நீங்கள் கர்ப்பம் அடைந்திருக்கிறீர்களா என்பதை அறிந்து கொள்ள சில வீட்டு வழிமுறைகள்

Written by MomJunction MomJunction
Last Updated on

பொதுவாக கர்ப்பம் அடைந்திருக்கிறோமா என்பது சந்தேகமாக இருக்க கூடிய முதல் ஆறு வாரங்களில் எல்லோரும் செய்வது நாம் கர்ப்பம் அடைந்திருக்கிறோமா என்பதை பரிசோதிக்கும்  விதமாக மருந்துக் கடைகளில் விற்கும் பரிசோதனை பட்டியை வாங்கி அதில் சோதனை செய்து பார்ப்பது.

ஆனால் அது எல்லாருக்கும் எல்லா நேரங்களிலும் சரியான முடிவை சொல்வதில்லை. பல சமயங்களில் தவறான முடிவுகளை சொல்லி விடுகிறது. இந்த நேரங்களில் தான் பாரம்பரியமாக வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு கர்ப்பத்தை பரிசோதனை செய்து அறிந்து கொள்ள முடியும் என்கிற செய்தி நமக்கு உதவி செய்கிறது.

உயர்ந்த விலைகளில் மருந்துக் கடைகளில் விற்கப்படும் பரிசோதனை பட்டிகளை விட குறைந்த விலையில் வீட்டில் உள்ள பொருள்களை கொண்டே நாம் கர்ப்பம் அடைந்திருக்கிறோமா என்பதை  தெரிந்து கொள்ள முடியும் என்பது நல்ல செய்திதான் இல்லையா.

அதை விடவும் இதற்கான பட்டியை நாம் வெளியில் சென்று மருந்து கடைகளில் கேட்டு பெற மிகவும் கூச்சம் கொள்வோம். அவர்களுக்கெல்லாம் இந்த முறை மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

கர்ப்பம் அடைந்திருக்கிறோமா என்பதை கண்டறியும் வீட்டு முறை வைத்தியங்கள்

வீட்டில் இருந்தபடியே உங்கள் கர்ப்ப நிலைப்பாடை பரிசோதிக்க 11 வழிமுறைகளை இந்தக் கட்டுரையில் கொடுத்திருக்கிறோம். உங்களுக்கு தேவையான அல்லது வசதிப்பட்ட பரிசோதனைகளை நீங்கள் செய்து கொள்ளலாம்(1). எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் செலவின்றி பரிசோதித்து கொள்ளலாம் (2, 3, 4).

1. ப்ளீச்

இந்த ப்ளீச் முறை என்பது வெகு விரைவில் உங்களுக்கு பதில் தரக் கூடிய சுலபமான வழிமுறை. ஒரு சுத்தமான கப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் சிறுநீரை சேகரியுங்கள். இப்போது அதில் சிறிதளவு ப்ளீச்சிங் பவுடரை சேருங்கள். அது கட்டிகள் ஆகாமல் இருக்க லேசாக பிளாஸ்டிக் ஸ்பூன் மூலம் கலக்கி கொள்ளுங்கள். இந்தக் கலவை நுரையை உருவாக்கினால் நீங்கள் கர்ப்பம் ஆகியிருக்கிறீர்கள் என்பது உறுதியாகிறது. நுரைகள் ஏதும் உருவாகவில்லை என்றால் நீங்கள் கர்ப்பம் அடையவில்லை என்று அர்த்தம்.

2. சர்க்கரை

விஞ்ஞான ரீதியாக கர்ப்ப பரிசோதனைகள் ஏதும் ஆரம்பிக்காத காலங்களில் கூட சர்க்கரை கொண்டு பரிசோதிக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. ஒரு ஸ்பூன் சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும். அதில் உங்கள் சிறுநீரை ஒரு ஸ்பூன் அளவிற்கு ஊற்றவும். (ஒரு சுத்தமான கப் அவசியமானது) சர்க்கரை சிறு சிறு கட்டிகளாக மாறினால் நீங்கள் கர்ப்பம் அடைந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். சர்க்கரை கரைந்து விட்டால் நீங்கள் கர்ப்பம் இல்லை என்று அர்த்தம்.

3. பற்பசை

நீங்கள் கர்ப்பம் அடைந்திருக்கிறீர்களா என்பதை உங்கள் பற்பசையை கொண்டே அறிந்து கொள்ள முடியும். ஆனால் அந்த பற்பசை வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். வழக்கம் போல ஒரு கப்பில் இரண்டு ஸ்பூன் அளவு பற்பசை உடன் சிறுநீரை சேருங்கள். பற்பசை நுரை போல மாறினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். மாறவில்லை என்றால் நீங்கள் கர்ப்பம் அடையவில்லை என்று அர்த்தம்.

4. வினிகர்

ஆமாம். நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் வினிகர் உங்களது கர்ப்பத்தை பரிசோதிக்கும். ஆனால் இதற்கு வெள்ளை நிற வினிகர் தான் தேவை. ஒரு சுத்தமான பிளாஸ்டிக் கப்பில் இரண்டு ஸ்பூன் வெள்ளை வினிகரை ஊற்றவும். அதில் உங்கள் சிறுநீரை கலக்கவும். வினிகர் நிறம் மாறினாலோ நீர்குமிழிகள் ஏற்பட்டாலோ நீங்கள் கர்ப்பம் அடைந்திருக்கிறீர்கள் என அர்த்தம். எதுவும் மாறவில்லை என்றால் நீங்கள் கர்ப்பம் அடையவில்லை என்று அர்த்தம்.

5. சோப்

சோப் உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்யும். அதற்கு நீங்கள் எந்த விதமான சோப்பை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒரு சிறிய சோப் துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் சிறுநீரை விடவும். சோப் நீர்குமிழிகளை உண்டாக்கினால் நீங்கள் கர்ப்பம் அடைந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீர்குமிழிகள் உண்டாகவில்லை என்றால் நீங்கள் கர்ப்பம் அடையவில்லை என்று அர்த்தம்.

6. பேக்கிங் சோடா

கருத்தரித்திருக்கிறோமா என்பதை அறிய பேக்கிங் சோடா பெரிதும் உதவி செய்கிறது. இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் சிறுநீரை விட வேண்டும். நீர்குமிழிகளோ அல்லது சோடா பாட்டிலை திறக்கும்போது ஏற்படுவது போலவோ நடந்தால் நீங்கள் கர்ப்பம் அடைந்தது உறுதியாகிறது. அப்படி இல்லை எனில் நீங்கள் கர்ப்பம் அடையவில்லை என்று அர்த்தம்.

7. ஒயின்

கொஞ்சம் விலை உயர்ந்த பரிசோதனை தான் இது. ஆனால் கருத்தரித்திருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ள இதுவும் ஒரு வழிதான். அரை கப் ஒயினை எடுத்து கொள்ளுங்கள். அதே அளவு சிறுநீரை அதில் கலக்கவும். 10 நிமிடங்கள் கழித்து ஒயினின் அசல் நிறம் மாறி இருந்தால் நீங்கள் கர்ப்பம் என்று அர்த்தம். மாறவில்லை என்றால் கர்ப்பம் அடையவில்லை என்று அர்த்தம்.

8. பைன் சால்

தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் இந்த திரவம் உங்கள் கர்ப்பத்தை பரிசோதிக்கும் ஆற்றல் பெற்றது. சில துளிகள் சிறுநீரை ஒரு ஸ்பூன் பைன் சால் திரவத்தில் விட வேண்டும். திரவம் அடர் நிறமாகவோ நீல நிறமாகவோ மாறினால் நீங்கள் கர்ப்பம் அடைந்திருக்கிறீர்கள் என்று பொருள். மாற்றம் இல்லை எனில் நீங்கள் கர்ப்பம் அடையவில்லை என்று பொருள்.

9. டாண்டலியன் இலை

காலையில் உங்கள் முதல் சிறுநீரின் சில துளிகளை எடுத்து கழுவி சுத்தப்படுத்திய டான்டேலியன் இலைகள் மீது விட வேண்டும். அதில் சிவப்பு நிற கொப்புளங்கள் ஏற்பட்டால் நீங்கள் கர்ப்பம் ஆகி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு மணி நேரம் கழித்தும் அந்த இலையில் எந்த மாற்றமும் இல்லை என்றால் நீங்கள் கர்ப்பம் அடையவில்லை என்று பொருள்.

10. டைனால் மற்றும் பெராக்ஸைடு

ஒரு கால் கப் பெராக்ஸைடு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் டைனால் மாத்திரைகள் இரண்டை பொடித்து போடவும். காலையில் முதலில் எடுத்த சிறுநீரை அதிக கால் கப் சேர்க்கவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும். அந்தக் கலவை நீல நிறமாக மாறினால் அல்லது நீல நிற நுரையை ஏற்படுத்தினால் நீங்கள் கர்ப்பம் அடைந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். எந்த மாற்றமும் இல்லை என்றால் நீங்கள் கர்ப்பம் அடையவில்லை என்று அர்த்தம்.

11. ட்யூனா மற்றும் வினிகர்

ஒரு பிளாஸ்டிக் கப்பில் 1/4 அளவு வினிகர் மற்றும் 1/4 அளவு ட்யூனா சாறை சேர்க்க வேண்டும். காலையில் முதலில் எடுத்த சிறுநீரை அரை கப் எடுத்து அதில் கலக்கவும். இந்தக் கலவை பச்சை நிறமாக மாறினால் நீங்கள் கர்ப்பம் அடைந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். மாறவில்லை என்றால் கர்ப்பம் அடையவில்லை என்று அர்த்தம்.

கர்ப்ப பரிசோதனை மேற்கொள்ளும்போது செய்ய வேண்டிய குறிப்புகள்

  • எப்போதும் காலையில் எழுந்ததும் நீங்கள் வெளியேற்றும் முதல் சிறுநீரை பரிசோதனைக்கு பயன்படுத்த வேண்டும்(1).
  • 11 மாதிரி பரிசோதனைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 3 அல்லது நான்கு முறைகளை மாற்றி மாற்றி செய்து பார்க்கவும். அப்போது கர்ப்பநிலை உறுதியாக தெரியவரும். எல்லாமும் பாசிட்டிவ் என்று வந்தால் மட்டுமே மருத்துவரை அணுகலாம்.
  • ஒரு சுத்தமான பிளாஸ்டிக் கப் இதற்கு தயாராக வைக்கவும்.
  • தேவையான அளவு சிறுநீரை நீங்கள் சேகரிக்க வேண்டும். குறைந்த அளவு சிறுநீர் தவறான தகவல்களை தரலாம்.
  • ஒவ்வொரு பரிசோதனைக்கு 10 நிமிட காலம் காத்திருப்பு நேரம் என வைத்துக் கொள்ளுங்கள் (5).

இறுதியாக

கர்ப்பம் அடைதல் என்பது மிகப்பெரிய பொறுப்பு. இந்த பிரபஞ்சம் பெண்களை நம்பி அந்த பொறுப்பை நமது கைகளில் கொடுத்திருக்கிறது. மிக மிக கவனமாக நடந்து கொள்ளுங்கள். கருத்தரித்தல் அல்லது தாய்மை அடைதல் என்பது மிக உணர்வுகரமான பல மனமாற்றங்களை உங்களுக்கு ஏற்படுத்தும்.

நமது ஒவ்வொரு செயலும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே நல்ல எண்ணங்களை கை கொண்டு நல்ல விஷயங்களை மட்டுமே யோசித்து நல்ல வாழ்க்கை அறங்களை உங்கள் கருவிற்கு ஊட்டி விடுங்கள்.

ஆகவே குடும்பத்தாரின் அண்மையுடன் ஆலோசனைகளுடன் மருத்துவரின் ஆலோசனையும் பெற்று முறையான கர்ப்பத்தை தாங்கி உங்கள் வம்சத்தை தழைத்தோங்க செய்யுங்கள்.

4 ஆதாரங்கள்

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles