15 பெண் குழந்தை அறிகுறிகள்

Written by Soundarya Subbaraj
Last Updated on

கர்ப்பமாக இருக்கும், எதிர்கால அன்னையாகி தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை பேணிக் காக்கப்போகும் ஒரு பெண், தனக்குள் ஒரு உயிர் உண்டான வினாடி முதலே, தனது குழந்தை ஆரோக்கியமாக உருவாகி, வளர்ந்து பிறக்க வேண்டும் என்று எண்ணுவாள்; குழந்தையின் ஆரோக்கியத்தை குறித்து எண்ணும் பொழுது, அத்துடன் ‘தனக்கு என்ன குழந்தை பிறக்கும்? மற்றும் ‘தனக்கு பிறக்கப்போவது ஆணா? பெண்ணா?’ போன்ற வினாக்கள் பெண்ணின் மனதில் எழ தவறுவதே இல்லை.

பெரும்பாலுமான கர்ப்பிணி பெண்கள் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள, பல்வேறு பழங்கதைகளையும் தேடி படிப்பர்; பல கட்டுக்கதைகளையும் உண்மையென நம்ப நேரிடலாம். ஆனால், பகுத்தறிவு கொண்டு நன்கு யோசித்தால் உண்மை நிலையை அறியலாம். மேலும் முற்காலத்தில் கூறப்பட்ட அனைத்து விஷயங்களையும் பொய், கட்டுக்கதை என்று ஒதுக்கி விட முடியாது; அவ்வகையில் பழங்காலம் முதல் இக்காலம் வரை குழந்தையின் பாலினத்தை பற்றி கூறப்படும் கட்டுக்கதைகளில் உண்மையானவை எவை மற்றும் குழந்தையின் பாலினத்தை அறிவதில் அடங்கி இருக்கும் உண்மைகள் என்னென்ன என்று இப்பதிப்பில் பார்க்கலாம்!

கர்ப்ப காலத்தில் பெண் குழந்தை வயிற்றில் வளர்வதை குறிக்கும் அறிகுறிகள்:

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை அறியும் ஆவல், கருவுற்ற பெண்ணுக்கு மட்டும் இல்லாமல், அவள்தம் உற்றார் உறவுகளுக்கும் இருக்கும். அனைவரின் ஆவலுக்கான விடையை கர்ப்ப காலத்தின் பத்து மாதங்களையும் கடந்தால் தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால், சில அறிவு பூர்வ அறிவியல் சார்ந்த அறிகுறிகளை கொண்டு கர்ப்ப காலத்திலேயே, கர்ப்பிணியின் வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று கணிக்க முடியும்.

கர்ப்ப காலத்தில் பெண் குழந்தை வயிற்றில் வளர்வதை குறிக்க சில குறிப்பிடத்தக்க அறிவியல் சார்ந்த அறிகுறிகள் உள்ளன; அவையாவன:

1. அதிக இதய துடிப்பு:

  • மகப்பேறு மருத்துவர் குழந்தையின் இதயத்துடிப்பை மிகவும் கவனமாக கண்காணித்து வருவார்; குழந்தையின் இதயத்துடிப்பு அதிகமாக அதாவது, ஒரு நிமிடத்திற்கு 140 -160 துடிப்புகள் என்ற அளவிற்கு மேல் இருந்தால் அது நிச்சயம் கருவறையில் வளரும் கரு பெண் குழந்தை தான் என்பதை குறிக்கும் ஒரு முக்கிய அறிகுறி ஆகும்.
  • கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிய, இது ஒரு அறிவியல் பூர்வமான, அபாயம் இல்லாத முறை ஆகும்.

2. உயர்ந்த அல்லது குறைந்த?

  • கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தை அதாவது அவர்தம் வயிறு பெரிதாக தெரிந்தால் பிறக்கப்போகும் குழந்தை பெண்ணாக இருக்கலாம்.

3. தீவிர காலை பலவீனம்:

  • கர்ப்பிணிகளுக்கு தீவிர காலை பலவீனம் ஏற்பட்டால், அது அவர்கள் பெண் குழந்தையை பெறவிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் தெளிவான அறிகுறி ஆகும்
  • ஆராய்ச்சியாளர்கள் கர்ப்பிணி பெண்கள் குறித்து நடத்திய ஆய்வில் ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகள் தான் அதிக, தீவிர காலை பலவீனத்தை ஏற்படுத்துவார்கள் என்று கண்டறிந்துள்ளனர்.

4. தோல் பரு:

  • கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகளின் சருமத்தில் பருக்கள், தடிப்புகள், கொப்புளங்கள் போன்றவை ஏற்பட்டால், அவை பிறக்கவிருக்கும் குழந்தை பெண் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும்.
  • கர்ப்பிணிகளின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், அவர்தம் தோலில் பரு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

5. வயிற்றின் வடிவம்:

  • கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று கண்டறிய உதவும் ஒரு முக்கியமான விஷயம் கர்ப்பிணிகளின் வயிற்றின் வடிவம் ஆகும்.
  • குழந்தையின் எடையை கர்ப்பிணி முன்பக்கமாக சுமந்தால், அது ஆண் குழந்தை பிறக்கப்போவதை குறிக்கும் அறிகுறி ஆகும்; கர்ப்பிணியின் உடலின் மையப்பகுதியில் குழந்தையின் எடை இருந்தால், அது பெண் குழந்தை பிறக்கப்போவதை குறிக்கும் அறிகுறி ஆகும்.

6. மனநிலை மாற்றங்கள்:

  • கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு திடீரென மனநிலை மாற்றங்கள் ஏற்பட்டால், அதாவது எரிச்சல், மன அழுத்தம், கோபம் போன்ற உணர்வுகள் திடீர் திடீரென கர்ப்பிணிகளுக்கு ஏற்படும். இத்தகைய உணர்வுகள், மனநிலை மாற்றங்கள் அடிக்கடி ஏற்பட்டால், கர்ப்பிணிகளின் வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது என்று கூறலாம்.
  • ஆண் குழந்தைகளை கருத்தரிக்கும் கர்ப்பிணி பெண்களை காட்டிலும், பெண் குழந்தைகளை கருத்தரிக்கும் கர்ப்பிணி பெண்கள் அதிக மனநிலை மாற்றங்களை எதிர் கொள்வர்.

7. மார்பகங்களின் அளவு:

  • கர்ப்ப காலத்தில் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள், மார்பக அளவுகள் மாறுபாடடைதல் போன்றவற்றை நன்கு உன்னிப்பாக கவனித்து குறித்து கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவர மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து வந்தால் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை எளிதில் கணிக்கலாம்.
  • கர்ப்ப காலத்தில் இடது மார்பகம், வலது புற மார்பகத்தை விட சற்று பெரிதாக இருந்தால், அது கருவில் பெண் குழந்தை வளர்வதை குறிக்கும்; இது கருவறையில் பெண் குழந்தை வளர்வதை சுட்டிக்காட்டும் எளிதான, சரியான அறிகுறி ஆகும்.

8. பூண்டு சோதனை:

  • கர்ப்பிணிகள் பூண்டினை உட்கொண்ட பின்னர் கூட, அவர்களின் உடல் வாசம் மாறாமல் இருந்தால் அவர்களுள் பெண் குழந்தை வளர்ந்து வருகிறது என்று பொருள்.
  • இதுவே ஆண் குழந்தையை கருத்தரிக்கும் பெண்களின் உடலில் இருந்து பூண்டு மணம் எளிதில் வெளிப்படும்.

9. ஒரு குறிப்பிட்ட பக்கம் மட்டும் சாய்ந்து உறங்குகிறீர்களா?

  • ஒரு கர்ப்பிணி பெண் பெரும்பாலான நேரங்களில் வலது பக்கமாக ஒருசாய்த்து உறங்கி வந்தால், அவரின் வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது என்று பொருள்.

10. மண்டை ஓடு கோட்பாடு:

  • பெண் குழந்தையை கருவுற்றிருந்தால், கர்ப்பிணி பெண்ணிற்கு செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் எடுக்கப்படும் படத்தில் குழந்தையின் குறுகலான தலை மற்றும் வட்டமான கீழ் தாடை தென்படும்.

11. பேக்கிங் சோடா பொடி சோதனை:

  • ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா பொடியை ஒரு குவளையில் எடுத்துக்கொண்டு, கர்ப்பிணியின் சிறுநீரை சிறிது அதில் சேர்க்க வேண்டும்.
  • குவளையில் பேக்கிங் பொடியும், சிறுநீரும் சேர்ந்து வினையில் ஈடுபட்டு ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தால் அது ஆண் குழந்தை கருத்தரிப்பையும், குவளையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தால் அது பெண் குழந்தை கருத்தரிப்பையும் குறிக்கும்.

12. தலைமுடியின் அமைப்பு மற்றும் பளபளப்பு:

  • கர்ப்பிணியின் தலை முடி மெலிதாக மற்றும் சோர்வுற்று காணப்பட்டால், அவர் பெண் குழந்தையை சுமக்கிறார் என்று பொருள்; இதுவே கர்ப்பிணியின் தலை முடி பொலிவாக, பளபளப்புடன் காணப்பட்டால், அவர் ஆண் குழந்தையை கருவுற்றுள்ளார் என்று அர்த்தம்.

13. சிறுநீரின் நிறம்:

  • கர்ப்பிணியின் சிறுநீர் நிறத்தை கொண்டு, அவர்தம் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை கணிக்கலாம்; இலேசான மஞ்சள் நிற சிறுநீர் வெளிப்படுவது, கர்ப்பிணியின் கருவில் பெண் குழந்தை வளர்வதை குறிக்கும்.

14. இனிப்பு உணவுகளின் மீது ஆர்வமா?

  • சாக்லேட்கள், சுவையான ஐஸ்கிரீம்கள் போன்ற இனிப்பு உணவுகளை உண்ணும் ஆவல் மிகுந்து காணப்பட்டால், அப்பெண் பெண் குழந்தையை சுமக்கிறார் என்று பொருள்; இதுவே கர்ப்பிணிக்கு வாசம் மிகுந்த, உவர்ப்பான உணவு பண்டங்கள் மற்றும் பாலடைக்கட்டிகளின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டால், அவர் ஆண் குழந்தையை கருவுற்றுள்ளார் என்று அர்த்தம்.

15. விகாரமான அல்லது அழகான?

  • கர்ப்பிணிகள் கர்ப்ப காலம் முழுவதும் மிக அழகாக காட்சி அளித்தால், அவர்கள் பெண் குழந்தைக்கு தாயாக இருக்கிறார்கள் என்று கூறலாம்; இதுவே சற்று விகாரமாக காட்சியளித்தால், அவர்கள் ஆண் குழந்தைகளை ஈன்றெடுக்கவுள்ளனர் என்று பொருள்.

கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது பற்றி முன்னோர் கூறிச்சென்ற விஷயங்கள்:

முந்தைய தலைப்பின் கீழ், ஆய்வுகள் மற்றும் அறிவியல் சார்ந்த கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கணிக்க உதவும் அறிகுறிகளை பற்றி பார்த்து, படித்து தெளிந்தோம். அவை அல்லாமல், முன்னோர் கூறிய சில அறிகுறிகளின் மூலமும் நம்மால் கருவறையில் வளரும் குழந்தையின் பாலினத்தை பற்றி அறிந்து கொள்ள முடியும். கருவறையில் வளரும் குழந்தையின் பாலினத்தை குறிப்பிட்டு சொல்லும், சில பாட்டி கதைகள் நடப்பில் நம்பப்பட்டு வருகின்றன.

இந்த பத்தியில் சில பிரபலமான, கருவில் வளரும் குழந்தைகளின் பாலினம் கண்டறிவது குறித்த பாட்டி கதைகள் அல்லது கட்டுக்கதைகள் குறித்து பார்க்கலாம்:

1. மோதிர பரிசோதனை:

  • ஒரு நூலில் மோதிரத்தை கட்டி, அதை கர்ப்பிணியின் வயிற்றின் மீது உருட்டி விட வேண்டும்.
  • அவ்வாறு செய்யும் பொழுது மோதிரம் வட்ட வடிவ இயக்கத்தில் சுழன்றால், அது கருவில் பெண் குழந்தை வளர்வதை குறிக்கும்.

2. உடலியல் குறிப்புகள்:

  • கருவில் பெண் குழந்தை வளர்ந்தால், அவள் அன்னையின் ஒட்டு மொத்த அழகையும் திருடி விடுவாள் என்று பெரியோர் கணித்துக் கூறி உள்ளனர்.
  • அதனால், கர்ப்பிணியின் சருமத்தில் பரு மற்றும் அழகற்ற வீக்கங்கள் ஏற்பட தொடங்கினால், அவர்தம் வயிற்றில் இருந்து இளவரசி பிறக்கவிருக்கிறாள் என்று பொருள்.
  • வறண்ட கைகள் மற்றும் குளிர்ந்த பாதங்கள் கொண்ட கர்ப்பிணிகளுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறுவர்.

3. சீன பிறப்பு நாட்காட்டி:

  • சீன பிறப்பு நாட்காட்டி (Chinese birth chart), ஒரு பெண் கருத்தரித்துள்ள மாதம் மற்றும் வயது ஆகியவற்றை கொண்டு, கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கணிக்க உதவும்.
  • பிறிதொரு முறையில், பெண்ணின் வயது மற்றும் கருத்தரித்த மாதத்தை கொண்டு கருவறையில் வளரும் குழந்தையின் பாலினம் கணிக்கப்படும்; இதில் வயது மற்றும் மாதம் ஆகிய இரண்டு எண்களும் இரட்டைப்படையாகவோ அல்லது ஒற்றைப்படையாகவோ இருந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்றும், இவ்விரு எண்கள் ஒற்றைப்படையாக இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் கூறுவர்.

4. லீனியா நிக்ரா:

  • வயிற்றின் மீது ஏற்படும் ஒரு அடர்ந்த கோடு, கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் அல்லது பெண் என எந்த குழந்தை உள்ளது என்பதை குறிக்க உதவும்.
  • பழங்கால நம்பிக்கைப்படி, வயிற்றில் ஏற்படும் கோடு தொப்புளுக்கு கீழாக சென்றால் அது ஆண் குழந்தை பிறக்கவிருப்பதையும், வயிற்றில் ஏற்படும் கோடு தொப்புளுடன் முடிந்து விட்டால் அது பெண் குழந்தை பிறக்கவிருப்பதையும் குறிக்கும் (1).

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles