கற்றாழையின் 17 அற்புத பயன்கள்! – Aloe Vera Benefits in Tamil
ஆலுவேரா எனப்படும் கற்றாழையில் நம்ப முடியாத ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. கற்றாழை பல்வேறு இடங்களில் சுலபமாக கிடைக்கிறது. வெயில் காலத்தை சமாளிக்க இயற்கையாகவே படைக்கப்பட்டது இந்த கற்றாழை. இது சரும நோய்களுக்கும், முடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. இந்த கற்றாழையில் இருந்து சாறு மற்றும் ஜெல் பெறப்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
In This Article
கற்றாழையின் பெயர்கள் Aloe Vera Names
இந்த கற்றாழை எகிப்து நாட்டில் 16 நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளது. கற்றாழை இந்தியா, எகிப்து மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகள் அதை மகிமையை உணர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கற்றாழை இந்தியாவில் பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது. தமிழில் கற்றாழை, இந்தியில் ஹிரித்குமாரி, தெலுங்கில் கலாபண்டா, மலையாளத்தில் குமாரி, கன்னடத்தில் லோலிசரா, மராத்தியில் கோரோபிடா, பெங்காளியில் கொர்டாகுமாரி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
கற்றாழையின் பயன்கள் (Aloe Vera Benefits)
தோற்றத்தில் மட்டுமல்ல மருத்துவத்திலும் கற்றாழையின் செயல்பாடுகள் அழகுதான். அதன் பயன்கள் என்னென்ன என்பதை தற்போது காண்போம்.
தோலுக்கு கிடைக்கும் நன்மைகள் (Aloe Vera Benefits for Skin)
வயதான தோற்றத்தை கற்றாழை மூலம் எப்படி தடுக்கலாம்?
முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தான் வயதான தோற்றத்தை கொடுக்கும். இந்த வயதான தோற்றத்தை தடுப்பதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. வயதான தோற்றத்தை தடுக்க கற்றாழையை கொண்டு தோலை பாதுகாக்கும் கீரிம் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- 1 தேக்கரண்டி ஆலிவ் வேரா ஜெல்
அரை தேக்கரண்டி ஆலிவ் ஆயில் - 1 தேக்கரண்டி ஓட்ஸ்
தயாரிக்கும் முறை
மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு அதனை பேஸ்ட் மாதிரி பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பின்னர், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
முகத்தை கழுவிய பின்னர் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்து இளமையும் காணப்படுவதை கண்டு நீங்களே நெகிழ்ச்சியடைவீர்கள். கற்றாழை முகத்தை பொலிவை தருவதோடு இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது. கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்துவதால் தோல் மிருதுவாக இருக்கும் என்பதை ஆராய்ச்சிகள் மூலமும் நிருபித்துள்ளனர்.
மிருவதான சருமத்தை பெற
கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் தோல் மிருதுவனதாக இருக்கும். முகப்பரு மற்றும் எண்ணெய் வழியும் முகத்தை தடுக்கவும் இந்த கற்றாழை பயன்படுகிறது.
பயன்படுத்தும் முறை
காற்றாழையில் இருந்து நேரடியாக அதன் ஜெல்லை எடுத்து முகத்தில் பயன்படுத்தலாம். இல்லையென்றால் கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல்லையும் வாங்கி பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
கற்றாழை மட்டுமே போதுமானது.
தயாரிக்கும் முறை
கற்றாழை வெட்டி அதில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதை பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை போட்டு பிரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும். பின்னர் அதை முகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
இந்த கற்றாழை ஜெல்லை முகத்தில் பயன்படுத்துவதால் முகம் எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படும். இதனால் வறண்ட சருமத்திலிருந்து விடுபடலாம்.
முகப்பருவை தடுத்து அழகை மெருகேற்ற
கற்றாழையின் ஜெல் உங்களது முகத் தோலில் படிந்துள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவுறச் செய்யும். மேலும், முகப்பருக்களை கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை கொண்டுள்ளது.
பயன்படுத்தும் முறை
கற்றாழை மற்றும் சிறு துளி எலுமிச்சை சாறு கலந்த கலவையினை பயன்படுத்தினால் சரும நோய்கள் நீங்கும். தழும்புகளை நீக்கும் குணங்களும் இதில் உள்ளது. எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழை கலந்த கலவையானது முகப்பருக்களை வேருடன் அழிக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.
தேவையான பொருட்கள்
- 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
- 2 முதல் 3 துளி எலுமிச்சை சாறு
தயாரிக்கும் முறை
- கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறினை நன்றாக கலக்க வேண்டும்.
- அந்தக் கலவையினை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.
- இவ்வாறு செய்வதன் மூலம் ஒரே இரவில் நல்ல பலனைக் காண முடியும்.
கிடைக்கும் பலன்கள்
கற்றாழையின் ஜெல்லானது அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டுள்ளதால் சருமத் தொடர்பான பிரச்சனைகளை எளிதில் கட்டுப்படுத்துகிறது. முகப்பருக்களை வேருடன் அளித்து பொலிவுறச் செய்யும் தன்மை இதில் உள்ளது. உயிரிழந்த செல்களை நிக்கி புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது.
விளைவுகள்
சூரியனிள் வெப்பத்திற்கு ஏற்றவாறு எலுமிச்சை சாறினை குறைத்துக் கொள்வது நல்லது.
சூரிய ஒளியில் இருந்து தோலை பாதுகாக்கும்
கற்றாழை ஜெல்லானது சூரிய ஒழியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாக்கிறது. எரிச்சல் மிக்க பகுதிகளில் கற்றாழை ஜெல்லினை நேரடியாக பூசிக் கொள்வதன் மூலம் நற்பயன்களை அடையலாம்.
சூரிய ஒளியில் இருந்து கற்றாழை எவ்வாறு பாதுகாக்கிறது
கற்றாழை ஜெல்லில் அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்திகள் உள்ளது. இது புறஊதாக் கதிர்களிடம் இருந்து நம் சருமத்தினைக் காக்கிறது. சரும நோய்களுக்கும் இது சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் மிகுந்த இந்த கற்றாழை ஜெல்லானது பலவிதமான சரும நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது.
காயங்கள் மற்றும் பூச்சிக்கடியில் இருந்து பாதுகாக்க
கற்றாழை ஜெல்லில் உள்ள அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்தியானது நம் சருமத்தில் உள்ள அனைத்துவிதமான நோய்களையும் நீக்குகிறது.
காயங்கள் நீக்கும் கற்றாழை
கற்றாழை ஜெல்லில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது காயங்கள் மற்றும் பூச்சிக் கடிக்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும், கற்றாழை ஜெல்லின் மூலம் தயாரிக்கப்படும் கலவையானது சருமத்தில் ஏற்படும் எரிச்சலுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
தழும்புகளைக் குறைக்கும் கற்றாழை
தோல் சுருக்கம் மற்றும் முகத்தில் ஏற்படும் தழும்புகளுக்கும் மருந்தாக இந்த கற்றாழை ஜெல் பயன்படுகிறது. முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு ஏற்படும் தழும்புகளை குணப்படுத்த பயன்படுகிறது. இதனை பயன்படுத்தும் இடங்களில் சிறு எரிச்சல் ஏற்பட்டாலும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தழும்புகள் மறையும்.
கற்றாழையின் மூலம் முடிக்குக் கிடைக்கும் நன்மைகள் (Benefits For Hair)
முடி அடர்த்தியாக வளர
கற்றாழை ஜெல்லானது சரும பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, முடி தொடர்பான பிரச்சனைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பெரும்பாலும், அடர்த்தியான முடிகள் வளர இது உதவுகிறது.
எவ்வாறு பயன்படுத்துவது
கற்றாழைஜெல் மற்றும் கடகு எண்ணெய் கலந்த கலவையானது அடர்த்தியான முடி வளர பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்
- 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
- 1 தேக்கரண்டி கடகு எண்ணை
பயன்படுத்தும் முறை
கற்றாழை ஜெல் மற்றும் கடகு எண்ணெய்யினையும் நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்தக் கலவையினை உச்சந்தலையில் வைத்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். ஓர் இரவு கழித்து தலையினை நன்றாக சேம்பு போட்டு கழுவுவ வேண்டும். இந்த கற்றாழை ஜெல்லானது உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி அடர்த்தியான முடியினைப் பெற உதவுகிறது.
பொடுகுத் தொல்லை நீங்க
இரசாயனம் அதிகமான சேம்புகளைக் காட்டிலும் கற்றாழை ஜெல்லானது உங்களது தலையில் உள்ள பொடுகுத் தொல்லைகளை எளிதில் நீக்கும்.
தலையில் பொடுகு ஏற்பட ஏராளமான காரணங்கள் உள்ளன. எண்ணெய் வழிந்த தலை, தலையில் அதிகப்படியான இறந்த செல்கள், சுகாதாரமின்மை, தொடர்ந்து தலையினை சுத்தமாக வைத்துக் கொள்ளலாமல் இருத்தல் உள்ளிட்டவை இதற்குக் காரணமாகும். கற்றாழை ஜெல்லில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் எளிதில் தீர்க்கும் குணாதசியங்களைக் கொண்டுள்ளது.
உச்சந்தலையில் முடி கொட்டுவதை தடுக்கும்
தலையில் ஏற்படும் அமிலத் தன்மையின் காரணமாக உச்சந்தலையில் முடிகொட்டுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும்பாலானோருக்கு இது அதிகப்படியாகவே காணப்படும் பிரச்சனையாகும். உச்சந்தலையில் மட்டும் ஏற்படும் இதுபோன்ற பிரச்சனைகளை கற்றாழை ஜெல்லானது குணப்படுத்தும் மருத்துவத் தன்மைக் கொண்டுள்ளது.
எவ்வாறு வேலை செய்கிறது
அதிக இரசாயனமிக்க சேம்புக்களை தொடர்ந்து பயன்படுத்துவன் மூலம் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது. இதற்குத் தகுந்த தீர்வு கற்றாழை மட்டுமே. கற்றாழை ஜெல்லினை பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனையை சுலபமாக தீர்க்கலாம்.
தலையில் புழுவெட்டு நீங்க
தலையில் ஏற்படும் புழுவெட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல்லானது மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தலைமுடியின் வேரில் ஏற்படும் அலர்ஜிக்கு கற்றாழையே சிறந்த மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது.
கற்றாழை ஜெல்லினை தலை முழுவதும் தடவி, பின் சிறிது நேரத்திற்குப் பிறகு சேம்புக் கொண்டு கழுவுவதன் மூலம் புழுவெட்டில் இருந்து தலையினைக் காக்கலாம்.
எவ்வாறு பயன்படுகிறது
கற்றாழையில் உள்ள புரதச் சத்துக்கள் தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் பலவீனமான மற்றும் உதிர்ந்த முடிகள் நீங்கி புதியதாகவும், அடர்த்தியாகவும் முடிகள் வளர்கிறது.
உடலுக்கு ஏற்படும் நன்மைகள் (Benefits of Aloe Vera for Health)
அழற்சி நீக்கும் கற்றாழை
கற்றாழை சாறினை பருகுவதன் மூலம் உடலில் ஏற்படும் அழற்சி நீங்குகிறது.
கற்றாழை சாறு தயாரிக்க தேவையானப் பொருட்கள்
ஒரு கற்றாழை தண்டு, ஒரு டம்பள் தண்ணீர், ஒரு தேக்கரண்டி தேன்
எவ்வாறு பயன்படுத்துவது
கற்றாழையின் மேல் தோலினை நீக்கி உள்ளே உள்ள கண்ணாடி போன்ற ஜெல்லினை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின், அதில் தண்ணீர் மற்றும் தேனைக் கலந்து மீண்டும் அரைத்து கலவையாக்கி கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
இந்தக் கலவையினை அழற்சி மற்றும் பூச்சிக் கடித்த இடங்களில் தடவ வேண்டும்.கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது அழற்சி மற்றும் பூச்சிக் கடியின் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களை விரைவில் குணப்படுத்தும்.
விளைவுகள்
குறிப்பாக இந்த கற்றாழை ஜெல்லினை இரைப்பை தொடர்பான அலர்ஜி பிரச்சனைகள் இருக்கும் நபர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி நீங்க
இந்த கற்றாழை சாறானது நெஞ்செரிச்சல், அசிடிட்டி, நெஞ்சு வலி மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை ஜெல்லில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகள் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
கொழுப்பு மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த
கற்றாழை ஜெல்லானது கொழுப்பு சம்பந்தமான பிரச்சனைகளை ஆரம்பக்கட்டத்திலேயே கட்டுப்படுத்த பயன்படுகிறது. மேலும், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, நீரழிவு நோய் உள்ளவர்கள் இந்த ஜெல்லினை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் உடல் நலத்தில் முன்னேற்றத்தினைக் காணலாம். மருத்துவத் துறையிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தை தரும் கற்றாழை
கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் பற்பசையானது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. இந்த பற்பசையின் மூலம் பல் துலக்கினால் பற்கள் வலுப்பெறும். ஈறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். மேலும், வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடலாம். இந்த பற்பசையினை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
- 3 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
- 5 தேக்கரண்டி சமையல் சோடா உப்பு
- 5 தேக்கரண்டி வெஜிடபில் கிளசரின்
- புதினா
- யூக்கலிப்டஸ் எண்ணை
- கண்ணாடிப் பாத்திரம்
செய்முறை
முதலில் கற்றாழை ஜெல்லினை சமையல் சோடா உப்புடன் நன்றாக சேர்க்க வேண்டும். பின், கிளசரின் மற்றும் புதினா சேர்த்து கண்ணாடிப் பாத்திரத்தில் நன்றாகக் கலக்கவும். பிறகு அதனுடன் யூக்கலிப்டஸ் எண்ணை சேர்த்து கலக்கியப்பின் சிறிது நேரத்தில் உங்களுடைய ஆரோக்கியமான பற்பசை தயாராகி விடும்.
பயன்படுத்தும் முறை
கற்றாழையின் ஜெல்லில் உள்ள கிருமிநாசினியானது பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கிறது. இந்த கற்றாழை பற்பசையினை பயன்படுத்துவதன் மூலம் ஈறு வீக்கம், பல் கூச்சம் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கற்றாழை
கற்றாழையானது நோய் எதிர்புச் சக்திகளை அதிகரிக்கிறது. மேலும், இரத்த அணுக்களில் புதிய செல்களை ஊக்குவிக்கிறது. மேலும், கற்றாழையிலிருந்து கிடைக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு மற்றும் சைட்டோகின்கள் மூலம் உங்களது நோய் எதிர்புச் சக்திகளை அதிகரிக்க செய்கிறதுs
புற்றுநோயைத் தடுக்கும் கற்றாழை
கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது புற்று நோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் தன்மைகளையும் கொண்டுள்ளது. கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது நேரடியாக புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் தன்மையினைக் கொண்டுள்ளது.
விளைவுகள்
இரைப்பை பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கற்றாழை ஜெல்லினைத் தவிர்க்க வேண்டும்.
மூலப்பிரச்சனையை தடுக்கும் கற்றாழை
மூலப் பிரச்சனைகளுக்கு கற்றாழை அருமருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக வயது முதிர்வு காரணமாக ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு கற்றாழையில் உள்ள குறிப்பிட்ட அமிலத் தன்மையானது சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
எவ்வாறு பயன்படுத்துவது
மலச்சிக்கலினால் ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கற்றாழை ஜெல்லினை ஆசனவாயிலில் ஏற்படும் கொப்புளங்களில் தடவுவதன் மூலம் மூலப்பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இதுபோன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கற்றாழையை பயன்படுத்தி வந்தால் பிரச்சனைகளில் இருந்து வெகுவாக விடுபடலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளவர்கள், மற்றும் நீரழிவு நோயாளிகள் மருந்துவரின் ஆலோசனைப் படி பயன்படுத்தலாம்.
கற்றாழையினை தேர்வு மற்றும் பராமரிக்கும் முறை (How To Select And Store Aloe Vera)
கற்றாழைச் செடியானது வறண்ட நிலத்திலும் வளரும் தன்மைக் கொண்டுள்ளது. கற்றாழைச் செடியில் உள்ள ஓர் இலையினை மட்டும் வெட்டி வைப்பதன் மூலம் அதில் இருந்து மஞ்சள் நிற அமிலம் வெளியேறும். அதனை முழுவதுமாக நீக்கியப் பின்பு நீரில் நன்றாகக் கழுவி பின் உலர வைக்க வேண்டும். பின், மேலே உள்ள பச்சை நிறத் தோலினை மட்டும் நீக்கி உள்ளே உள்ள கண்ணாடிப் போன்ற ஜெல்லினை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை கத்தி அல்லது தேக்கரண்டி மூலம் எளிதில் எடுத்துக் கொள்ளலாம். அந்த கற்றாழை ஜெல்லினை பிரிட்ஜ்ஜில் வைத்து பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜெல்லினை மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
Community Experiences
Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.