இஞ்சியின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Ginger (Adrak) Benefits, Uses and Side Effects in Tamil

Written by Dinesh
Last Updated on

இஞ்சி என்பது சீனா மற்றும் இந்திய நாடுகளை பிறப்பிடமாக கொண்ட ஒரு மூலிகை பொருள் ஆகும்; ஜிஞ்சிபெர் அபிசினால் எனும் தாவரத்தில் இருந்து தோன்றும் மூலிகை தான் இஞ்சி ஆகும். பல விதமான ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க இஞ்சி பயன்படுகிறது. இஞ்சி எனும் மூலிகை, 4000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அதன் மருத்துவ பண்புகள் 2000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இஞ்சி சேர்த்த உணவுகளை, பானங்களை பெரும்பான்மையோருக்கு பிடிக்கும்.

உங்களுக்கு இஞ்சி டீ குடிக்க பிடிக்குமா? ஆம் எனில், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி! உடலில் ஏற்படும் ஆரோக்கிய, அழகு குறைபாடுகளை போக்கி, நன்மைகளை வாரி வழங்க இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. இஞ்சி வழங்கும் அற்புத பயன்கள், நன்மைகள் குறித்து இப்பதிப்பில் படித்து அறியலாம், வாருங்கள்!

இஞ்சியின் நன்மைகள்

இஞ்சி காரத்தன்மை கொண்டதால், அதனை பச்சையாக உண்பது சற்று கடினமான காரியமே! ஆனால், உணவு மற்றும் பான வகைகளில் இஞ்சி சேர்த்து உட்கொண்டால் பற்பல ஆரோக்கிய, அழகு மற்றும் கூந்தல் நன்மைகளை அடைய முடியும். இஞ்சி வழங்கும் நன்மைகளை பற்றி இங்கு ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

இஞ்சி வழங்கும் ஆரோக்கிய நன்மைகள்

இஞ்சி என்பது ஆயுர்வேத “மருந்துகளின் இருதயம்” என்று கருதப்படுகிறது; இது பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்க உதவுகிறது. இப்பொழுது இஞ்சி வழங்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி காணலாம்.

நன்மை 1: சுவாச பிரச்சனைகள்

இஞ்சியில் உள்ள ஆன்டிஹிஸ்டமைன் பண்புகள் ஒவ்வாமைகளை குணப்படுத்த உதவும் பயனுள்ள மருந்தாக விளங்குகின்றன. இது காற்றுப்பாதையில் சுருக்கம் ஏற்படுவதை தடுத்து, கோழை திரவ உருவாக்கத்தை தூண்டிவிட உதவுகிறது. சளி மற்றும் காய்ச்சலை விரட்டி அடிக்க, பல நூற்றாண்டுகளாக இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது; ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து உட்கொண்டால், சளி மற்றும் தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகளில் இருந்து விரைவில் நிவாரணம் அடையலாம். தொண்டை மற்றும் மூக்கில் ஏற்படக்கூடிய நெரிசலை போக்க இஞ்சி தேநீர் பயன்படுகிறது; இஞ்சி சாறு மற்றும் வெந்தய விதைகள் ஆஸ்துமாவை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கின்றன. வயிற்றில் ஏற்படும் காய்ச்சல் அல்லது உணவு விஷம் என்று சொல்லப்படக்கூடிய ஃபுட் பாய்சனை குணப்படுத்த உதவுகிறது; இது இஞ்சியின் மருத்துவ பயன்பாடுகளுள் மிக முக்கியமானது ஆகும்.

நன்மை 2: செரிமானம்

செரிமானத்திற்கு அதிக நன்மை பயக்கும் மூலிகை இஞ்சி ஆகும்; இதை உட்கொள்வது பித்தப்பை பித்தத்தை வெளிப்படுத்த மற்றும் செரிமானத்தை தூண்டி விட உதவும். நாம் உட்கொள்ளும் உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, ஜீரணிக்க இஞ்சி பயன்படுகிறது; கூடுதலாக, வயிற்று பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் வாயு தொல்லையால் ஏற்படும் சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெற இஞ்சி பயன்படுகிறது. இஞ்சியை கொண்டு தேநீர் தயாரித்தோ அல்லது இஞ்சியில் இருந்து தயாரிக்கப்பட்ட சப்ளிமெண்ட்டுகளையோ உட்கொள்ளலாம். இஞ்சியின் நன்மைகளுள் இது குறிப்பிடத்தக்கது ஆகும்.

நன்மை 3: புற்றுநோய்

பல விதமான புற்றுநோய் செல்களை அதாவது நுரையீரல், கருப்பை, புரோஸ்டேட், மார்பகம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை இஞ்சியில் நிறைந்து உள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழத்தின் ஆய்வுப்படி, இஞ்சிப்பொடி கருப்பை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது; மேலும் இது புரோஸ்டேட் புற்றுநோய் செல்களை அழித்து, அந்நோயை குணப்படுத்த உதவுகிறது. இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (gingerol) எனும் உறுப்பு ஆன்டி மெட்டாஸ்டாடிக் பண்புகளை வெளிப்படுத்தக்கூடியது மற்றும் இது மார்பக & கருப்பை புற்றுநோய்களை குணப்படுத்த உதவுகிறது. ஆரோக்கிய நிபுணர்களின் கருத்துப்படி, இஞ்சியின் வேர்ப்பகுதி ஒரு விலைமதிப்பற்ற மற்றும் பயனுள்ள முறையில் புற்றுநோய் உருவாக்கத்தை தடுக்கக்கூடியது; மேலும் இது நச்சுத்தன்மை கொண்ட உறுப்புகளை உடலில் இருந்து நீக்கி, வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தக்கூடியது என்று கூறப்படுகிறது.

நன்மை 4: குமட்டல்

Nausea
Image: Shutterstock

புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு பின், உடலில் காணப்படும் புற்றுநோய் செல்களை முழுவதுமாக நீக்க, கீமோதெரபி சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது; இது நோய் பாதிப்பை முற்றிலுமாக தடுத்து, குறைக்க உதவும். கீமோதெரபி சிகிச்சையின் பொழுது குமட்டல் ஏற்படாமல் தடுக்க, இஞ்சி வேர் சப்ளிமெண்ட் உதவும்; இது மற்ற வாந்தி எதிர்ப்பு மருந்துகளுடன் சேர்ந்து செயல்படும் தன்மை கொண்டது. ஃபுளோரிடாவை சேர்ந்த மருத்துவ ஆங்காலஜி கூட்டத்தின், அமெரிக்க சமூக கருத்துப்படி, மருத்துவர் ஜீலி ரியான், 70 -க்கும் அதிகமான புற்றுநோய் நோயாளிகளை கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தி, அவர்களுக்கு ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனைகளை வெளிப்படுத்த முயற்சித்தார்; அச்சமயத்தில் கீமோதெரபிக்கு முன்பாக இஞ்சி சாறு அல்லது இஞ்சி வேரில் இருந்து தயாரிக்கப்பட்ட சப்ளிமெண்ட்டுகளை அளித்த பொழுது, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் குறைந்து, நின்று போவது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இஞ்சியில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகளே முக்கிய காரணம்; குமட்டல் உணர்வை ஏற்படுத்தும் நோய் பாதிப்புகளான, வயிற்றுப்போக்கு குறைபாடு, மலச்சிக்கல் நோய்க்குறைபாடு மற்றும் மேலும் பல குறைபாடுகளை குணப்படுத்த இஞ்சி உதவுகிறது. இஞ்சியின் மருத்துவ பயன்பாடுகளுள் இது ஒரு குறிப்பிடத்தக்க நன்மை ஆகும்.

நன்மை 5: வலி நிவாரணி

வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், முழங்காலில் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ், முடக்கு வாதம் மற்றும் பொதுவான தசை அசௌகரிய குறைபாடு கொண்ட நோயாளிகளின் உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்த இஞ்சி உதவுகிறது; ஆர்த்ரிடிஸ் வீக்கத்திற்காக வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்ளும் நபர்களுக்கு இஞ்சி வேர் ஒரு அற்புத மருந்து ஆகும்; இதனை உட்கொண்டால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம். குளிக்கும் நீரில் இஞ்சி எண்ணெய் சேர்த்துக் கொள்வது தசை மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் பெற உதவும்; தசை திரிபு அதாவது சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் சூடான இஞ்சி பேஸ்ட் மற்றும் மஞ்சள் சேர்த்து தடவினால், வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். ஏதேனும் உடல் வலிகளை கொண்ட சில நோயாளிகள் தங்கள் உணவில் இஞ்சி வேர் மூலம் தயாரிக்கப்பட்ட சப்ளிமெண்ட்டுகளை சேர்த்துக் கொண்டால், அவர்கள் வலி நிவாரணி மருந்துகள் உட்கொள்வதை குறைத்து கொள்ள முடியும். ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் மற்றும் முடக்கு வாதம் கொண்ட நபர்கள் வலியில் இருந்து நிவாரணம் பெற இஞ்சி பெரிதும் உதவுகிறது.

அழற்சியை குணப்படுத்த இஞ்சியை உள்புறமாக, வெளிப்புறமாக என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்; இஞ்சி கொண்டு குளிக்க, 100 மில்லி லிட்டர் தண்ணீருக்கு சில துண்டுகள் இஞ்சி என்று கலந்து கொதிக்க வைத்து பயன்படுத்தவும். இத்தண்ணீர் கொதிக்கும் பொழுது, வோலைட் எண்ணெய்கள் ஆவியாவதை தடுக்க பாத்திரம் கொண்டு இதை மூடி விடவும்; இப்படியே 10 நிமிடங்கள் விட்டு விட்ட பின், இஞ்சி சேர்த்த இத்தண்ணீர் கலவையை நீங்கள் குளிக்க பயன்படுத்தும் நீரில் சேர்த்து பயன்படுத்தவும். இவ்வாறு தண்ணீர் தயாரித்து, தினந்தோறும் அதை பயன்படுத்தி குளித்து வந்தால், உடல் வலி மற்றும் ஃபைப்ரோமியால்ஜியாவுடன் இணைந்த வலிகள் என அனைத்தில் இருந்தும் விடுதலை பெறலாம்.

நன்மை 6: மாதவிடாய் தசைப்பிடிப்புகள்

மாதவிடாய் காலங்களில் சில பெண்களில் ஏற்படும் மாதவிடாய் வயிற்றுப்பிடிப்பு வலியை குறைக்க, மாதவிடாய் காலத்தின் முற்பகுதியில் இஞ்சியை உட்கொள்ளலாம்; நாட்டுச்சர்க்கரை சேர்த்த இஞ்சி தேநீர் பருகுவது மாதவிடாயின் பொழுது ஏற்படும் வயிற்றுப்பிடிப்பு வலிகளை குணப்படுத்த உதவும் என்று சீன மருத்துவத்தில் கூறப்படுகிறது.

நன்மை 7: மைக்ரைன் எனும் ஒற்றைத் தலைவலி

Migraine a migraine
Image: Shutterstock

இரத்த குழாய்களில் அழற்சி மற்றும் வலியை ஏற்படுத்தக்கூடிய புரோஸ்கிளாண்டைனை தடுப்பதன் மூலம், மைக்ரைன் எனும் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்க இஞ்சி உதவுகிறது; நீர்க்கப்பட்ட இஞ்சி பேஸ்ட்டை நெற்றியில் தடவுவதன் மூலம் மைக்ரைனில் இருந்து நிவாரணம் பெறலாம். இஞ்சியின் மருத்துவ பயன்பாடுகளில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

நன்மை 8: இதய ஆரோக்கியம்

சீன மருத்துவத்தின் படி, இதயத்தை பலப்படுத்த உதவும் ஒரு உயர்ந்த, பயனுள்ள மருந்தாக இஞ்சி சாறு பயன்படுகிறது என்று கூறப்படுகிறது; இந்த இஞ்சி சாறை தினமும் பருகுவதால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைக்கப்படும் மற்றும் உட்புற இரத்தம் கட்டுதல் போன்ற பாதிப்புகள் தடுக்கப்படும். பக்கவாதம் போன்ற நோய்களை தடுப்பதில் இந்த சாறு பெரிதும் பயன்படுகிறது; இதயத்தை பாதுகாக்க, இந்த அற்புதமான சாறை நாள்தோறும் உங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நன்மை 9: கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம்

இஞ்சியில் காணப்படும் அத்தியாவசியமான எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் மூட்டு வலி தொடர்பான பிரச்சனைகள், காய்ச்சல், இருமல், பல் வலி, மூச்சுக்குழாய் அழற்சி, முடக்கு வாதம், ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் மற்றும் டென்டோனிடிஸ் நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் போன்றவற்றை குணப்படுத்த அதிகம், பயனுள்ள வகையில் உதவுகின்றன. சில ஆய்வுகள், இஞ்சி வேர் கொண்டு தயாரிக்கப்படும் சப்ளிமெண்ட்டுகள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும் என்று கூறுகின்றன; மேலும் இது உட்புற இரத்தம் கட்டுதலை தடுக்க உதவுகின்றன.

நன்மை 10: ஆர்த்ரிடிஸ்

Arthritis
Image: Shutterstock

ஆர்த்ரிடிஸ் வலியை குணப்படுத்த உதவும் சாதாரண NSAID மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகளை தடுக்க, மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஒரு புதிய, மாற்று வழியை தேடிக்கொண்டிருந்தனர்; அவ்வகையில் இம்மருந்துகளுக்கு பதிலாக இஞ்சியை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று கண்டறிந்தனர். பழங்காலத்தில் இருந்தே மருத்துவத்திற்கும், சமையலுக்கும் பயன்படுத்தப்பட்டு வரும் இம்மூலிகை, ஆர்த்ரிடிஸ் நோயால் ஏற்படும் வலிகளை பயனுள்ள வகையில் குணப்படுத்த உதவுகிறது (1). இதில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், பல மக்களின் குறைபாடுகளை உள்ளிருந்து, திறனுடன் போக்க உதவுகின்றன (2).

நன்மை 11: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்

ஆஸ்திரேலிய ஆராய்ச்சி அறிஞர்களின் பரிந்துரைப்படி, உடலில் காணப்படும் இரத்த குளுக்கோஸ் அளவுகளை குறைக்க இஞ்சி பயன்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலின் குளுக்கோஸ் அளவுகளில் ஏற்படும் மாற்றம் உடல் எடை அதிகரிப்பு அல்லது உடல் எடை குறைத்தல் ஆகிய உடலியக்க செயல்பாடுகளை மாற்றியமைக்கும் பொழுது, நாள் முழுவதும் உடல் ஆற்றலுடன் அல்லது ஆற்றல் குறைந்து காணப்படலாம்; ஆகவே இஞ்சி வேர் கொண்டு தயாரிக்கப்பட்ட சப்ளிமெண்ட்டுகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடலில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும் வகையில் குளுக்கோஸ் அளவுகளை குறைக்க உதவும். குறைந்த இரத்த அழுத்த அளவுகள் கொண்ட மக்கள் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க, இஞ்சி வேர் கொண்டு தயாரிக்கப்பட்ட சப்ளிமெண்ட்டுகளை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. நீரிழிவு நெஃப்ரோபதி (சிறுநீரக பாதிப்பு) போன்ற நோய்க்குறைபாடுகள் ஏற்படுவதற்கான பாதிப்பை குறைக்க இஞ்சி உதவும்.

நன்மை 12: உடல் எடை குறைத்தல்

Reduce body weight
Image: Shutterstock

உடல் எடையை குறைப்பதில், இஞ்சி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது; உடல் எடை குறைக்க விரும்பும் நபர்கள் கட்டாயம் இஞ்சியை உணவு முறையில் சேர்த்துக் கொள்வது பெரும் நன்மை பயக்கும். இது உடலில் காணப்படும் பிடிவாதமான கொழுப்பு சத்துக்களை எரித்து அவற்றை நீக்க உதவும்; இஞ்சி வேர் மூலம் தயாரிக்கப்படும் சப்ளிமெண்ட்டுகளை சிறிய அளவுகளில் எடுத்துக் கொண்டால், உணவு உண்ட பின் உங்களுக்கு ஒரு திருப்தியான மற்றும் இலேசான உணர்வை அளிக்க உதவுகின்றன. இது உணவு உண்ணும் முறையை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவும்.

நன்மை 13: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஒரு சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு அமைப்பால் மட்டுமே நோய்களை விரட்டி உடலை நோய்த்தொற்றுகள் அண்ட விடாமல் பார்த்துக்கொள்ள உதவும்; ஒரு குறிப்பிட்ட நோய் அல்லது உடலை நிலையை குணப்படுத்துவதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதை காட்டிலும், எப்பொழுதும் இயற்கை முறையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது. இஞ்சி வேரில் இருந்து எடுக்கப்படும் பொருட்கள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்த உதவும்; இஞ்சியை தினமும் சிறிதளவு உட்கொள்வது, உடலில் உள்ள தமனி போன்ற இரத்த குழாய்களில் படியும் கொழுப்பு படிமங்களை நீக்கி, உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

நன்மை 14: மாதவிடாய் சுழற்சி

மாதவிடாய் சுழற்சி மற்றும் அச்சமயத்தில் ஏற்படும் வயிற்றுப்பிடிப்புகளை சரி செய்ய உதவும் பயனுள்ள மருந்தாக இஞ்சி விளங்குகிறது; முறையற்ற மாதவிடாய் சுழற்சியை சீர் செய்ய, தினமும் இஞ்சி சாறு பருகலாம். 1 மேஜைக்கரண்டி இஞ்சியை சர்க்கரை மற்றும் நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, இந்த நீரை உணவு உண்ட பின் ஒவ்வொரு முறையும் குடித்து வரவும்; இது நல்ல பலன்களை அளிக்கும்.

இஞ்சி வழங்கும் சரும நன்மைகள்

இஞ்சி மருத்துவ பயன்பாடுகளை வழங்குவதுடன், சரும பராமரிப்பு நன்மைகளையும் வாரி வழங்குகிறது; தோலின் தன்மையை மேம்படுத்த பொதுவாக பெரும்பாலான மக்கள் சந்தையில் காணப்படும் செயற்கையான பொருட்களையே பயன்படுத்துகின்றனர். தீவிர சரும பிரச்சனைகளை குணப்படுத்த இஞ்சி சாறு உதவும்; இஞ்சி வழங்கும் சரும நன்மைகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்:

நன்மை 1: வயது முதிர்ச்சியை தடுக்கும்

Preventing aging
Image: Preventing aging

இஞ்சியில் கிட்டத்தட்ட 40 ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்து உள்ளன; இவை வயது முதிர்ச்சியை தடுக்க உதவுகின்றன. மேலும் இது சருமத்தில் காணப்படும் விஷப்பொருட்களை நீக்கி, இரத்த ஓட்டத்தை தூண்டி, தோலிற்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்கிறது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உடல் தோலில் உள்ள தேவையற்ற இறந்த செல்களை நீக்கி, தோலின் தோற்றத்தை மாற்றி, உடல் என்றும் இளமையான தோற்றம் பெற உதவுகிறது. தோலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, தோலை மேலும் அதிக திடமானதாகவும், இளமையானதாகவும் மாற்ற உதவுகிறது; இது வயதாவதற்கான அறிகுறிகளை தடுக்க உதவும்.

நன்மை 2: எரிச்சலை குறைக்கும்

சருமத்தின் மீது இஞ்சி சாறை தடவுவது தோலில் ஏற்பட்டுள்ள எரிச்சலை குறைத்து, எரிந்து போன சருமத்தின் இயல்பு நிலையை மீட்டெடுக்க உதவுகிறது. தோலில் காணப்படும் தழும்புகள் மீது புதிய இஞ்சி துண்டினை தேய்த்து வந்தால், அது 6 முதல் 12 வாரங்களுக்குள் தழும்புகளை மறைக்க உதவும். நல்ல பலன்களை பெற புதிய இஞ்சியை பயன்படுத்த வேண்டும்.

நன்மை 3: முகப்பரு மற்றும் தோல் கோளாறு

ஒரு சக்தி வாய்ந்த நச்சு நீக்கியாக மற்றும் சுத்தப்படுத்தும் உறுப்பினராக செயல்பட்டு சருமத்தை சுத்தப்படுத்தி, முகப்பரு மற்றும் தோல் கோளாறுகள் போன்றவற்றை நீக்கி, மிருதுவான சருமம் பெற இஞ்சி உதவுகிறது; இது உடல் சருமத்தில் நல்ல விதமான மாற்றங்கள் உருவாக தோல் செல்களை தூண்டி விடுகிறது. இஞ்சி ஒரு இயற்கையான முகப்பருவை எதிர்த்து போராடும் ஒரு ஆயுதமாக விளங்குகிறது; இது சருமத்தில் முகப்பரு ஏற்படும் வீதத்தை குறைக்க உதவுகிறது. மேலும் முகப்பருவை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாவை கொன்று, சுத்தப்படுத்த இஞ்சி பயன்படுகிறது.

நன்மை 4: சரும தன்மை

Skin condition
Image: Shutterstock

அப்ரோடிஸியாக், ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் டோனிங் பண்புகளை அதிகம் கொண்டது என பெயர் பெற்ற மூலிகை இஞ்சி ஆகும்; இப்பண்புகள் பிரகாசிக்கும் சருமத்தை வழங்க உதவுகின்றன. 2 துருவிய இஞ்சி, 2 மேஜைக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்த கலவையை 30 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பின் அதை எடுத்து சருமத்தில் தடவி, 30 நிமிடங்களுக்கு பின்னர் கழுவி விடவும்; இது சருமத்தை மென்மையானதாக மாற்றி, வயதாவதை தடுக்க உதவும்.

நன்மை 5: ஹைப்போ நிற மாற்றமடைந்த தழும்புகள்

ஹைப்போ நிற மாற்றமடைந்த தழும்புகள், உடலின் சருமத்தில் நிற மாற்றத்தை ஏற்படுத்தி, பொதுவாக வெள்ளை அல்லது மிகவும் இலேசான சரும தன்மையை ஏற்படுத்த காரணமாகின்றன. தோலின் ஹைப்போ நிற மாற்றத்தை குறைக்க இஞ்சி பயன்படுகிறது; புதிய இஞ்சியை துண்டாக்கி, அதை தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால், சற்று நேரத்திற்கு அதை அப்படியே விட்டு விட்டால் தழும்புகளில் இருந்து குணமடையலாம். இதனால் ஏற்படும் பலன்களை, ஓரிரு வாரங்களில் தோலில் உண்டாகும் இலேசான மாற்றங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால், இதை தவறாமல் தினந்தோறும் செய்து வந்தால், நல்ல பலன்களை பார்க்கலாம்.

இஞ்சி வழங்கும் கூந்தல் நன்மைகள்

பல நூற்றாண்டுகளாக, ஆயுர்வேத மருத்துவத்தில் தலைமுடி பிரச்சனைகளை குணப்படுத்த இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது; இது முடி பிரச்சனைகளை குணப்படுத்த தேவையான பண்புகளை வெளியிடவல்லது. முடி வளர்ச்சியை தூண்டி விட்டு, மேம்படுத்த இஞ்சி எண்ணெய் அதிகம் உதவும். இப்பொழுது இஞ்சி வழங்கும் கூந்தல் நன்மைகள் யாவை என்று பார்த்து, படித்தறியலாம்:

நன்மை 1: முடி வளர்ச்சி

Hair growth
Image: Shutterstock

உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க இஞ்சி பயன்படுகிறது; இதன் மூலம் உச்சந்தலையில் போதுமான அளவு இரத்த ஓட்டம் ஏற்படும். இது முடியின் வேர்க்கால்களை தூண்டி, முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்த உதவும்; இஞ்சியில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தலைமுடிக்கு அதிக நன்மைகளை அளிக்க வல்லவை. ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சியை துருவி, அதில் 1 மேஜைக்கரண்டி ஜோஜோபா எண்ணெயை சேர்த்து, உச்சந்தலையில் வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்து, 30 நிமிடங்களுக்கு தலையை அப்படியே விட்டு விடவும். பின்பு ஷாம்பு கொண்டு வழக்கம் போல் தலைமுடியை அலசவும்; இது தலைமுடி மெலிதாவதை எதிர்த்து போராடி, முடி வளர்ச்சியை தூண்டி விடும்.

நன்மை 2: பொடுகு

மக்கள் சந்திக்கும் சாதாரண மற்றும் பொதுவான தலைமுடி பிரச்சனையில் மிக முக்கியமான ஒன்று பொடுகு ஆகும்; இஞ்சியில் உள்ள ஆன்டி செப்டிக் பண்புகள் பொடுகை போக்க உதவும். இயற்கை முறையில் தலைமுடியில் காணப்படும் பொடுகை போக்க இஞ்சி எண்ணெய் ஒரு சிறந்த தீர்வு ஆகும்; இரண்டு தேக்கரண்டி புதிதாக துருவப்பட்ட இஞ்சி, மூன்று மேஜைக்கரண்டி நல்லெண்ணய் அல்லது ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து, உச்சந்தலையில் தடவி 15 முதல் 30 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். இந்த செய்முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், பொடுகு பிரச்சனையில் இருந்து முற்றிலுமாக விடுதலை அடையலாம்.

நன்மை 3: தலை முடி இழப்பு சிகிச்சை

Head hair loss treatment
Image: Shutterstock

முடி இழப்பை தடுக்க ஒரு சிறந்த மருந்தாக இஞ்சி பயன்படுகிறது; முடியை பலப்படுத்த மற்றும் கூந்தலில் நல்ல வாசம் ஏற்பட இது உதவுகிறது.

நன்மை 4: வறண்ட முடிக்கு நல்லது

வறண்ட மற்றும் உடையக்கூடிய முடியை சரி செய்ய உதவும் ஜிங்க்/ துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் பல வைட்டமின்களை கொண்ட ஒரு மூலிகையாக இஞ்சி திகழ்கிறது. இது தலைமுடி பிரச்சனைகளை சரி செய்து, நல்ல தலைமுடி வளர்ச்சிக்கு உதவும்.

நன்மை 5: பிளவுபட்ட கூந்தல் முனைகள்

அதிக மாசு மற்றும் அதிக வெப்பத்திற்கு ஆளாகும் முடியின் வேர்க்கால்களில், இம்மாசு காரணிகளால் ஏற்படும் சேதங்கள் காரணமாக பிளவுபட்ட கூந்தல் முனைகள் என்ற பிரச்சனை உருவாகிறது; இஞ்சியில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் சேதமடைந்த முடியின் வேர்க்கால்களை குணப்படுத்தி, பிளவுற்ற கூந்தல் முனை குறைபாட்டை போக்க உதவுகின்றன.

இஞ்சியிலுள்ள ஊட்டச்சத்து மதிப்பு

இஞ்சியில் உள்ள புரதம், கால்சியம், இரும்பு, போலிக் அமிலம், கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை, கரையாத மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து, சோடியம், வைட்டமின்கள், தாதுக்கள்/ கனிம சத்துக்கள், கொழுப்பு அமிலங்கள் போன்றவை மிகச்சிறந்த ஊட்டச்சத்துக்களாக விளங்குகின்றன. இஞ்சியில் உள்ள ஊட்டச்சத்து விவரம் பற்றி கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்:

ஒவ்வொரு 100 கிராமிற்கான புதிய ஊட்டச்சத்து மதிப்பு (ஆதாரம்: யு.எஸ்.டி.ஏ (USDA) தேசிய ஊட்டச்சத்து தரவு தளம்)

நியமம்ஊட்டச்சத்து மதிப்புRDA -இன் சதவிகிதம்
சக்தி80 Kcal4%
கார்போஹைட்ரேட்17.77 g13.50%
புரதம்1.82 g3%
மொத்த கொழுப்பு0.75 g3%
கொழுப்பு0 mg0%
நார்ச்சத்து உணவு2.0 g5%
வைட்டமின்கள்
ஃபோலேட்கள்/ போலிக் அமிலம்11 µg3%
நியாசின்0.750 mg4.50%
பேண்டோதெனிக் அமிலம்0.203 mg4%
பைரிடாக்சின்0.160 mg12%
வைட்டமின் ஏ0 IU0%
வைட்டமின் சி5 mg8%
வைட்டமின் ஈ0.26 mg1.50%
வைட்டமின் கே0.1 µg0%
எலக்ட்ரோலைட்கள்/ மின்பகு பொருள்கள்
சோடியம்13 mg1%
பொட்டாசியம்415 mg9%
கனிமங்கள்
கால்சியம்16 mg1.60%
காப்பர்/ தாமிரம்0.226 mg25%
இரும்பு0.60 mg7.50%
மெக்னீசியம்43 mg11%
மாங்கனீசு0.229 mg10%
பாஸ்பரஸ்34 mg5%
துத்தநாகம்/ ஜிங்க்0.34 mg3%

ஜின்ஜெரால்: இஞ்சியிலுள்ள ஜின்ஜெரால் என்பது ஒரு மஞ்சள் நிற, காரமான எண்ணெய் ஆகும்; இது தான் இஞ்சியின் காரமான சுவைக்கு முக்கிய காரணம் ஆகும். இதன் வேதிப்பொருள் கட்டமைப்பு, கேப்சைகினை ஒத்ததாக காணப்படுகிறது; இது இஞ்சிக்கு கார சுவையை அளிக்க உதவுகிறது. ஜின்ஜெராலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன மற்றும் இது இரத்த சர்க்கரையை பராமரிக்க உதவும். டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் சைக்லோ ஆக்சிஜென்ஸ் ஆகிய நோய்க்குறைபாடுகளை பராமரித்து, அவற்றை தடுக்க உதவும் 2 முக்கிய என்சைம்களை சரிப்படுத்த இஞ்சி உதவுகிறது.

  • ஷோகோல்: அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை கொண்ட இஞ்சி, மார்பக புற்றுநோயை எதிர்த்து போராட உதவும். மேலும் இது கட்டிகள் உருவாவதற்கு எதிரான பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகளை ஜின்ஜெராலை காட்டிலும் அதிகம் கொண்டுள்ளதால், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகளை தடுக்க உதவுகிறது.
  • வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: வைட்டமின் பி6 ஒரு பயனுள்ள அழற்சியை குறைக்கும் பொருள் ஆகும்; இஞ்சியிலுள்ள பல தாதுக்களும் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கின்றன.

இஞ்சியை பயன்படுத்துவது எப்படி?

How to use ginger
Image: Shutterstock

இஞ்சியை சுவை சேர்க்கக்கூடிய ஒரு பேஸ்ட்டாக தான் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்; இந்த பேஸ்ட்டை உலர்ந்த அல்லது புதிய இஞ்சி என எதிலிருந்து வேண்டுமானாலும் தயாரிக்கலாம். இப்பேஸ்ட்டை வெங்காயம், சீரகம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லி, கடுகு போன்றவற்றுடன் சேர்த்து பயன்படுத்தலாம்; இந்த கலவையை சூப் வகைகள் தயாரிக்க, இறைச்சி மற்றும் காய்கறி குழம்புகள் தயாரிக்க பயன்படுத்தலாம்.

  • பழங்காலத்தில் இருந்தே இது எலுமிச்சை, ஸ்பாண்டியாஸ் மற்றும் ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • புதிய இஞ்சி வேர்களை வைத்து, வெவ்வேறு விதமான மிட்டாய்கள், இஞ்சி பிரட், பிஸ்கெட்டுகள் மற்றும் கார நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தலாம்.
  • இஞ்சி தேநீர் என்பது உலகத்தில் மிக பிரபலமான பானமாக திகழ்கிறது; குறிப்பாக ஆசிய நாடுகளில் இது மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது.
  • இஞ்சி வேரில் இருந்து எடுக்கப்படும் சாறை, ஆப்பிள், எலுமிச்சை சாறு மற்றும் கேரட் போன்றவற்றுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
  • இஞ்சியின் வேரை துருவி, வெவ்வேறு விதமான உணவுகளில் சேர்த்து உட்கொள்ளலாம்.
  • சில பிரபல உணவு வகைகளில், இஞ்சி வேர் கொண்டு தயாரித்த மிட்டாய்கள், பூசணி இஞ்சி கப் கேக்குகள், இஞ்சி சிரப், இஞ்சி சுவை கொண்ட பான் கேக்குகள் மற்றும் பல வகை உணவுகளில் இஞ்சி சேர்த்து தயாரித்து, உட்கொள்ளலாம்.

இஞ்சியின் பக்க விளைவுகள்

இஞ்சியை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இதுவரை பார்த்தறிந்தோம்; இஞ்சியினால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இந்த பத்தியில் காணலாம்:

  • இஞ்சியை புதிதாக அல்லது உலர வைத்து உட்கொள்வது பலவிதமான மருத்துவ நோக்கங்களுக்கு உதவும்; இது எண்ணெய், டிஞ்சர், கேப்ஸுல் மாத்திரை ஆகிய வடிவத்தில் கிடைக்கிறது
  • பொதுவாக இஞ்சியில் எவ்விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது; ஆனால், இஞ்சி குறித்த ஒவ்வாமை இருக்கும் நபர்களில் நெஞ்செரிச்சல், டையேரியா எனும் வயிற்றுப்போக்கு, வயிறு அசௌகரியம் போன்ற குறைபாடுகள் ஏற்படலாம். பித்தநீர்க்கட்டியால் பாதிக்கப்பட்டு வரும் நபர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின் இஞ்சியை உட்கொள்வது நல்லது.
  • கர்ப்பமாக இருக்கும் மற்றும் தாய்ப்பால் அளித்து வரும் பெண்கள் இஞ்சி, இஞ்சியிலிருந்து தயாரிக்கப்பட்ட சப்ளிமெண்ட்டுகளை, மருத்துவரை கலந்தாலோசிக்காமல் உட்கொள்ள கூடாது. இஞ்சி இரத்தத்தை மெலிதாக்கி, இரத்த அழுத்தத்தை அதிகரித்து விட வாய்ப்புண்டு.
  • இஞ்சி என்பது இந்திய அடுப்படிகளில் அத்தியாவசியமாகி விட்ட ஒரு மூலிகை உணவுப்பொருள்; இதனை கொண்டு தயாரிக்கப்படும் இஞ்சி தேநீர் அல்லது இஞ்சியிலிருந்து தயாரிக்கப்பட்ட சப்ளிமெண்ட்டுகள் ஆகியவற்றை உட்கொள்ளும் நபர்கள் அற்புதமான நன்மைகளை பெறுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனலாம்!

தரைக்கு அடியில், மண்ணில் வேர் விட்டு முளைக்கும் தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படும் இஞ்சி, வானளவு பயன்களை மக்களுக்கு வாரி வழங்குகிறது. இஞ்சி வளர்வதற்கு மிகக்குறைவான பராமரிப்பு மட்டும் கொடுக்கப்பட்டால், அதிக நன்மைகளை அள்ளித் தரக்கூடியதாக இஞ்சி விளங்குகின்றது; இதை வீட்டில் வளர்த்தால் விதைத்த ஓரிரு வாரங்களில் தினந்தோறும் புதிய இஞ்சிகளை தாவரத்தில் இருந்து பெறலாம். எந்தவொரு செயற்கை பூச்சிக்கொல்லி மருந்தும் சேர்க்காமல் தாவரத்தை வளர்த்தால், இயற்கையான பலன்களை முழுமையாக பெறலாம்.

இஞ்சி குறித்த எல்லா தகவல்களையும் இந்த பதிப்பில் படித்து அறிந்திருப்பீர்கள்! இஞ்சியால் நீங்கள் அடைந்த பலன்கள் யாவை? உங்களுக்கு பிடித்த இஞ்சி சேர்த்த உணவு எது? உங்களுக்கு தெரிந்த இஞ்சியின் வேறு பலன்கள் என்னென்ன என்று கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலம் எங்களுக்கு  தெரியப்படுத்துங்கள்.

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles