கருமுட்டை வெளியேறப் போவதன் அறிகுறிகளும் கருத்தரிக்கும் வாய்ப்புகளும் – தீர்வுகளைத் தேடுவோருக்கான ஆலோசனைக் குறிப்புகள்

Written by Sruti Bhattacharjee
Last Updated on

பெண்கள் தங்கள் மாதவிலக்கு நேரங்களில் உடல் ரீதியாக பலவித எதிர்வினைகளை அனுபவிக்கின்றனர். அவரவர் உடல்வாகிற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மாதவிலக்கு நேர அறிகுறிகள் ஏற்படும். பெண்களின் மாதவிலக்கு நாட்களில் கருமுட்டை வெளியேறுதல் என்பது மிக முக்கியமான கட்டமாகும்.

மகப்பேறு விரும்பும் பெண்கள் அல்லது கரு உருவாவதைத் தடுக்க நினைக்கும் பெண்கள் என இருவருமே இது பற்றி அறிந்து வைத்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் அதன் அறிகுறிகளைக் கண்டு நீங்கள் குழந்தை பெற நினைப்பதோ அல்லது தவிர்க்க நினைப்பதோ இரண்டையும் செய்ய முடியும்.

இந்தக் கட்டுரையில் பெண்களுக்கு மாதா மாதம் கரு வெளியாகும் நாட்களை ஏறத்தாழ மிகச் சரியாக சொல்ல மாம் ஜங்க்ஷன் முயற்சி செய்திருக்கிறது. முழுமையாக சரியானதாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் சில மாதங்கள் இந்த நாட்களைக் கணக்கெடுப்பதில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் சரியான கரு வெளியாகும் நாட்கள் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

கருமுட்டை வெளியாதல் என்றால் என்ன ?

கருமுட்டை வெளியாவது என்பது கருப்பையில் உள்ள முட்டைகளில் ஒன்று தனது முழு வளர்ச்சி அடைந்த உடன் நிகழும் ஒன்றாகும். அது பெலோப்பியன் குழாய் வழியாகப் பயணிக்கும்போது ஆணின் விந்தணுக்களில் ஒன்றை ஏற்றுக் கொண்டால் குழந்தைப் பிறப்பு ஏற்படுகிறது. இதுதான் மாதவிலக்கு சுழற்சியின் கருவுறும் நேரமாகக் கருதபடுகிறது.

இதற்கு உதவி செய்ய ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் உதவி செய்கிறது. மாதவிலக்கு நேரங்களின் ஆரம்பத்தில் இந்த ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவாக இருக்கும். அதன் பின்னர் அதன் அளவு அதிகரித்து கரு உருவாக உடலை இயற்கையாகத் தயார் செய்கிறது. இந்த LH ஹார்மோன் தான் கருப்பை சினைமுட்டை வெளியேற உதவி செய்கிறது (1)

பெண்கள் பொதுவாகக் கருமுட்டையை எப்போது வெளியேற்றம் செய்வார்கள் ?

பெண்களுக்கு பொதுவாக 28 நாள் மாதவிலக்கு சுழற்சி நடைபெறுகிறது. இதில் 14வது நாளில் இருந்து கருமுட்டைகள் வெளியேறத் தயார் ஆகின்றன. ஆனால் சில பெண்களுக்கு இந்த சுழற்சியானது மாறுபடலாம். இதனால் தான் உங்கள் மாதவிலக்கு சுழற்சி பற்றிய கணக்கு மிகவும் முக்கியமானதாகிறது. ஒரு மூன்று மாதங்களாவது இந்த சுழற்சியின் நாட்களை நீங்கள் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டி வரும். இது கருமுட்டை வெளியேறும் நாட்களைக் கணிக்க உங்களுக்கு உதவி செய்கிறது (2).

எப்போது நீங்கள் கருத்தரிப்பீர்கள்

வழக்கமான 28 நாட்கள் மாதவிலக்கு சுழற்சியில் ஆறு நாட்கள் மிக முக்கியமான நாட்களாகக் கருதப்படுகிறது. அந்த நாட்களில் தான் பெண்களின் உடலானது கருத்தரிக்கத் தயார் ஆகிறது. இது மாதவிலக்கு ஏற்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்னரும் மாதவிலக்கு அடையும் நாளையும் சேர்த்து சொல்லப்படுகிறது (3).

கருத்தரிக்கும் நிகழ்வானது ஏன் மாதவிலக்குக்கு முந்தைய ஐந்து நாட்களைக் கணக்கில் கொள்கிறது என்றால் ஆணின் விந்துவை மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை பெண்ணின் உடல் உயிர்ப்புடன் வைத்திருக்கும். பெண்களின் பெலோப்பியன் குழாயில் ஆண்களின் விந்தணுவானது தன்னை ஏற்றுக் கொள்ளக் கூடிய முட்டைக்காகக் காத்திருக்கும். இந்த நாட்களில் நீங்கள் உடல் உறவு கொள்ளும்போது கருத்தரிக்கும் வாய்ப்பானது மிக அதிகமாக இருக்கிறது.

உங்கள் மாதவிலக்குக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்புதான் உங்கள் கருவை உங்கள் கருமுட்டைகள் ஏற்கத் தயார் ஆகிறது (4). இதனால்தான் உங்கள் மாதவிலக்கு சுழற்சி சரியாக இருப்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த நாளைக் கணக்கு வைத்துக் கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல. இதனால்தான் மாதவிலக்கு சுழற்சியின் மத்திய நாட்களில் இருந்து கணக்கு எடுக்க வேண்டி வருகிறது.

கருமுட்டை வெளியாவதற்கான அறிகுறிகள் என்னென்ன?

உங்கள் மாதவிலக்கு நாளை நீங்கள் ஒரு மூன்று மாதமாவது கண்காணித்து வந்தால் இதனைச் சுலபமாக அறிந்து கொள்ள முடியும். கருமுட்டை வெளியாவதால் ஏற்படும் சில பொதுவான அறிகுறிகளை நாங்கள் கீழே கொடுத்திருக்கிறோம். இதுவே பெரும்பான்மை பெண்களுக்கு நிகழ்கிறது என்பதுதான் உண்மை.

பெரும்பான்மையான பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகள்

பெண்களுக்கு கருமுட்டை வெளியாவதற்கு பொதுவான அடையாளங்களாக சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன. இதனை வைத்து நீங்கள் உங்கள் முக்கிய நாட்களைக் கணிக்க முடியும்.

பிறப்புறுப்பின் சளி சவ்வுகள் அதிகரித்தல்

கருமுட்டை வெளியாவதற்கு 9 நாட்கள் முன்னிலிருந்தே பெண்களுக்கு இந்த பிறப்புறுப்பு மூலம் ஒருவிதவெண்மையான படலம் உருவாகும். இது கருமுட்டை வெளியாகப் போகும் சமயங்களில் மிக அதிகமாக சுரக்கும். முட்டையின் வெண்மை நிறத்தில் வழவழப்பான தன்மையில் இது காணப்படும் (5).

உடல் வெப்பநிலை மாற்றம்

உடல் வெப்ப நிலை மாறுபாடு என்பது கருமுட்டை வெளியேறும் அதே நாளில் உடலால் அடையாளமாகக் காட்டப்படுகிறது. கருமுட்டை வெளியாகி முடிந்த உடன் மேலும் அதிகரிக்கிறது. இது உடலின் ப்ரோஜெஸ்ட்ராங் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் மாற்றமாகும். இந்த உடல் வெப்பநிலை அதிகரிப்பானது (BBT ) கருமுட்டை வெளியாவதை உறுதி செய்கிறது (5). அதனை நீங்கள் அறிந்திருந்தாலும் அன்றைக்கு உங்களால் கருத்தரிக்க முடியாது. ஆனால் இந்த நாட்களைக் குறித்து வைத்துக் கொண்டால் அடுத்தடுத்த சுழற்சிகளில் உங்கள் முயற்சிகள் பலன் அளிக்கும்.

கருப்பை வாயில் ஏற்படும் மாற்றங்கள்

கருப்பை வாய் தன்னுடைய அகலத்தை முட்டைகள் வெளியேறுவதற்கு வசதியாக அகலமாக்கும் செயல் நடைபெறும். இயற்கையாக நடக்கும் இந்த விஷயம் நீங்கள் கருத்தரிக்கத் தயார் ஆகிவிட்டதை உங்களுக்கு உணர்த்தும். இது மெல்ல மெல்ல சிறிது சிறிதாகத் தன்னை அகலப்படுத்திக் கொள்ளும் (6). இதனை நீங்களே அறிந்து கொள்ள சுத்தமான விரல்கள் மூலம் உங்கள் பிறப்புறுப்பின் உள்ளே செலுத்த வேண்டும். ஒரு சிறிய முனை உங்கள் விரல்களுக்குத் தட்டுப்படும். அதன் அளவு விரிவதை தினமும் நீங்கள் இதே போலப் பரிசோதிக்க வேண்டி வரும்.

இரண்டாம் நிலை கருமுட்டை வெளியேறும் அடையாளங்கள்

பொதுவாக கருமுட்டை வெளியேறுவதற்கான இரண்டாம் நிலை அடையாளங்கள் அதிகமாகக் காணப்படுவதில்லை. ஆனாலும் முக்கியமான மூன்று முதல் நிலை அடையாளங்களை நீங்கள் உறுதிப்படுத்திய பிறகு கூடவே இந்த இரண்டாம் நிலை அறிகுறிகளையும் பரிசோதித்துக் கொள்ளலாம். முதல் நிலை அடையாளங்களை விட இந்த இரண்டாம் நிலை அடையாளங்களானது மிக சுலபமாகக் கண்டுபிடிக்கும் வகையில் இருக்கும்.

லேசான கறை படிதல்

மாதவிலக்கு சுழற்சியின் மத்திம நாட்களில் சில பெண்கள் இளஞ்சிவப்பு அல்லது ப்ரவுன் நிறக் கறைகளைத் தங்கள் உள்ளாடையில் காண்பார்கள். ப்ரோஜெஸ்ட்ரான் உற்பத்தி குறைவாக இருக்கும் சமயங்களில் இந்த அறிகுறிகள் ஏற்படும். ப்ரோஜெஸ்ட்ரான் சிறுநீரின் அடர்த்தியை மாதவிலக்கு நாட்களில் அதிகரிப்பது வழக்கம். ப்ரோஜெஸ்ட்ரான் போதிய அளவு சுரக்கவில்லை என்றால் இந்த ஸ்பாட்டிங் ஏற்படும் (7).

இடுப்பு வலி

உங்கள் இடுப்பின் ஒரு பாகத்தில் வலி ஏற்படும். பொதுவாக கீழ் வயிற்றுப் பகுதியின் ஒரு பாகத்தில் இந்த வலி காணப்படும். ஆனாலும் கருமுட்டை வெளியேறும் சமயம் இந்த வலி ஏற்படாது என்பதால் இதனை சரியான ஒரு அடையாளமாகக் கொள்ள முடியாது (8).

மார்பகங்கள் கனம் அதிகரிக்கும்

இது அனைத்துப் பெண்களுக்கும் நிகழும் ஒரு அறிகுறிதான். ஹார்மோன்கள் உடலில் உள்ள நீர்த்தன்மையை மார்பகங்களில் தூண்டி விடுகின்றன. இதனால்தான் கனமான, லேசான வலி கொண்ட மிகவும் மென்மையான மார்பகமாக உங்கள் மார்பகம் மாறுகிறது (9). ஆனாலும் இது மாதவிலக்குக்கு முன்னர் ஏற்படும் சாதாரண அடையாளங்களில் ஒன்றாகும். இதனை வைத்து உங்கள் கருமுட்டை வெளியாகும் நாட்களைக் கணக்கிட முடியாது.

அடிவயிறு வீக்கம்

பொதுவாக மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்னர் பெண்களின் வயிறு வீங்கும். காரணம் மார்பகங்கள் தங்களின் நீர்த்தன்மையை அதிகரிப்பது போலவே வயிறும் தன்னுடைய நீர்த்தன்மையை இந்த நேரத்தில் அதிகரிக்கிறது (10). அதனால் பெரும்பாலான பெண்களுக்கு இந்த வயிறு வீங்கும் அறிகுறி இருக்கிறது. மாதவிலக்கின் முதல் நாளிலும் இந்த வீக்கம் இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

கொழுமியங்கள் அளவு அதிகரித்தல்

பொதுவாக இயற்கை தன்னைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்தபடியே இருக்கிறது. அதன் அடையாளமாகவே இனப்பெருக்கம் நிகழ்கிறது. கருமுட்டை வெளியாவதன் அடுத்த அடையாளமாக சொல்லப்படுவது உங்களின் காம உணர்வுகள் இந்த நாட்களில் அதிகரித்து காணப்படும் (11). இயல்பாகவே உடல் தன்னை இனப்பெருக்கத்திற்கு தயார் செய்வதன் அடையாளமே இது. உங்கள் மாதவிலக்கு முடிந்த பின்னரும் இது காணப்படும்.

உடலின் வாசனை மேம்படும்

ஒரு ஆராய்ச்சியின் போது கருமுட்டை வெளியாகும் தினங்களில் பெண்கள் அணிந்திருக்கும் ஆடையை ஆண்கள் முகர்ந்து வாசனை அறியச் செய்தனர். அதனைப் போலவே பெண்கள் சாதாரண நாட்களில் அணிந்த ஆடையையும் வாசனை பார்க்கச் செய்தனர். கருமுட்டை வெளியேறும் சமயம் பெண்களின் உடலில் ஏற்படும் வாசனை மாற்றமானது ஆண்களின் காம உணர்வைத் தூண்டுவதாக இருப்பதாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன (12).

நாடித் துடிப்பு அதிகரிக்கும்

சாதாரண நாட்களை விட கருமுட்டை வெளியாகும் நாட்களில் பெண்களின் நாடித்துடிப்பு அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாதவிலக்குக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்னரில் இருந்தே
2 துடிப்புகள் அதிகமாக இருப்பதாகக் கூறுகின்றனர் (13).

மேற்கண்ட அடையாளங்கள் அனைத்துமே கருமுட்டை வெளியாவதற்கான வெளிப்படையான அறிகுறிகள் எனச் சொல்லி விட முடியாது. வேறு சில காரணங்களால் உங்கள் அடையாளங்கள் மாறுபடலாம் (14). அவற்றையும் பார்க்கலாம்.

  • பெரி மெனோபாஸ் கட்டத்தில் அடையாளங்கள் தவறாகலாம்
  • பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு அடையாளங்கள் மாறலாம்
  • POS எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சின்ரோம் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் மாறுபடும்.
  • கீமோதெரபி, வாந்தியைத் தவிர்க்கும் மாத்திரைகள், மனஅழுத்தத்திற்கான மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு இந்த அடையாளங்கள் மாறுபடும்.
  • அதிக உடல் எடை அல்லது குறைவான உடல் எடை மற்றும் மனசோர்வு கொண்டவர்களுக்கு இவை மாறுபடும்.

இவர்களுக்கு கருமுட்டை வெளியாகும் நாட்களைக் கணிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

உங்களுக்கு கருத்தரிப்பு குறைபாடு உள்ளது என்பதற்கான அடையாளங்கள்

உங்களுக்குக் கருமுட்டைகள் அல்லது சினைமுட்டைகள் வெளியாகவில்லை என்றால் உங்களுக்கு கருத்தரிப்பு குறைபாடு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதைப் போலவே ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்னை உள்ளவர்களும் கருத்தரிக்க வாய்ப்பு குறைவு என்கின்றனர். முன்னதில் கருத்தரிக்க வாய்ப்பு மிகக் கடினமானது என்றும் பின்னதில் கருத்தரிப்பு பல கட்ட முயற்சிகளுக்குப் பின்னரே நடக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருத்தரிப்பு குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள் இவைதான் (15):

ஒழுங்கற்ற மாதவிலக்கு சுழற்சி

உங்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படவில்லை என்றால் நீங்கள் ஒழுங்கற்ற மாதவிலக்கு கொண்டிருப்பதாகவே அர்த்தம். ஒன்றிரண்டு நாட்கள் மாறினால் தவறில்லை. ஆனால் சிலருக்கு பல நாட்கள் வித்யாசங்களில் மாதவிலக்கு நிகழும். இப்படியானவர்களுக்கு கருத்தரிப்பு சிக்கல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அல்லது நீளமான மாதவிலக்கு சுழற்சி

பொதுவாக 21 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை மாதவிலக்கு சுழற்சியானது நடைபெறும். இந்த நாட்களை விடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் உங்களுக்கு கருத்தரிப்பு சிக்கல்கள் இருப்பதாகவே அர்த்தம்.

பல மாதங்களுக்கு மாதவிலக்கு நேராமை

ஒரு சிலருக்கு மாதவிலக்கு என்பது பல மாதங்களுக்கு நிகழவே நிகழாது. அதன் பின்னரே நடக்கும். குறிப்பாக பருவம் அடைந்த சமயங்களில் இதன் ஒழுங்கின்மை அதிகமாக இருந்தால் நீங்கள் கருத்தரிப்பு சிக்கல் கொண்டவர் என அறிந்து கொள்ளலாம்.

எதிர்மறை பரிசோதனை முடிவுகள்

கருமுட்டை வெளியாவதை பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். LH ஹார்மோனை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது எதிர்மறையாக வந்தாலும் உங்களுக்கு கருத்தரிப்பு குறைபாடுகள் இருக்கலாம் அதே சமயம் பலமுறை நேர்மரை முடிவுகள் தந்தாலும் உங்களுக்கு கருத்தரிப்பு குறைபாடுகள் இருக்கலாம் என்பது அர்த்தம்.

ஒரு வேளை நீங்கள் கர்ப்பம் அடைந்திருந்தாலும் இந்த கருமுட்டை அறிகுறிகள் தவறான அடையாளங்களைக் காட்டலாம். எனவே ஒரு சில மாதங்கள் தொடர்ந்து உங்கள் மாதவிலக்கு சுழற்சியைக் கண்காணிப்பதுதான் சரியான தகவலைப் பெற உதவும்.

உங்கள் கருமுட்டை அளவை எப்படி மருத்துவர் பரிசோதிக்கிறார்?

ஒரு மருத்துவர் உங்களுடைய மருத்துவ வரலாற்றின் அடிப்படையில் உங்கள் கருமுட்டை அளவு மற்றும் அடையாளங்களை சொல்வார். உங்கள் மாதவிலக்கு சுழற்சி மற்றும் அதன் ஒழுங்கு இதன் அடிப்படையில்தான் அந்தக் கேள்விகள் அமைந்திருக்கும்.

இது தவிர சில பரிசோதனைகள் மூலம் உங்கள் கருமுட்டைகளின் தன்மையை அறிய முடியும்

  1. ப்ரோஜெஸ்ட்ரான் பரிசோதனை : இந்த ரத்தப் பரிசோதனையில் உங்கள் உடலில் ப்ரோஜெஸ்ட்ரானின் அளவு குறைந்திருப்பது கருத்தரிப்பு குறைபாடுக்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது (16).
  2. மேலும் சில பரிசோதனைகள் உங்கள் கருத்தரிக்கும் தன்மையைத் தீர்மானிக்கின்றன. அவற்றில் follicle-stimulating hormone (FSH) and luteal hormone (LH) இவை இரண்டும் முக்கியமானது.
  3. ஹார்மோனின் அளவுகளைச் சோதிக்க ப்ரோலாக்டின் பரிசோதனையைச் செய்வார்கள். இதன் மூலம் உங்கள் உடலில் ஹார்மோன் சுரப்புகள் சம அளவில் உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்.
  4. பிறப்புறுப்பு மூலமாகச் செய்யப்படும் ஸ்கேன் பரிசோதனையில் உங்கள் வயிற்றில் கருமுட்டைகள் உள்ளதா அவை உடைகிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும் (17).

மேற்கண்ட பரிசோதனைகளில் கருத்தரிப்பு சிக்கல் உள்ளதாக மருத்துவர் கூறினால் ஒரு சில சிகிச்சையின் மூலம் அந்தச் சிக்கலை குணப்படுத்தி விட முடியும்.

கருத்தரிப்பு குறைபாடுகளுக்கான சிகிச்சை முறைகள்

முதலில் வாய்வழி மாத்திரைகள் மூலம் கருத்தரிப்பு குறைபாடுகளுக்கான சிகிச்சை தொடங்கப்படும். clomiphene citrate (Clomid or Letrozole or Serophene) எனப்படும் மாத்திரைகள் உடலில் FSH மற்றும் LH ஹார்மோன்களின் சுரப்புகளை அதிகரித்து கருத்தரிக்க ஏற்பாடு செய்கிறது.

உங்கள் மாதவிலக்கு ரத்தப்போக்கு நாளின் இரண்டாவது நாளில் இருந்து இந்த மாத்திரைகள் மருத்துவர்கள் மூலமாகத் தரப்படுகிறது. 50mg முதல் உங்கள் சிகிச்சையினை ஆரம்பிப்பார்கள் (18).

கருத்தரிக்க வாய்ப்புள்ளதாக உங்கள் ஆரோக்கியத்தை மாற்ற என்ன செய்யலாம்

கருத்தரிக்க மருத்துவ சிகிச்சைகள் உதவி செய்தாலும் நீங்களே உங்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளைக் காணலாம்.

உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரியுங்கள். அதிக எடை அல்லது குறைவான எடை என்பது கருத்தரிப்பு குறைபாடுகளுக்கு வழிவகை செய்யும்.

அதிகப்படியான உடற்பயிற்சிகள் உங்கள் கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கலாம். ஆகவே ஒரு பயிற்றுனரின் உதவியோடு நீங்கள் உடல் பயிற்சிகளை செய்ய வேண்டியது அவசியம்.

முறையான ஆலோசனை இல்லாத டயட்டிங் முறைகள், திடீரென டயட்டை விடுவது, விரதம் இருப்பது , சரியாகச் சாப்பிடாமல் இருப்பது போன்றவை உங்கள் கருத்தரிப்பு வாய்ப்புகளைக் குறைத்து விடலாம். ஆகவே உணவு விஷயத்தில் கவனமாகவும் நேரத்திற்கு உண்பதையும் பழக்கிக்கொள்ளுங்கள்.

மனரீதியான கவலைகள் உங்கள் மாதவிலக்கு சுழற்சியைப் பாதிக்கலாம். அதனால் முடிந்த வரை நேர்மறையான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுங்கள். உதவி தேவைப்படும் தருணத்தில் தயங்காமல் உளவியல் மருத்துவரை நாடுங்கள்.

மேற்கண்ட வழிமுறைகள் மூலம் உங்கள் கருமுட்டை வெளியாகும் நாட்களைக் கண்காணியுங்கள்.

மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் உங்கள் மாதவிலக்கு சுழற்சி மற்றும் கருமுட்டை வெளியேறும் நாட்களை உங்களால் சுலபமாக அறிந்து கொள்ள முடியும். கலவியில் அதிக ஈடுபாடு கொண்டவராக நீங்கள் இருந்தால் கருவுறுதல் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். கருமுட்டை வெளியேறும் நாட்களை பற்றிய ஒரு தோராயமான கணிப்பு கூட உங்களைக் கருவுறச் செய்து விடும். மாதம் முழுதும் உடலுறவு வைத்துக் கொள்வது உங்களுக்கு கருவுறும் தன்மையை அதிகரிக்க வழி வகுக்கும்.

References

1. Julie E. Holesh and Megan Lord; Physiology, Ovulation; Treasure Island (FL): StatPearls Publishing (2019)
2. Female Cycle; University of Washington Courses
3. What are some possible causes of female infertility; NIH
4. Allen J Wilcox, David Dunson, and Donna Day Baird; The timing of the “fertile window” in the menstrual cycle: day specific estimates from a prospective study; The BMJ
5. Pregnancy – identifying fertile days; NIH
6. Martin Owen; Physiological Signs of Ovulation and Fertility Readily Observable by Women; Linacre Q (2013)
7. James P.Nott, et al.; The structure and function of the cervix during pregnancy; Translational Research in Anatomy Volume 2 (2016)
8. Natalie M. Crawford, et al.; A prospective evaluation of the impact of intermenstrual bleeding on natural fertility; NCBI (2017)
9. Mid-Menstrual Cycle Pain (Mittelschmerz); Harvard University (2019)
10. Breast Conditions in Young Women; University of Rochester Medical Center
11. Colin P. White et al.; Fluid Retention over the Menstrual Cycle: 1-Year Data from the Prospective Ovulation Cohort; Obstet Gynecol Int (2011)
12. Susan B. Bullivant et al.; Women’s sexual experience during the menstrual cycle: Identification of the sexual phase by noninvasive measurement of luteinizing hormone; The Journal of Sex Research
13. Devendra Singh and P. Matthew Bronstad; Female body odour is a potential cue to ovulation; Proceedings: Biological Sciences (2001), Royal Society
14. Pulse rate could help identify start of fertility windows, study shows; FIGO (International Federation of Gynaecology and Obstetrics) (2017)
15. I Katsikis et al.; Anovulation and ovulation induction; Hippokrati. (2006)
16. Progesterone Test; NIH (2018)
17. Evaluating Infertility; American College of Obstetricians and Gynecologists (2017)
18. The Practice Committee; Use of clomiphene citrate in infertile women: a committee opinion; American Society for Reproductive Medicine (2013)
Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles