முதல் 80 சதவிகித பெண்களுக்கு நடக்கும். இது பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்குப் பிரசவம் வரை கூட இப்படி ஆக வாய்ப்பிருக்கிறது (2). அறிவியல் ரீதியான உண்மை என்ன என்றால் உங்கள் ஹார்மோனல் மாற்றங்கள்தான் காலை நேர ஒவ்வாமைக்கு காரணம் ஆகிறது.

2. இதயத்துடிப்பு

கட்டுக்கதை : உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பானது நிமிடத்துக்கு 140 முறை என்கிற அளவில் இருந்தால் அது ஆண் குழந்தை என சொல்லப்படுகிறது.

உண்மை : இது ஒரு தவறான நம்பிக்கை ஆகும். முதல் மூன்று மாத காலங்களில் குழந்தைகளுக்கு எடுக்கப்படும் இதயத்துடிப்பு பெரும்பாலும் ஒரே மாதிரியானதாகவே இருக்கும் (3). பாலினம் என்பதைத் தாண்டி ஒரு குழந்தையின் இயல்பான இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 120 முதல் 160 என்கிற கணக்கில்தான் இருக்கும். கருத்தரித்தலின் ஆரம்ப சமயங்களில் இது நிமிடத்திற்கு 140 முதல் 160 எனவும் பிரசவ நேரங்களில் நிமிடத்திற்கு 120 முதல் 140 வரை இருக்குமாம் (4).

3. சருமம் மற்றும் கூந்தல்

கட்டுக்கதை : உங்கள் சருமமானது மாசுமருவற்ற பருக்கள் இல்லாத சருமமாகவும் கூந்தல் மிக கருமையாகவும் அடர்ந்தும் இருந்தால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்குமாம். அதே சமயம் பெண் குழந்தை என்றால் நீங்கள் பல சருமசிக்கல்களை சந்திப்பீர்கள் எனவும் கூறப்படுகிறது.

உண்மை : இது உண்மைதான் என நிரூபிக்கும் ஆதாரங்கள் இங்கே எதுவும் இல்லை. சருமமும் கூந்தலும் மாற்றமடைவதற்கு காரணம் ஹார்மோனில் ஏற்படும் வித்யாசங்களால் தான். குழந்தையின் பாலினத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

4. உணவின் மீது அலாதிப்பிரியம்

கட்டுக்கதை : புளிப்பு மற்றும் உப்பு ருசிக்காக நீங்கள் ஏங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிச்சயமாக ஆண் பிள்ளைதான் பிறக்கும்.

உண்மை : இது நிரூபணம் இல்லாதது. உணவு ருசி என்பது உங்களின் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடல் சத்து தேவைக்குறைபாடுகள் என்ன என்பது பொறுத்து அமைகிறது. இது தவிர கலாச்சார ரீதியான மற்றும் உளவியல் காரணிகள்  என்பனவும் இருக்கின்றன (5).

5. வயிறு வடிவமைப்பு

கட்டுக்கதை : உங்கள் வயிறானது உருண்டை வடிவமாக இல்லாமல் சற்று கீழ் நோக்கி அதிக கனம் வைத்திருந்தால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கலாம்.

உண்மை : நீங்கள் உங்கள் குழந்தையை சுமக்கும் வடிவம் வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. இப்படியான விஷயங்கள் உண்மையானதல்ல என ஜர்னல் பர்த் ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது (6). உங்கள் குழந்தையின் வடிவம் மற்றும் உங்கள் கர்ப்பப்பையின் வடிவம் இவற்றின் அடிப்படையிலேயே உங்கள் வயிற்றின் வடிவம் நிறுவப்படுகிறது (7). குழந்தையின் பாலினத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

6. மனநிலை மாற்றங்கள்

கட்டுக்கதை : கர்ப்ப காலத்தில் உங்கள் மனநிலை மாற்றங்கள் என்பது நிகழ்ந்தபடியே இருக்கும். அப்படி மனநிலை மாற்றங்கள் எதுவும் இல்லை என்றால் உங்களுக்கு ஆண் குழந்தை எனவும் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தால் பெண் குழந்தை எனவும் கூறப்படுகிறது.

உண்மை : மனநிலை மாற்றங்கள் என்பது ஆண் , பெண் என எந்த வகையான குழந்தையை நீங்கள் சுமந்திருந்தாலும் ஏற்படும் (8). குழந்தையின் பாலினத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

7. சிறுநீரின் நிறம்

கட்டுக்கதை : நீங்கள் கர்ப்பமடைந்திருக்கும்போது உங்கள் சிறுநீரின் நிறம் மாறுகிறது. அது அடர்நிறத்தில் இருந்தால் நீங்கள் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

உண்மை : சிறுநீரின் நிற மாற்றம் என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு பொதுவான மாற்றம்தான். அடர்நிற சிறுநீர் என்பது உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதைக் குறிக்கலாம். இதற்கு காரணம் வாந்தி தலைசுற்றல் போன்ற சிக்கல்களால் உடலில் நீர்ச்சத்து குறைகிறது (9). கூடவே நீங்கள் உண்ணும் உணவு, எடுத்துக் கொள்ளும் மருந்து போன்றவைகளாலும் சிறுநீரின் நிறம் அடர்த்தியாக இருக்கலாம். குழந்தையின் பாலினத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

8. மார்பக மாற்றங்கள்

கட்டுக்கதை : நீங்கள் ஆண் குழந்தையை சுமப்பவராக இருந்தால் உங்கள் இடது மார்பகத்தை விட வலது மார்பகம் பெரிதாக இருக்கும்.

உண்மை : கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோனல் மாற்றங்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால்  உங்கள் மார்பக திசுக்களின் வடிவம் மாறுபடலாம். உங்கள் குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளவே மார்பகங்கள் பெரிதாகின்றன (10). இதற்கும் குழந்தையின் பாலினத்திற்கும் சம்பந்தம் இல்லை.

9. குளிர்ச்சியான பாதங்கள்

கட்டுக்கதை : நீங்கள் கர்ப்ப நேரத்தில் ஐஸ் போன்ற குளிர்ந்த பாதங்களை கொண்டிருப்பவர் என்றால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.

உண்மை : இது ரத்த ஓட்ட குறைபாடு காரணமாகவோ, நீரிழிவு காரணமாகவோ அல்லது அதிகப்படியான குளிர் பிரதேசம் காரணமாகவோ ஏற்படலாம் (11). உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

10. உடல் எடை அதிகரிப்பு

கட்டுக்கதை : நீங்கள் ஆண் குழந்தைக்குத் தாயாகிறீர்கள் என்றால் உங்கள் உடல் கனமானது வயிற்றில் மட்டுமே அதிகரித்து காணப்படும். அதே சமயம் அது பெண் குழந்தை என்றால் உடல் முழுதும் எடை அதன் கனத்தை அதிகரிக்கும். உங்கள் முகம் உள்பட.

உண்மை : கருத்தரிக்கும் போது பெண்களின் உடல் எடை அதிகரிக்கும் என்பதே உண்மையான நிலை. மாதம் தோறும் குறிப்பிட்ட அளவு எடை அதிகரிப்பதுதான் ஆரோக்கியமான தாய்மைக்கான அடையாளம். இதற்கும் குழந்தையின் பாலினத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை (12).

உங்களுக்குப் பிறக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய உதவும் மருத்துவ பரிசோதனைகள்

சமுதாயத்தில் இதுவரை மருத்துவ ரீதியா சோதனைகள் மூலம் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் அறிவது ஒரு வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் பெண் குழந்தைகளைக் காக்கும் பொருட்டு அவற்றை வெளியே சொல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டும் இருக்கிறது. அப்படியான சில மருத்துவ பரிசோதனை முறைகள் இதோ.

1. அல்ட்ரா சவுண்ட்

இந்த மருத்துவ சோதனையானது குழந்தை உள்ளிருக்கும் இடத்திற்கு சென்று ஆக்ரமிப்பு செய்யாமல் வெளியில் வயிற்றில் ஜெல் போன்ற பொருளைத் தடவி ஒரு கருவி மூலம் அழுத்தி வயிறு முழுக்க நகர்த்தி குழந்தையின் இருப்பு, ஆரோக்கியம் மற்றும் பாலினம் பற்றி அறிய உதவுகிறது. கரு உருவான நாளில் இருந்து 18 முதல் 24 வாரங்களில் இந்த முறை மூலம் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள முடியும் (13).

2. கருவின் DNA ரத்த சோதனை

டயானா w பியான்சி மற்றும் அவருடைய சக பணியாளர்கள் வெளியிட்ட புத்தகமானது  The Proceedings of the National Academy of Sciences (PNAS) . கருத்தரித்த 6 முதல் 10 வாரங்களில் தாய்க்கு ரத்த பரிசோதனை செய்வதன் மூலம் குழந்தையின் பாலினத்தை அறிய முடியும் என்கிறது அந்தப் புத்தகம்.

காரணம் பெண்ணின் ரத்த மாதிரியில் உள்ள DNA தான் Y க்ரோமோசோம்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது. ஆகவே இம்மாதிரியான ரத்த பரிசோதனை மூலமும் குழந்தையின் பாலினத்தை அறியலாம் (14). ஆனால் உங்களுக்கு 35 வயது ஆகி இருக்க வேண்டும். மரபணு விசாரணை உங்களுக்கு எவ்விதத்திலாவது தேவைப்பட்டால் மட்டுமே இந்தப் பரிசோதனை மேற்கொள்ள முடியும் (15).

3. மரபணு சோதனை

குழந்தையின் பாலினம் உறுதியாக அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் மரபணு மேலே குறிப்பிட்ட மரபணு சோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். பனிக்குட துளைப்பு சோதனை மற்றும் CVS சோதனை மூலமும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் பாலினம் பற்றி அறிய முடியும்.

கரு உருவாகி 15 வாரம் கழித்தே CVS அல்லது பனிக்குட துளைப்பு சோதனை நடத்த முடியும் (16). குறைபாடுள்ள குழந்தைப்பிறப்பை தவிர்க்க அல்லது அறிந்து கொள்ள மட்டுமே இவ்வகை சோதனைகள் பயன்படுகிறது.

உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்குமா என்பதை விளையாடி கண்டறியலாம்

உண்மையில் இறைவன் நமக்கு ஒரு ரகசியப் பரிசு கொடுக்க விரும்புகிறான். 9 மாதங்கள் வரை சஸ்பென்ஸ் வைத்து அதன் பின்னர் நமது குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வதுதான் அவர் தரும் அந்த சந்தோஷப் பரிசு. உங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை விளையாட்டாக நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதற்கென சில விளையாட்டுக்கள் இருக்கின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

1. திருமண மோதிர சோதனை

உங்கள் திருமண மோதிரத்தை ஒரு லேசான கயிற்றில் கட்டி உங்கள் வயிற்றின் மீது ஊசலாட விட வேண்டும். இதனை உங்கள் கணவரோ அல்லது வேறு யாரோ ஒருவர் செய்யலாம். அந்த மோதிரம் வட்டமாக சுற்றினால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப்போகிறது என்று அர்த்தம்.

2. ரகசியம் அறியும் சாவித் தந்திரம்

உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள சாவியை கண்கள் மூடி நீங்கள் எடுக்க வேண்டும். முதலில் சாவியின் நீண்ட திறக்கும் துளை உடைய பக்கத்தை தொட்டால் நீங்கள் ஆண் மகவுக்குத் தாயாகப் போகிறீர்கள். சாவியின் தலைப்பகுதியை தொட்டால் நீங்கள் பெண்குழந்தைக்கு அம்மா ஆகப் போகிறீர்கள்.

3. சீனர்களின் மாதக் காலண்டர்

700 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட சீனர்களின் காலண்டரானது உங்களுக்கு பிறக்கப்போகும் பிள்ளையின் பாலினத்தை கண்டறிய உதவுகிறது. கரு உருவான நாளை அடிப்படையாக வைத்து இந்த காலண்டர் உங்கள் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிகிறது.

முடிவுரை

குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது உங்களுக்கு அளப்பரிய சந்தோஷத்தை தந்தாலும் 10 மாதம் காத்திருந்து அதனை அறிந்து கொள்வதன் சுகம் என்பது பலமடங்கானது. விளையாட்டுத்தனமாக குழந்தையின் பாலினம் அறிதல் அல்லது பெரியவர்கள் கூறுவதை கொண்டு உணர்தல் எல்லாமே ஊகத்தின் அடிப்படையில் ஆனது. உண்மையான பாலினம் அறிய மருத்துவ பரிசோதனை மட்டுமே தீர்வாக முடியும்.

References

1. Michael Cummings; Sex Determination in Humans Chapter 7 Human Heredity; Brandeis University (2006)
2. Noel M. Lee and Sumona Saha; Nausea and Vomiting of Pregnancy Gastroenterol Clin North Am (2013)
3. McKenna D.S et al. Fetal Diagnosis and Therapy Karger Journals (2006)
4. Fetal Heart Beat OB-GYN 101: Introductory Obstetrics & Gynecology; Medical Education Division, Brookside Associates, Ltd.
5. Natalia C. Orloff, Julia M. Hormes; Pickles and ice cream! Food cravings in pregnancy Frontiers in Psychology
6. Perry DF et al.; Are women carrying “basketballs” really having boys? Testing pregnancy folklore Birth (1999)
7. Antenatal Care Module: 7. Physiological Changes During Pregnancy The Open University
8. Pregnancy – signs and symptoms; Better Health Channel
9. Hyperemesis Gravidarum University of Rochester Medical Center
10. Normal Breast Development and Changes University of Rochester Medical Center
11. Toe, Foot, and Ankle Problems, Noninjury University of Michigan (2018)
12. Implementing Guidelines on Weight Gain & Pregnancy The Institute of Medicine and National Research Council of The National Academies
13. Prenatal Ultrasound UC San Diego Health
14. Bianchi DW et al.; Isolation of fetal DNA from nucleated erythrocytes in maternal blood Proc Natl Acad Sci U S A. (1990)
15. First Trimester Screening Medical College of Wisconsin, Department of Obstetrics and Gynecology
16. Celine Lewis et al.; Non-invasive prenatal diagnosis for fetal sex determination: benefits and disadvantages from the service users’ perspective Eur J Hum Genet. (2012)
Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles