வெண்மையான மற்றும் பிரகாசிக்கும் முகத்தை பெற உதவும் அழகு குறிப்புகள் – Fairness and Face Brightness Tips in Tamil
நம்மில் ஒவ்வொருவரும் வெள்ளையான தோல் மற்றும் மாசு மருவற்ற சருமத்தை பெற வேண்டும் என்ற இச்சை கொண்டவர்களாக இருக்கிறோம். வெள்ளையான தோல், அழகான சருமத்தை பெற பலவிதமான செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறோம்; இந்த செயற்கை பொருட்களில் எக்கச்சக்கமான வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இவற்றால் நமக்கு உடல் நல பாதிப்பு நேரலாம் என அறிந்தும் இவற்றை நாம் பயன்படுத்துகிறோம். இச்செயற்கை அழகு பொருட்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிக அழகை மட்டுமே அளிக்கவல்லவை; நீங்கள் என்றென்றும் வெண்மை நிறத்துடன், அழகாக இருக்க விரும்புகிறீர்களா?
ஆம் எனில், இந்த பதிப்பு நீங்கள் படித்து அறிய வேண்டிய ஒன்று; இப்பதிப்பில் வெண்மையான மற்றும் பிரகாசிக்கும் முகத்தை பெற உதவும் அழகு குறிப்புகளை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. படித்து பயனடையுங்கள்!
In This Article
வெண்மையான மற்றும் பிரகாசிக்கும் சருமத்தை பெற உதவும் அழகு குறிப்புகள்
முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகு குறிப்புகள் ஏராளம் உள்ளன; ஆனால், எந்த அழகு குறிப்பு சரியான பயனை அளிக்கும் என்ற மிகப்பெரிய குழப்பம் உங்களுக்குள் இருக்கலாம்; உங்களது குழப்பத்தை போக்கவே இந்த பத்தி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில், உண்மையில் நல்ல பலன்களை அளிக்கக்கூடிய சருமத்தை வெண்மையாக்கும் அழகு குறிப்புகள் பற்றி படித்து அறியுங்கள்.
தீர்வு 1: எலுமிச்சை
தேவையானவை:
- புதிதான எலுமிச்சை சாறு
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- சருமத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் எலுமிச்சை சாறை தடவவும்
- இதை 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
- பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இந்த முறையை ஒரு நாள் விட்டு மறுநாள் செய்யலாம்.
இது வேலை செய்யும் விதம்:
சருமத்தை வெண்மையாக்கும் அழகு குறிப்புகள் எல்லாவற்றிலும் கட்டாயமாக இடம் பெறும் ஒரு பொருளாக எலுமிச்சை விளங்குகிறது; எலுமிச்சை ஒரு சிறந்த இயற்கை முறை சரும சுத்தப்படுத்தி மற்றும் சருமத்தை அழகுபடுத்த உதவும் ஒரு முக்கிய பொருள் ஆகும். இது சருமத்தில் ஏற்படும் கறைகள், கரும்புள்ளிகளை போக்க உதவும் (1, 2).
எச்சரிக்கை:
எலுமிச்சையை சருமத்தில் தடவிய பின்னர், சருமத்தின் மீது சூரிய ஒளி படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்; தோலில் காயங்கள் மற்றும் வெட்டுக்காயங்கள் இருந்தால், அந்த இடங்களில் எலுமிச்சை எரிச்சலை ஏற்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். சென்சிட்டிவான சருமம் கொண்டவர்கள், எலுமிச்சையை நீரில் சேர்த்து நீர்த்து, பின் சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லது.
தீர்வு 2: மஞ்சள்
தேவையானவை:
- 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
- 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூளை கலந்து மாஸ்க் ஒன்றை தயாரித்து கொள்ளவும்
- சரும பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் இந்த மாஸ்க்கை தடவி, 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
- பின்னர் நீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இந்த செய்முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்ய வேண்டும்.
இது வேலை செய்யும் விதம்:
நம் முன்னோர் காலத்தில் இருந்தே சருமத்தை வெள்ளையாக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய பொருள் மஞ்சள் ஆகும்; இது வெள்ளையான சருமம் பெற உதவும் ஒரு சிறந்த வீட்டு வைத்திய முறை ஆகும். தோலின் கருமையை போக்கி, வெள்ளையான சருமம் பெற மஞ்சள் உதவுகிறது; மேலும் இது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, தோல் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது (3, 4).
எச்சரிக்கை:
சென்சிட்டிவான சருமம் கொண்டவர்கள் இந்த மாஸ்க் கலவையுடன் சிறிது நீர் கலந்து, சருமத்திற்கு பயன்படுத்தவும்; ஆடைகளில் மஞ்சளால் கறை ஏதும் ஏற்பட்டுவிடா வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.
தீர்வு 3: பால்
தேவையானவை:
- 3 தேக்கரண்டி தேன்
- 1 தேக்கரண்டி பால்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- தேனையும் பாலையும் ஒன்றாக கலந்து ஒரு மிருதுவான பேஸ்ட்டை தயாரித்து கொள்ளுங்கள்
- இந்த பேஸ்ட்டை சருமம் முழுதும் தடவி, வட்ட வடிவ இயக்கத்தில் சிறிது நேரத்திற்கு மசாஜ் செய்யவும்
- இப்பேஸ்ட்டை 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
- பின்னர் தண்ணீர் கொண்டு கழுவவும்
எண்ணெய்ப்பசை மிகுந்த சருமம் கொண்டவர்கள் குறைவான கொழுப்பு கொண்ட பாலையும், வறண்ட சருமம் கொண்டவர்கள் கொழுப்பு நிறைந்த பாலையும் பயன்படுத்துவது நல்லது.
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இச்செய்முறையை நீங்கள் தினசரி செய்யலாம்.
இது வேலை செய்யும் விதம்:
பாலில் உள்ள இயற்கை என்சைம்கள் உங்களது தோலின் நிறத்தை வெண்மைப்படுத்தி, சரும அழகை அதிகரிக்க உதவும்; சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பால் உதவுகிறது (5).
தீர்வு 4: தக்காளி
தேவையானவை:
- 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
- 1-2 தக்காளிகள்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- தக்காளிகளையும் எலுமிச்சை சாறையும் ஒன்றாய் கலந்து ஒரு மென்மையான பேஸ்ட் ஒன்றை தயாரித்து கொள்ளுங்கள்
- இந்த பேஸ்ட்டை சருமம் முழுதும் தடவி, 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
- பின்னர் தண்ணீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இம்முறையை நீங்கள் தினசரி குளிக்க செல்லும் முன் செய்யலாம்.
இது வேலை செய்யும் விதம்:
தக்காளியில் உள்ள லைகோபீன், உடல் சருமத்தில் காணப்படும் நிற மாற்றத்தை உடனடியாக குறைக்க பயன்படுகிறது; மேலும் இது சருமத்தை வெள்ளைப்படுத்த உதவும் மிகச்சரியான வீட்டு வைத்தியமாக விளங்குகிறது. இந்த பேஸ்ட் உடல் சருமத்தின் நிறத்தை வெண்மையாக்கி, நிற மாற்றத்தை குறைத்து, தோலில் காணப்படும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது (6).
தீர்வு 5: யோகர்ட்
தேவையானவை:
- 2 தேக்கரண்டி பிளெய்ன் யோகர்ட்
- 1 தேக்கரண்டி தேன்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- தேனையும் யோகார்ட்டையும் ஒன்றாய் கலந்து ஒரு பேஸ்ட் ஒன்றை தயாரித்து கொள்ளுங்கள்
- இந்த பேஸ்ட்டை சருமம் முழுதும் தடவி, 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
- பின்னர் தண்ணீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இந்த பேஸ்ட்டை நீங்கள் தினமும் பயன்படுத்தி வந்தால், நல்ல பலன்களை பெறலாம்.
இது வேலை செய்யும் விதம்:
யோகார்ட்டை தினமும் உட்கொள்வது உங்களது சருமத்தை வெள்ளையாக்க உதவும் என்று கூற முடியாது; ஆனால், அது சருமத்தை சுத்தப்படுத்தி, தோலில் காணப்படும் குழிகளில் உள்ள அழுக்குகளை போக்க உதவும் (7).
தீர்வு 6: ரோஸ் வாட்டர்
தேவையானவை:
- ரோஸ் வாட்டர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- தினமும் ரோஸ் வாட்டரில் காட்டன் பஞ்சை தொட்டு உங்கள் முகத்தை கழுவி சுத்தப்படுத்தி வர வேண்டும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
நாள்தோறும் இந்த முறையை இரு முறை செய்து வர வேண்டும்
இது வேலை செய்யும் விதம்:
ரோஸ் வாட்டர் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, சருமத்தில் எரிச்சல் ஏற்படுத்தாமல் சருமத்தை வெள்ளையாக்க உதவும்; சென்சிட்டிவ் மற்றும் எண்ணெய் வகை சருமம் கொண்டவர்களுக்கு இம்முறை மிகவும் நல்லது (8). வீட்டில் செய்த ஃபேஸ் பேக் மற்றும் ஸ்கிரப்புகளில் இந்த ரோஸ் நீரை சேர்த்து பயன்படுத்தலாம். இது முகத்தை வெள்ளையாக மாற்றும் குறிப்புகளில் மிகவும் சிறந்தது ஆகும்.
தீர்வு 7: பப்பாளி
தேவையானவை:
- பச்சை பப்பாளி
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- பப்பாளியின் தோலுரித்து, அதை துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும்; பின் இந்த துண்டுகள் மிருதுவான பேஸ்ட்டாக மாறும் வரை அரைக்கவும்
இந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி, 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும் - பின் சருமத்தை வெந்நீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
வாரத்திற்கு இரு முறை இந்த பப்பாளி மாஸ்க்கை பயன்படுத்தலாம்
இது வேலை செய்யும் விதம்:
பப்பாளி பழத்தில் உள்ள பாப்பைன் எனும் என்சைம் சருமத்தை தளர்த்த மற்றும் சருமத்தின் புதிய செல்களை ஒன்றிணைக்க உதவுகிறது; இதில் வைட்டமின் சி சத்துக்கள் சருமத்திற்கு புத்துணர்வை வழங்கி, சருமத்தை இளக்கமாகவும், உறுதியாகவும் வைக்க உதவும் (9). இது சருமத்தை வெள்ளையாக மாற்றும் குறிப்புகளில் மிகவும் சிறந்தது ஆகும்.
தீர்வு 8: பழ மாஸ்க்
தேவையானவை:
- ஒரு சிறிய பப்பாளி துண்டு
- ஒரு பழுத்த அவகேடோ
- ½ வெள்ளரிக்காய்
- 2 தேக்கரண்டி பால் கிரீம்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- பழுத்த அவகேடோ, பப்பாளி மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து அரைத்து கொள்ளவும்; பின் அதில் பால் கிரீமை சேர்த்து ஒரு பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளவும்
- இப்பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
- பின் முகத்தை வெந்நீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இச்செய்முறையை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து செய்யலாம்.
இது வேலை செய்யும் விதம்:
பழங்கள் முகம் மற்றும் சருமத்தின் மீது அற்புதங்களை புரிந்து, சருமத்தை பொலிவாக்க உதவும்; இது சருமத்தை வெள்ளையாக்கும் குறிப்புகளில் மிக முக்கியமான ஒன்று ஆகும். அவகேடோ பழத்தில் சருமத்தை மென்மையாக மற்றும் மிருதுவாக மாற்ற உதவும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து உள்ளன (10). பப்பாளியில் உள்ள என்சைம்கள் – சருமத்தை வெண்மைப்படுத்தவும், வெள்ளரிக்காய் – தோலை மிருதுவாகவும் மாற்ற உதவும் (11, 12).
எச்சரிக்கை:
எண்ணெய்ப்பசை அல்லது கூட்டு தன்மை கொண்ட சருமம் கொண்டவர்கள் பால் கிரீமிற்கு பதிலாக முல்தானி மிட்டியை பயன்படுத்தலாம்.
தீர்வு 9: கடலை மாவு
தேவையானவை:
- 2 மேஜைக்கரண்டி கடலை மாவு
- ரோஸ் வாட்டர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- கடலை மாவுடன் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து ஒரு பேஸ்ட்டை தயாரித்து கொள்ளவும்
- இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, மேல்நோக்கியவாறு ஸ்கிரப் செய்யவும்
- சருமத்தில் தடவிய பேஸ்ட் முழுமையாக காய்ந்த பின், சருமத்தை வெந்நீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இந்த ஃபேஸ் பேக் அல்லது ஸ்கிரப் அழகு குறிப்பு முறையை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
இது வேலை செய்யும் விதம்:
கடலை மாவு ஒரு சிறந்த, மென்மையான முறையில் சருமத்தை தளர்த்த உதவும் பொருள் ஆகும்; இது சருமத்தில் கீறல்கள் எதையும் ஏற்படுத்தாமல், சருமத்தை ஸ்ட்ரெட்ச் செய்ய உதவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இயற்கையாக புத்துணர்வு தரும் வகையில் சருமத்தை வெண்மைப்படுத்த உதவும் (13). முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகு குறிப்புகளில் இது மிக முக்கியமான ஒன்று ஆகும்.
எச்சரிக்கை:
இந்த அழகு குறிப்பு முறையை முகத்திற்கு பயன்படுத்திய பின், முகத்தில் சோப் பயன்படுத்துவதை தவிர்த்து விடவும்.
தீர்வு 10: கற்றாழை
தேவையானவை:
- 2 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை
- 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- நாட்டு சர்க்கரை மற்றும் கற்றாழை ஜெல் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்தது, நன்றாக கலக்கி கொள்ளவும்
- இந்த பேஸ்ட்டை உங்களது சருமத்தில் தடவி, இதை கொண்டு சில நிமிடங்களுக்கு வட்ட வடிவ இயக்கத்தில் ஸ்கிரப் செய்வும்
- பின் சருமத்தை மிதமான வெந்நீர் கொண்டு கழுவவும்; முகத்தை கழுவிய பின் குளிர்ந்த நீரை பயன்படுத்தவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இந்த ஒரு சிறந்த ஸ்கிரப் முறையை 4-5 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்
இது வேலை செய்யும் விதம்:
கற்றாழையில் காணப்படும் ஆந்த்ராகுவினைன் எனும் உறுப்பு தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, மிருதுவான முறையில் சருமத்தை வெண்மைப்படுத்த உதவும். நாட்டு சர்க்கரை நல்ல ஒரு தளர்த்தியாக பயன்படுகிறது; எல்லா வகை சருமத்தையும் ஈரப்பதத்துடன் வைக்க கற்றாழை உதவும் (14, 15).
தீர்வு 11: முல்தானி மிட்டி (ஃபுல்லர்ஸ் எர்த்)
தேவையானவை:
- 2 மேஜைக்கரண்டி முல்தானி மிட்டி (ஃபுல்லர்ஸ் எர்த்)
- 3 மேஜைக்கரண்டிகள் ஆரஞ்சு சாறு
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஆரஞ்சு சாறில் ஃபுல்லர்ஸ் எர்த் எனும் முல்தானி மிட்டி பொடியை கலந்து, ஒரு மிருதுவான பேஸ்ட்டை தயாரித்து கொள்ளவும்
- இந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி, 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
- பின் சருமத்தை மிதமான வெந்நீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரு முறை உபயோகிக்கலாம்
இது வேலை செய்யும் விதம்:
ஃபுல்லர்ஸ் எர்த் என்பது முல்தானி மிட்டி என்று அழைக்கப்படும் ஒரு முக்கிய அழகு பொருள் ஆகும்; எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்களில் ஏற்படும் முகப்பருவை போக்க இந்த பேஸ்ட் அதிகம் உதவும். ஃபுல்லர்ஸ் எர்த் எனும் முல்தானி மிட்டியில் உள்ள லைம், அலுமினா, இரும்பு ஆக்சைடுகள் போன்ற கனிமச்சத்துக்கள், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்; இந்த தாதுக்கள் இயற்கை முறையில் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுவதுடன், சருமத்திற்கு பொலிவையும் வழங்க உதவுகிறது (16).
தீர்வு 12: தேன்
தேவையானவை:
- 1 தேக்கரண்டி தேன்
- 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
- ½ தேக்கரண்டி பாதாம் எண்ணெய்
- 1 தேக்கரண்டி பால் பொடி/ பால் பவுடர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, ஒரு மிருதுவான ஃபேஸ் பேக் தயாரித்து கொள்ளுங்கள்
- இவ்வாறு தயாரித்த இந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி, 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்
- பின் சருமத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இந்த தேன் ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை உபயோகிக்கலாம்.
இது வேலை செய்யும் விதம்:
அழகு மற்றும் சரும குறிப்புகளில் முதன்மையான ஸ்தானத்தை வகிப்பது தேன் தான்; தேன் இல்லாமல், ஒரு அழகு குறிப்பு என்பதே கிடையாது எனும் அளவிற்கு பெரும்பான்மையான அழகு குறிப்புகளின் தயாரிப்பில் தேன் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய தேனில் சருமத்திற்கு நன்மை பயக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் நிறைந்து உள்ளன. இப்பண்புகள் சருமத்தில் பரு, தழும்புகள், இறந்த செல்கள் போன்றவை ஏற்படாமல் பாதுகாத்து சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவுகின்றன.
தேனில் உள்ள ஈரப்பதம் அளிக்கும் தன்மை சருமத்தை வறண்டு போகாமல் காத்து, சருமத்திற்கு வெள்ளை நிறத்தை வழங்குகிறது. தேனில் அடங்கியுள்ள பிளீச்சிங் பண்புகள் சருமத்தை மாசு மருக்கள் இன்றி வைத்து, பொலிவான தோற்றம் பெற பயன்படுகின்றன.
தீர்வு 13: சந்தனம்
தேவையானவை:
- 1 மேஜைக்கரண்டி சந்தன எண்ணெய்/ சந்தன பொடி
- 1 தேக்கரண்டி கடலை மாவு
- ரோஸ் வாட்டர்
- 1 தேக்கரண்டி மஞ்சள்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, நன்கு மிருதுவான பேஸ்ட் ஒன்றை தயாரித்து கொள்ளுங்கள்
- இந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி, 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
- பின் சருமத்தை நீர் கொண்டு கழுவி விடவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
வாரம் ஒரு முறை இச்சந்தன ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம்
இது வேலை செய்யும் விதம்:
சந்தானம் சருமத்தை வெள்ளையாக்க உதவும் காரணிகளை கொண்டுள்ளது; இது சருமத்தை வெள்ளையாக்க உதவுவதோடு தூய்மையான, சுத்தமான சருமத்தை அளிக்க பயன்படுகிறது.
சந்தனத்தில் உள்ள பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் சருமத்தில் உள்ள தேவையற்ற செல்கள், பருக்கள், வடுக்கள் ஆகியவற்றை போக்க உதவுகின்றன; மேலும் சூரிய வெப்பம் மற்றும் சுற்றுப்புற தூசு, மாசுக்களால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள், சருமத்தின் கருமை போன்றவற்றை போக்க சந்தனம் உதவுகிறது. சந்தன ஃபேஸ் மாஸ்க் முகத்தை வெள்ளையாக்க உதவுவதோடு, தோலின் வயது முதிர்ச்சியை தடுத்து சருமத்தை என்றும் இளமையாக வைக்க உதவுகிறது.
எச்சரிக்கை:
வறண்ட சருமம் கொண்டவர்கள் சந்தன எண்ணெயையும், எண்ணெய்ப்பசை உள்ள சருமம் கொண்டவர்கள் சந்தன பொடியையும் பயன்படுத்துவது நல்லது.
தீர்வு 14: வெள்ளரிக்காய்
தேவையானவை:
- 3 மேஜைக்கரண்டி வெள்ளரிக்காய் சாறு
- 1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
- காட்டன் எனும் பருத்தி பந்து
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- வெள்ளரிக்காயை துருவி அதன் சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- இச்சாறுடன் எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு கலக்கவும்
- இந்த கலவையில் பருத்தி பந்தை நனைத்து, முகத்தில் தடவவும்
- முகத்தை 15-20 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் நீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இந்த செய்முறையை தினந்தோறும் செய்து வந்தால், விரும்பிய பலன்களை பெற முடியும்.
இது வேலை செய்யும் விதம்:
வெள்ளரிக்காயில் காணப்படும் குளிர்ச்சி தன்மை முகத்தில் ஏற்படும் நிற மாற்றத்தை குறைத்து, முகத்தை வெண்மையாக்க உதவும்; இது சருமத்தை திடமாக்கி, வெண்மையாக்க உதவும், மேலும் சருமத்தை புத்துணர்வாக்க உதவும் (17). இது முகத்தை வெள்ளையாக்கும் குறிப்புகளில் மிக முக்கியமான ஒன்று ஆகும்.
தீர்வு 15: உருளைக்கிழங்கு
தேவையானவை:
- 1 நடுத்தர அளவு உருளைக்கிழங்கு
- 1 தேக்கரண்டி தேன்
- ரோஸ் வாட்டர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- உருளைக்கிழங்கை துருவி, கட்டிகள் ஏற்படாமல் மசித்து கொள்ளவும்
- இவ்வாறு அரைத்த உருளைக்கிழங்கில் தேன் சேர்த்து, போதுமான அளவு ரோஸ் வாட்டரையும் சேர்த்து மிருதுவான கலவையை தயாரித்து கொள்ளுங்கள்
- இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் கவனமாக தடவவும்
- இந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி, 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்னர் நீர் கொண்டு கழுவி விடவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இந்த உருளைக்கிழங்கு பேக்கை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தடவி வரலாம்.
இது வேலை செய்யும் விதம்:
உருளைக்கிழங்கில் இயற்கையிலேயே சருமத்தை சுத்தப்படுத்த உதவும் பொருட்கள் நிறைந்துள்ளன; இது தோலின் நிறத்தை அதிகரித்து, உங்களை வெண்மையானவராக மாற்ற உதவும். மேலும் இது அதிக சூரிய வெப்பத்தால் சருமத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகளை நீக்க உதவும் (18). இது முகத்தை வெண்மையாக்கும் குறிப்புகளில் மிக முக்கியமானது மற்றும் இது முகத்தை பிரகாசிக்க உதவும்.
தீர்வு 16: ஆரஞ்சு தோல்
தேவையானவை:
- 1 மேஜைக்கரண்டிஆரஞ்சு தோல் பொடி
- 1 தேக்கரண்டி தேன்
- ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
- ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறு
- தண்ணீர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் கலந்து, தேவையான அளவு நீர் சேர்த்து ஒரு மிருதுவான பேஸ்ட்டை தயாரித்து கொள்ளவும்
- இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
- பின் சருமத்தை தண்ணீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
வாரத்திற்கு இரு முறை இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினால், விரைவில் நல்ல பலன்களை பெறலாம்.
இது வேலை செய்யும் விதம்:
ஆரஞ்சு தோல் ஒரு சிட்ரஸ் வகை பொருள் ஆகும்; இதில் உள்ள அமிலங்கள் சருமத்தின் சிக்கல் தன்மையை நீக்கி, தோலை வெண்மையாக்கி – சருமத்தை மிளிர செய்ய உதவும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து, சருமத்திற்கு வயதாவதை தடுத்து, என்றும் இளமையாக இருப்பது போன்ற தோற்றத்தை பெற உதவும் (19, 20). இது முகம் பிரகாசிக்க உதவும் மற்றும் இந்த முறை முகத்தை வெண்மையாக்க உதவும் அழகு குறிப்புகளில் மிக முக்கியமான ஒன்று ஆகும்.
தீர்வு 17: கேரட் மற்றும் அவகேடோ
தேவையானவை:
- 1 அவகேடோ
- 1 நடுத்தர அளவு கேரட்
- 1 மேஜைக்கரண்டி அடர்ந்த கிரீம்
- 1 முட்டை
- 1 தேக்கரண்டி தேன்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- கேரட்டை வேக வைத்து, அதை ஆற வைக்கவும்; ஆறிய கேரட்டை பழுத்த அவகேடோ பழத்துடன் சேர்த்து மசிக்கவும்.
- இவ்வாறு தயாரித்த கலவையில் முட்டை, கிரீம் மற்றும் தேன் போன்றவற்றை கலந்து நன்கு கலக்கவும்
- இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவவும்
- சருமத்தில் தடவிய கலவையை 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் சருமத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
வாரத்திற்கு ஒரு முறை இந்த முறையை பயன்படுத்தலாம்
இது வேலை செய்யும் விதம்:
பழுத்த அவகேடோ பழம் சருமத்திற்கு வழங்கும் நன்மைகளை பற்றி நாம் ஏற்கனவே படித்து அறிந்தோம்; சருமத்திற்கு நன்மை பயக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற முக்கிய சத்துக்கள் கேரட்டில் நிறைந்து உள்ளன. இந்த பைட்டோ ஊட்டச்சத்துக்கள் ஆன்டி ஆக்சிடென்ட்டுகளாக செயல்பட்டு சருமத்தின் தன்மை மற்றும் சரும நிறத்தை அதிகரிக்க உதவுகிறது (21).
தீர்வு 18: குங்குமப்பூ
தேவையானவை:
- சில குங்குமப்பூ இழைகள்
- 2 தேக்கரண்டி பால்
- 1 தேக்கரண்டி சந்தன பொடி
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஒரு மணி நேர காலத்திற்கு குங்குமப்பூ இழைகளை பாலில் ஊற வைக்கவும்
- இதில் சந்தன பொடியை கலந்து, அதை நன்கு கலக்கி கொள்ளவும்
- இந்த ஃபேஸ் பேக்கை சருமத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
- பின் சருமத்தை தண்ணீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இந்த பேக்கை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தவும்.
இது வேலை செய்யும் விதம்:
ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் குங்குமப்பூ சருமத்தின் நிறத்தை அதிகரித்து, தோலை வெண்மையாக்க உதவும் மற்றும் பழங்காலத்தில் இருந்தே சருமத்திற்கு பொலிவை வழங்க உதவும். இதை தொடர்ந்து சருமத்திற்கு பயன்படுத்தினால், அது சரும பராமரிப்பு மற்றும் சரும நன்மைகளை வாரி வழங்கும் (22).
தீர்வு 19: அரிசி மாவு
தேவையானவை:
- 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு
- 1 தேக்கராண்டி வெள்ளரிக்காய் சாறு
- 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஃபேஸ் பேக் தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்; தேவையெனில் மேலும் அதிக அளவு வெள்ளரிக்காய் சாறை சேர்த்துக் கொள்ளவும்
- இவ்வாறு தயாரித்த இந்த பேஸ்ட்டை சருமத்தில் – முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்
- பின் சருமத்தை மிதமான வெந்நீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
வாரத்திற்கு இரு முறை இந்த செய்முறையை உபயோகிக்கலாம்.
இது வேலை செய்யும் விதம்:
இந்த ஃபேஸ் பேக் உங்களது சருமத்தை வெள்ளையாகவும், மென்மையாக – மிருதுவாக, பட்டு போன்றதாக மாற்ற உதவும். தோலில் ஏற்படும் நிற மாற்றம், சூரிய ஒளியால் ஏற்படும் கருமை, வீக்கம் அல்லது அழற்சி போன்றவற்றை குறைந்த காலத்திற்குள் போக்கி சருமத்தை வெண்மையாக்கும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்க அரிசி மாவு ஃபேஸ் பேக் உதவும் (23). சருமத்தை வெள்ளையாக்க உதவும் குறிப்புகளில் இது மிக முக்கியமான ஒன்றாகும்; முகத்தை வெள்ளையாக்கும் குறிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
தீர்வு 20: ஓட்ஸ்
தேவையானவை:
- 3 மேஜைக்கரண்டி ஓட்ஸ்
- 2 மேஜைக்கரண்டி யோகர்ட் அல்லது ரோஸ் வாட்டர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஓட்ஸை நன்கு அரைத்து, நைசான பொடியாக்கி கொள்ளவும்
- தயாரித்த பொடியில் யோகார்ட்டை சேர்த்து, நன்கு கலந்து ஒரு மிருதுவான பேஸ்ட்டை தயாரித்து கொள்ளவும்; பால் பொருட்கள் சார்ந்த ஒவ்வாமை உள்ள நபர்கள், யோகார்ட்டிற்கு பதிலாக ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம்.
- இவ்வகையில் உருவாக்கிய இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்
- பின்னர் முகத்தை தண்ணீர் கொண்டு கழுவி விடவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
வாரத்திற்கு இரு முறை இந்த பேக்கை பயன்படுத்தலாம்
இது வேலை செய்யும் விதம்:
ஓட்ஸ் உணவு என்பது உடல் எடையை குறைக்க மட்டுமே உதவும் என்று பலர் நம்பிக்கொண்டு உள்ளனர்; ஆனால், ஓட்ஸ் உணவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை தளர்த்தி மிருதுவான – மென்மையான சருமத்தை பெற உதவுகிறது (24). முகத்தை வெள்ளையாக்கும் குறிப்புகளில் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று; ஓட்ஸ் ஃபேஸ் பேக் முகம் பிரகாசிக்க உதவும்.
தீர்வு 21: தேங்காய் தண்ணீர்/ இளநீர்
தேவையானவை:
- தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- தேங்காய் தண்ணீரை முகம் மற்றும் கழுத்தில் தடவவும்
- பின்னர் முகத்தை அப்படியே 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்
- பிறகு சருமத்தை சாதாரண தண்ணீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இந்த முறையை தினமும் இரு முறை செய்யலாம்
இது வேலை செய்யும் விதம்:
தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர் என்பது உடலுக்கு நீர்ச்சத்து மற்றும் குளிர்ச்சியை மட்டுமே வழங்கும் என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டு உள்ளோம்; தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, அழகு நன்மைகளை வழங்கவும் உதவுகிறது. சருமத்தில் காணப்படும் மாசு மருக்களை நீக்கி, அப்பழுக்கற்ற அழகான, வெண்மையான சருமத்தை உருவாக்க தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர் உதவுகிறது.
ஆரோக்கியமான சருமத்தை வழங்கி, சருமத்தில் காணப்படும் தேவையற்ற செல்கள், தழும்புகள், கறைகள் போன்றவற்றை போக்க தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர் உதவும் (25).
தீர்வு 22: மசூர் பருப்பு
தேவையானவை:
- 1 மேஜைக்கரண்டி மசூர் பருப்பு/ மைசூர்பருப்பு
- 1 தேக்கரண்டி தேன்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- மசூர் பருப்பை நன்கு அரைத்து, பொடி செய்து கொள்ளவும்; இந்த பொடியில் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- இக்கலவையை ஒரு மிருதுவான பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளவும்
- இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் உடலை நன்கு சுத்தப்படுத்திய பின்பு முகத்தில் – சருமத்தில் தடவி, 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
- பின் சருமத்தை சாதாரண நீர் கொண்டு கழுவி விடவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இச்செய்முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வரலாம்.
இது வேலை செய்யும் விதம்:
மசூர் பருப்பில் அடங்கியுள்ள புரதங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் தோலில் காணப்படும் தேவையற்ற இறந்த செல்களை நீக்க உதவுகிறது மற்றும் சருமம் வெள்ளையான நிறத்தை பெற உதவுகிறது. மசூர் அல்லது மைசூர் பருப்பு சருமத்தில் உள்ள குழிகளில் காணப்படும் அழுக்குகளை நீக்கி, தோலை தளர்த்த பயன்படுகிறது; மேலும் இது சருமத்தை சுத்தப்படுத்தவும் பயன்படுகிறது.
அதிக பிரயத்தனங்களை மேற்கொள்ளாமல் எளிமையான வழியில் அழகான, வெள்ளையான சருமத்தை பெற மசூர் பருப்பு உதவுகிறது. செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை விட, அதிக பலன்களை தரும் இந்த இயற்கை முறை மைசூர் அல்லது மசூர் பருப்பு ஃபேஸ் பேக்கை பயன்படுத்தி ஏராளமான சரும நன்மைகளை பெறலாம்.
தீர்வு 23: வாழைப்பழ மாஸ்க்
தேவையானவை:
- ஒரு பழுத்த வாழைப்பழம்
- 1 தேக்கரண்டி தேன்
- 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- பழுத்த வாழைப்பழத்தின் தோலை உரித்து, பழத்தை வெளியே எடுத்து நன்கு மசித்து கொள்ளவும்
- மசித்த பழத்தில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து ஒரு ஃபேஸ் பேக் தயாரித்து கொள்ளவும்
- முகத்தை நன்கு சோப் போட்டு கழுவி, முகத்தில் ஈரம் காய்ந்த பின்னர் இந்த ஃபேஸ் பேக்கை, கை விரல்களை கொண்டு முகத்தில் தடவவும்
- இந்தபேக்கை முகத்தில் தடவி, 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்
- பின் சருமத்தை மிதமான சூடு கொண்ட வெந்நீர் கொண்டு கழுவவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இப்பேக்கை வாரம் ஒரு முறை முகத்திற்கு – சருமத்திற்கு பயன்படுத்தலாம்.
இது வேலை செய்யும் விதம்:
வாழைப்பழம் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்/ கனிமச்சத்துக்களை கொண்டுள்ளது; இது உடலுக்கு ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்தை வழங்குவதோடு, அழகையும் அளிக்க உதவுகிறது. தோலில் உள்ள தேவையற்ற செல்களை நீக்கி, இளமையான தோற்றம் உருவாக வாழைப்பழம் உதவுகிறது.
பணம் அதிகம் கொடுத்து வாங்கும் அழகு சாதன பொருட்கள் தரும் பலன்களை விட அதிகமான பலன்களை வாழைப்பழம் போன்ற வீட்டு வைத்திய முறைகள் வழங்குகின்றன. காசை அதிகம் செலவழிக்காமல், சருமத்தை வெள்ளையாக்க வாழைப்பழ ஃபேஸ் பேக் உதவுகிறது; இது எளிமையான முறையில், குறைந்த கால கட்டத்தில் அதிக பலன்களை தரவல்லது.
தீர்வு 24: கிரீன் டீ (பசுமை தேநீர்)
தேவையானவை:
- 2 பயன்படுத்தப்பட்ட கிரீன் டீ (பசுமை தேநீர்) பைகள்
- 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
- 1 மேஜைக்கரண்டி தேன்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- கிரீன் டீ (பசுமை தேநீர்) பைகளை அறுத்து, டீத்தூளை வெளியே எடுத்துக் கொள்ளுங்கள்
- இட்டீத்தூளில் எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்து, நன்கு கலக்கி கொள்ளவும்
- இக்கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
- பின்பு முகத்தை சாதாரண நீர் கொண்டு கழுவி விடவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
இந்த கலவையை நாள்தோறும் சருமத்திற்கு பயன்படுத்தி வரலாம்.
இது வேலை செய்யும் விதம்:
முகத்தை வெள்ளையாக்கும் குறிப்புகளில் இது முக்கியமான ஒன்று ஆகும்; கிரீன் டீயில் (பசுமை தேநீர்) உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உங்களது தோலை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகின்றன. சூரிய வெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாட்டால் உடலில் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து, வெள்ளையான சருமம் பெற உதவுகிறது (26).
தீர்வு 25: சூடான எண்ணெய் கொண்டு செய்யப்படும் உடல் மசாஜ்
தேவையானவை:
- பாதாம் எண்ணெய்/ தேங்காய் எண்ணெய்/ ஆலிவ் எண்ணெய்
- ஒரு சில வேப்பிலைகள்
- ஒரு சில துளசி இலைகள்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அடிப்படை எண்ணெயை தேர்ந்தெடுத்து கொள்ளவும்; பின்னர் அதில், நசுக்கிய வேப்பிலை மற்றும் துளசி இலைகளை சேர்த்து கொள்ளவும்
- இந்த கலவையை இலேசாக சூடுபடுத்தி கொள்ளவும்; பின்பு இதை சருமம் முழுக்க தடவி, நன்கு மசாஜ் செய்து கொள்ளவும்
- சருமத்தில் தடவிய இக்கலவையை 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பிறகு குளித்து விடவும்
இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?
வாரத்திற்கு இரு முறை இந்த செய்முறையை செய்யலாம்.
இது வேலை செய்யும் விதம்:
சூடான எண்ணெய் கொண்டு உடல் முழுக்க மசாஜ் செய்வது உடலுக்கு ஓய்வான உணர்வை அளிப்பதோடு, சருமத்தை வெள்ளையாக்கவும் உதவும்; தோலை வெள்ளையாக்க உதவும் குறிப்புகளில், இதுஒரு ஆரோக்கியமான முறை ஆகும். சூடான எண்ணெய் கொண்டு உடலில் மசாஜ் செய்வது, உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதோடு, இது தோலின் நிறத்தையும் அதிகரிக்க உதவுகிறது (27).
வெண்மையான சருமத்தை பெற உதவும் டயட் முறை
ஒரு நல்ல அழகான தோற்றத்தை பெற, ஆரோக்கியமான உணவு முறை, சரியான உடற்பயிற்சி போன்றவை அத்தியாவசிய தேவைகள் ஆகும்; இவற்றை முறையாக கடைபிடித்தால் வெள்ளையான சருமத்தை பெறலாம். சருமத்தை பொலிவாக்கி, வெள்ளையான சருமத்தை அளிக்க உதவும் உணவுகள் என்னென்ன என்று இங்கு காணலாம்.
- தக்காளிகளை உட்கொள்வது தெளிவான சருமத்தை பெற உதவும்; தக்காளியில் இருக்கும் லைகோபீன் முகப்பரு மற்றும் பிடிவாதமான கரும்புள்ளிகளுடன் போராடி அவற்றை போக்கும் தன்மை கொண்டது. இது சருமத்தை புற ஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து காத்து, சருமத்தின் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை மேம்படுத்த உதவுகிறது. அதிகப்படியான சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய தேவையற்ற செல்களை எதிர்த்து போராட ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உதவுகின்றன; எனவே ஒரு வாரத்திற்கு 3-5 முறை தக்காளிகளை உட்கொள்ளுங்கள்.
- அடர்ந்த நிறம் கொண்ட பெர்ரி வகை பழங்களான புளூபெர்ரி, செர்ரிகள் போன்றவை அதிக ஆன்டி ஆக்சிடென்ட்டுகளை கொண்டவை; இந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உடலில் ஏற்படும் கோளாறுகளை தடுக்க உதவுகின்றன. சில நேரங்களில் ஆக்சிடேடிவ் அழுத்தம் காரணமாக உடலில் கோளாறுகள் ஏற்படலாம்; பெர்ரி பழங்களில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் இக்கோளாறுகளை போக்க உதவுகின்றன.
- பெர்ரி வகை பழங்களான புளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, பிளாக் பெர்ரி ஆகியவற்றில் வைட்டமின் சி சத்து நிறைந்து உள்ளது; வைட்டமின் சி சத்து தோலிற்கு ஆரோக்கியமான பொலிவை தர உதவுகிறது.
- மீன் மற்றும் இதர கடல் உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது உடலின் ஆரோக்கியத்தை சீராக வைத்து, தோலின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்; ஏனெனில் மீன் மற்றும் இதர கடல் உணவுகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சரும முதிர்ச்சியை தடுத்து வயதாவதை தடுக்க உதவும். இவை உடல் தோற்றத்தை என்றும் இளமையாக வைக்க உதவும்; மீனை வாரத்திற்கு 3-4 முறை உண்டு வந்தால், அதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலை இளமையாக வைத்திருக்க உதவும். மேலும் மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்டுகளை கூட பயன்படுத்தலாம்.
- செராமிட்கள் என்பவை கொழுப்பு மூலக்கூறுகள், இவை உடலின் ஈரப்பதத்தை சமநிலையில் வைக்க உதவுகின்றன; பல தோல் பராமரிப்பு பொருட்களில் செராமிட்கள் ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்பட்டு உள்ளன. பிரௌன் ரைஸ் உணவை உட்கொள்வதன் மூலம் இந்த செராமிட் சத்துக்களை இயற்கையான வழியில் பெறலாம்; இச்சத்துக்கள் உடலின் வெளிப்புற தோலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
- உடலை ஈரப்பதத்துடன் வைக்க பாதாம் பருப்புகள் உதவுகின்றன; இரவில் பாதாம்களை நீரில் ஊற வைத்து, அவற்றை காலையில் உட்கொண்டு வருவது ஆரோக்கியமான சருமம் மற்றும் வறட்சி குறைந்த சருமத்தை பெற உதவும். பாதாம்களில் நிறைந்து இருக்கும் வைட்டமின் ஈ சத்து தோலிற்கு நன்மை பயக்கும் ஒன்றாகும்.
- வாழைப்பழங்களில் இருக்கும் வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை வயது முதிர்ச்சிக்கு எதிராக போராடக்கூடியவை; ஆகையால் தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொள்ளுங்கள்.
- யோகார்ட்டில் உள்ள அதிக புரோபையாட்டிக்குகள், ஆரோக்கியமான உடலிற்கு வழிவகுக்கின்றன; இவை உடலின் செரிமான அமைப்பை சீர்படுத்தி, சருமத்திற்கு இயற்கையான பொலிவை வழங்க உதவுகின்றன.
- போதுமான அளவு நீர் மற்றும் சிட்ரஸ் பழச்சாறுகளை பருகுவது ஆரோக்கியமான மற்றும் வெள்ளையான சருமத்தை பெற உதவும்; நீர்ச்சத்துள்ள சருமம் என்றும் ஆரோக்கியமாகவும் கொழுத்தும் இருக்கும்.
- பாலில் உள்ள அதிகப்படியான வைட்டமின்கள் சருமத்திற்கு நன்மை பயப்பவை ஆகும்; உங்களது சருமத்திற்கு லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாது எனில், நீங்கள் புரதம் நிறைந்த சோயா பாலை உபயோகித்து பார்க்கலாம்.
சருமத்தை வெள்ளையாக்க உதவும் இதர அழகு குறிப்புகள்
வெள்ளையான சருமம் மற்றும் வெள்ளையான முகத்தை பெற வேண்டும் என நம்மில் பலர் விரும்புகிறோம்; இத்தகைய அழகான தோற்றத்தை பெற உதவும் பல வீட்டு வைத்திய முறைகளை பற்றி முந்தைய பதிப்புகளில் பார்த்து, படித்து அறிந்தோம்.
வெண்மையான, அழகான சருமத்தை பெற உதவும் இதர சரும வெள்ளைபடுத்தி குறிப்புகள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்:
- CTM (சுத்தப்படுத்துதல் – Cleansing, டோனிங் – Toning, ஈரப்படுத்துதல் – Moisturizing) முறையை தினமும் பின்பற்றுங்கள்
- வெள்ளையான சருமத்திற்கான குறிப்புகளில் மிக முக்கியமானது தளர்த்தி முறை ஆகும்; உங்களது சருமத்தின் நிறம் மங்கி போய் இருந்தால், அச்சமயம் சரும தளர்த்தி முறையை பயன்படுத்தி தோலின் மேற்புறத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம். இத்தளர்த்திகளை பயன்படுத்துவதால், சருமத்தின் மேற்பகுதி சூரியனின் தாக்கத்திற்கு ஆளாகாமல் இருக்கும்; முகத்திற்கான ஸ்கிரப் அல்லது ஃபேஸ் வாஷை தளர்த்தியாக பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள வீட்டு வைத்திய பொருட்களான பாதாம், ஓட்ஸ் உணவு மேலும் பல பொருட்களை பயன்படுத்தி உடல் சருமத்திற்கான ஸ்கிரப்பை உருவாக்கலாம்; இந்த ஸ்கிரப்பை சருமத்திற்கு அப்படியே அல்லது வறண்ட நிலையிலும் பயன்படுத்தலாம். முகம் போன்ற சென்சிட்டிவான சரும பகுதிகளுக்கு ஏற்ற ஸ்கிரப்பை தயார் செய்து உபயோகிக்கலாம்.
- வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன் சன் ஸ்கிரீனை சருமத்தில் தடவவும்; SPF 20 மற்றும் அதற்கு மேலான விஷயங்களை கொண்ட சன்ஸ்கிரீன் சருமத்திற்கு நல்லது, அது நிற மாற்றத்தை தடுக்க உதவும்.
- வெளியில் செல்லும் பொழுது, குறிப்பாக வெயில் காலத்தில் வெளியே செல்லும் பொழுது தொப்பி போன்றவற்றை அணிந்து செல்வது நல்லது; இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு வரும் விரிந்த ஓரம் கொண்ட ஃபேஷனுக்கு ஏற்ற தொப்பிகளை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
- நன்கு, போதுமான அளவு உறங்கி எழுவது ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமம் உருவாக உதவும்.
- இயற்கையான முறையில் வெள்ளையாக ஃபேஸ் பேக் மற்றும் ஸ்கிரப்புகளை பயன்படுத்துங்கள்.
- இயற்கையிலேயே கருப்பாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக்குவது சற்று கடினமான காரியம் தான்; இயற்கை முறைகளை கொண்டு ஏற்கனேவே இருக்கும் சருமத்தின் நிறத்தை சற்று மேம்படுத்தலாம். ஆனால், முற்றிலும் வெண்மையான சருமத்தை பெற வேண்டும் என எண்ணினால், செயற்கை முறையிலான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால், எதிர்பார்த்த பலன்களை ஓரளவுக்கு பெற முடியும். ஆனால், இந்த மாற்றங்கள் நிகழ கொஞ்ச காலம் தேவைப்படலாம்.
- சருமத்திற்கு எலுமிச்சையை பயன்படுத்திய பின், கண்டிப்பாக ஈரப்படுத்தியை உபயோகிக்க வேண்டியது அவசியம்; எலுமிச்சையில் இருக்கும் அமில தன்மையால், சருமம் வறண்டு போகும் வாய்ப்பு உண்டு. எனவே, எலுமிச்சையை பயன்படுத்திய பின் கட்டாயமாக ஈரப்படுத்தியை பயன்படுத்த வேண்டும் மற்றும் சென்சிட்டிவான சருமம் கொண்டவர்கள் எலுமிச்சை சாறை நீரில் நீர்த்து பயன்படுத்த வேண்டும்.
- உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த ஒரு சில உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம்; உடலின் வளர்சிதை மாற்றம் மேம்பட்டால், அது உட்கொள்ளும் உணவிலிருந்து தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச செய்யும். உடலின் அழகை அதிகரிக்க செயற்கையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதை காட்டிலும், ஆரோக்கியமான உணவுகளை உண்டு உடல் அழகை மேம்படுத்த முயலலாம்.
- சருமத்திற்கு ஏற்ற வகையில் அடர்ந்த நிறம் கொண்ட உதட்டு சாயம் அல்லது ஐ ஷாடோவை பயன்படுத்தலாம்; முகத்தின் ஒரே ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் அதிகம் அழகுபடுத்தி மேக்கப் போட்டுக்கொள்ள வேண்டாம்.
- சருமத்தை வெள்ளையாக்க கிரீமை பயன்படுத்த எண்ணினால், ஹைட்ரோகுவினைன் உள்ள கிரீமை பயன்படுத்தலாம்; ஆனால், எந்த ஒரு கிரீமையும் முழுமையாக பயன்படுத்த தொடங்கும் முன் தோல் துறை மருத்துவரிடம் முறையாக கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.
- வீட்டில் இருக்கும் பிளீச் பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்த வேண்டாம்; ஏனெனில் அவை தோலில் காணப்படும் மெலனினிற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டது அல்ல.
- 2 சதவீதத்திற்கும் அதிகமான வேதிப்பொருட்களை கொண்ட அழகு சாதன பொருட்களை, முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமல் பயன்படுத்த வேண்டாம்; மீறி பயன்படுத்தினால் அது சருமத்தில் சேதத்தை விளைவிக்கலாம்.
- வெள்ளையான சருமத்தை பெற முயற்சிக்கும் நபர்கள் புகை பிடித்தலை நிறுத்துங்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதை தவிருங்கள் மற்றும் ஆல்கஹால் பானங்கள் பருகுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.பிறப்பிலேயே படைக்கப்பட்ட சருமத்தின் நிறத்தை ஒரே இரவில் மாற்றி அமைத்து விட முடியாது; முகத்தை பிரகாசம் அடைய செய்ய மற்றும் முகத்தை வெள்ளையாக்க குறிப்பிட்ட காலம் தேவைப்படும். எல்லா அழகு குறிப்பு முறைகளையும் அதாவது முகம் பிரகாசம் குறிப்புகள், முகத்தை வெண்மையாக்கும் அழகு குறிப்புகள், சருமத்தை வெள்ளையாக்க உதவும் குறிப்புகள் போன்றவற்றை சரியாக, முறையாக பின்பற்ற வேண்டியது அவசியம். முகத்தை வெள்ளைப்படுத்த செயற்கை முறையில் உருவாக்கப்படும் அழகு சாதன பொருட்களை காட்டிலும் இயற்கையான அழகு குறிப்பு முறைகள் அதிக பலன்களை அளிக்கும். எந்த ஒரு இயற்கை அல்லது செயற்கை அழகு குறிப்பு முறைகளை பின்பற்றும் முன்னரும், அவை உங்களது சருமத்திற்கு பொருந்துமா என்று ஒருமுறை மருத்துவ ஆலோசனை செய்து கொண்ட பின், அவற்றை பின்பற்றுவது/ உபயோகிப்பது நல்லது.முகத்தை வெள்ளையாக்க, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க எத்தகைய அழகு குறிப்புகளை பயன்படுத்தினாலும், அதன் உடன் ஆரோக்கியமான உடல் உருவாக உதவும் சத்தான உணவுகள், மகிழ்ச்சியான – மன அழுத்தம் இல்லாத மனநிலை, முறையான உடற்பயிற்சி போன்றவையும் அவசியம்; இவை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.சரும நிறத்தை அதிகரிக்க, அழகான தோற்றம் பெற இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என்று சிந்திப்பவர்கள் ஒரு முக்கிய விஷயத்தை நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும்; அது என்னவென்றால், உடல் தோற்றம், அணியும் ஆடை சரியாக – அழகாக இருந்தால் ஒரு மனிதனின் தன்னம்பிக்கை மேம்படும் மற்றும் வாழ்வில் அவன் தன்னம்பிக்கையை தளர விடாமல் சரியான பாதையில் செல்வான். வாழ்க்கையில் முன்னேற தேவையான தன்னம்பிக்கையை பெற கூட, ஒரு வகையில் சரும அழகும், சரும ஆரோக்கியமும் மிக முக்கியமானதாக இருக்கிறது.சரும நிறத்தை அதிகரிக்கும் ஆசை உங்களுக்கு உள்ளதா? இயற்கை அல்லது செயற்கை முறையில் உங்களது சருமத்தை அதிகரிக்க நீங்கள் என்னென்ன முறைகளை மேற்கொண்டீர்கள்? அவற்றால் நீங்கள் பெற்ற பலன்கள் யாவை என்பது போன்ற தகவல்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக எங்களுடன் பகிருங்கள்.
Community Experiences
Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.