தலைமுடி/ கூந்தல் வளர்ச்சி குறிப்புகள் – Hair Growth Tips in Tamil

Written by
Last Updated on

மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும், அடர்த்தியான, நீளமான, பளபளப்பான தலைமுடியை பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும்; குமரி பெண்கள் முதல் வயது முதிர்ந்த கிழவிகள் வரை எல்லோருக்கும் தலை முடி மீது ஒரு தீராத மோகம் இருக்கும். தலை முடி தான் ஒருவரது முக அமைப்பை, அழகை, தோற்றத்தை தீர்மானிக்கிறது; பெரும்பாலான பெண்கள் பளபளக்கும், ஒளிரும், நீளமான, பலமான கூந்தலை பெற விரும்புகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக, முடி உதிர்வு, முடி இழப்பு மற்றும் பலவீனமான முடி வளர்ச்சி போன்றவை மக்கள், தங்களது அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரண பிரச்சனைகளாக உள்ளன. மக்கள் சந்திக்கும் இப்பிரச்சனைகளுக்கு, இன்றைய கால நவீன வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கலப்படம் செய்யப்பட்ட முடி பராமரிப்பு பொருட்கள் போன்றவை முக்கிய காரணங்களாக திகழ்கின்றன. இந்நிலையில், இப்படிப்பட்ட சூழலில் உங்களது தலைமுடியை பாதுகாக்க, முடி தொடர்பான பிரச்சனைகளை போக்க, ஆரோக்கியமான கூந்தலை பெற இப்பதிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்; பதிப்பை படித்து பயனடையுங்கள்.

முடி வளர்ச்சி தடைபட்டு நிற்பதற்கான பொதுவான காரணிகள் – Common Causes/Factors Your Stops Growing in Tamil

ஒவ்வொருவரின் முடி வளர்ச்சியும், பல விதமான காரணிகளை சார்ந்து இருக்கும் மற்றும் தலைமுடிக்கு பயன்படுத்தும் பொருட்கள், உட்கொள்ளும் உணவுகள் போன்றவை உடலில் ஏற்படுத்தும் விளைவை பொருத்தும் அமையும். முடி வளர்ச்சி தடைபட்டு, சீர்கெட்டு நிற்பதற்கு முக்கியமான, பொதுவான காரணிகளாவன:

  • வயது முதிர்தல்
  • ஆரோக்கியமற்ற டயட் அதாவது உணவு முறை – இது வைட்டமின், தாதுக்கள், புரத குறைபாட்டினை உடலில் ஏற்படுத்தலாம்
  • பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு
  • ஹார்மோன் சமநிலையற்ற தன்மை
  • முடியின் மீது ஏற்படுத்தப்படும் அழுத்தம் அதாவது, முடியின் மீது அதிகப்படியான கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துதல், தலைமுடியில் அதிகம்
  • ஸ்டைல் செய்தல் போன்றவை கூந்தலில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம்
  • சூழ்நிலை காரணிகளான பருவ கால மாற்றங்கள், வளிமண்டல மாசுக்கள், சூரிய ஒளி போன்றவை தலைமுடியை பாதிக்கலாம்
  • மனஅழுத்தம், அதிர்ச்சி, மற்றும் கவலை போன்ற உளவியல் பிரச்சனைகள்
  • மனஅழுத்தம் மற்றும் இரத்த அழுத்த குறைபாட்டிற்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள்
  • திடீர் எடை குறைவு
  • PCOS – பிசிஒஎஸ்

முடி வளர்ச்சியை பாதிக்க பல காரணிகள் உள்ளன! ஆனால், அதைகாட்டிலும் அதிக வழிகள் – முடி வளர்ச்சியை பாதுகாக்க, முடி தொடர்பான பிரச்சனைகளை போக்க உதவுகின்றன. எனவே, தலைமுடியை பராமரிக்க சரியான, இயற்கையான வழிமுறைகள், உணவு முறைகள் மற்றும் இயற்கை அழகு பொருட்களை பயன்படுத்துதல் அவசியமாகிறது. கூடுதல் நன்மையாக, இயற்கையில் கிடைக்கும் – வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொண்டு, அதிகம் செலவழிக்காமல், முடியை நன்கு வளரச் செய்யலாம்; இந்த வீட்டு வைத்திய முறை, கும்பிட சென்ற தெய்வம் குறுக்கே வந்தது போன்ற கதைக்கு ஒப்பானது.!

முடி வளர்ச்சி தொடர்பாக சிறந்த நன்மைகளை அளிக்க உதவும் பல இயற்கை வழிகள் உள்ளன; இந்த இயற்கையான வழிமுறைகள் ஒவ்வொன்றும் கீழே தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

முடி வளர்ச்சிக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள் – Home Remedies for Hair Growth in Tamil

முடி வளர்ச்சியை தூண்டி, கூந்தல் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க உதவும் இயற்கையான, வீட்டு வைத்தியங்களை பற்றி இப்பொழுது காணலாம்.

வைத்தியம் 1: வெங்காய சாறு

தேவையானவை:

  • 2 சிவப்பு வெங்காயங்கள்
  • பருத்தி பந்து

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. வெங்காயங்களை உரித்து, அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. வெங்காய துண்டுகளை அரைத்து, சாறெடுத்து கொள்ளுங்கள்
  3. இந்த வெங்காய சாறை உச்சந்தலையில், பருத்தி பஞ்சு கொண்டு தடவி, 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  4. கடைசியாக, தலையை இலேசாக ஷாம்பு போட்டு கழுவி விடவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

வெங்காய சாறை, வாரம் ஒரு முறை உச்சந்தலைக்கு தடவி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்

எப்படி வேலை செய்யும்:

முடியின் மறு வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் திசுக்களில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க, வெங்காய சாறு – அதிலிருக்கும் சல்ஃபர் உதவுகிறது (1). தலைமுடி வளர்ச்சிக்கு பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய பொருளாக இச்சாறு திகழ்கிறது.

வைத்தியம் 2: விளக்கெண்ணெய்/ ஆமணக்கு எண்ணெய்

தேவையானவை:

  • ஆமணக்கு எண்ணெய்/ விளக்கெண்ணெய்
  • சூடான, ஈரப்பதம் கொண்ட துண்டு

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. ஆமணக்கு எண்ணெயை சூடுபடுத்தி கொள்ளவும்
  2. சூடுபடுத்திய எண்ணெயை உச்சந்தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும்
  3. சூடான, ஈரப்பதம் கொண்ட துண்டு கொண்டு தலையை கட்டிக்கொண்டு, 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்

விளக்கெண்ணெய் மிகவும் பிசுபிசுப்புத் தன்மையுடன் இருந்தால், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தடவிக் கொள்ளலாம்; இவ்வாறு எலுமிச்சையை சேர்ப்பதனால், தலையில் பொடுகு தொல்லை ஏற்படாமல் தடுக்கலாம்.

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றங்களை காணலாம்.

எப்படி வேலை செய்யும்:

ஆமணக்கு எண்ணெய் அருமையான நன்மைகளான, விரைவான & பலமான முடி வளர்ச்சி மற்றும் சேதமற்ற கூந்தலை அளிக்கக்கூடியது; இது முடி வளர உதவும் ஒரு இயற்கையான சிகிச்சை முறை ஆகும். விளக்கெண்ணெய் முடி வளர உதவுவதுடன், வழுக்கை ஏற்பட்டுள்ள பகுதிகளை குறைத்து, போக்க உதவுகிறது; மேலும் இது கேசத்திற்கு ஈரப்பதம் அளித்து, உடைந்த – பிளவுபட்ட கூந்தல் முனைகள் ஏற்படுவதை தடுக்க உதவும் (2).

வைத்தியம் 3: பயோட்டின்

Biotin
Image: Shutterstock

தேவையானவை:

  • 2-3 பயோட்டின் மாத்திரைகள்
  • ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. பயோட்டின் மாத்திரைகளை நொறுக்கி, எண்ணெயுடன் கலந்து கொள்ளுங்கள்
  2. இந்த கலவையை கொண்டு உச்சந்தலைக்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் தலையை அப்படியே விட்டு விடவும்
  3. காலையில், வழக்கம் போல் தலைக்கு குளித்து கொள்ளவும்

இது தவிர, இந்த சத்துக்கள் கொண்ட சப்ளிமெண்ட்டுகளை, உங்கள் வயதிற்கு ஏற்ப – மருத்துவருடன் கலந்துரையாடிய பின் எடுத்துக் கொள்ளவும்.

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

பயோட்டின் கூந்தல் பேக்கை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.

எப்படி வேலை செய்யும்:

பயோட்டின் என்பது நீரில் கரையக்கூடிய, பச்சை -இலை காய்கறிகளில் காணப்படக்கூடிய வைட்டமின் – பி சத்து ஆகும்; இச்சத்து குறைபாட்டினால் முடி இழப்பு மற்றும் கூந்தல் உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். பயோட்டின் சத்தினை சப்ளிமெண்ட்டுகளாக உட்கொள்வது, முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தி, முடியை முழுவதுமாக, ஆரோக்கியமாக வளரச் செய்ய உதவும் (3).

வைத்தியம் 4: முட்டை

தேவையானவை:

  • 1 முட்டை
  • 1 தேக்கரண்டி தேன்
  • 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. ஒரு பௌலில் முட்டையை எடுத்துக் கொண்டு, அதில் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேனை சேருங்கள்
  2. அனைத்தையும் கலந்து ஒரு மென்மையான பேஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள்
  3. இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  4. பின்னர் குளிந்த நீர் மற்றும் ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

இந்த செய்முறையை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் நீளமான மற்றும் மிளிரும் கூந்தலை பெறலாம்; நீளமான தலைமுடி குறிப்புகளுள் இது மிகவும் முக்கியமானது ஆகும்.

எப்படி வேலை செய்யும்:

முட்டையில் புரதம், சல்ஃபர், ஜிங்க், இரும்பு, செலினியம், பாஸ்பரஸ்,அயோடின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன; முட்டையில் இருக்கும் அதிகப்படியான புரதச்சத்து, முடி வளர்ச்சியை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. முட்டையில் அமைந்திருக்கும் இயற்கை கொழுப்புகள், முடியின் இழைகள் மற்றும் வேர்கால்களுக்கு ஊட்டச்சத்து & ஈரப்பதத்தை வழங்கி முடி வளர்ச்சியை அதிகரிக்கின்றன. வைட்டமின்கள் ஏ, இ, டி போன்றவை முடி உதிர்வை குறைத்து, முடியின் தன்மையை மேம்படுத்தி, கவர்ச்சிகரமான மிளிரும் கூந்தலை பெற உதவுகின்றன (4).

வைத்தியம் 5: கற்றாழை

Cactus
Image: Shutterstock

தேவையானவை:

  • ஒரு கற்றாழை இலை

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. கற்றாழை இலையை வெட்டி, அதனுள் இருக்கும் ஜெல்லை வெளியில் எடுத்துக்கொள்ளுங்கள்
  2. வெளியே எடுத்த ஜெல்லை உச்சந்தலை மற்றும் கேசத்தில் தடவுங்கள்
  3. தலையை 1 மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்; பின்னர் இலேசாக ஷாம்பு போட்டு கழுவி விடவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்து வரவும்; முடி வளர்ச்சி குறிப்புகளில் இது மிக எளிமையானது ஆகும்.

எப்படி வேலை செய்யும்:

கற்றாழையில் இருக்கும் ப்ரோடீயோலிடிக் என்சைம்கள், உச்சந்தலையில் காணப்படும் இறந்த செல்களை நீக்க மற்றும் முடியின் வேர்க்கால்களை தூண்டி விட பயன்படுகின்றன. இக்கற்றாழை பேக்கில் கூந்தல் வளர்ச்சி, கேசத்தின் தன்மைக்கு உதவும் மற்றும் முடி, உச்சந்தலையை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன (5, 6).

வைத்தியம் 6: கறிவேப்பிலை

தேவையானவை:

  • ஒரு கை நிறைய, புதிய கறிவேப்பிலைகள்
  • ½ கப் தேங்காய் எண்ணெய்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலைகளை சேர்த்து, அது நன்கு கருகி, கருப்பான படிமங்களாக மாறும் வரை சூடுபடுத்தவும்; இதை செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
  2. கருப்பு படிமங்கள் ஏற்பட்டவுடன், எண்ணெயை சூடுபடுத்துவதை நிறுத்தி விடவும்
  3. சூடான எண்ணெயை ஆற வைத்து, வடிகட்டிக் கொள்ளவும்
  4. இந்த எண்ணெயை தலையில் தடவி, ஓரிரு நிமிடங்கள் மசாஜ் செய்யவும்
  5. தலையை ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்து, பின் வழக்கம் போல் தலையை கழுவவும்

இவ்வாறு தயாரித்த எண்ணெயை, ஒரு காற்று புகாத புட்டியில் சேமித்து வைத்து கொள்ளவும்.

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

வாரம் இருமுறை இதை செய்து வந்தால், நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை பார்க்கலாம்.

எப்படி வேலை செய்யும்:

முடி வளர்ச்சியை மேம்படுத்தி, இள நரை ஏற்படுவதை தடுக்க கறிவேப்பிலைகள் உதவும்; இதில் பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன (7).

வைத்தியம் 7: வைட்டமின் இ

Vitamin e
Image: Shutterstock

பயோட்டினை போன்று, வைட்டமின் இ கூட கூந்தல் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது; உச்சந்தலையில் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகளை வைட்டமின் இ கொண்டுள்ளது. ட்ராபிகல் லைஃப் அறிவியல் ஆராய்ச்சி வெளியிட்ட இதழில், வைட்டமின் இ தலையில் இரத்த ஓட்டத்தினை தூண்டி, கூந்தல் வளர்ச்சிக்கு அதிகம் உதவும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது (8). வைட்டமின் இ என்பது உணவில் இடம்பெற வேண்டிய முக்கிய வைட்டமின் ஆகும்; இது தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய், டோஃபு, மேலும் பல உணவுகளில் அதிகம் காணப்படுகிறது.

தேவையானவை:

  • 7-8 வைட்டமின் இ மாத்திரைகள்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. வைட்டமின் இ மாத்திரைகளை உடைத்து, அதிலிருக்கும் எண்ணெயை ஒரு சிறு பௌலில் வைத்துக் கொள்ளுங்கள்
  2. இந்த எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்
  3. அதை இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும்
  4. பின் அடுத்த நாள், இலேசான ஷாம்பு கொண்டு கழுவி விட்டால், மிருதுவான மற்றும் மென்மையான கேசத்தை பெறலாம்.

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

இந்த எண்ணெயை வாரம் இருமுறை தலைக்கு பயன்படுத்தலாம்.

எப்படி வேலை செய்யும்:

பழங்காலத்தில் இருந்தே வைட்டமின் இ, கூந்தல் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது; வைட்டமின் இ எண்ணெயில், தேவையற்ற – இறந்த செல்களை கொல்லும் தன்மை கொண்ட ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்து, உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தச் செய்கிறது. அத்தியாவசிய எண்ணெய்களை கொண்டு, தொடர்ந்து தலைக்கு மசாஜ் செய்து வருதல், முடி உதிர்வு மற்றும் பிளவுபட்ட கூந்தல் முனைகளை சரி செய்ய உதவும்; இது கூந்தலை மிருதுவக்க, மென்மையாக திகழ செய்யும் (9).

வைத்தியம் 8: தேங்காய் எண்ணெய்

தேவையானவை:

  • விர்ஜின் தேங்காய் எண்ணெய்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும்
  2. தலையை இரவு முழுவதும் அப்படியே வைத்து, காலையில் தலைக்கு குளிக்கவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் இந்த செய்முறையை செய்யலாம்; ஆனால், வாரத்திற்கு இருமுறை செய்வது நல்லது.

எப்படி வேலை செய்யும்:

இந்த வீட்டு வைத்திய முறை, ஒரு சிறந்த இயற்கை கண்டிஷனர் ஆகும்; தேங்காய் எண்ணெயில் அதிகளவு நிரம்பியுள்ள பொட்டாசியம், உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்க உதவுவதுடன், புதிய முடி வளர்ச்சியை அதிகரித்து, கூந்தலில் ஏற்படும் சேதங்களை சரி செய்ய உதவுகிறது. மேலும் இது பொடுகு, முடி உடைதல், முடி இழப்பு போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது; தேங்காய் எண்ணெய் முடியை முன்கூட்டியே கண்டிஷனிங் செய்ய உதவி, முடியில் சேதங்கள் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது (10, 11).

வைத்தியம் 9: பூண்டு

Garlic
Image: Shutterstock

தேவையானவை:

  • 8 பூண்டு பல்
  • ½ கப் கேரியர் எண்ணெய் (ஆலிவ், தேங்காய், ஆமணக்கு எண்ணெய், மேலும் பல)
  • 1 நடுத்தர அளவு வெங்காயம் (தேவையெனில்)

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. பூண்டு மற்றும் வெங்காயத்தை நசுக்கி, அவற்றை பேஸ்ட் போன்று மாற்றிக்கொள்ளவும்
  2. பின் ஒரு பானில் கேரியர் எண்ணெயை சூடு செய்து, அச்சூடான எண்ணெயில் இந்த பேஸ்டை சேர்க்கவும்
  3. பேஸ்ட் பொன்னிறம் ஆகும் வரை, கலவையை சூடுபடுத்தவும்
  4. இந்த எண்ணயை 2 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு, தலையில் மசாஜ் செய்யவும்
  5. 15 நிமிடங்கள் மசாஜ் செய்த பின், தலைமுடியை மூடியவாறு 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  6. ஒரு இலேசான ஷாம்பு கொண்டு தலையை கழுவவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

இந்த செய்முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

எப்படி வேலை செய்யும்:

பூண்டு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உச்சந்தலையில் இருக்கும் முடியின் வேர்க்கால்களை தூண்டிவிட உதவுகிறது.

வைத்தியம் 10: மருதாணி

தேவையானவை:

  • 1 கப் மருதாணி பொடி
  • ½ கப் யோகர்ட்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. மருதாணி பொடியை யோகார்டில் கலந்து கொள்ளவும்
  2. இக்கலவையை தலை முழுக்க, முடியின் வேர்களில் படுமாறு தடவிக்கொள்ளவும்
  3. இந்த பேக் முழுமையாக வறண்டு போகும் வரை காத்திருக்கவும்
  4. பின் ஒரு இலேசான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

மாதம் ஒருமுறை இந்த செய்முறையை செய்யலாம்.

எப்படி வேலை செய்யும்:

மருதாணி ஒரு இயற்கை கண்டிஷனர் போல் வேலை செய்து, வறண்ட, சோர்வான கூந்தலை மிளிரும், மிருதுவானதாக மாற்றும் தன்மை கொண்டது; முடிக்கு நிறத்தையும் வழங்கக்கூடியது. இது முடியின் வேர்களை பலப்படுத்தி, கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது (12).

வைத்தியம் 11: இஞ்சி

தேவையானவை:

  • இஞ்சியின் வேர்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. இஞ்சியை உரித்து, துருவி கொள்ளவும்
  2. இத்துருவலை உச்சந்தலையில் முடி வளர்ச்சி குன்றிய இடங்களில் தேய்த்து, 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்
  3. பின் தலையை வழக்கம் போல், கழுவி விடவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

இச்செய்முறையை, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.

எப்படி வேலை செய்யும்:

இஞ்சி தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது; இதன் பலனாக, உச்சந்தலையின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, கேச வளர்ச்சி அதிகரிக்கிறது. இது முடி மற்றும் முடியின் வேர்க்கால்களை பாதுகாக்கும் எண்ணெய், என்சைம்களை கொண்டது (13).

வைத்தியம் 12: கடுகு எண்ணெய்

mustard oil
Image: Shutterstock

தேவையானவை:

  • கடுகு எண்ணெய்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. கடுகு எண்ணெயை சிறு சிறு பாகங்களாக பிரித்து, சூடு செய்யவும்
  2. சூடு செய்த எண்ணெய், ஆறிய பின் அதனை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்
  3. முடியை ஓரிரு மணி நேரங்கள் ஊற வைக்கவும்; வறண்ட கூந்தல் கொண்டவர்கள், இரவு முழுவதும் தலைமுடியை அப்படியே வைத்துக் கொள்ளவும்
  4. பின் தலைக்கு குளித்து, தலைமுடியை நன்கு கழுவி விடவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

இந்த முறையை வாரம், இரு முறை பயன்படுத்தலாம்; இது முடி வளர்ச்சி குறிப்புகளில் அதிக பயன் தரும் ஓர் முறையாகும்.

எப்படி வேலை செய்யும்:

கடுகு எண்ணெயில் இருக்கும் செலினியம் போன்ற ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் முடி வளர்ச்சியை மேம்படுத்த, கூந்தல் பிரச்சனைகளை போக்க உதவுகின்றன; இது ஒரு இயற்கை கண்டிஷனராகவும் செயல்படுகிறது. மேலும் இது நீளமான முடி வளர்ச்சி குறிப்புகளுள் மிக முக்கியமானதாக திகழ்கிறது.

வைத்தியம் 13: ஆப்பிள் சிடர் வினிகர்

தேவையானவை:

  • 75 மில்லி லிட்டர் ஆப்பிள் சிடர் வினிகர்
  • 1 லிட்டர் நீர்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. முடியை நன்கு ஷாம்பு போட்டு அலசி கொள்ளவும்
  2. ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீருடன் நன்கு கலந்து கொள்ளவும்
  3. தலைக்கு குளித்த பின், கடைசியாக இந்த ஆப்பிள் சிடர் கலவையில் ஒரு கப் அளவு எடுத்து, தலையை கழுவவும்.

இந்த கலவையை, மேலும் பயன்படுத்த ஒரு கொள்கலனில் இதை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் பொழுதும் இந்த செய்முறையை பயன்படுத்தலாம்.

எப்படி வேலை செய்யும்:

ஆப்பிள் சிடர் வினிகர், உச்சந்தலையை சுத்தம் செய்ய, முடியின் pH சமநிலையை பராமரிக்க மற்றும் கூந்தல் வளர்ச்சியை முடுக்கி விட உதவுகிறது (14).

வைத்தியம் 14: கொய்யா இலை

தேவையானவை:

  • ஒரு கை நிறைய கொய்யா இலைகள்
  • 1 லிட்டர் தண்ணீர்
  • ஷாம்பூ
  • மிதமான சூடு கொண்ட நீர்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. கொய்யா இலையை நீரில் சேர்த்து, 20 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து, நீரை வடிகட்டி கொள்ளவும்
  2. முடியை ஷாம்பு கொண்டு நன்கு கழுவிய பின், இயற்கையான முறையில் முடியை உலர்த்தவும்
  3. முடி உலர்ந்த பின், இந்த கொய்யா இலை நீரை உச்சந்தலை மற்றும் முடியில் தடவவும்
  4. இப்பொழுது தலையில் நன்கு மசாஜ் செய்து, 2-3 மணி நேரங்களுக்கு தலையை அப்படியே வைத்திருக்கவும்
  5. பின் முடியை மிதமான சூடு கொண்ட நீரால் கழுவி விடவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

ஒவ்வொரு வாரமும், ஒரு முறை இம்முறையை மேற்கொள்ளலாம்.

எப்படி வேலை செய்யும்:

கொய்யா இலைகளில் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன; இவை முடியின் வேர்க்கால்களில் உருவாகியிருக்கும் சேதங்களை சரி செய்து, கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். கொய்யா இலைகள் ஆன்டி மைக்ரோபையல் பண்பு கொண்டவை; இது கேச வளர்ச்சியை தடுக்கும், உச்சந்தலையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுகளை குணப்படுத்த உதவும் (15).

வைத்தியம் 15: நெல்லி/ நெல்லிக்காய்

Gooseberry
Image: Shutterstock

தேவையானவை:

  • 2 தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிச்சாறு
  • 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிச்சாறினை, எலுமிச்சை சாறுடன் கலந்து கொள்ளவும்
  2. இக்கலவையை உச்சந்தலையில் தடவி, சிறிது நேரத்திற்கு அதை உலர வைக்கவும்
  3. பின் வெந்நீர் கொண்டு தலைமுடியை கழுவி விடவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

மாதம் ஒரு முறை, நெல்லிக்காய் வைத்திய முறையை கூந்தலுக்கு செய்து கொள்ளலாம்.

எப்படி வேலை செய்யும்:

நெல்லிக்காயில் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை நிரம்பியுள்ளன; இது ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சி மற்றும் முடியின் நிறம் போன்றவற்றை மேம்படுத்த உதவுகிறது (16, 17).

வைத்தியம் 16: பாதாம் எண்ணெய்

தேவையானவை:

  • பாதாம் எண்ணெய்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. பாதாம் எண்ணெயை கொண்டு உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும்
  2. இதை இரவு முழுவதும் அப்படியே விட்டு, காலையில் முடியை அலசவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

வாரத்திற்கு இரு முறை, முடிக்கு பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம்.

எப்படி வேலை செய்யும்:

பாதாம் எண்ணெய், தலைமுடி மற்றும் உச்சந்தலையில் ஈரப்பதத்தின் சமநிலையை மீட்க்கொணர உதவுகிறது; இது தலைமுடியின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில், உச்சந்தலையில் ஏற்படக்கூடிய, வறட்சி, அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. இந்த எண்ணெய் முடியை பலப்படுத்தி, கவர்ச்சிகரமான ஒளிரும் கூந்தலை பெற உதவுகிறது (18).

வைத்தியம் 17: வெந்தயம்

தேவையானவை:

  • ½ கப் ஊறவைத்த வெந்தய விதைகள்
  • 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
  • 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  • 6-7 துளிகள் ரோஸ்மேரி எண்ணெய்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. கொடுக்கப்பட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து, அரைத்து ஒரு பேஸ்ட் தயாரித்து கொள்ளவும்
  2. இப்பேஸ்ட்டை தலைக்கு தடவி மசாஜ் செய்யவும்
  3. 30-40 நிமிடங்கள் ஊற வைத்த பின், தலையை அலசி விடவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

வாரம், ஒருமுறை இச்செய்முறையை செய்து வரலாம்.

எப்படி வேலை செய்யும்:

வெந்தயத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றை கொல்லும் தன்மை இருப்பதோடு, இது கூந்தலை பலப்படுத்தவும் உதவுகிறது.

வைத்தியம் 18: அரிசி நீர்

தேவையானவை:

  • ½ கப் ஏதேனும் ஒருவகை அரிசி
  • 2 கப் நீர்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. அரிசியை 15 நிமிடங்களுக்கு நீரில் ஊற வைக்கவும்
  2. பின் நீரை வடிகட்டி, அதை தலை மற்றும் முடி முழுக்க தடவவும்
  3. உச்சந்தலையை சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்து, தலையை இலேசான ஷாம்பு போட்டு அலசி விடவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

இம்முறையை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தலாம்.

எப்படி வேலை செய்யும்:

இந்த நீரில் சருமம் மற்றும் கேசம் ஆகியவற்றிற்கு பல நன்மைகளை அளிக்கும் முக்கிய இரகசிய விஷயங்கள் நிறைந்துள்ளன; இதில் தலை மற்றும் கூந்தலுக்கு ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய வைட்டமின்கள் கே, இ, பி6 மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. இது கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தவும், முடியை அடர்த்தியாக்கவும் உதவும் (19).

வைத்தியம் 19: எலுமிச்சை

Lemon
Image: Shutterstock

தேவையானவை:

  • ½ எலுமிச்சை

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. எலுமிச்சையை பிழிந்து சாறெடுத்து கொள்ளவும்.
  2. இச்சாறினை கொண்டு உச்சந்தலை மற்றும் முடிக்கு 5 நிமிட காலத்திற்கு மசாஜ் செய்யவும்; மேலும் இதை 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடவும்
  3. பிறகு ஒரு இலேசான, சல்பரேட் இல்லாத ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி விடவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

இச்செய்முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

எப்படி வேலை செய்யும்:

எண்ணெய்ப்பசை கொண்ட சருமத்தினருக்கு இந்த முறை பெரிதும் உதவும்; இது உச்சந்தலையில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, கேச வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

வைத்தியம் 20: வாழைப்பழம்

தேவையானவை:

  • 1 பழுத்த வாழைப்பழம்
  • 2 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. தேவையான பொருட்கள் இரண்டையும் நன்கு அரைத்து, கலந்து கொள்ளவும்
  2. இக்கலவையை தலை மற்றும் முடியின் எல்லா பக்கங்களிலும் தடவி, மசாஜ் செய்யவும்
  3. எண்ணெய் தலையில் இருந்து வழிந்து விடாமல் இருக்குமாறு முடியை தளர்வான முறையில் கொண்டை போட்டுக்கொள்ளவும்
  4. 30 நிமிடங்கள் தலையை ஊறவைத்த பின்பு, குளிர்ந்த நீர் கொண்டு முடியை கழுவவும்; அடுத்து ஷாம்பு கொண்டு தலையை அலசி கொள்ளலாம்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

இதனை மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.

எப்படி வேலை செய்யும்:

இந்த கலவை முடியின் இழைகளை நிலைப்படுத்த உதவுகிறது; இது வறட்சியான கூந்தல் கொண்டவர்களுக்கு மிகவும் அதிக பயனளிக்கும் ஒரு முறையாகும். ஆலிவ் எண்ணெய் முடி உடைதல் மற்றும் பிளவுபட்ட கூந்தல் முனைகளை சரிப்படுத்த உதவும்; இக்கலவையில் வைட்டமின் இ, ஏ மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்துள்ளன.

வைத்தியம் 21: பேக்கிங் சோடா

தேவையானவை:

  • 1 மேஜைக்கரண்டி பேக்கிங் சோடா
  • 6 மேஜைக்கரண்டி நீர்
  • ஒரு சிறிய புட்டி

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. கொடுக்கப்பட்ட சிறிய புட்டியில், நீர் மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  2. இக்கலவை கொண்டு தலை மற்றும் முடிக்கு நன்கு மசாஜ் செய்து விடவும்
  3. 10 நிமிடங்கள் முடியை ஊற வைத்து, பின் தலையை தெளிவான நீர் கொண்டு கழுவவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

ஒவ்வொரு 10-12 நாட்களுக்கு ஒருமுறை, இச்செய்முறையை பயன்படுத்தலாம்.

எப்படி வேலை செய்யும்:

உச்சந்தலையில் காணப்படும் அதீத பொருட்கள் மற்றும் குளோரின் போன்றவற்றை நீக்க பேக்கிங் சோடா உதவும் (20). இது தலையில் காணப்படும் குழிகளை எதிர்த்து போராடி, அங்கு முடி வளர்ச்சியை ஏற்படுத்தும்; பேக்கிங் சோடா கலவை கொண்டு, தலைக்கு மசாஜ் செய்வது உச்சந்தலையை தளர்த்தி, அங்கு காணப்படும் இறந்த செல்களை போக்க உதவும் மற்றும் தலையில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க உதவும் (21). பேக்கிங் சோடா, பூஞ்சைகளுக்கு எதிரான பண்பு கொண்டதால், இது பூஞ்சைத்தொற்று ஏற்படாமல் காக்க உதவுகிறது (22).

வைத்தியம் 22: தேன்

Honey
Image: Shutterstock

தேவையானவை:

  • 1 தேக்கரண்டி தேன்
  • 2 மேஜைக்கரண்டிகள் ஷாம்பு

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. தேன் மற்றும் ஷாம்பு கலந்து தலைமுடியை நன்கு அலசவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

இம்முறையை வாரத்திற்கு இரு முறை செய்யலாம்.

எப்படி வேலை செய்யும்:

தேனின் ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து அளிக்கும் தன்மை முடியின் வேர்க்கால்களையும், முடி இழைகளையும் பலப்படுத்த உதவுகிறது; தேனில் இருக்கும் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் இறந்த செல்களை நீக்கி, தலையில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க உதவும் (23).

வைத்தியம் 23: ஹைபிஸ்கஸ்/ செம்பருத்தி

தேவையானவை:

  • 2 செம்பருத்தி மலர்கள்
  • 2 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது எள் விதை எண்ணெய்/ நல்லெண்ணெய்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. செம்பருத்தி மலர்களை நீரில் கழுவிக்கொள்ளுங்கள்
  2. கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சேர்த்து, ஒரு பேஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள்
  3. இப்பேஸ்ட்டை தலை முடியின் எல்லா பகுதிகளிலும் தடவி, அரை மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்
  4. பின் ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசவும்

செம்பருத்தியை முடி வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தலாம்; கூந்தல் வளர்ச்சிக்கு 3-4 செம்பருத்தி மலர்களை பயன்படுத்தலாம்.

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

கூந்தலை அலசும் ஒவ்வொரு முறையும், இந்த செய்முறையை மேற்கொள்ளலாம்.

எப்படி வேலை செய்யும்:

செம்பருத்தி என்பது ‘முடியை பராமரிக்கும் மலர்’ என்று அறியப்பட்ட ஒன்று; இது பொடுகை போக்கவும், கேச வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் தேவையற்ற செல்கள்/பொருட்களை துடைத்தழிக்கும் தன்மை, வைட்டமின் சி சத்து, மிருது தன்மை போன்றவை தான், தலைமுடிக்கு செம்பருத்தி பல நன்மைகளை அளிக்க முக்கிய காரணங்களாக திகழ்கின்றன (24).

வைத்தியம் 24: உருளைக்கிழங்கு

தேவையானவை:

  • 1 உருளைக்கிழங்கு

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. உருளைக்கிழங்கை தோலுரித்து, அதன் சாறெடுத்து கொள்ளவும்
  2. இந்த சாறை தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  3. பின் இலேசான ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் பொழுதும் இந்த செய்முறையை பயன்படுத்தலாம்.

எப்படி வேலை செய்யும்:

பல மக்கள் உருளைக்கிழங்கு சாறினால், தலைமுடிக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்; உருளைக்கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன (25). அலோபேசியா எனும் தலைமுடி மெல்லிதலாகுதல் பிரச்சனைக்கும் இந்த முறை தீர்வாக அமையக்கூடியது.

வைத்தியம் 25: மஞ்சள்

Yellow
Image: Shutterstock

தேவையானவை:

  • 3-4 மேஜைக்கரண்டி மஞ்சள்
  • 1 கப் காய்ச்சாத பால்
  • 2 மேஜைக்கரண்டி தேன்

நீங்கள் செய்ய வேண்டியது:

  1. தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்
  2. இக்கலவையை முடி மற்றும் தலைக்கு பயன்படுத்தவும்
  3. இதை தலையில் தடவிய பின் 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் கழுவி விடவும்

எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்:

இம்முறையை வாரத்திற்கு அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.

எப்படி வேலை செய்யும்:

மஞ்சளில் காணப்படும் குர்குமின் தான், உச்சந்தலைக்கும் முடிக்கும் அதிக நன்மைகளை அளிக்கக்கூடியது; இது உச்சந்தலையில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுகள், தோலில் மற்றும் முடியின் வேர்கால்களில் ஏற்படக்கூடிய காயங்கள் போன்றவற்றை குணப்படுத்த உதவும். மஞ்சள் ஒரு ஆன்டி செப்டிக், ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது (26).

முடி வளர்ச்சிக்கான உணவு முறை – டயட் – Diet for Hair Growth in Tamil

முடி உதிர்வை தடுத்து, தலைமுடியின் வளர்ச்சியை மேம்படுத்த உணவு முறையும் மிக முக்கியமானது; முதலில் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். தவிர்க்க வேண்டிய உணவுகளாவன:

  • ஜங்க் என்று கூறப்படும் துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்
  • காற்றடைக்கப்பட்ட பானங்கள்
  • வாள்மீன், கானாங்கெளுத்தி மற்றும் டுனா (அதிகளவு மெர்க்குரியை கொண்டவை)
  • அதிக இனிப்புச்சுவை கொண்ட டோனட், இனிப்புகள், பேஸ்ட்ரிகள், மேலும் பல.,
  • பிரட், வெள்ளை பாஸ்தா, க்ரோய்சண்ட்ஸ் போன்ற ஸ்டார்ச் உணவுகள்
  • ஆல்கஹால்

வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், முழு தானியங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்; இவ்வுணவுகளில் காணப்படும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு பெரும் நன்மையை அளிக்கின்றன.

முடி வளர்ச்சிக்கான இதர குறிப்புகள்/ டிப்ஸ் – Other Tips for Hair Growth in Tamil

தலைமுடியின் வளர்ச்சி சரியான முறையில் நடைபெற ஒரு சில விஷயங்களை நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்; தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும் சில குறிப்புகள்/ டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • எப்பொழுதெல்லாம் தலைமுடிக்கு எண்ணெய் வைக்கிறீர்களோ, அச்சமயங்களில் எல்லாம் சற்று நேரம் கை விரல்களை கொண்டு தலையில் நன்கு மசாஜ் செய்யவும்; இது கேசத்தின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, டென்க்ஷனை குறைக்கவும் உதவும்
  • உருளைக்கிழங்கு, குடைமிளகாய் போன்ற காய்கறிகளை தனித்தனியே தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால், முடி வார்ச்சியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்; மேலும் இது பொடுகு பிரச்சனையை போக்கி, முடியை உதிராமல் காக்கும்
  • பொட்டாசியம் சத்தினை அதிகம் கொண்ட உணவுகளை உண்பது, கூந்தல் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்
  • தண்ணீரை ஒவ்வொரு நாளும் சரியான அளவு பருகுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன், தலைமுடியையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

முடி வளர்ச்சிக்கான யோகா – Yoga for Hair Growth in Tamil

Yoga for Hair Growth in Tamil
Image: Shutterstock

யோகா என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, கூந்தல் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது. உச்சந்தலையில் ஆக்சிஜன் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர உதவுகிறது, வளர்ச்சியை தூண்டுகிறது. முடி வளர்ச்சி மற்றும் முடி உதிர்வுக்கு காரணமான ஹார்மோன்களை சரியான அளவில் வைக்க யோகா உதவுகிறது.

முடி வளர உதவும் சில யோகா ஆசனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, அவையாவன:

  • அதோ முக சிவனாசனம்
  • உத்தனாசனம்
  • சாசங்காசனம்
  • வஜ்ராசனம்

நம்மில் ஒவ்வொருவருக்கும் உடல், மன ஆரோக்கியம் இவற்றுடன், சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். அனைத்தும் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் முழு வடிவம் பெறுவோம்; மேலும் நமது தன்னம்பிக்கையும் மேம்படும்.

தலைமுடியின் வளர்ச்சி மற்றும் தலை முடி சார்ந்த பிரச்சனைகளை போக்க உதவும் எல்லா விதமான வழிமுறைகள் குறித்தும் இந்த பதிப்பில் பார்த்து, படித்து அறிந்தோம். இது குறித்த உங்களது கருத்துக்களை, உங்களது அனுபவங்களை கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸ் வாயிலாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.!

Was this article helpful?
thumbsupthumbsdown
Latest Articles