கிவி பழத்தின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Kiwi Benefits, Uses and Side Effects in Tamil
இன்றைய நவ நாகரீக சூழலில், உண்ணும் உணவு, வாழ்க்கை முறை சுற்றுச்சூழல் மற்றும் உடலின் செயல்பாடு போன்றவை மாறிக்கொண்டே வருகின்றன; எத்தகைய மாற்றம் ஏற்பட்டாலும் நாம் ஆரோக்கியமான, இயற்கையான உணவுகளை, பழங்களை, காய்களை உட்கொண்டால் நமது ஆரோக்கியத்தை சீர் கெடாமல் பாதுகாக்கலாம்.
இந்த பதிப்பில் அயல் நாடுகளில் தோன்றி, ஆரோக்கியத்தை வழங்குவதில் முதலிடம் பிடித்து இருக்கும் கிவி எனும் பழம் பற்றி தான் பார்க்கவிருக்கிறோம். கிவி பழத்தால் நமது உடலுக்கு பல நன்மைகள், பயன்கள் கிடைக்கும்; இவ்வாறு நமக்கு நன்மைகளை வாரி வழங்கும் கிவி பழம் என்றால் என்ன, அது எப்படி தோன்றியது, கிவி பழம் வழங்கும் நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்.
கிவி பழம் என்றால் என்ன?
சீனாவின் வடக்கு பகுதியில் தோன்றும் பெர்ரி வகை பழங்கள் தான் கிவி பழங்கள் என்று அழைக்கப்படுகின்றன; இந்த கிவி பழங்கள் 20 ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக ஜீலாந்து பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் இக்கிவி பழங்கள் உலக நாடுகள் எங்கும் பரவ தொடங்கி, அந்தந்த பகுதிகளில் இப்பழங்களை விவசாயமே செய்ய ஆரம்பித்து விட்டனர்; கிவி பழங்கள் ஒவ்வொரு நாட்டிலும் விவசாயம் செய்யப்படும் அளவுக்கு பரவ, அவை வழங்கும் ஆரோக்கிய நன்மைகளே முக்கிய காரணம் ஆகும்.
கிவி பழங்கள் சீன நெல்லிக்காய்கள் என்றும் வழங்கப்படுகின்றன; கிவி பழம் அளவில் சிறியதாக இருந்தாலும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை கொண்டது. கிவி பழத்தில் கலோரிகள் குறைவான அளவிலும், வைட்டமின் சி, ஈ, கே, ஃபோலேட் (போலிக் அமிலம்) மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்த்துக்கள் அதிக அளவிலும் காணப்படுகின்றன.
கிவி பழத்தில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன; ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான சத்துக்களில் நார்ச்சத்தும் ஒன்று. சில ஆராய்ச்சிகளில் கிவி பழம் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கிவி பழத்தின் நன்மைகள்
கிவி பழம் என்றால் என்ன, அதன் வரலாறு என்ன என்பது பற்றி மேற்கொண்ட பத்தியில் தெளிவாக பார்த்தோம்; இப்பொழுது கிவி பழம் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள், அழகு நன்மைகள் மற்றும் இதர நன்மைகள் என்னென்ன என்று ஒவ்வொன்றாக பார்த்து, படித்து அறியலாம்.
நன்மை 1: இதய ஆரோக்கியம்
கிவி பழத்தில் நிறைய பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன; இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களாக விளங்குகின்றன. பல ஆய்வுகளில், பொட்டாசியம் சத்து தனித்தே நின்று இதய நோய்களை தடுத்து இதய ஆரோக்கியத்தை காக்கும் தன்மை கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு ஆய்வு அறிக்கையில், நாள் ஒன்றுக்கு 4,069 மில்லி கிராம்கள் பொட்டாசியத்தை உட்கொள்ளும் நபர்களில், 49 சதவீதம் இதய நோயால் இறப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக காணப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது (1).
நன்மை 2: செரிமானம்
கிவி பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான இயக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன (2). மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு அல்லது மலம் இளகி வெளியாதல் போன்ற இரு செரிமான பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்க நார்ச்சத்து உதவும்; கிவி பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து, ஒரு முக்கியமான எலக்ட்ரோலைட் போன்று செயல்பட்டு, செரிமான இயக்கத்தை சரி செய்ய உதவுகிறது.
கிவி பழத்தில் உள்ள ஆக்டினிடின் எனும் என்சைம் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது (3). கிவியில் உள்ள ஆக்டினிடின் என்சைம், உணவில் உள்ள புரதங்களை செரிமானம் செய்ய உதவுகின்றன (4). கிவியில் நிறைந்துள்ள பல நற்குணங்கள், அதன் செரிமான இயக்க மேம்பாட்டு நன்மைக்கு ஆதரவாக அமைந்துள்ளன.
நன்மை 3: உடல் எடை குறைத்தல்
கிவி பழங்களில் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே காணப்படுகின்றன; இவற்றில் புறக்கணிக்கத்தக்க அளவிலான கொழுப்பு சத்துக்கள் மட்டுமே உள்ளன. இப்பழங்கள் அதிகளவு நார்ச்சத்தை கொண்டுள்ளன; கிவி பழத்தின் இந்த எல்லா பண்புகளும் உடல் எடை குறைத்தலுக்கான உணவு முறையில் முக்கிய இடத்தை கிவி பழத்திற்கு பெற்று தருகின்றன.
கிவி பழங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்பதற்கான போதுமான அல்லது நேரடி ஆராய்ச்சி முடிவுகள் ஏதும் கிடைக்கவில்லை; உங்களது உடல் எடை குறைப்பு டயட் உணவு முறையிலுள்ள கலோரி மிகுந்த உணவுகளுக்கு பதிலாக கலோரி குறைந்த கிவி பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு கலோரி குறைந்த உணவு முறைகளுடன் முறையான உடற்பயிற்சியையும் செய்தால், கண்டிப்பாக உடல் எடை குறையும்.
நன்மை 4: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்
நீங்கள் உங்களது டயட் உணவு முறையில் கிவி பழத்தை சேர்த்துக் கொள்வதால், உடலின் கிளைகெமிக் செயல்பாடு மேம்படுத்தப்படும் என்று ஆய்வு ஒன்று கருத்து தெரிவித்துள்ளது (5).
கிவி பழம் அதிக அளவு நீர்ச்சத்தை கொண்டது; ஆகையால், சர்க்கரை நோயாளிகள் இதை தைரியமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்; நூறு கிராம் கிவி பழத்தில் வெறும் 5 கிராம்கள் மட்டுமே குளுக்கோஸ் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் கிவி பழம் மிக குறைந்த அளவிலான தாக்கத்தையே இரத்த சர்க்கரையின் மீது ஏற்படுத்தும் (6).
ஒரு நடுத்தர அளவுள்ள கிவி பழம் 11 கிராம்கள் கார்போஹைட்ரேட்டினை கொண்டுள்ளது; இது மற்ற பழ வகைகளை காட்டிலும் மிகக்குறைவு. இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது (7).
நன்மை 5: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
கிவி பழங்களில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன; கிவி பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படுகிறது. ஒரு கப் கிவி பழ சாறில் 273 சதவிகிதம் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது; இந்த வைட்டமின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
கிவி பழம் உடலில் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்திற்கு எதிராக போராடி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது; நடத்தப்பட்ட ஆய்வில், கிவி பழம் மேற்புற மூச்சுக்குழாயில் ஏற்படக்கூடிய நோய்தொற்றுகளை குறைக்க உதவுகிறது (8). கிவி பழம் உள்ளார்ந்த மற்றும் தகவமைப்பு நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது (9).
நன்மை 6: இரத்த அழுத்தம்
கிவி பழம் இரத்த அழுத்த அளவுகளை குறைத்து, அவற்றை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது (10). ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கிவி பழங்களை உட்கொண்டால், கார்டியோ வாஸ்குலார் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய காரணிகளான பிளாஸ்மா கொழுப்பு அளவுகள், பிளேட்லெட் ஹைப்பர் செயல்பாடு போன்றவற்றை குறைக்கலாம் (11).
நன்மை 7: உறக்கத்தை அதிகரிக்கும்
உறங்குவதற்கு முன் கிவி பழத்தை உண்டால், அது நல்ல உறக்கத்தை அளிக்கும் மற்றும் உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கும் (12). ஒரு நான்கு வார ஆராய்ச்சியில் 24 மனிதர்கள் தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன் கிவி பழங்களை உட்கொண்டார்கள்; ஆய்வின் முடிவில் அவர்களது உறக்கம் 42% சதவீத அளவிற்கு ஆழ்ந்து, மேம்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது (13).
ஆய்வில் வெளியான கூடுதல் தகவல் என்னவெனில், ஆய்வில் ஈடுபட்டவர்களின் உறங்கும் திறன் 13% அதிகரித்துள்ளது; மேலும் இரவில் உறக்கத்தில் விழிக்காமல் தூங்குவது 5% அளவிற்கு மேம்பட்டுள்ளது என்பதாகும் (14).
நன்மை 8: கர்ப்பிணிகளுக்கு நல்லது
கிவி பழத்தில் ஃபோலேட் எனும் ஃபோலிக் அமிலம் அதிகம் காணப்படுகிறது; இந்த ஃபோலிக் அமில சத்து கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
மேலும் இது குழந்தைகளின் நரம்பு மண்டலத்தில் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்க உதவும். கர்ப்பத்திற்கு முயற்சித்து வரும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இப்பழத்தை உண்ண வேண்டியது அவசியம்.
நன்மை 9: ஆஸ்துமா
கிவி பழத்தில் இருக்கும் அதிக அளவு வைட்டமின் சி, ஆஸ்துமா நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றது; ஒரு ஆய்வில் கிவி பழம், குழந்தைகளில் ஏற்படும் மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றை குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது (15).
மற்றொரு ஆய்வில் கிவி பழத்திலுள்ள வைட்டமின்கள் சி மற்றும் ஈ, குழந்தைகளின் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது (16). கிவி பழங்கள் சுவாச குழாய் அதாவது மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் தடுத்து, அவற்றின் செயல்பாட்டினை மேம்படுத்த உதவுகின்றன; கிவி பழம் வழங்கும் இந்த நன்மைகளை நீங்கள் அடைய விரும்பினால், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை இப்பழத்தை உட்கொள்ளவும் (17).
நன்மை 10: அல்சர்/ புண்
கிவி ஒரு சிட்ரஸ் வகை பழம் ஆகும்; கிவி பழத்தில் காணப்படும் அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள் வயிற்றில் ஏற்படும் அல்சர் குறைபாட்டை சரி செய்ய உதவுகின்றன. வைட்டமின் சி சத்து, புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது; இச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு அல்சர் பிரச்சனை ஏற்படலாம். அல்சரை சரி செய்ய சிட்ரஸ் வகை பழங்களான கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்றவை உதவும்.
நன்மை 11: புற்றுநோய்
ஒரு ஆய்வில் கிவி பழத்திலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் வாய் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது (18). இப்பழங்கள் டிஎன்ஏ-வில் ஏற்படக்கூடிய ஆக்சிடேட்டிவ் சேதத்தை குறைக்க உதவுகின்றன (19).
கிவி பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்து, உடலில் புற்றுநோய் உருவாக காரணமாக இருக்கும் தேவையற்ற செல்களை எதிர்த்து போராட உதவுகிறது; புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது (20). இப்பழத்தில் அதிகம் காணப்படும் நார்ச்சத்து புற்றுநோய்க்கு எதிராக போராடுவதுடன், உடலின் செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. கிவியில் உள்ள இதர சிக்கலான அமைப்புகளான சல்ஃபோராபேன், ஐசோசையனேட், இண்டோல்கள் போன்றவை கார்சினோஜென்களின் இயக்கத்தை தடை செய்வதில் பிரசித்தி பெற்றவை ஆகும் (21).
நன்மை 12: கண் பார்வை ஆரோக்கியம்
கிவி பழங்களில் இருக்கும் வைட்டமின் சி, ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆகும்; இது கண்களில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்து, கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது (22).
கிவியில் காணப்படும் லூடெய்ன் மற்றும் ஜியாசாந்தின் ஆகிய இரண்டு சக்தி மிகுந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன (23). கிவி (மற்றும் இதர உணவுகளில்) அமைந்துள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் 100% இருப்பதாக கூறப்படுகிறது. கிவி பழத்தில் உள்ள லூடெய்ன் மற்றும் ஜியாசாந்தின் ஆகிய ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் வயதாவதால் ஏற்படக்கூடிய மாகுலர் சீர்கேட்டை தடுக்க உதவுகின்றன (24).
நன்மை 13: அழற்சி எதிர்ப்பு தன்மை
கிவி பழத்தில் உள்ள கிஸ்பெர் என்று அழைக்கப்படும் பெப்டைடு அழற்சியை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது; ஆய்வுகளில், பெருங்குடல் திசுக்களில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராடும் தன்மை இந்த பெப்டைடுகளில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது (25). ஆனால், கிவிப்பழம் குடல் பகுதியில் ஏற்படும் அழற்சியை தவிர, வேறு விதமான அழற்சிக்கு எதிராக போராடும் என்பதை உறுதி செய்யும் ஆவணங்கள் கிடைக்கவில்லை.
நன்மை 14: கல்லீரல் ஆரோக்கியம்
கிவி பழத்தில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க உறுப்பு, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை (NAFLD) எதிர்த்து போராடும் தன்மை கொண்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.NAFLD என்பது ஒரு கல்லீரல் நோயை அதாவது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்துள்ளது என்பதை, குறிப்பாக ஆல்கஹால் எடுத்துக்கொள்ளாமல் இந்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
கிவியில் காணப்படும் அந்த குறிப்பிடத்தக்க உறுப்பு – பைர்ரோலோக்குவினோலின் குவினோன் (PQQ), அதிக கொழுப்பு உணவு அளிக்கப்பட்ட எலியின் உடலில் ஏற்பட்ட NAFLD நோய்க்குறைபாட்டை எதிர்த்து போராடியது கண்டறியப்பட்டுள்ளது (26).
நன்மை 15: கொலஸ்ட்ரால்
கிவி பழங்களில் மிக மிக குறைவான அளவு அல்லது கொழுப்பே இல்லை எனலாம்; 100 கிராம் கிவியில் 0% கொலஸ்ட்ரால் உள்ளது. கிவியில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உடலின் LDL எனும் கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகின்றன; மேலும் ஆரோக்கியமற்ற கொழுப்புக்களின் ஆக்சிடேட்டிவ் நிகழ்வையும் தடுக்க உதவுகின்றன
நன்மை 16: இரத்தம் உறைதல்
இது குறித்து ஒரு குறிப்பிட்ட அளவே ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன; ஒரு ஆய்வில், கிவி பழத்திலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் ஆன்டி பிளேட்லெட் உறுப்புகளை கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது (27). இது பக்கவாதம், மாரடைப்பு, இதர சரும பிரச்சனைகளை தடுக்க உதவலாம்.
நன்மை 17: முகப்பரு
கிவி பழம் எல்லா வித சருமம் கொண்டவர்களுக்கும் ஏற்றது ஆகும்; சருமத்தில் ஏற்படும் கறைகள், பருக்கள், தழும்புகள் போன்றவற்றை போக்க கிவி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மற்றும் ஆன்டி மைக்ரோபையல் பண்புகள் பெரிதும் உதவுகின்றன. மேலும் இவை சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கி, பொலிவான இளமையான சருமம் உருவாக உதவுகின்றன.
நன்மை 18: தோலை உறுதியாக வைக்கும்
கிவி பழம் சருமத்திற்கு வழங்கும் நன்மைகள் குறித்த ஆராய்ச்சி இன்னமும் நடந்து கொண்டே இருக்கிறது; கிவியில் உள்ள வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்திக்கு மிகவும் அவசியமான ஒன்று ஆகும். இது திசுக்களை இணைத்து, சருமத்தை பலமாக வைக்க உதவுகிறது (28).
கிவிகள் மிக அருமையான பழங்கள் ஆகும்; இவை தனித்த தோற்றம் கொண்டவை. இவற்றில் உள்ள அத்தியாவசியமான ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உடலுக்கு, சருமத்திற்கு அதிக நன்மைகளை அளிக்கின்றன.
நன்மை 19: தலைமுடி ஆரோக்கியம்
நம்மில் ஆண் மற்றும் பெண் என வித்தியாசம் இன்றி இருபாலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை தலைமுடி பிரச்சனை தான்; முடி உதிர்வு, பொடுகு, உச்சந்தலையில் ஈரப்பதம் இல்லாமை போன்றவை நமக்கு பொதுவாக ஏற்படும் பிரச்சனைகள் ஆகும்.
கிவி பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி, ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் போன்றவை கூந்தலில் ஏற்படும் இப்பிரச்சனைகளை போக்கி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
கிவி பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு
கிவி பழங்களை உண்பது என்பது மிக எளிதான காரியமே! பழத்தின் தோலை அறுத்து, உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மட்டும் உண்பது என்பதை எல்லோராலும் செய்ய இயலும். ஆனால், கிவி பழம் வழங்கும் ஊட்டசத்துக்களின் மதிப்பை அறிந்து, அவற்றின் அருமையை உணர்ந்து அவற்றை உண்பது என்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும். நீங்களும் அந்த ஒருசிலரில் ஒருவராக, கீழே கொடுக்கப்பட்டுள்ள கிவி பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பை படித்து அறியுங்கள்:
கலோரி தகவல் | ||
---|---|---|
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு | தினசரி மதிப்பு (%) | |
கலோரிகள் | 108 (452 KJ) | 5% |
கார்போஹைட்ரேட்டில் இருந்து | 93.5 (391 KJ) | |
கொழுப்பில் இருந்து | 7.7 (32.2 KJ) | |
புரதத்தில் இருந்து | 6.8 (28.5 KJ) | |
ஆல்கஹாலில் இருந்து | 0.0 (0.0 KJ) | |
கார்போஹைட்ரேட்டுகள் | ||
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு | தினசரி மதிப்பு (%) | |
மொத்த கார்போஹைட்ரேட் | 25.9 g | 9% |
நார்ச்சத்து | 5.3 g | 21% |
ஸ்டார்ச் | 0.0 g | |
சர்க்கரைகள் | 15.9 g | |
புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் | ||
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு | தினசரி மதிப்பு (%) | |
புரதம் | 2.0 g | 4% |
வைட்டமின்கள் | ||
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு | தினசரி மதிப்பு (%) | |
வைட்டமின் ஏ | 154 IU | 3% |
வைட்டமின் சி | 164 mg | 273% |
வைட்டமின் டி | – | – |
வைட்டமின் ஈ (ஆல்ஃபா டோக்கோஃபெரல்) | 2.6 mg | 13% |
வைட்டமின் கே | 71.3 mcg | 89% |
தையமின் | 0.0 mg | 3% |
ரிபோஃபிளோவின் | 0.0 mg | 3% |
நியாசின் | 0.6 mg | 3% |
வைட்டமின் பி6 | 0.1 mg | 6% |
ஃபோலேட்/ ஃபோலிக் அமிலம் | 44.2 mcg | 11% |
வைட்டமின் பி12 | 0.0 mcg | 0% |
பேண்டோதெனிக் அமிலம் | 0.3 mg | 3% |
கோலின் | 13.8 mg | |
0.9 mg | – | – |
தாதுக்கள்/ கனிமச்சத்துக்கள் | ||
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு | தினசரி மதிப்பு (%) | |
கால்சியம் | 60.2 mg | 6% |
இரும்பு | 0.5 mg | 3% |
மக்னீசியம் | 30.1 mg | 8% |
பாஸ்பரஸ் | 60.2 mg | 6% |
பொட்டாசியம் | 552 mg | 16% |
சோடியம் | 5.3 mg | 0% |
ஜிங்க்/ துத்தநாகம் | 0.2 mg | 2% |
காப்பர்/ தாமிரம் | 0.2 mg | 12% |
மாங்கனீசு | 0.2 mg | 9% |
செலினியம் | 0.4 mcg | 1% |
ஃபுளூரைடு | – |
கிவி பழத்தை பயன்படுத்துவது எப்படி?
கிவி பழங்களை பற்றி பற்பல தகவல்களை அறிந்து இருந்தால் மட்டும் போதாது, அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் அறிந்திருத்தல் அவசியம். இப்பொழுது கிவி பழத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்:
- கிவி பழங்களை குளிர்சாதன பெட்டியின் உறைய வைப்பானில் வைத்து, அறுத்து உண்ணலாம்.
- கிவி பழங்களை கனசதுரங்களாக அறுத்து, அவற்றின் மீது தேனினை தூவி, ஒரு அருமையான நொறுக்குத்தீனியாக இப்பழங்களை உட்கொள்ளலாம்.
- கிவி பழங்களுடன் ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை சேர்த்து, ஸ்மூத்தி போன்ற பழச்சாறு தயாரித்து பருகலாம்.
கிவி பழத்தை எப்படி தேர்ந்தெடுப்பது மற்றும் அதை எப்படி சேமித்து வைப்பது?
கிவி பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் மற்றும் வாங்கிய பழங்களை எப்படி சேமித்து வைக்க வேண்டும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்:
கிவி பழத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?
- கிவி பழத்தின் தோலை பார்த்து வாங்க வேண்டும்; பழத்தோல் அடர்ந்த பிரௌன் அல்லது தங்க நிறத்தில் இருந்தால் பழத்தை வாங்கலாம் மற்றும் பழத்தோல் பச்சை கலந்த நிறத்தில் இருந்தால் அதை வாங்கக்கூடாது.
- கிவி பழம் நன்கு உருண்டையாக, கீறல்கள் ஏதும் இல்லாமல், வெட்டுக்கள் இல்லாமல் சாறு நிறைந்ததாக இருக்க வேண்டும்.
- பழத்தில் தடிப்புகள் அல்லது வெட்டுக்கள் உள்ள பகுதியை நீக்கிவிட்டு, மீதி பகுதியை உண்ணலாம்; பழம் நன்கு பழுத்துள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
- கிவி பழத்தை நுகர்ந்து பார்த்து, பழுத்த மணம் வருகிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
கிவி பழங்களை சேமித்து வைப்பது எப்படி?
- பழுத்த பழங்களை வாங்கினால், அவற்றை குறுகிய காலத்திற்குள் உண்டு விடுவது நல்லது; ஒருவேளை காயான கிவி பழங்களை வாங்கி விட்டால், அவற்றை காற்றோட்டம் நிறைந்த இடத்தில் அறை வெப்பநிலையில் வைத்து விட்டால் அவை மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் பழுத்து விடும்.
- காயாக இருந்து பழுத்த பழங்களை தனியாக காகித பையில் போட்டு சேமித்து வைக்கவும்; கிவி பழங்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த, அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து சேமிக்கவும். இப்பழங்களை ஆறு வாரங்கள் வரை சேமித்து வைக்க முடியும்.
- கிவி பழங்கள் கடினமான அமைப்பு கொண்டதால் அவற்றின் நீர்ச்சத்தை இழக்க வைப்பது சற்று கடினமே! கிவி பழங்களில் இருந்து நீர்ச்சத்தை நீக்கினால், அவற்றை இன்னும் அதிக காலத்திற்கு பயன்படுத்தலாம்; ஆனால் அவற்றின் சுவை மற்றும் தன்மையும் கூட இதனால் மாறுபடலாம்.
- நன்கு கழுவிய கிவி பழங்களை குளிர்சாதன பெட்டியின் உறைய வைப்பானில் வைத்து, இன்னும் அதிக காலத்திற்கு சேமிக்கலாம்.
கிவி பழத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள்
பல மக்கள் கிவி பழங்களை உண்பது ஆரோக்கியமானது என்று கருதுகின்றனர்; எல்லா பொருட்களுக்கும் நன்மை மற்றும் தீமை என இரு வடிவம் உண்டு. லேடெக்ஸ் (இரப்பர் மரம் சார்ந்த) ஒவ்வாமை உள்ளவர்கள், சற்று கவனமாக இருக்க வேண்டும் மற்றும் முறையான மருத்துவ ஆலோசனைக்கு பின்பே கிவி பழங்களை உட்கொள்ள வேண்டும்.
கிவி பழங்களில் காணப்படும் புரதங்கள், ஒரு சிலரது உடலில் குறிப்பாக லேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்; இதன் விளைவாக சருமத்தில் தடிப்புகள், குமட்டல், அரிப்பு, தலை சுற்றல், வயிற்றுப்போக்கு, வீங்கிய உதடுகள் மற்றும் நாக்கு, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் (27).
ஒவ்வாமை இல்லாதவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை; ஆனாலும், ஒரு முறை மருத்துவ ஆலோசனை கொண்ட பின் கிவி பழங்களை உட்கொள்வது நல்லது.
இருபதாம் நூற்றாண்டில் நம் வாழ்க்கைக்குள் நுழைந்து, ஆரோக்கியத்தின் அத்தியாவசியம் ஆகிவிட்ட கிவி பழங்களை எவ்வித ஒவ்வாமை குறைபாடும் இல்லை எனில், தினந்தோறும் கூட உட்கொள்ளலாம்; இப்பழங்கள் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்றவற்றை கொண்டவை. வித்தியாசமான புளிப்பு கலந்த இனிப்பு சுவை கொண்ட இப்பழங்களை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
நீங்கள் கிவி பழங்களை சாப்பிட்டது உண்டா? அதன் சுவை உங்களுக்கு பிடித்ததா? உங்களது அனுபவம் குறித்து, கமெண்ட் பாக்ஸ் மூலமாக எங்களுடன் பகிருங்கள்.
Community Experiences
Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.