இரட்டைக் குழந்தைகளை கருத்தரித்து பெற்று எடுப்பது எப்படி?

Written by Soundarya Subbaraj
Last Updated on

In This Article

புவியில் பெண்ணாய் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் வாழ்வின் ஒரு முக்கிய கால கட்டத்தில் கர்ப்பம் மற்றும் குழந்தை போன்ற விஷயங்களை குறித்து எண்ணி, அதனை அடைய விரும்புவர்; பெண்களுக்கு திருமணம் நிகழ்ந்து இருந்தாலும், நிகழாது இருப்பினும் இந்த இரண்டு விஷயங்களுக்காகப் பெண்கள் தங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு நாள் ஏக்கத்தை சந்தித்து இருப்பர். ஆம் திருமணம் நிகழ்ந்தாலும், நிகழாது போனாலும் ஆண் மற்றும் பெண் என இரு பாலினரின் வாழ்விலும் தனிமை என்ற ஒரு சூழல் சூழ்கையில், அது நம்மை சிந்திக்க வைப்பது குழந்தைகளைக் குறித்துதான். குழந்தை என்ற ஒரு ஜீவன் ஆண் மற்றும் பெண் என எவரின் வாழ்வில் தோன்றினாலும், அது தனிமையை விரட்டி, பொறுப்பு, பாசம், நேசம், கடமை போன்ற பல வகை உணர்வுகளை ஏற்படுத்தி, வாழும் வாழ்க்கைக்கே பெரும் அர்த்தத்தை தந்து விடும்.

அப்படிப்பட்ட அருமையான வரத்தை பெற பலரும் ஆசை கொள்வர். பல பெண்கள் ஒரு குழந்தையைக் கருத்தரித்து பெற்று எடுத்தால் போதும் என்று எண்ணுவர்; ஆனால் மேலும் சில பெண்களோ இரண்டு குழந்தைகளை ஒரே நேரத்தில் கருத்தரித்து சுமந்து, பெற்று எடுக்க வேண்டும் என்று விருப்பம் கொள்வர். அதாவது இரட்டைக் குழந்தைகளைக கருத்தரித்து பெற்று எடுக்க வேண்டும் என்று ஆசை கொள்வர்.

அப்படி விரும்பும் பெண்களுக்கு உதவும் வகையில்,மாம்ஜங்ஷன் (MomJunction) இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்து பெற்று எடுப்பது எப்படி என்பது குறித்த தகவல்களை ஒரு தொகுப்பாகத் திரட்டி, இந்தப் பதிப்பில் அளித்து உள்ளது; படித்து அறிந்து, நற்செய்தியை எல்லோருக்கும் பரப்புங்கள்!

இரட்டைக் குழந்தைகளைப் பெற்று கொள்வது எப்படி?

இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், முதலில் இரட்டையர்கள் எப்படி உருவாகிறார்கள் என்ற புரிதல் இருக்க வேண்டியது அவசியம் (1).

இரட்டைக் குழந்தைகளில் இரு வகை உண்டு; ஒத்த இரட்டையர், வேறுபட்ட இரட்டையர். முதல் வகையான இரட்டைக் குழந்தைகளை மோனோசைக்கோடிக் இரட்டைக் குழந்தைகள் என்று அழைப்பர். இக்குழந்தைகள் உருவாக காரணமாக இருக்கும் கரு முட்டை, தாயின் அண்ட முட்டையைத் துளைக்கும் தந்தையின் ஒரு விந்துவினால் உருவாகின்றன. இவ்வாறு உருவான கரு முட்டை வளர்ச்சி அடையும் பருவத்தில் இரண்டாகப் பிரிந்து, ஒரே கருவறையில் இரண்டு கருக்களாக உருவாகி வளர்ச்சி அடைகின்றன. இந்த இரட்டைக் குழந்தைகள் ஒரே விதமான மரபு பண்புகளையும், நஞ்சுக்கொடியையும் கொண்டிருப்பர். கருத்தரிக்க மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் பெண்களில் பெரும்பாலும், ஒத்த இரட்டைக் குழந்தைகள் உருவாகின்றனர்.

இரண்டாவது வகை இரட்டைக் குழந்தைகள் டைசைக்கோடிக் இரட்டைக் குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த இரட்டைக் குழந்தைகள் உருவாக காரணமாக இருக்கும் கரு முட்டை, தாயின் அண்ட முட்டையை துளைக்கும் தந்தையின் இரு விந்துக்களால் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் இரண்டு கரு முட்டைகளும் ஒரே கருவறையில் வளர்ச்சி அடைகின்றன; இந்த இரட்டைக் குழந்தைகள் வேறுபட்ட மரபு பண்பு மற்றும் நஞ்சுக்கொடி அமைப்பைக் கொண்டிருப்பர். இந்த இரட்டைக் குழந்தைகள் பொதுவாக வெவ்வேறு பாலினங்களைக் கொண்டிருப்பர்.

இரட்டைக் குழந்தைகளைப் பெற்று கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன?

இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுப்பது என்பதே மிக அரிதான காரியம்; இதுவே இரட்டைக் குழந்தைகள் உருவாகும் பட்சத்தில் ஏற்படும் பெரும் சிக்கல் ஆகும். உலகில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில், அதாவது 100 சதவிகிதத்திற்கு 3 சதவிகிதம் மக்கள் மட்டுமே இரட்டைக் குழந்தைகளைப் பெறுகின்றனர். இந்த சதவிகித அளவு 1980-களைக காட்டிலும் 61 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்க தேசிய மையம் வெளியிட்டு உள்ள ஆரோக்கிய புள்ளி விவர பட்டியலின் படி, 1000 குழந்தை பிறப்புகளுக்கு வெறும் 33.9 என்ற விகிதத்தில் தான் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு நிகழ்கிறது (2).

இரட்டைக் குழந்தைகளைப் பெற்று கொள்வதற்கான சாத்திய கூறுகளை நிர்ணயிக்கும் காரணிகள்

இரட்டைக் குழந்தைகள் உருவாக வெறும் அரிதான வாய்ப்பே உள்ளதாக முன்னரே கூறப்பட்டது; இங்கு இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு நிகழ்வதற்கான சாத்திய கூறுகளை நிர்ணயிக்கும் காரணிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

குடும்ப வரலாறு

ஒரு பெண் அல்லது ஆண் என தம்பதியர் இருவரில் யாரேனும் ஒருவர் அல்லது இருவரின் குடும்ப வரலாறு அதாவது குடும்ப பின்னணியிலும் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு நிகழ்ந்து இருந்தால், இந்தத் தம்பதியருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.

தம்பதியரின் குடும்ப வரலாறில் அல்லது குடும்ப பின்னணியில், அவர்தம் தாய்-தந்தை என உறவுகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால், இவர்களுக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம்; மேலும் இவர்தம் உடலில், குடும்ப மரபு காரணமாக இரட்டை குழந்தைகளை உருவாக்கும் வகையில் அதிகமான கரு முட்டைகள் உற்பத்தி ஆகி வெளியாகும்; இதனால் இவர்களுக்கு வேறுபட்ட இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன (3).

இனம்/சமூகம்

பெண்கள் பலருக்கு அவர்தம் வாழும் இடம் காரணமாக கூட இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது; இதை குறித்து பல வகை ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இக்கூற்றை உண்மை என உணர்த்தும் ஆராய்ச்சி முடிவுகள் கிடைத்து உள்ளன.

உடல் தோற்றம் (உயரம்/எடை)

பெண்களின் உடல் எடை மற்றும் உயரத்தை கொண்டு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான சாத்திய கூறுகள் தீர்மானிக்கப்படுகின்றன; அதாவது உயரமான பெண்களுக்கு, குட்டையான பெண்களைக் காட்டிலும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் வாய்ப்பு அதிகம் எனவும், எடை அதிகமான பெண்கள், ஒல்லியான பெண்களைக் காட்டிலும் இரட்டையரைப் பெற்று எடுக்கும் வாய்ப்பு அதிகம் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.

மகப்பேறு மருத்துவத்தை பற்றிய அமெரிக்க கல்லூரி, பல முறை பிரசவங்கள் நிகழ்வதால், பெண்கள் குண்டாதல் பிரச்சனையைச் சந்திப்பதாகவும், இதனால் அவர்களில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கண்டறிந்து உள்ளது. பெண்களின் உடல் எடை குறியீடு 30 அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பு நிகழ்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது (4).

வயது பருவம்

பெண்களின் வயதை கணக்கிட்டும் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான சாத்திய கூறுகள் நிச்சயிக்கப்படுகின்றன; 30 அல்லது 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அண்டங்கள் அதிகளவில் வெளியாகின்றன (5). இதனால், இந்தக் கால கட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பல பிரசவங்கள்

பல பிரசவங்களை சந்தித்த பெண்களின் உடல் எடை அதிகம் இருக்க வாய்ப்புண்டு; இவ்வாறு உடல் எடை அதிகம் கொண்ட பெண்கள் இரட்டையரை எளிதில் பெற முடியும். அதிகமான எண்ணிக்கையில் பிரசவத்தை சந்தித்த பெண்களுக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

இரட்டைக் குழந்தைகள் பெற்று கொள்ளும் வாய்ப்பை அதிகரிப்பது எப்படி?

இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பை பல வகைகளில் அதிகரிக்கலாம்; சரியான உணவு முறை அதாவது இரட்டைக் குழந்தைகள் பிறப்பை ஏற்படுத்தும் பிரத்யேக டயட் முறையைப் பின்பற்றுவது, கருத்தரிப்பு சிகிச்சை முறைகளை மேற்கொள்வது, இயற்கை வீட்டு வைத்திய முறைகளைக் கடைபிடிப்பது, இரட்டைக் குழந்தைகள் பிறப்பை தூண்டும் மூலிகைகளைப் பயன்படுத்துவது, IVF போன்ற கருத்தரிப்பு மருத்துவ முறைகள், கருத்தரிப்பு மருந்துகளை உபயோகிப்பது எனப் பல விதமான வழிமுறைகள் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

இரட்டைக் குழந்தைகளை இயற்கையான முறையில் பெறுவதற்கான வழிகள்

இரட்டைக் குழந்தைகளை இயற்கையான முறையில் பெறுவது எப்படி என்பதற்கான வழி முறைகளை பற்றி இப்பொழுது படித்து அறியலாம்.

பால் பொருட்கள்

பல பிரசவங்கள் நிகழ்ந்தால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு ஏற்படும் என்ற கருத்தை மருத்துவர் காரி ஸ்டீன்மன் வெளியிட்டு உள்ளார். எந்த ஒரு பெண் தினமும் 5 முறைகள் அல்லது அதற்கு மேல் பால் பொருட்களை உட்கொள்கிறாளோ, அவள் மற்ற பெண்களைக் காட்டிலும் அதாவது இந்த வகை உணவுகளை உட்கொள்ளாத பெண்களைக் காட்டிலும், இரட்டைக் குழந்தைகளைப் பெற அதிகமான வாய்ப்புகளைக் கொண்டு இருக்கிறாள் என்று ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது (6).

காட்டு கிழங்குகள்

காட்டு கிழங்கு வகைகளை உண்டு வரும் பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த வகை உணவுகள் கரு முட்டை உருவாக்கத்தை தூண்டி விடுவதாக கண்டறியப்பட்டு உள்ளது;ஆப்ரிக்க பெண்களுக்கு இரட்டையர் பிறக்க அதிக வாய்ப்புள்ளளது. ஏனென்றால் அவர்கள் தங்களின் உணவுகளில் இதை ஒரு பகுதியாக எடுத்துக் கொள்கின்றனர். மேலும் புரதம் நிறைந்த உணவுகளான டோபு, சோயா போன்றவை, முழு கோதுமை ஆகிய உணவுகளும் கரு முட்டை உருவாக்கத்தை தூண்டி விடும் தன்மை கொண்டவை (7).

கருத்தடை மாத்திரைகள்

கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதை நிறுத்தினாலே, முதலில் கருத்தரிப்பு ஏற்படும்; பின்னர் சரியான உடல் நிலை மற்றும் இதர சாதகமான வாய்ப்புகள் இருந்தால், இரட்டைக் குழந்தைகள் பிறப்பு நிச்சயம் ஏற்படும் (8).

தாய்ப்பால் அளித்தல்

முதல் குழந்தைக்கு தாய்ப்பால் தொடர்ந்து அளிக்கும் பட்சத்தில்,அடுத்து இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரிப்பதற்கான வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகையால், தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்க எண்ணினால் இதுவே சரியான தருணம்; கருத்தரிக்க முயலுங்கள்.

துணைக்கான உணவுகள்

இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்க முயலும் பெண்கள், தங்கள் கணவன்மார்களுக்கு ஜிங்க் நிறைந்த காய்கறிகள், பழங்கள், உணவுகள், பருப்புகள் போன்றவற்றை உணவாக அளிக்க வேண்டும்; இது இரட்டைக் குழந்தைகள் கருத்தரிப்பு நிகழ்வதற்கு பெரிதும் உதவும்.

கர்ப்பங்களுக்கு இடையேயான இடைவெளி

கர்ப்பங்களுக்கு இடையே போதிய இடைவெளி அளித்து, கருத்தரிக்க முயல்வது இரட்டைக் குழந்தைகள் பிறப்பிற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

இரட்டைக் குழந்தைகளைப் பெற, உண்ண வேண்டிய உணவுகள்

இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்க, உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன என்பது பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

இரட்டைக் குழந்தைகளைப பெற்று எடுக்க விரும்பும் பெண்டிர், பால் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்; இது இரட்டைக் குழந்தைகள் கருத்தரிப்பை நிச்சயிக்க பெரிதும் உதவும். மேலும் போலிக் அமிலம் நிறைந்த உணவுகளைப் பெண்கள் அதிகம் உட்கொண்டால், அது இரட்டைக் குழந்தைகள் பிறப்பை உறுதிப்படுத்தும்.

மக்கா வேர், இனிப்பு கசாவா கிழங்கு மற்றும் காட்டு கிழங்குகள் போன்ற இயற்கை உணவு மூலிகைகளை உட்கொண்டால், எப்படிப்பட்ட பெண்ணுக்கும் கருத்தரிப்பு மற்றும் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு ஏற்படும்.

கூடுதலாக, இரட்டைக் குழந்தைகளைப் பெற விரும்பும் பெண்கள் அன்னாசியின் மூலபகுதி மற்றும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளை உணவில் சேர்த்துக் கொள்வது கருத்தரிப்பு விரைவில் நிகழ்ந்தேற பெரிதும் உதவும்.

இரட்டைக் குழந்தைகளைப் பெற, மேற்கொள்ள வேண்டிய உடலுறவு நிலைகள்

இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்க, தம்பதியர் மேற்கொள்ள வேண்டிய உடலுறவு நிலைகள் என்னென்ன என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

பக்கவாட்டு நிலை

தம்பதியர்கள் பக்கவாட்டு முறை அதாவது டாக்கி ஸ்டைல் என்று கூறக்கூடிய முறையில், பெண்ணை மண்டியிட்டு அமர செய்து கணவர் பின்புறமிருந்து தனது பிறப்புறுப்பை அவளுள் உள் நுழைத்தல் நிகழ வேண்டும்; இவ்வாறு தாம்பத்தியம் கொள்வது இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

நிற்றல் நிலை

நிற்றல் நிலையிலும், மேற்கூறிய முறை போன்றே பெண்ணின் பிறப்புறுப்புக்குள் ஆழமாக, ஆணின் பிறப்புறுப்பை நுழைத்து உறவு கொள்வது கருத்தரிப்பை துரிதப்படுத்தும்; இரட்டைக் குழந்தைகள் பிறப்பும் நிகழும்.

மிஷனரி நிலை

பெண்ணின் மீது ஆண் இருந்த வண்ணம் உறவு கொண்டு, உள் நுழைத்தல் புரிவது இரட்டைக் குழந்தைகள் பிறப்பை விரைவாக்கும்.

பின்புறமாக உள் நுழைத்தல் நிலை

இந்த நிலையில் ஆண் பெண்ணுக்குப் பின்புறமாக இருந்து, பெண்ணின் பிறப்புறுப்பிற்குள் தனது பிறப்புறுப்பை உள் நுழைப்பது இரட்டைக் குழந்தைகள் கருத்தரிப்பை விரைவுபடுத்த உதவும்.

இரட்டைக் குழந்தைகளைப் பெற உதவும் கருத்தரிப்பு சிகிச்சை முறைகள்

இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்க உதவும் கருத்தரிப்பு சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்து இங்கு படித்து அறியலாம்.

IVF முறை (In vitro Fertilization)

இந்த முறை 20 முதல் 40 சதவிகித கருத்தரிப்பு வாய்ப்பை கொண்ட பெண்களுக்கு நிகழ்த்தப்படும்; இந்த முறையில் பெண்களின் அண்டம் மற்றும் ஆணின் விந்து அணுக்கள் குழாயில் எடுத்து கொள்ளப்பட்டு கருவுறுதல் நிகழ்த்தப்படும். எத்தனை முட்டைகள் கருவுறுதலில் வெற்றிப் பெறுகின்றனவோ, அவை பெண்ணின் கருவறைக்குள் செலுத்தப்படும்; இந்த முறை மூலமாக பெண்களால் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்க முடியும் (9).

IUI (Intrauterine Insemination)

இந்த முறையும் மேற்கொன்னதை போன்றதே; ஆனால் இங்கு பெண்ணின் கருவறைக்குள் ஆணின் விந்து அணுக்கள் செலுத்தப்படுகின்றன. இந்த முறையில் இரட்டைக் குழந்தைகளைப் பெற விரும்பும் தம்பதியர், தாங்கள் விரும்பியதை அடைய முடியும்.

இரட்டைக் குழந்தைகளைப் பெற உதவும் கருத்தரிப்பு சப்ளிமெண்ட்ஸ்

இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்க உதவும் கருத்தரிப்பு சப்ளிமெண்ட்ஸ் என்னென்ன என்பது பற்றி இங்கு காணலாம்.

போலிக் அமில சப்ளிமெண்ட்ஸ்

இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரிக்க விரும்பும் பெண்கள், போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்; (10) உணவில் போலிக் அமில பற்றாக்குறை ஏற்பட்டால், போலிக் அமில சப்ளிமெண்ட்களை உட்கொண்டு இரட்டைக் குழந்தைகள் பிறப்பை விரைவுபடுத்தலாம் (11).

கோனாடோட்ரோபின்

கோனாடோட்ரோபின் சப்ளிமெண்ட்டை உட்கொள்வதால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்; இந்த சப்ளிமெண்ட்டை உட்கொள்வதால், அது ஒன்றுக்கும் மேற்பட்ட கரு முட்டைகள் உருவாகி, வெளிப்படுவதை தூண்டிவிடும்; இதனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு நிச்சயம் நிகழலாம்.

ப்ரோஜெஸ்டிரான்

ப்ரொஜஸ்டிரான் ஹார்மோன் சப்ளிமெண்ட்களை உட்கொள்வது கருத்தரிப்பு இயக்கத்தை விரைவுபடுத்தவும், கருவறையின் பலத்தை அதிகரிக்கவும் உதவும். அதாவது ப்ரோஜெஸ்டிரான் ஹார்மோன் சப்ளிமெண்ட்டை உட்கொள்வது கருவறையைக் குழந்தையைத் தாங்கும் வண்ணம் பலப்படுத்த உதவும்; மேலும் கரு முட்டைகள் உருவாக்கம் மற்றும் கருத்தரிப்பிற்கும் உதவும்.

இதனால் இரட்டைக் குழந்தைகளின் கருத்தரிப்பு மற்றும் பிறப்பு விகிதம் அதிகரிக்க அநேக வாய்ப்புகள் உண்டு.

இரட்டைக் குழந்தைகளைப் பெற உதவும் கருத்தரிப்பு மருந்துகள்

இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்க உதவும் கருத்தரிப்பு மருந்துகள் என்னென்ன என்பது குறித்து இங்குப் படிக்கலாம்.

க்ளோமிட் (கிலோமீபிஹீன் சிட்ரேட்)

Clomid (Clomiphene citrate) எனும் மருந்து இரட்டைக் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை 7-8 சதவிகிதம் அதிகரிக்க உதவும் (12). ஏற்கனவே இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் வாய்ப்பு கொண்ட பெண்கள், இம்மருந்தை பயன்படுத்தி வாய்ப்பை மேலும் அதிகரித்து கொள்ளலாம்.

கருத்தரிப்பு சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் முன், இந்த மருந்துகளை பெண்கள் முயற்சித்து பார்க்கலாம்.

மேலும் ஆண்கள் இந்த மருந்தை உட்கொண்டால், ஹார்மோன்கள் சரியற்ற நிலை சீராகி, கருத்தரிப்பு ஏற்பட பெரிதும் உதவும்.

பர்லோடெல்

பர்லோடெல் மருந்தை சிறிய அளவில், ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்களுக்கு உட்கொண்டு வந்தால், அது லாக்டோனின் சுரப்பை கட்டுப்படுத்தி, கருத்தரிப்பு ஹார்மோன்களின் உருவாக்கத்தை மேம்படுத்தும்; இதனால், இரட்டைக் குழந்தைகளின் கருத்தரிப்பு நிகழ அதிகமான வாய்ப்புகள் உண்டு (13).

பெர்கோணல்

பெர்கோணல் மருந்தை உட்கொண்டால், அது கருத்தரிப்பிற்கான ஹார்மோன்களை தூண்டி விட்டு ஒன்றுக்கும் மேலான குழந்தைகள் உருவாகும் நிலையை உருவாக்குகிறது; இதனால் இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு நிச்சயப்படுத்தப்படும் (14).

ஹுமெகோன்

ஹுமெகோன் மருந்தை உட்கொண்டால், அது ஒன்றுக்கும் மேற்பட்ட கரு முட்டைகள் வெளிப்பாடு மற்றும் கருத்தரிப்பினை நிகழ செய்யும்; இதனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு துரிதமாக நிகழ்ந்தேறும் (15).

இரட்டைக் குழந்தைகள் பெற உதவும் கருத்தரிப்பு மூலிகைகள்

இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்க உதவும் கருத்தரிப்பு மூலிகைகள் என்னென்ன என்பது குறித்து இங்கு படித்து அறியலாம்.

ஈவினிங் ப்ரிம்ரோஸ் எண்ணெய்

இந்த எண்ணெய் கருத்தரிப்பு விரைவுபடுத்தல் மற்றும் அதிகமான கரு முட்டைகள் வெளியேற்றம் ஆகிவற்றிற்கு அதிகம் உதவும்; இந்த எண்ணெயை மாதவிடாய் சுழற்சி உச்சகட்டமாக இருக்கும் சமயத்தில் எடுத்துக் கொள்ள தொடங்கி, கரு முட்டை வெளியேற்றம் நிகழும் நாள் அதாவது அடுத்த மாதவிடாய்க்கு முன்னான ஏழு முதல் பத்து நாள் கால கட்டம் வரை எடுத்துக் கொள்ளவும்; இது இரட்டைக் குழந்தைகள் கருத்தரிப்பை துரிதப்படுத்த உதவும் மூலிகை ஆகும், இதனால் கண்டிப்பாக பலன் ஏற்படலாம்.

லிகோரிஸ்

இது ஒரு இனிப்பு மூலிகை ஆகும்; இது கரு முட்டை வெளியேற்ற நாட்களை கணக்கிட உதவும். மேலும் இது ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்து, கருத்தரிப்பை ஏற்படுத்தும்.

ஆளி விதை எண்ணெய்

இது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும்; அதன் மூலம் கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். மேலும் புரோஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களை சரியான அளவில் வைக்க உதவும்; இதனால் இரட்டைக் குழந்தைகள் கருத்தரிப்பு சிக்கல் இல்லாமல் ஏற்படும்.

இனிப்பு கசாவா

இது கருத்தரிப்பிற்கான பிரத்தியேக மூலிகை ஆகும்; இந்த மூலிகை கொண்டுள்ள கருத்தரிப்பு நன்மைகள், இரட்டைக் குழந்தைகள் பிறப்பை நிச்சயப்படுத்த உதவும். மேலும் இந்த மூலிகையில் உள்ள ப்ரோஜெஸ்டிரான் பெண்களின் ஹார்மோன் நிலையை சமநிலையில் வைக்க உதவும்.

பிளாக் கோஹோஸ்

இந்த மூலிகை மெனோபாஸ் மற்றும் பிஎம்எஸ் அதாவது முன்கூட்டிய மாதவிடாய் பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவும்; மேலும் இது நேரடியாக கருத்தரிப்பில் உதவி புரியாது. மாறாக கருத்தரிப்பு நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்க இது உதவும் (16). கருப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகளை பலப்படுத்த இது உதவும்.

விடெக்ஸ்

இந்த மூலிகை பெண்களுக்கு ஏற்படும் பாலி சிஸ்டிக் ஓவரி பிரச்சனையைக் குணப்படுத்த உதவும்; மேலும் இது ஹார்மோன் அளவு மற்றும் நிலைகளை சரிப்படுத்தி, இரட்டைக் குழந்தைகள் கருத்தரிப்பு நிகழ உதவும். இந்த மூலிகை மொத்தத்தில் கருத்தரிப்பு நிகழ்வதற்கான சாத்திய கூறுகளை அதிகரிக்கும்.

மக்கா வேர்

மக்கா வேர் என்பது பெண்களில் ஏற்படும் கருத்தரிப்பு ரீதியான பிரச்சனைகளைப் போக்க உதவும்; இதன் துணை கொண்டு கருத்தரிக்க மற்றும் இரட்டைக் குழந்தைகளைப் பெற பெண்கள் முயலலாம்.

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

இரட்டைக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை, குடும்ப பின்னணி வரலாறு அதிகரிக்குமா?

ஆம், ஆண் மற்றும் பெண் என தம்பதியரின் குடும்ப வரலாற்றில், யாரேனும் அல்லது எந்த தலைமுறையேனும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுத்திருந்தால், தம்பதியரும் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு; அதாவது மரபு ரீதியாக இரட்டைக் குழந்தைகளைப் பெறும் ஜீன் பரிமாற்றம் அடைந்திருக்கலாம்.

இனப்பெருக்க மருத்துவத்தின் அமெரிக்க சமூகம், 60 பெண்களுக்கு ஒரு பெண் மரபு ரீதியாக இரட்டைக் குழந்தைகளைப் பெறும் வாய்ப்பை கொண்டு இருக்கிறாள் என்றும், 125 ஆண்களுக்கு ஒரு ஆண் மரபு ரீதியாக இரட்டைக் குழந்தைகளைப் பெறும் வாய்ப்பை கொண்டு இருக்கிறாள் என்றும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மொத்தத்தில் பெண்கள் மரபு ரீதியாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் வாய்ப்பினை அதிகம் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஒருவர், இரட்டைக் குழந்தைகள் பெற்று கொள்ளும் தன்மையை சமூக/இன பின்னணி தீர்மானிக்குமா?

பெண்களுக்கு இரட்டை குழந்தைகளின் கருத்தரிப்பு நிகழ்வதை சமூக அல்லது இன பின்னணிகள் தீர்மானிக்கும் என சில ஆராய்ச்சி முடிவுகள் கருத்து தெரிவிக்கின்றன; அதாவது பொதுவாக கருப்பு மற்றும் நான்-ஹிஸ்பானிக் பெண்கள் இரட்டைக் குழந்தைகளை அதிகம் கருத்தரிக்கின்றனர் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும் நைஜீரியாவை சேர்ந்த பெண்கள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று கொள்ளும் வாய்ப்பு அதிகம் எனவும், ஜப்பானை சேர்ந்த பெண்கள் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவது அரிது எனவும் கூறப்படுகிறது.

30 வயதிற்கு மேல் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா?

30 வயதிற்கும் அதிகமான பெண்கள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்; பெண்கள் 30 வயதை நெருங்கும் சமயத்தில் அவர்களின் உடலில் இருந்து ஒன்றிற்கும் மேற்பட்ட அண்டங்கள் விடுபடுகின்றன. ஆகையால், 30 வயதிற்கு மேல் இருக்கும் பெண்களால் எளிதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று கொள்ள முடியும்.

30-45 வயதிற்குள் இருக்கும் அன்னைமார்கள், மீண்டும் குழந்தை பெற்று கொள்ள முயன்றால், இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

நான் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்க, நான் அதிகம் போலிக் அமில சத்தினை எடுத்து கொள்ள வேண்டுமா?

பொதுவாக ஒருவர் போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை, எடுத்து கொண்டால், அவர் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆகையால், இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் கொண்ட பெண்கள், மற்ற சத்துக்களை எடுத்துக் கொள்ளும் அளவினை போல அல்லது அதற்கும் கூடுதலாகப் போலிக் அமில சத்தினையும் எடுத்துக் கொள்ள முயலுங்கள்.

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles