இடம் மாறிய கர்ப்பத்தை

Written by MomJunction MomJunction
Last Updated on

பல பெண்களுக்கு கர்ப்ப கால சிக்கல்கள் ஏற்படலாம்; எக்டோபிக் கர்ப்பம் என்பது ஒரு தீவிரமான கர்ப்ப நிலை ஆகும். எக்டோபிக் கர்ப்பத்தில் கருவுற்ற முட்டை, கருப்பையின் வெளிப்புற சுவரில் இணைந்து விடும்; இது சாதாரணமான ஆரோக்கியமான கர்ப்பம் தரித்தலில் இருந்து மாறுபட்டது. அடிவயிற்று குழியில் அல்லது கர்ப்பப்பை வாய் பகுதியில் காணப்படும் பெலோப்பியன் குழாய்களில் எக்டோபிக் கர்ப்பம் ஏற்படுகிறது; இந்த நிலை ஏற்பட்டால், அதற்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியம், இல்லையேல் உடல் நிலை தீவிரம் அடையலாம்.

இப்பொழுது எக்டோபிக் கர்ப்பம் குறித்த பல்வேறு தகவல்களையும், அதை ஏற்படுத்தும் காரணங்களையும், அறிகுறிகளையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் பற்றிய ஆர்வம் உங்களில் ஏற்படலாம். MomJunction வழங்கும் இப்பதிப்பு, உங்களது ஆர்வத்திற்கு ஏற்ற தகவல்களை தருவதாக அமைந்து, எக்டோபிக் கர்ப்பம் குறித்த பல்வேறு விஷயங்களையும் நீங்கள் அறிந்து கொள்ள உதவும்; ஆகவே, ஆர்வத்துடன் பதிப்பை தொடர்ந்து படிக்க தொடங்குங்கள்!

எக்டோபிக் கர்ப்பம் என்றால் என்ன?

கர்ப்ப காலம் என்பது கருவுறுதல் எனும் நிலையில் இருந்து தொடங்குகிறது; பொதுவாக, கருவுற்ற முட்டை தானாகவே, கருப்பையின் சுவரில் இணைந்து விடும். ஆனால், எக்டோபிக் கர்ப்பத்தில் கருவுற்ற முட்டை தவறான இடத்தில் அமைந்து வளரத் தொடங்கும்; இக்கர்ப்பத்தில் கருமுட்டை கருவறையின் வெளிப்புற சுவரில் அமைந்து விடும்.

சில எக்டோபிக் கர்ப்பத்தில், கருமுட்டை பெலோப்பியன் குழாய்களில் அமைந்துவிடக்கூடும்; இந்த வகை கர்ப்பத்தை ‘குழாய் கர்ப்பம்’ என்பர். இன்னும் சில அரிதான நிலைகளில், எக்டோபிக் கர்ப்பம் கருவறையின் வேறு பகுதிகளில் கூட ஏற்படலாம், அதாவது கர்ப்பப்பை வாய் பகுதி மற்றும் அடிவயிற்று குழி போன்ற இடங்களில் ஏற்படலாம்.

எக்டோபிக் கர்ப்பம் என்பது சாதாரண கர்ப்பத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது; இது ஒரு தீவிர நிலை ஆகும். இது எந்த அளவிற்கு தீவிரமானது எனில், கருமுட்டையால் உயிர்ப்பெற்று வளர முடியாத நிலை மற்றும் கருமுட்டையை சுற்றி வளரும் திசுக்கள் கர்ப்பிணிகளின் முக்கிய அம்சங்களை, உறுப்புகளை பாதிக்கக்கூடிய வல்லமை கொண்டது இந்த எக்டோபிக் கர்ப்பம். இதனால், உட்புற இரத்தக்கசிவு மற்றும் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்; இவ்வகை கர்ப்பம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக சிகிச்சை செய்து, ஆரோக்கியமான கர்ப்பத்திற்கான வாய்ப்புகளை பாதுகாத்து, அவற்றை பெற முயல வேண்டும்.

100 கர்ப்பங்களில், குறைந்தபட்சம் இரண்டாவது எக்டோபிக் கர்ப்பமாக திகழ்கிறது; இந்த விகிதம் கடந்த 30 வருடங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. எக்டோபிக் கர்ப்பம் என்பது மலட்டுத்தன்மை சிகிச்சைகள் அல்லது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் காரணமாக ஏற்படலாம்.

எக்டோபிக் கர்ப்பத்தின் காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள்

பெண்களின் உடலில் உருவாகும் கருமுட்டைகளுக்கு சரியான இலக்கை காட்ட உதவும் பெலோப்பியன் குழாய்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தால், அதன் காரணமாக கூட எக்டோபிக் கர்ப்பம் ஏற்படலாம்; எனவே, கருமுட்டை பெலோப்பியன் குழாய் அல்லது வேறு ஏதேனும் இடத்தில் அமைந்துவிடலாம்.

கீழ்க்கண்ட இரு நிலைகள் காணப்பட்டால், எக்டோபிக் கர்ப்பம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன; அவையாவன:

  • எக்டோபிக் கர்ப்பத்தின் வரலாறு: ஒருவருக்கு கடந்த காலத்தில் எக்டோபிக் கர்ப்பம் கொண்டிருந்திருந்தால், அப்பெண்மணிக்கு எக்டோபிக் கர்ப்பம் ஏற்படும் வாய்ப்பு, 90 -இல் 1 முதல் 10 -இல் 1 வரை இருக்கலாம்.
  • நோய்த்தொற்று அல்லது அழற்சி: கருப்பை, கரு முட்டைகள், பெலோப்பியன் குழாய்களில் ஏற்படும் நோய்த்தொற்றுமற்றும் பெலோப்பியன் குழாய்களில் ஏற்படும் அழற்சி, எக்டோபிக் கர்ப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். கிளைமிடியா அல்லது கோனோரியா போன்றவை முக்கிய நோய்த்தொற்றுகளாக கருதப்படுகின்றன.
  • உடல் கட்டமைப்பு கவலைகள்: சேதமடைந்த பெலோப்பியன் குழாய்கள் அல்லது அசாதாரண வடிவம் கொண்ட பெலோப்பியன் குழாய்கள் இருந்தால், எக்டோபிக் கர்ப்பம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்; மேலும் பெலோப்பியன் குழாய்களில் ஏதேனும் அறுவை சிகிச்சை நிகழ்ந்திருந்தால், அது கூட எக்டோபிக் கர்ப்பம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
  • கருவுறுதல் கவலைகள்: கருவுறுதல் தொடர்பான சிரமங்கள் மற்றும் கருவுறுதல் மருந்துகளின் பயன்பாடு ஆகியவை எக்டோபிக் கர்ப்பம் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.
  • தொடர்புடைய அறுவை சிகிச்சைகள்: குடல் அழற்சி, சிசேரியன் அல்லது கருத்தடை தலைகீழ் உள்ளிட்ட எந்த ஒரு வயிறு சார்ந்த அறுவை சிகிச்சையும் ஆபத்தை அதிகரிக்கும்.
  • கருத்தடை சாதனங்கள்: IUD (Intra Uterine Device) போன்ற கருத்தடை சாதனங்கள் அல்லது ஏதேனும் கருத்தடை மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொண்டால், கர்ப்பம் உருவாவதே அரிதான விஷயம் ஆகலாம். குழாய் கட்டுப்படுத்தல் முறை சிகிச்சையை அதாவது நிரந்தர பிறப்புக் கட்டுப்பாடு சிகிச்சை முறையை மேற்கொண்ட ஒருவருக்கு, அச்சிகிச்சைக்கு பின் கர்ப்பம் தரிப்பதே அரிதாகலாம் அல்லது அப்படி ஏற்படும் கர்ப்பம் எக்டோபிக் கர்ப்பமாக இருக்கலாம்.
  • புகை பிடித்தல்: கருவுறும் முன் புகை பிடிப்பது எக்டோபிக் கர்ப்பம் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்; ஒருவர் எவ்வளவு அதிகம் புகை பிடிக்கிறாரோ, அந்த அளவுக்கு எக்டோபிக் கர்ப்பம் உருவாகும் ஆபத்தும் அதிகம் ஆகும்.
  • வயது: 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் கருவுற முயற்சித்தால், எக்டோபிக் கர்ப்பம் உருவாக வாய்ப்புண்டு.
  • எண்டோமெட்ரியாசிஸ்: பெலோப்பியன் குழாய்களில் காயங்களை ஏற்படுத்தும் எண்டோமெட்ரியாசிஸ் என்பது ஒரு மகப்பேறு நிலை ஆகும் மற்றும் இது உடலை மிக மோசமாக பாதிக்கலாம். ஒரு பெண்ணில், இந்நிலை தொடர்ந்து அதிகரித்தால், அது எக்டோபிக் கர்ப்பம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

எக்டோபிக் கர்ப்பத்தின் அறிகுறிகள்

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்திலேயே அறிகுறிகள் தோன்ற தொடங்கும் மற்றும் இந்த அறிகுறிகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். கர்ப்ப கால சோதனைகள் ஏற்படும் வரை, சில பெண்களின் உடலில் எந்த ஒரு அறிகுறிகளும் ஏற்படாது.

கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்தில், சாதாரண கர்ப்பத்தில் ஏற்படும் ஒரே மாதிரியான அறிகுறிகளே தோன்றும். அவற்றுள் கீழ்க்கண்டவை அடங்கும்:

  • புண்ணான மார்பகங்கள்
  • குமட்டல்
  • களைப்பு
  • யோனி புள்ளிகள் அல்லது இரத்தப்போக்கு
  • வயிற்று வலி அல்லது வயிறு பழுத்து வீங்குதல்

சில விவகாரங்களில், மகப்பேறு மருத்துவர் முதல் அடிவயிற்று சோதனையின் போதே எக்டோபிக் கர்ப்பம் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்து விடுவார். கர்ப்பிணிகள் தங்களது உடலில் கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்; கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள் ஆவன:

அடிவயிறு அல்லது இடுப்பு மண்டலத்தில் வலி அல்லது பழுத்து வீங்குதல்:

ஒரு இலேசான அல்லது இடைவிட்ட, திடீர், தீவிர மற்றும் தொடர்ந்த வலி தோன்றி வளரும்; மலக்குடல் இயக்கத்தில் மற்றும் இருமுவதில் கடினமான உணர்வு ஏற்படலாம். அடிவயிறு அல்லது இடுப்பு மண்டலத்தின் எந்த ஒரு பகுதியிலும் வலி ஏற்படலாம்; அதனுடன் வாந்தி மற்றும் குமட்டல் போன்றவையும் ஏற்படலாம்.

யோனி இரத்தப்போக்கு மற்றும் புள்ளிகள்:

கர்ப்பத்தின் ஆரம்ப காலகட்டத்தில், இலேசான இரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு உண்டு; இவ்வாறு உண்டாகும் இரத்தக்கசிவு சிவப்பு முதல் பிரௌன் நிறம் வரை வேறுபட்டு இருக்கலாம், அடர்ந்தோ அல்லது இலேசாகவோ இருக்கலாம், தொடர்ந்தோ அல்லது இடைவிட்டோ இருக்கலாம்.

தோள்பட்டை வலி:

எக்டோபிக் கர்ப்பம் ஏற்பட போகிறது எனில், படுக்கும் பொழுது தோள்பட்டையில் வலி ஏற்படும்; தோள்பட்டை பகுதிக்கு தகவல்களை எடுத்துச் செல்லும் நரம்புகளின் உட்புற பகுதிகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதால், தோள்பட்டைகளில் இத்தகைய வலி ஏற்படலாம்.

பிற அறிகுறிகள்:

கர்ப்பிணிகளுக்கு அதிர்ச்சி, பலவீனம், நாடித்துடிப்பு மாறுபடுதல்/ அதிகமாதல், மிகுந்த ஈரம் உள்ள தோல், தலை சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

குழாய் இணைப்பு கருத்தடை முறையை மேற்கொண்டிருந்தும் அல்லது IUD அல்லது முன்பு எக்டோபிக் கர்ப்பம் ஏற்பட்டிருந்தும், ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் அவர் உடனடியாக மருத்துவரை சென்று காண வேண்டியது அவசியம்; ஏற்கனவே கருவுறுதலுக்கான சிகிச்சையை மேற்கொண்டு, கர்ப்பமடைய முயன்று கொண்டிருக்கும் நபர்கள், கர்ப்பம் அடைந்த பின் கர்ப்ப காலம் முழுவதும் முறையான மருத்துவ கண்காணிப்பு கலந்தாய்வை மேற்கொள்ள வேண்டும்.

எக்டோபிக் கர்ப்பத்தை கண்டறிவது எப்படி?

எக்டோபிக் கர்ப்பத்தை கண்டறிவது என்பது ஒரு சிக்கலான விஷயம் ஆகும்; ஒருவருக்கு உடலில் ஏற்படும் அறிகுறிகள், அப்பெண்மணிக்கு எக்டோபிக் கர்ப்பம் ஏற்பட்டுள்ளதை குறிக்கிறது எனில், மருத்துவர் உடனடியாக இரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் சோதனைகளை நடத்தி ஆய்வு மேற்கொள்வார். இரத்த ஹார்மோன் பரிசோதனை முடிவுகள் மற்றும் இடுப்பு மண்டல அல்ட்ரா சவுண்ட் சோதனை முடிவுகள் ஆகிய இரண்டையும் வைத்து, மருத்துவர் எக்டோபிக் கர்ப்பத்தை கண்டறிய முற்படுவார்.

இரத்த பரிசோதனை:

இரத்த பரிசோதனை மனித குரோனியாக் கொனடோட்ரோபின் (hCG) ஹார்மோன் அளவை சரிபார்க்கும்; இந்த ஹார்மோன் அளவுகள் தேவையை விட அதிகமாக இருந்தால், அது எக்டோபிக் கர்ப்பமாக இருக்கலாம். வலி ஏதும் ஏற்படாமல், ஆனால் சோதனை முடிவில் சந்தேகம் இருந்தால் ஒருவர் இரத்த பரிசோதனையை மீண்டும் செய்து கொள்ளலாம்.

அல்ட்ராசவுண்ட்:

டிரான்ஸ்வஜினல் அல்ட்ரா சவுண்ட் சோதனை, எக்டோபிக் கர்ப்பத்தைக் கண்டறிய உதவுகிறது. இங்கு அல்ட்ரா சவுண்ட் கேபிள் பிறப்புறுப்பு வழியாக  செலுத்தப்பட்டு, திரை வழியாக பிறப்புறுப்பு படங்கள் பரிசோதிக்கப்படும். சோனாகிராஃபர் இயந்திரம் மிகவும் கவனமாக கருப்பை மற்றும் குழாய்களையே கவனிக்கும். இச்சோதனையின் பொழுது பெலோப்பியன் குழாயில் கரு கண்டறியப்பட்டால், அதன் பின் ஏற்பட்டிருக்கும் கர்ப்பம் எக்டோபிக் கர்ப்பம் என்று உறுதி செய்யப்படும். பெரும்பாலான விவகாரங்களில், எக்டோபிக் கர்ப்பத்தில் உருவான கரு தொடர்ந்து வளர முடியாமல் நிச்சயம் இறந்து விடும். இந்த மாதிரியான விவகாரங்களில், சில இரத்த அடைப்பு கொண்ட வீங்கிய குழாய் மற்றும் திசுக்களை மருத்துவரால் கண்டறிய முடியும்.

பின்பு சோனாகிராஃபர் இயந்திரம் கொண்டு கருப்பையை ஆராய்வர்; மேலும் கர்ப்பம் தரித்திருப்பதற்கான சோதனை பாசிட்டிவாக வந்து, மருத்துவரால் உருவான கருவை கண்டறிய முடியவில்லை எனில் அது எக்டோபிக் கர்ப்பமாக இருக்கலாம். இதற்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலகட்டம் அல்லது கருக்கலைப்பு போன்றவை கூட காரணமாக இருக்கலாம். மருத்துவர் தொடர்ந்து இரத்த பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் சோதனைகளை நிகழ்த்தி, கருப்பையை ஆராய்ந்து முறையான நோய்  கண்டறிதல் சோதனையை நிகழ்த்துவார்.

பிற நோயறிதல் சோதனைகள்:

மேற்கூறிய சோதனைகளின் மூலம் எந்த ஒரு முடிவும் கிடைக்கவில்லை எனில், மருத்துவர் டைலேஷன் & க்யூரேட்டேஜ் (டி & சி) எனும் சோதனையை பரிந்துரைப்பார்; இதன் மூலம் கருப்பையில் தேவையில்லாத திசுக்கள் வளர்ந்திருந்தால் அவை கண்டறியப்பட்டு அவற்றிற்கு ஏற்ற சிகிச்சை அளிக்கப்படும்.

சில அரிதான நிலைகளில், மருத்துவர் லாப்ரோஸ்கோபி சோதனையை கூட பரிந்துரைக்கலாம்; இந்த சோதனையில் ஒரு சிறிய கேமரா கருப்பைக்குள் செலுத்தப்பட்டு, கருப்பையின் உட்புற அமைப்புகளை ஆராயும். இவ்வாறு ஆராய்ந்து சோதிப்பதன் மூலம், ஒரு பெண்ணிற்கு எக்டோபிக் கர்ப்பம் ஏற்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்று கண்டறியப்படும்.

எக்டோபிக் கர்ப்பத்திற்கு சிகிச்சையளித்தல்

எக்டோபிக் கர்ப்பத்திற்கு அளிக்கப்படும் சிகிச்சை, நோய் கண்டறிதல் சோதனை, கர்ப்ப கால நிலை, ஹார்மோன் அளவுகள், கர்ப்பிணியின் உடல் அறிகுறிகள் ஆகியவற்றை பொறுத்தே அமையும்.

எதிர்பார்ப்பு மேலாண்மை:

ஒருவருக்கு எக்டோபிக் கர்ப்பம் ஆரம்ப கால கட்டத்திலேயே கண்டறியப்பட்டால், அதாவது எந்த ஒரு அறிகுறிகளும் ஏற்படும் முன் – ஆறு வார காலத்திற்குள்ளாக கண்டறியப்பட்டால், அச்சமயத்தில் எதிர்பார்ப்பு மேலாண்மை என்ற சிகிச்சை பலனளிக்கலாம். இது ஒரு சிகிச்சை முறை அல்ல; இந்த எதிர்பார்ப்பு மேலாண்மை முறை என்பது சற்று காத்திருந்து உடலில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை காண்பது தான்.

கிட்டத்தட்ட 50% எக்டோபிக் கர்ப்பங்கள் கருக்கலைப்பில் தான் சென்று முடிந்துள்ளன; கர்ப்ப கால இரத்த ஹார்மோன் மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் எந்த ஒரு முடிவுகளும் கிடைக்கவில்லை எனில், அச்சமயத்தில் எதிர்பார்ப்பு மேலாண்மை தான் பரிந்துரைக்கப்படும், அதுவே சிறந்தது. ஆனால், சில அரிதான நிலைகளில், எதிர்பார்ப்பு மேலாண்மையை மேற்கொண்ட சில பெண்களுக்கு, பின்னாளில் மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

மருத்துவ சிகிச்சை:

ஆரம்ப கால கர்ப்ப நிலைகளின் பொழுது, மேற்கொள்ளப்பட்ட ஆரோக்கிய பரிசோதனையில் குறைந்த கர்ப்ப கால ஹார்மோன் அளவுகள், காணக்கிடைக்காத இதயத்துடிப்புகள், மினுட் அறிகுறிகள் போன்றவை நோய் கண்டறிதலில் கண்டறியப்பட்டால், அந்நேரங்களில் மருத்துவ சிகிச்சை பரிந்துரைக்கப்படும். இதில் புற்றுநோய்க்கு எதிரான மருந்து, மெத்தொட்ரெக்ஸ்சேட் (த்ரெக்ஸ்சால், ருத்மட்ரேக்ஸ்) ஆகிய மருந்துகளை தொடைக்குள் செலுத்துவதும் அடங்கும். இந்த மருந்து கர்ப்பம் ஏற்படுவதை தடுக்க உதவும்; சில பெண்களில் மருத்துவ சிகிச்சையினால் எந்த பலனும் ஏற்படவில்லை எனில், அவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

மெத்தொட்ரெக்ஸ்சேட் சிகிச்சையில் அதிக வெற்றி வாய்ப்பு மற்றும் அதிக பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு; கருவின் அளவு மற்றும் hCG ஹார்மோனின் அடர்த்தி போன்ற அளவுகளை வைத்து எவ்விதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர் முடிவு செய்வார். மேலும் மருத்துவ சிகிச்சை, எக்டோபிக் கர்ப்பத்தை தடுக்க 90% உதவும்.

அறுவை சிகிச்சை:

லாப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் எக்டோபிக் கர்ப்பம் கண்டறியப்பட்டால் நோயறிதல் செயல்பாடு மூலம் அறுவை சிகிச்சை நிபுணர் பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க முற்படுவார். நோயறிதல் மூலம் எக்டோபிக் கர்ப்பத்தை சரியாக கண்டறிய முடியாவிட்டால், சால்டிங்எக்டோமி (Salpingectomy) என்ற மற்றொரு அறுவை சிகிச்சையை மருத்துவர் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்த அறுவை சிகிச்சை முறையில் பெலோப்பியன் குழாய் மற்றும் எக்டோபிக் கர்ப்பம் ஆகியவை இரண்டு சிறிய அறுவை கீறல்கள் மூலம் அகற்றப்படும்.

பெலோப்பியன் குழாயை பாதிக்காமல், சேதம் செய்யாமல் கூட உருவான கருவை நீக்கி, எக்டோபிக் கர்ப்பத்தை போக்க முடியும்; இந்த முறை தான் சால்டிங்எக்டோமி (Salpingectomy) என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பிணிக்கு ஒரே ஒரு பெலோப்பியன் குழாய் அல்லது ஆரோக்கியமற்ற குழாய் இருந்தால் மட்டுமே இந்த அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

கர்ப்பிணி பெண்கள் இச்சிகிச்சை மட்டும் இல்லாமல், எந்த ஒரு சிகிச்சையையும் மேற்கொள்ளும் முன் மருத்துவரிடம் மேற்கொள்ள போகும் சிகிச்சை முறை குறித்த எல்லா தகவல்களையும், சிகிச்சையின் சாதக, பாதகங்களையும்  தெளிவாய் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதன் பின் மருத்துவரால் உங்களுக்கு தேவையான எல்லா விஷயங்களையும், சேவைகளையும் அளிக்க முடியுமா என்பதையும் கேட்டறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு எக்டோபிக் கர்ப்பம் ஏற்பட்ட பிறகு, அவரால் மீண்டும் கருத்தரிக்க முடியுமா?

எக்டோபிக் கர்ப்ப பிரச்சனையை சந்திக்கும் பெரும்பாலான பெண்கள், எதிர்காலத்தில் சாதாரணமான கர்ப்பத்தை மேற்கொள்ள முடியும்; பெண்களின் உடலில் இருந்து ஒரு சேதமடைந்த பெலோப்பியன் குழாயை நீக்கினால் கூட, உடலில் இருக்கும் மற்றொரு குழாய் கொண்டு மட்டுமே பெண்களால் கர்ப்பம் தரிக்க முடியும். எவ்வளவு விரைவில் எக்டோபிக் கர்ப்பத்தை தடுத்து நிறுத்த முடிகிறதோ, அந்த அளவுக்கு பெலோப்பியன் குழாய் குறைவான சேதத்தை சந்திக்கும் மற்றும் மீண்டும் கருத்தரிக்கும் அரும்பெரும் வாய்ப்பையும் பெற முடியும்.

ஏதேனும் ஒரு நோய்தொற்று அல்லது பாலியல் தொடர்பான நோய்க்குறைபாட்டினால், கர்ப்பிணிக்கு எக்டோபிக் கர்ப்பம் ஏற்பட்டிருந்தால் அதற்கு முறையான சிகிச்சை மேற்கொண்டால் மீண்டும் சாதாரண கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கலாம். ஆனால், குழாய் கர்ப்பம் அல்லது டைஎத்தில் ஸ்டில்போஸ்ட்ரால் [diethylstilboestrol (DES)] தாக்கத்தால் எக்டோபிக் கர்ப்பம் ஏற்பட்டால், அதன் பின் சாதாரண கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவு தான்.

அடுத்த கர்ப்பத்திற்கு திட்டமிடும் முன் மருத்துவரிடம் ஒருமுறை கலந்தாலோசித்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்; எக்டோபிக் கர்ப்பத்திற்கு பிறகு அடுத்த கர்ப்பம் ஏற்பட, உங்கள் மனம் மற்றும் உடல் முந்தைய பாதிப்பிலிருந்து மீள போதிய அளவு நேரம் அளித்த பின், அடுத்த கருத்தரிப்பிற்கு முயற்சிக்க வேண்டும். மருத்துவரிடம் கலந்தாலோசித்து நல்ல உளவியல் மற்றும் ஆய்வாளர் பற்றி அறிந்து, கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் முறையான கலந்தாய்வு கொள்வது நல்லது. இந்த பதிப்பின் மூலம் எக்டோபிக் கர்ப்பம் குறித்து நீங்கள் நன்கு தெளிவாக அறிந்து கொண்டிருக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எக்டோபிக் கர்ப்பம் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும்!

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles