ஆண் குழந்தைக்காக ஆசைப்படுகிறீர்களா.. உங்கள் உணவு இப்படி இருந்தால் ஆண் குழந்தை நிச்சயம் !

Written by Sruti Bhattacharjee
Last Updated on

இந்த நவீன யுகத்திலும் ஆண் குழந்தை வேண்டும் என்கிற விருப்பம் ஒரு சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது.

ஒரு பெண் ஒரு ஆண் என்கிற விகிதத்தில் குழந்தைப் பிறப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் பலர் இருக்கின்றனர்.

பெரும்பான்மை நாடுகளில் பெரும்பான்மை மக்களில் பெண் குழந்தை என்பவள் திருமணத்திற்கு பிறகு மறு வீடு செல்பவளாக இருக்கிறார்கள். எனவே வீட்டின் வெறுமையைத் தவிர்க்க ஆண் குழந்தை இருந்தால் அவன் மூலமாக தங்கள் தனிமை போக்கப்படும் என்பது பல பெற்றோர்களின் நம்பிக்கையாக இன்றளவும் இருந்து வருகிறது.

எதை செய்தாலும் அதனைத் திட்டமிட்டு செய்தால் அது வெற்றிக்கு வழிவகுக்கும். அந்த வகையில் ஆண் குழந்தையை பிரசவிக்க விரும்புகிறவர்கள் ஒரு குறிப்பிட்ட உணவு முறைகளைக் கையாண்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அதனை பற்றி மேலும் பார்க்கலாம் வாருங்கள்.

ஆண்  குழந்தை பெற என்ன செய்ய வேண்டும் ?

உங்கள் உணவை மாற்றுவது ஒரு பையனை கருத்தரிக்க உதவும் என்பதற்கு எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை என்றாலும், பாரம்பரிய மற்றும் இயற்கை வைத்தியங்களை ஆதரிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்புத் தகவல்களால் ஆதரிக்கப்படும் மிகவும் பிரபலமான பரிந்துரைகளில் ஒன்று, உங்கள் உணவில் அல்கலைன் அதிகமாக இருக்க வேண்டும் என்பது. அதாவது காரத்தன்மை அதிகம் கொண்ட உணவுகள்.

நிரூபிக்கப்படாத இந்த தீர்வு, அதிக கார (உயர் pH) “சூழல்” உள்ளவர்கள் ஒரு பையனை கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறது

  • பழங்கள் மற்றும் காய்கறிகளின் உட்கொள்ளல் ஆண் மகவை பெறும் வாய்ப்பை அதிகரிக்கும்
  • வாழைப்பழங்கள், சால்மன், அவகேடோ போன்ற பொட்டாசியம் கொண்ட உணவுகளை உட்கொள்வது ஆண் மகவை பெறும் வாய்ப்பை அதிகரிக்கும்
  • சிட்ரஸ் பழங்கள், வேர் காய்கறிகள், கொட்டைகள் போன்ற அதிக காரத்தன்மை கொண்ட உணவுகள் ஆண் மகவை பெறும் வாய்ப்பை அதிகரிக்கும்
  • பால் பொருட்களைத் தவிர்ப்பது ஆண் மகவை பெறும் வாய்ப்பை அதிகரிக்கும்.

இது தவிர ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பினால் அதற்கு சித்தர்கள் ஒரு சில சூட்சுமங்களைக் கூறியுள்ளனர். அவற்றை இறுதியாக பார்க்கலாம்.

ஆண்  குழந்தை பெற எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள்

1. வாழைப்பழம்

வாழைப்பழம் பொட்டாசிய சத்திற்கு பெயர் போன பழம். இதனை தம்பதிகள் அடிக்கடி உண்டு வந்தால் பொட்டாசியம் சத்து உருவாக்கும் கருவானது ஆண் குழந்தையின் க்ரோமோசோம்களை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

2. செரல்ஸ்

காலை உணவிற்கு இட்லி பொங்கல் என ஒரு பிடிபிடிக்காமல் மேற்கத்திய உணவான செரல்ஸ் உட்கொள்வது ஆண் குழந்தையை கருத்தரிக்கும் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கிறது. 2008 ஆம் ஆண்டில் 740 பெண்களைப் பற்றிய ஒரு ஆய்வில், தாய் தனது கலோரி அளவை அதிகரித்து, காலை உணவு தானியங்களை சாப்பிட்டபோது ஆண் குழந்தை பிறப்பதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதிக இரத்த குளுக்கோஸ் அளவு ஒரு பையனைப் பெறுவதற்கு சாதகமாக இருப்பதால் இது இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும் பிரிட்டிஷ் அரசு இதனை மறுக்கிறது.

3. காளான்

விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் வைட்டமின் டி தேவை. காளானில் இந்த சத்து அதிகமாக இருக்கிறது. மேலும் காளான் உணவில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. எனவே ஆண் குழந்தை பெற விரும்பும் தம்பதியினர் அடிக்கடி காளான் சாப்பிடுங்கள்.

4. சிட்ரஸ் பழங்கள்

இந்த கொரோனா நேரத்தில் சிட்ரஸ் பழங்களின் மஹிமையை நன்கு உணர்ந்திருப்பீர்கள். அன்னையின் உடலில் நோய் இல்லாமல் இருந்தாலே பிறக்கும் குழந்தை கூலாக ஆரோக்கியமாக பிறக்கும். அதற்கு சிட்ரஸ் பழங்கள் பெரிதும் உதவுகின்றன. ஆண் குழந்தையை பெற்றெடுக்கும் அம்மாக்கள் கொஞ்சம் ஆரோக்கியமானவர்களாகவும் இருக்க இந்தப் பழங்கள் அவசியமானது.

5. தக்காளி

தக்காளி உடலின் ph அளவை சமமாக்குகிறது. அல்கலைன் அளவை அதிகரிக்கிறது. சோடியம் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது தக்காளி. ஆகவே ஆண் குழந்தை பெற விரும்புவோர் தினமும் தக்காளியை உங்கள் உணவில் சேருங்கள். அளவாக சேர்க்கவும்.

6. உப்பு உணவுகள்

சோடியம் பொட்டாசியம் போன்றவை ஆண் குழந்தை பிறப்பை உறுதி செய்கின்றன. எனவே கருத்தரிக்கும் வரை உப்பு அதிகம் உள்ள ஊறுகாய், அப்பளம் போன்ற உணவுகளை சேருங்கள். கருத்தரித்த உடன் இந்த உணவுகளை நிறுத்தி விடவும்.

7. கடல் உணவுகள்

ஆண்களின் விந்தணுக்கள் பெண்களின் கருமுட்டையோடு இணைவதற்காகத்தான் கலவி எனும் விஷயம் நடக்கிறது. அதிக விந்தணுக்கள் பெண்களின் கருமுட்டையில் சேரும் போது ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. துத்தநாக சத்துக்கள் அதிகம் நிறைந்த கடல் சிப்பி போன்ற உணவுகள் சாப்பிடுவது ஆண் குழந்தை பிறப்பை ஏற்படுத்தும்.

8. ஸ்டார்ச் உணவுகள்

அதிகப்படியான ஸ்டார்ச் உணவுகள் க்ளுகோஸ் உணவுகள் எடுப்பது ஆண் குழந்தை பிறப்பை அதிகரிக்கும் எனத் தெரிய வருகிறது. எனவே கிழங்கு வகைகள் மற்றும் சாதம் போன்றவை இதற்கு உதவி செய்கின்றன.

மேற்கண்ட உணவு முறைகளை சரியாக கையாண்டால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறப்பது நிச்சயம்.

9. பாரம்பர்ய முறைகள்

இது தவிர சித்தர்கள் சில முறைகளை சொல்கின்றனர். விருப்பம் உள்ளவர்கள் இதனையும் பின்பற்றலாம்.

  • இரவில் அரை வயிறு மட்டுமே சாப்பிட்டு உறங்க செல்ல வேண்டும். உறங்கும் போது இடது பக்கமாக உறங்க வேண்டும். அப்போதுதான் வலது நாசியில் சூரிய சுவாசம் நடைபெறும். அதிகாலை 4 மணி அளவில் எழுந்து இறைவனை தியானித்து உடல் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • காரணம் அரை வயிறு சாப்பிடுவதால் அதிகாலையில் பசி எடுக்கும். லேசான பசி உணர்வுடன் சூரிய சுவாசம் இயங்கும் போது சேர்ந்தாள் ஆண் குழந்தை உண்டாகுமாம். அதைப்போல மாதம் ஒரு முறை மட்டுமே விந்துவை வெளியேற்றும் கட்டுப்பாடு இருந்தால் ஆண் குழந்தை உண்டாக அதிக வாய்ப்புள்ளது.
  • மேலும் மாதவிலக்கு நாளிலிருந்து  6,8,10,12, 14, 16, 18 ஆவது நாட்களில் கணவருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது நிச்சயம் ஆண் குழந்தை பிறக்குமெனக் கூறப்படுகிறது.

மேற்கூறியவை எல்லாம் ஆண் குழந்தை பிறப்பதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. உங்களுடைய ஒற்றுமையான நம்பிக்கையும் இதில் இணைந்தால் நிச்சயம் வெற்றிதான்.

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles