கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
In This Article
நம் ஊரில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால், அவர் தனக்கும் தன் குழந்தைக்கும் சேர்த்து இரண்டு நபர்களுக்காக உண்ண வேண்டும் என்று முன்னோர்கள், பெரியோர்கள் கூறுவர். நம் முன்னோர்கள் அவ்வாறு கூறிச்சென்றது கர்ப்பிணி பெண்கள் இரண்டு நபர்களின் பசியை போக்கும் அளவு அதிக உணவு உண்ண வேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல; இரண்டு உயிர்களுக்கு தேவையான சரியான சரிவிகித ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தான். போதிய அளவு சரிவிகித ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால் தான், கருவில் வளரும் குழந்தையின் உடல், மன ஆரோக்கியம் நன்கு மேம்பட்டு வளர்ச்சி அடையும்; மேலும் சரியான உணவு முறையை மேற்கொண்டால் மட்டுமே கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்தின் பொழுது சிக்கல்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க முடியும்.
கர்ப்ப காலத்தில் ஜங்க் உணவுகள் என்று சொல்லப்படும் துரித உணவுகளை தவிர்த்து, புதிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளல் வேண்டும்; மேலும் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி அறிந்து, அவற்றை தவிர்த்தல் வேண்டும். MomJunction வழங்கும் இந்த பதிப்பில் கர்ப்ப காலத்தில், கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய 15 உணவுகள் குறித்து படித்து அறியுங்கள்! பிற கர்ப்பிணிகள் நலன் பெற பதிப்பை பரப்புங்கள்!
கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் குழந்தையின் நலனை உறுதி செய்ய, அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சில உணவுகளை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய சில முக்கிய உணவுகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன; அவையாவன என்று பார்க்கலாம்.
1. மெர்க்குரி நிறைந்த மீன்கள்:
சுறா, வாள் மீன், கானாங்கெளுத்தி, டைல் எனும் ஓடு மீன் போன்றவை அதிக அளவில் மெர்க்குரியை கொண்ட மீன்கள் ஆகும்; இவற்றை கட்டாயம் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பெருங்கடல், ஓடைகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் காணப்படும் மெர்க்குரி, மனித உடலில் மெத்தில் மெர்க்குரியாக மாறுபாடு அடையும். இந்த நியூரோ டாக்சின் விஷச்சத்து, கருவின் மூளையில் சேதத்தை ஏற்படுத்தி குழந்தைகளின் வளர்ச்சியை தடை செய்துவிடும். சாலமன், கேட் மீன், இலேசாக பதப்படுத்தப்பட்ட டூனா போன்ற மீன் வகைகளை மருத்துவ ஆலோசனைக்கு பின்னர், கர்ப்பிணிகள் உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது. US FDA -இன் கருத்துப்படி, ஒரு வாரத்திற்கு 12 அவுன்ஸ் அளவு மீன்களை கர்ப்பிணிகள் உட்கொள்ளலாம்; அதாவது இரண்டு அல்லது மூன்று முறை உட்கொள்ளலாம். வெள்ளை டுனா (அல்பாகோர்) மீன் வகையை வாரத்திற்கு ஆறு அவுன்ஸ் என்ற அளவில் உட்கொள்வது நல்லது (1). மேலும் தொழிற்சாலை கழிவுகள், பிற கழிவுகளால் பாதிக்கப்பட்ட மீன்களை, பச்சையான மீன்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் (2).
தீர்வு: ஒமேகா 3 கொழுப்பு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள, குறைந்த மெர்க்குரி, அதிக புரதம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த நிறைவுற்ற கொழுப்புகள் கொண்ட மீன்களை உட்கொள்ளலாம்; எந்த ஒரு மீன் வகையையும் முறையான மருத்துவர் அல்லது சத்துணவு நிபுணருடன் தெளிவாக கலந்தாலோசித்த பின்னரே உட்கொள்ள வேண்டும்.
2. புகைபிடித்த கடல் உணவு:
புகைபிடித்த கடல் உணவு மற்றும் குளிரூட்டப்பட்ட கடல் உணவுகளை, கர்ப்பிணிகள் உட்கொள்ளக்கூடாது; இவ்வுணவுகளில் லிஸ்தீரியா மோனோசைடோஜென் பாக்டீரியாக்கள் நிறைந்து இருக்கும். இப்பாக்டீரியாக்கள் லிஸ்தீரியோசிஸ் (வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகளை கொண்டது) எனும் நோயை ஏற்படுத்தி குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கிவிடக்கூடும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு உப்புச்சத்து இருப்பதால் கர்ப்பிணிகள் இவற்றை உட்கொண்டால், அவர்தம் உடலில் வீக்கங்கள் ஏற்படலாம் (3).
தீர்வு: கர்ப்பிணிகள் முடிந்த அளவிற்கு புதிய, தூய்மையான மீன்களை உட்கொள்ள முயல வேண்டும்; ஆகவே புகைபிடித்த கடல் உணவு போன்ற உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.
3. பச்சையான அல்லது சமைக்கப்படாத முட்டைகள்:
கர்ப்பிணி பெண்கள் பச்சையான, பாதி சமைக்கப்பட்ட அல்லது சமைக்கப்படாத முட்டைகளை உட்கொள்ள கூடாது; ஏனெனில் இவற்றில் உள்ள சால்மோனெல்லா பாக்டீரியாக்கள், உடலில் உணவு விஷத்தை ஏற்படுத்தி விடலாம். இத்தகைய முட்டை உணவுகளை உட்கொண்டால், தீவிர வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, அடிவயிற்று வலி மற்றும் தீவிர காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம். இப்பாக்டீரியாக்கள் கர்ப்பிணிகளின் உடலை மட்டும் இல்லாமல், அவர்களுள் வளரும் கருவின் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம்.
சமைக்கப்படாத முட்டைகள் கலந்த ஐஸ்கிரீம், வீட்டில் செய்த சீசர் டிரெஸ்ஸிங், கஸ்டர்ட், மயோனைஸ், ஹோலண்டைஸ் சாஸ்கள், ஐயோலி சாஸ், மயூஸ், ட்ரிமிசு போன்ற இனிப்புகள் போன்ற உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.
தீர்வு: பதப்படுத்தப்பட்ட முட்டை பொருட்களை வாங்குதல் வேண்டும்; மேலும் சரியான முட்டை வகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம், மயூஸ் போன்ற உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். முழுமையாக சமைக்கப்பட்ட வெள்ளை, மஞ்சள் கரு கொண்ட முட்டைகள், ஆம்லெட்கள், சாலட்கள் போன்ற உணவுகளை உட்கொள்வது நல்லது (4).
4. பச்சையான இறைச்சி மற்றும் கோழி:
சமைக்கப்படாத அல்லது பச்சையான இறைச்சி மற்றும் கோழி போன்ற உணவு வகைகளை உட்கொள்ளாமல் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்; ஏனெனில் இவை டாக்சோபிளாஸ்மா பாரசைட் மற்றும் சால்மோனெல்லா பாக்டீரியா போன்றவற்றை கொண்டிருக்கும். இந்த தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் உணவு விஷம் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்க்குறைபாடுகளை ஏற்படுத்தலாம்; சால்மோனெல்லா பாக்டீரியா ஃபுட் பாய்சன் எனும் உணவு விஷத்தையும், டாக்சோபிளாஸ்மா பாரசைட் நோய்க்கிருமி தீவிர காய்ச்சலையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இந்த கிருமிகளால் ஏற்படும் பாதிப்பால் கருக்கலைப்பு அல்லது பிரசவத்தின் பொழுது குழந்தை இறந்து பிறத்தல் போன்றவை ஏற்படலாம்.
தீர்வு: கர்ப்பிணி பெண்கள் நூறு சதவிகிதம் சமைக்கப்பட்ட இறைச்சி மற்றும் கோழி இறைச்சிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்; பொதுவாக இறைச்சிக்கு 160°F என்ற வெப்ப அளவும், முழுமையாக அறுக்கப்பட்ட இறைச்சிகளுக்கு 145°F என்ற வெப்ப அளவும், கோழியின் மார்பக இறைச்சிக்கு 165°F என்ற வெப்ப அளவும் கொண்டு சமைக்கப்பட்டிருக்க வேண்டும் (5).
5. பதப்படுத்தாத பால்:
கர்ப்ப காலத்தில் பதப்படுத்தாத பால் அல்லது பச்சையான பால் போன்றவற்றை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல; ஆகவே இவ்வகை உணவுகளை தவிர்க்க வேண்டிய அவசியம். இவற்றில் எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லை; சமைக்கப்படாத பச்சையான பாலை உட்கொண்டால், அதனால் தொற்று நோய்கள் ஏற்படும் பாதிப்பு உண்டு. இவ்வுணவுகளில் காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்தீரியா, இ-கோலை மற்றும் கிரிப்டோபோரிடியம் போன்ற பாக்டீரியாக்கள் கர்ப்பிணிகளின் உடல் மற்றும் கருவின் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம் (6).
தீர்வு: பதப்படுத்தப்படாத பால் மற்றும் அவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் போன்றவற்றை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் சமைக்கப்படாத பாலில் உள்ள நோய்க்கிருமிகள் கர்ப்பிணிகளை தாக்கி விடலாம். எனவே, முறையாக பதப்படுத்தப்பட்ட பாலை உட்கொள்ள வேண்டும்; பாலில் உள்ள கிருமிகள் அனைத்தும் உயர் வெப்பத்தில் அழிக்கப்பட்டு, பதப்படுத்தப்படுகிறது. உள்ளூர் வியாபாரிகளிடம் இருந்து பால் வாங்கும் பொழுது, அப்பாலை நன்கு கொதிக்க வைத்து பின்னர் அதை பருகலாம். கர்ப்பிணி பெண்கள் பால் அல்லாத, ஆனால் பால் கொண்டிருக்கும் அதே ஊட்டச்சத்துக்களை கொண்ட சோயா பால், அரிசி பால், பாதாம் பால், ஓட்ஸ் பால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
6. மென்மையான பாலாடைக்கட்டிகள்:
கேமம்பெர்ட் (Camembert), ரோக்ஃபோர்ட் (Roquefort), கோர்கோன்சோலா (Gorgonzola), ப்ரி (brie), ஃபெட்டா (feta), ப்ளூ சீஸ் (blue cheese), கிவெஸ்கோ ஃப்ரெஸ்கோ (queso fresco), கிவெஸ்கோ ப்ளான்கோ (queso blanco) மற்றும் பனெலா (panela) போன்ற மென்மையான பாலாடைக்கட்டிகளை உட்கொள்வதை தவிர்த்தல் நன்று. பதப்படுத்தப்படாத மென்மையான பாலடைக்கட்டிகளில் லிஸ்தீரியா பாக்டீரியா இருக்க வாய்ப்புண்டு (7).
தீர்வு: கர்ப்பிணி பெண்கள் கடினமான பாலடைக்கட்டிகளான (செடார் அல்லது சுவிஸ் பாலடைக்கட்டிகள்) போன்றவற்றை உட்கொள்ளலாம்; இவற்றில் மென்மையான பாலடைக்கட்டிகளில் இருப்பது போன்று தண்ணீர் இருக்காது. மேலும் இக்கடின பாலடைக்கட்டிகளில் பாக்டீரியாக்களும் மிகக்குறைவான அளவில் மட்டுமே உள்ளன. இறக்குமதி செய்யப்படாத எல்லா மென்மையான பாலடைக்கட்டிகளும் உட்கொள்ள பாதுகாப்பானது தான்; இருப்பினும் இவற்றை உட்கொள்ளும் முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது (8).
7. கழுவப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகள்:
கழுவப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் டாக்ஸோபிளாஸ்மா பாரசைட் எனும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா உள்ளது; இது குழந்தையின் வளர்ச்சியை தடுத்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. டாக்ஸோபிளாஸ்மோசிஸ் கிருமிகள் மண்ணில் கலந்து அதில் விளையும் பயிர்களை சேதப்படுத்தி, பயிர்களின் மூலம் பெறப்படும் மகசூலையும் பாதிக்கும்; ஆகவே பழங்கள், காய்கறிகளை கழுவாமல் உட்கொள்வதை தவிர்க்கவும்.
தீர்வு: பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை நன்கு, தெளிவான நீரில் கழுவிய பின்னர் பயன்படுத்தவும்; தோலுரிந்த, வீங்கிய அல்லது வெட்டுக்கள் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு சமைத்து உண்ணவும்; குறிப்பாக, இலைகள் கொண்ட காய்கறிகளை நன்கு சமைத்து உட்கொள்ளவும் (9).
8. பச்சையான முளைகட்டிய தானியங்கள்:
சமைக்கப்படாத அல்லது பச்சையான முளைகட்டிய தானியங்களை அதாவது க்ளோவர், அல்பால்ஃபா, முங் பீன், முள்ளங்கி, ப்ரோக்கோலி, சூரியகாந்தி, வெங்காயம், சோயாபீன் மற்றும் பனிப்பொழிவு முளைகள் ஆகியவை உட்பட எந்த ஒரு சமைக்கப்படாத முளைக்கட்டிகளையும் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்; இவற்றில் இருக்கும் லிஸ்தீரியா, சால்மோனெல்லா, இ-கோலை போன்ற பாக்டீரியாக்கள் கர்ப்பிணிகளின் உடலில் பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். குறிப்பாக லிஸ்தீரியோசிஸ் கர்ப்பிணிகளில் கருக்கலைப்பு, குழந்தை இறந்து பிறத்தல், குறை பிரசவம் மற்றும் பிறந்த குழந்தைகளில் நோய்தொற்று போன்ற பாதிப்புகளையும், சால்மொனெல்லா மற்றும் இ-கோலை போன்றவை தீவிர உடல் உபாதைகளையும் உண்டாக்கி விடலாம் (10).
தீர்வு: சமைத்த முளைகட்டிய தானியங்களை உட்கொள்ளவும்
9. ஒவ்வாமையை உண்டாக்கும் உணவுகள்:
சோயா, கோதுமை, மாட்டுப்பால், முட்டைகள், நிலக்கடலை பருப்புகள், மர பருப்புகள் (பாதாம், வாதுமை கொட்டைகள், ஹசல்நட்கள், மற்றும் பல), மீன் மற்றும் சிப்பி மீன் போன்றவற்றை உட்கொள்ளாமல் தவிர்த்தால், ஒவ்வாமை குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம். சில ஆய்வுகள் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்தம் வாழ்வில் ஒவ்வாமைகள் மற்றும் ஆஸ்துமா போன்றவை ஏற்படும் பாதிப்பு குறைவு என்று கூறுகின்றன (11). ஆனால் இதனை முற்றிலுமாக உண்மை என்று கூற முடியாது.
தீர்வு: எல்லா ஆய்வுகளும் இக்கருத்தை உண்மை என்று நிரூபிக்கவில்லை. ஆகவே கர்ப்பிணிகள் தங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகள் எவையெவை என்று மருத்துவரிடம் கேட்டு அறிந்து, அதற்கேற்ப சரியான உணவுகளை உட்கொண்டு கர்ப்ப காலத்தை பாதுகாப்பாக, மகிழ்ச்சியுடன் கடக்க முயல வேண்டும்.
10. கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
கர்ப்பிணி பெண்கள், உணவகங்களில் தயாரிக்கப்படும் சீசர் சாலட், முன்கூட்டியே சமைத்து வைத்த உணவுகள், கடல் உணவு சாலட்கள், அதிகம் உப்பு அல்லது அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள், தெருவோர கடைகளில் கிடைக்கும் உணவுகள், அதிகப்படியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகள், அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சமைக்கப்படாத உணவுகள், முட்டைகள், இறைச்சிகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை உணவு விஷ பாதிப்பை ஏற்படுத்துவதுடன், கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியில் தீவிர பாதிப்பையும் உண்டாக்க வாய்ப்புண்டு.
தீர்வு: வீட்டில் உணவு பொருட்கள் தயாரிப்பில் பாதுகாப்பான நடைமுறையை கையாள வேண்டும்; சரிவிகித ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்களை நன்கு கழுவிய பின்னர் பயன்படுத்தவும்; சுகாதாரமான முறையில் பாத்திரங்களை தூய்மைப்படுத்தி, சுத்தமாக சமைத்து உட்கொள்ளவும் (12).
11. பதப்படுத்தப்படாத சாறுகள்:
பதப்படுத்தப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் இ-கோலை, சால்மோனெல்லா முதலிய பாக்டீரியாக்கள் இருக்கும்; இவை உடலிற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. இத்தகைய காய்கறி மற்றும் பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகளை உட்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.
தீர்வு: வீட்டில் சுத்தமான முறையில், தூய்மையான பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட சாறுகளை அருந்துவது நல்லது; சாறுகளை தயாரிக்கும் முன் பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவி, சுகாதாரமான முறையில் வெட்டி அறுத்துக் கொள்ள வேண்டும் (13).
12. அதிகப்படியான காஃபின்:
அதிகப்படியான காஃபின் நிறைந்த பானங்களை கர்ப்பிணி பெண்கள் பருக நேர்ந்தால், அவர்களுக்கு கருக்கலைப்பு மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு; ஆகவே கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 200 மில்லிகிராம் என்ற அளவில் மட்டுமே காஃபினை எடுத்துக் கொள்ள வேண்டும். தேநீர், சாக்லேட், சக்தி தரும் பானங்கள் போன்றவற்றில் காஃபின் கலந்து இருக்கும். சில ஆராய்ச்சி கட்டுரைகள் குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கவும், அவர்களில் சில நோய்க்குறைபாடுகள் ஏற்படவும் காஃபின் காரணமாகலாம் என்று கூறுகின்றன (14).
கர்ப்பமாக இருக்கும் பொழுது குளிர் பானங்கள், டயட் சோடா, ஆல்கஹால் மற்றும் ஐஸ் டீ போன்ற பானங்களை பருகாமல் தவிர்க்க வேண்டும்.
தீர்வு: கர்ப்பிணிகள் முதல் ட்ரைமெஸ்டரில் இருக்கும் பொழுது, காஃபின் குறைந்த பானங்களை குறைத்துக் கொண்டால், கருக்கலைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.
13. மூலிகை தேநீர்:
மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரால் அன்னை மற்றும் கருவிற்கு பாதிப்பு நேரலாம்; எபேட்ரா (ephedra), ஏஞ்செலிகா (angelica), கவா கவா (kava kava), யோஹிம்பே (yohimbe), கருப்பு மற்றும் நீல கோஹோஷ் (black and blue cohosh), டாங் குவை (dong quai), போராஜ் எண்ணெய் (borage oil), பென்னிராயல் (pennyroyal) மற்றும் மக்வார்ட் (mugwort) போன்ற மூலிகை வகைகளை கர்ப்ப காலத்தின் பொழுது முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
காம்ஃப்ரே (Comfrey), கருப்பு வால்நட், காஸ்கரா சாக்ரடா (cascara sagrada), வெந்தயம், எக்கினேசியா (echinacea), கோல்டன்சீல் (goldenseal), ஹார்ஸ்டெய்ல் (horsetail), அதிமதுர வேர், சா பால்மெட்டோ (saw palmetto), சென்னா (senna), மதர்வார்ட், செயின்ட் ஜான்ஸ் வோர்ட், ஷெப்பர்ட்ஸ் பர்ஸ் (shepherd’s purse), புழு, டான்சி மற்றும் ஊவா உர்சி (uva ursi) போன்ற மூலிகைகள் கருக்கலைப்பை ஏற்படுத்தி விடலாம்.
இவை தவிர கேமில்லா மூலிகை போன்ற இதர மூலிகைகளில் இருந்தும் சற்று விலகி இருப்பது நல்லது; எந்த ஒரு மூலிகையையும், மூலிகை சார்ந்த பொருளையும் உட்கொள்ளும் முன் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டியது மிகவும் அவசியம் (15).
தீர்வு: கர்ப்பமாக இருக்கும் நபர்கள் மூலிகை தேநீரை காட்டிலும், சாதாரணமான தேநீரை உட்கொள்வது தான் பாதுகாப்பானது; கிரீன் டீ எனப்படும் பசுமை தேநீர் குறித்து ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன – ஆகையால் அதனை கூட மருத்துவ ஆலோசனைக்கு பின், நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு கப் என்ற அளவில் பருகுவது நல்லது.
14. நைட்ரேட் நிறைந்த உணவுகள்:
அதிக நைட்ரேட் நிறைந்த இறைச்சிகள், காய்கறிகள் கொண்டு செய்யப்பட்ட சாண்ட்விச், சாசேஜ், சலாமி, ஹாட் டாக் போன்ற உணவுகள் உட்கொள்வதை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டும்; உணவின் நிறத்தை அதிகரித்து, அதன் வாழ்நாளை கூட்ட நைட்ரேட் உதவும். ஆனால், உட்கொள்ளப்படும் நைட்ரேட் மனித உடலில் நைட்ரோசமைன்ஸாக மாற்றம் அடைந்து புதிய அன்னையராக மாறவிருக்கும் பெண்களின் உடலில் புற்றுநோயையும், கருவின் உடலில் அசாதாரண மாற்றங்களையும் உண்டாக்கி விடக்கூடும். ஆகவே, சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளை கொண்ட நைட்ரேட் நிறைந்த உணவுகளை கர்ப்ப காலத்தின் பொழுது தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம் (16).
தீர்வு: நன்கு சமைக்கப்பட்ட மற்றும் பிடித்த உணவுகளை சரியான அளவில் எடுத்துக் கொண்டு வந்தால், ஆரோக்கியமாக நலமுடன் பாதுகாப்பாக வாழலாம்.
15. அதிமதுரம்:
கர்ப்ப காலத்தில் அதிமதுரம் அல்லது அதிமதுரம் சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும்; இதன் ஒரு பகுதியான கிளைசிரின் கரு வளர்ச்சியை பல வழிகளில் பாதிக்கும் தன்மை கொண்டது ஆகும். இந்த கிளைசிரின் நஞ்சுக்கொடியை ஊடுருவி, அதில் இருக்கும் ஹார்மோனை குழந்தையின் உடலில் நுழையுமாறு செய்துவிடும்; இது குழந்தையின் மூளை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை பாதித்து விடும். குழந்தைகளில் காணப்படும் ADHD குறைபாடுகள் மற்றும் பெண் குழந்தைகளில் முன்கூட்டியே ஏற்படும் மாதவிடாய் போன்றவை அதிமதுரத்தால் ஏற்படுபவை ஆகும்; இது கர்ப்பிணிகளின் உடலில் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி, குறை பிரசவத்தை ஏற்படுத்தி விடலாம் (26).
தீர்வு: கர்ப்ப காலத்தில் எந்த ஒரு வடிவிலும் அதிமதுரத்தை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.
Community Experiences
Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.