கிரீன் டீயின் (பசுமை தேநீரின்) நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Green Tea Benefits, Uses and Side Effects in Tamil
கிரீன் டீ என்பது தற்காலத்தில், பலரும் நன்கு அறிந்த ஒரு பானமாக திகழ்கிறது; நவீன நாகரீகங்கள் நிறைந்த உயர்மட்ட நகர்ப்புறங்கள் முதல், சின்னஞ்சிறு கிராமங்கள் வரை அனைவராலும் அறியப்பட்ட ஒரு பானமாக, கிரீன் டீ விளங்குகிறது. இது கேமல்லியா சினென்சிஸ் இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது; உலகம் முழுவதும் உள்ள மக்களால், ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒரு பானமாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதை ஒருமனதாக ஏற்றுக்கொள்ள, இத்தேநீர் வழங்கும் ஆரோக்கிய நன்மைகளே முக்கிய காரணம்.
கிரீன் டீயை தமிழில் பசுமை தேநீர் என்று அழைப்பர். பசுமை தேநீர், ஏகப்பட்ட நன்மைகளை, பயன்களை கொண்டது. கிரீன் டீயில் காணப்படும் EGCG (epigallocatechin gallate) – எபிகல்லோகேட்டசின் கேலேட் எனும் பொருள் தான், கிரீன் டீ வழங்கும் எல்லா ஆரோக்கிய நன்மைகளுக்கும் முக்கிய காரணம் ஆகும். இந்த பதிப்பில் EGCG பற்றிய முழுமையான விவரங்களையும், பசுமை தேநீர் வழங்கும் நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள் முதலிவற்றை குறித்தும் படித்து அறியலாம்.
In This Article
கிரீன் டீயின் ஊட்டச்சத்து மதிப்பு- Nutritional Value of Green Tea in Tamil
இனிப்பு சுவை சேர்க்கப்படாத கிரீன் டீயில் ஜீரோ கலோரிகள் மட்டுமே உள்ளன, அதாவது கலோரிகளே இல்லை; கலோரிகளை கணக்கிட்டு எடுத்துக்கொள்ளும் நபர்கள் அருந்த, இது ஒரு அருமையான பானமாகும். கிரீன் டீயில், பற்பல நன்மைகளை வழங்கக்கூடிய ஃபிளவோனோல் மற்றும் பாலிஃபினால் வகைகள் ஆகியவை உள்ளன. மேலும் பசுமை தேநீரில் காணப்படும் முக்கிய பொருட்களாவன:
- எபிகேட்டசின்
- எபிகல்லோகேட்டசின்
- கல்லோகேட்டசின்
- கேலேட் வகையறாக்கள்
பசுமை தேநீரில் காணப்படும் முக்கிய பொருளான EGCG எனுப்படும் எபிகல்லோகேட்டசின் 3 கேலேட், மனித உடலுக்கு பற்பல நன்மைகளை வழங்குகிறது. கிரீன் டீயில் உள்ள இதர முக்கிய பொருட்களாவன:
- க்வேர்செட்டின்
- லினோயிக் அமிலம்
- அகினெனின்
- மெத்தில்சாந்தைன் (காஃபின், தியோபைலின், தியோபுரோமைன்)
- எண்ணற்ற அமினோ அமிலங்கள் மற்றும் என்சைம்கள் (20 சதவிகித இலைகள் புரதங்களில் இருந்து எடுக்கப்பட்டவை)
- கார்போஹைட்ரேட்கள் (செல்லுலோஸ், பெக்டின்கள், குளுக்கோஸ், சுக்ரோஸ், ஃப்ரக்ட்டோஸ்)
- மக்னீசியம், கால்சியம், மாங்கனீசு, இரும்பு, குரோமியம், காப்பர், ஜிங்க் ஆகிய தாதுக்கள்
- கரோட்டினாய்டுகள்
- லாக்டோன்கள் மற்றும் ஹைட்ரோ கார்பன்கள்
இதன் மூலம் பசுமை தேநீரில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி அறிந்து கொண்டோம். இப்பொழுது கிரீன் டீ அளிக்கும் பயன்கள் மற்றும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
கிரீன் டீயின் நன்மைகள்- Benefits of Green Tea in Tamil
பசுமைத்தேநீர் எனும் கிரீன் டீயின் பயன்கள் ஏராளம்; இதன் பயன்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள எல்லா நன்மைகளையும் ஒவ்வொன்றாக பார்த்து அறியலாம்.
கிரீன் டீ அளிக்கும் சரும நன்மைகள்- Skin Benefits of Green Tea in Tamil
பசுமை தேநீரில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் பயன்படுகின்றன; கருவளையங்கள், கண்கள், வயதான தோற்றம் முதலிய பிரச்சனைகளுக்கு, கிரீன் டீ ஒரு நல்ல தீர்வாக அமைந்துள்ளது. கிரீன் டீ வழங்கும் சரும நன்மைகளாவன:
நன்மை 1: தோல் ஈரப்பதமூட்டி
சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க பசுமை தேநீர் பயன்படுகிறது; சருமத்தில் படியும் தூசி, மாசுக்களை விலக்கி, தோலில் காணப்படும் நீர் மற்றும் பிற எண்ணெய் வகைகளை உறிஞ்ச கிரீன் டீ பயன்படுகிறது.
தோலை ஈரப்பதத்துடன் வைக்க கிரீன் டீயில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் அதிகம் உதவுகின்றன.
நன்மை 2: முகப்பரு/ பருக்கள்
100 கிராம் கிரீன் டீ இலைகளை, அரை லிட்டர் நீரில் கலந்து கொண்டு, 30 முதல் 40 நிமிடங்கள் இக்கலவையை, அறை வெப்பநிலையில் ஊற வைக்கவும். பின்னர், நீரை வடித்து கிரீன் டீ இலைகளை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கவும்; இந்த இலைகளை நேரடியாக முகத்தில் தடவி, பயன்படுத்தி கொள்ளலாம். இது முகத்தில், சருமத்தில் ஏற்படும் முகப்பரு, பருக்கள் போன்றவற்றை போக்கி, அவை மீண்டும் வராமல் பாதுகாக்க உதவும்.
கிரீன் டீ இலைகளை சருமத்திற்கு டோனர் போன்று பயன்படுத்தலாம்; இதற்கு கிரீன் டீ இலைகளை சருமத்தில் பயன்படுத்திய பின், ஐஸ்கட்டிகளை கொண்டு சருமத்தில் தேய்க்கவும். இது சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
கிரீன் டீ இலைகள், சருமத்திற்கு ஒரு சிறந்த தளர்த்தியாக பயன்படுகிறது; 3 தேக்கரண்டி யோகர்ட், 1 தேக்கரண்டி கிரீன் டீ இலைகள் முதலியவற்றை நன்கு கலந்து அதை சருமத்திற்கு பயன்படுத்தி, 5 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும். பிறகு, மிதமான வெந்நீர் கொண்டு சருமத்தை கழுவவும்; பசுமை தேநீரில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் சருமத்தை சுத்தப்படுத்தி, முகப்பருக்களை போக்க உதவுகின்றன.
நன்மை 3: வயது முதிர்ச்சியை தடுக்கும்/ சுருக்கங்கள்
பசுமை தேநீரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகளை போக்கி, வயதாவதை தடுக்க உதவுகின்றன. கிரீன் டீ மற்றும் தேன் சேர்த்து தயாரிக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்க்கை வயது முதிர்ச்சி ஏற்படுவதை தடுக்க உபயோகிக்கலாம்; இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின் வெந்நீரால் கழுவினால், நல்ல மாற்றங்கள் உருவாகும்.
கிரீன் டீ மற்றும் தேனில் நிரம்பியுள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் சருமத்தை தூய்மைப்படுத்தி, சருமத்தின் தன்மையை மேம்படுத்தி, வயது முதிர்ச்சியை தடுக்க உதவுகின்றன.
நன்மை 4: வெங்குரு/ உடலின் கருமை நிறத்தை அகற்றுதல்
பசுமை தேநீர் ஒரு இயற்கை சன்ஸ்கிரீன் ஆகும்; இது சருமத்தில் வெங்குரு மற்றும் தடிப்புகளை ஏற்படுத்தும், இறந்த – தேவையற்ற செல்கள் உருவாவதை தடுக்க பயன்படுகிறது.
அரை கப் கிரீன் டீ இலைகளை, இரண்டு கப் நீரில் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில், இக்கலவையை கொதிக்க வைக்கவும்; திரவத்தை அறை வெப்பநிலையில் ஆற வைத்து, ஒரு காட்டன் பஞ்சு கொண்டு திரவத்தில் ஒரு சிறு பாகத்தை எடுத்து – அதில் பஞ்சை நனைத்து சருமத்திற்கு பயன்படுத்தவும்; எஞ்சிய திரவத்தை பிற்கால பயன்பாட்டிற்காக, குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கவும்.
நன்மை 5: கருவளையங்கள்
கிரீன் டீயை பயன்படுத்தி கருவளையங்கள், வீங்கிய கண்கள் முதலிய குறைபாடுகளை எளிதில் சரிப்படுத்தலாம்; இதற்கு ஒரு சில கிரீன் டீ பைகள் மட்டுமே தேவை. பயன்படுத்திய கிரீன் டீ பைகளை, சருமத்தில் கருவளையங்கள், கண்களில் வீக்கம் உள்ள பகுதியில் வைத்து ஒத்தடம் கொடுத்தால், கிரீன் டீயிலிருக்கும் காஃபின் கண்களின் வீக்கத்தை குறைக்க உதவும்; மேலும் கண்களுக்கு கீழான இரத்த குழாய்களின் விரிவாக்கத்தை குறைத்து, கருவளையங்களை போக்க உதவும்.
கிரீன் டீ அளிக்கும் கூந்தல் நன்மைகள்- Hair Benefits of Green Tea in Tamil
பசுமை தேநீரில் கூந்தலுக்கு நன்மைகளை அளிக்கும், பல சாதகமான விஷயங்கள் நிறைந்துள்ளன; இத்தேநீரில் காணப்படும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், ஆரோக்கிய உறுப்புகள், உச்சந்தலையின் நிலையை மேம்படுத்தி, வழுக்கையை தடுத்து, பலமான கூந்தலை பெற உதவுகின்றன. இங்கு கிரீன் டீ வழங்கும் கூந்தல் பயன்களை பற்றி பார்க்கலாம்.
நன்மை 1: முடி வளர்ச்சி
முடி வளர்ச்சிக்கு தடங்கலை ஏற்படுத்தி, முடி உதிர்வை உண்டாக்கும் DHT எனும் டைஹைட்ரோ-டெஸ்டோஸ்டிரோனின் வளர்ச்சியை தடுக்க கிரீன் டீ உதவுகிறது; பசுமை தேநீரில் இருக்கும் முக்கிய உறுப்புகள் டெஸ்டோஸ்டிரானுடன் வினை புரிந்து, இரத்தத்தில் டெஸ்டோஸ்டிரானின் அளவை சமநிலையில் வைக்க உதவும் மற்றும் இவை 5 ஆல்பா ரெடுக்டோஸுடன் வினைபுரியாமல், DHT ஆக மாறும் தன்மை கொண்டவை. இதில் இருக்கும் ஆன்டி செப்டிக் பண்புகள், பொடுகு மற்றும் சொரியாசிஸ் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன; அழற்சியை குறைப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது.
முடி வளர்ச்சியை தூண்டி, வழுக்கை ஏற்படுவதை தடுத்து, முடியை மிருதுவாக்க கிரீன் டீ பயன்படுகிறது; இதிலிருக்கும் பாலிஃபினால்கள், வைட்டமின்கள் இ மற்றும் சி ஆகியவை கவர்ச்சிகரமான மிளிரும் கூந்தலை பெற உதவுகின்றன. அரை லிட்டர் நீரில் 3 முதல் 4 கிரீன் டீ பைகளை போட்டு வைக்கவும்; தலைக்கு ஷாம்பு போட்டு, கண்டிஷனரை பயன்படுத்தி குளித்த பின், கடைசியாக கூந்தலை அலச இந்த கிரீன் டீ நீரை பயன்படுத்தவும். ஆனால், இதை செய்யும் முன் ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
கிரீன் டீ அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்- Health Benefits of Green Tea in Tamil
இன்றைய நாளில், கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை அளிக்கும் விதத்தில் நம்மிடையே முக்கிய இடம் பெற்றுள்ளது; இந்த பசுமை தேநீரினால், ஆரோக்கியமான இதயம், உடல் எடை குறைதல், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோயிலிருந்து விடுதலை என பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. கிரீன் டீ வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
நன்மை 1: உடல் எடை குறைதல்
பசுமை தேநீரில் காணப்படும் EGCG, உடல் எடையை குறைக்க உதவுகிறது; இத்தேநீரில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது. கொழுப்பு செல்களிலிருந்து கொழுப்பினை நகர செய்ய இந்த தேநீர் பயன்படுகிறது; கிரீன் டீயில் இருக்கும் சில முக்கிய உறுப்புகள் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இத்தேநீரை உடற்பயிற்சி செய்யும் பொழுது பருகினால், அது கொழுப்பை விரைவில் எரிக்க உதவும்; ஒரு UK ஆய்வில், மிதமான உடற்பயிற்சிகளை செய்கையில் கிரீன் டீயை பருகுவது, கொழுப்பு ஆக்சிடேஷனை அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது (1).
பசுமை தேநீர் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது (2). இது ஆற்றல் தொடர்பான வளர்சிதை மாற்ற ஜீன்களை மாற்றி அமைக்கிறது.
நன்மை 2: நியாபக சக்தி
பச்சை தேயிலை தேநீரில், காபியை போல் அதிகளவு இல்லாமல், குறிப்பிட்ட அளவு காஃபின் அடங்கியுள்ளது; இக்காஃபினால், எந்த ஒரு மோசமான விளைவுகளும் ஏற்படாது. காஃபின் மூளையில் தடுப்பு நரம்புக்கடத்தியாக செயல்படும் அடினோசைனின் செயல்பாட்டினை முடக்குகிறது; இதன் விளைவாக நியூரான்களின் உருவாக்கம் மேம்பட்டு, அது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது (3).
கிரீன் டீயில் இருக்கும் காஃபின், இரத்த-மூளைக்கிடையே உள்ள தடையை மீறி அறிவாற்றலை கூர்மையாக்கும் L – தியானின் எனும் அமினோ அமிலம் ஆகும் (4). இந்த அமினோ அமிலம் கவலை கோளாறுகளை போக்கும் தடுப்பு நரம்பியக்கடத்தியாக செயல்படும் GABA -வின் செயல்பாட்டினை அதிகரிக்கிறது (5).
பசுமை தேநீரிலிருக்கும் காஃபின் மற்றும் L – தியானின் ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து நல்ல பலன்களை அளிக்கவல்லது; இது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சக்தி வாய்ந்த அமைப்பு ஆகும் (6). L – தியானின், காபியில் இருக்கும் சாதாரண காஃபினால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளை தடுத்து நிறுத்தி, நியாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
நன்மை 3: வாய் ஆரோக்கியம்
கிரீன் டீ குடிக்கும் நபர்களின் வாய் ஆரோக்கியம் மற்றவர்களை காட்டிலும் மேம்பட்டு இருப்பதாக, ஆய்வு படிப்பினைகள் கருத்து தெரிவிக்கின்றன; பிறிதொரு இந்திய படிப்பினையில், பசுமை தேநீர் பற்களின் ஆரோக்கியத்திற்கு எத்தகு நன்மை பயக்கும் என்பது விளக்கப்பட்டுள்ளது. பற்களை சுற்றிய பகுதிகளில் நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து, பல் சொத்தை மற்றும் அழற்சியை தடுக்க இத்தேநீர் பயன்படுகிறது. வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த, பல படிப்பினைகளில் கிரீன் டீ பயன்படுத்தப்பட்டுள்ளது (7).
பசுமை தேநீர், வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஏற்படுவதை தடுத்து, பல் சொத்தை ஏற்படாமல் பாதுகாக்கிறது; இத்தேநீரில் இருக்கும் பாலிஃபினால்கள், சர்க்கரை உணவுகளில் இருக்கும் குளுக்கோசில்ட்ரான்ஸ்ஃபெரஸ் பாக்டீரியாக்களுடன் போராடி, அவற்றை அழிக்கிறது (8).
பச்சை தேயிலை தேநீரில் ஃபுளூரைடும் உள்ளது – இது பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது; மேலும் இத்தேநீர், பற்குழிகளில் காணப்படக்கூடிய ஸ்ட்ரெப்டோகாக்கஸ் முடன்ஸ் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகிறது.
நன்மை 4: நீரிழிவு நோய்/ இரத்த சர்க்கரை
சர்க்கரை நோயின் அறிகுறிகளை போக்க, உடலில் காணப்படும் சர்க்கரையை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்த கிரீன் டீ பயன்படுகிறது; மேலும் இது சர்க்கரை நோயாளிகளில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது மற்றும் கிரீன் டீயில் இருக்கும் பாலிஃபினால்கள் உடலின் குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்தி, நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
ஒரு கொரியன் ஆய்வில், 6 கப் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் கிரீன் டீயை பருகுவது, 33 சதவீத அளவிற்கு டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது (9). ஆனால், ஒரு நாளைக்கு 6 கப் கிரீன் டீ பருகுவது பாதுகாப்பானதா என்று மருத்துவரிடம் ஒரு முறை கலந்தாலோசித்து கொள்வது நல்லது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க கிரீன் டீ அதிகம் உதவுகிறது என்பது ஒரு சுவாரசியமான தகவல் ஆகும். ஸ்டார்ச் சத்தை உட்கொள்வது, எளிய சர்க்கரையை உடைத்து, இரத்தத்தால் உறிஞ்சுக்கொள்ளப்படும் வகையிலான அமைலாஸ் எனும் என்சைம் உருவாக உதவும்; கிரீன் டீ அமைலாஸ் செயல்பாட்டினை தடுத்து, இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சி எடுத்துக்கொள்வது தவிர்க்க உதவும் (10).
நன்மை 5: கொலஸ்ட்ரால்
பசுமை தேநீரில் இருக்கும் சில முக்கிய பொருட்கள் உடலில் கொழுப்பு சேராமல் தடுக்க உதவுகின்றன; உடலில் காணப்படும் கெட்ட கொழுப்புகளை அழித்து, உடலின் கொழுப்பு அளவை குறைக்க, கிரீன் டீ பயன்படுகிறது.
கிரீன் டீயிலிருக்கும் கேட்டசின் சத்துக்கள், கேலேட் அமிலம் உடலின் நல்ல கொழுப்புகளை சீரமைத்து, கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றன.
நன்மை 6: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
கிரீன் டீயில் இருக்கும் கேட்டசின்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன; இந்த தேநீர் உடலிலிருக்கும் ஆக்சிடென்ட்டுகள், இறந்த – தேவையற்ற செல்களுக்கு எதிராக போராடி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது (11).
பசுமை தேநீரில் இருக்கும் EGCG, T – செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்த, தற்செயலாக ஏற்படும் நோயெதிர்ப்பு நோய்களை தடுக்க உதவுகிறது (12).
நன்மை 7: செரிமானம்
பச்சை தேயிலை தேநீரில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன; கிரீன் டீயிலுள்ள கேட்டசின்கள் செரிமான என்சைம்களின் செயல்பாட்டை குறைக்கின்றன. இதன் மூலம், குடல் உறுப்புகள் அதிக கலோரிகளை உறிஞ்சுவது தடுக்கப்படும் – இது உடல் எடையை குறைப்பை மேம்படுத்த உதவுகிறது.
கிரீன் டீயிலுள்ள EGCG, பெருங்குடல் அழற்சி அறிகுறியை மேம்படுத்த உதவுகிறது; குடல் பகுதியின் வழித்தடத்தில், பெருங்குடல் அழற்சி ஒரு முக்கிய குறைபாடாக திகழ்கிறது. செரிமானத்தை மேம்படுத்த தேவையான முக்கிய காரணிகளான, வைட்டமின்கள் பி, சி, இ ஆகியவற்றை கிரீன் டீ, உடலுக்கு அளிக்கிறது. இத்தேநீர் குடல் புற்றுநோய் ஏற்படும் விகிதத்தையும் குறைக்க உதவுகிறது (13).
நன்மை 8: அல்சைமர் நோய்
கிரீன் டீ, மூளையில் ஏற்படக்கூடிய தீவிர குறைபாடுகளான அல்சைமர், பார்க்கின்சன் நோய்களை குணப்படுத்த அல்லது தடுக்க உதவுகிறது; வாரத்திற்கு ஆறு முறை கிரீன் டீ குடிக்கும் நபர்களில் மூளை தொடர்பான குறைபாடு ஏற்படுவது மிகவும் அரிது என சமீபத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது (14). வயதாவதால் மனசோர்வினால் ஏற்படும் பைத்திய குறைபாட்டினை தவிர்த்து, நியாபக சக்தியை அதிகரிக்க கிரீன் டீ உதவுகிறது.
நன்மை 9: புற்றுநோய்
தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் கருத்துப்படி, கிரீன் டீயிலுள்ள பாலிஃபினால்கள் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளன; பசுமை தேநீரில் காணப்படும் மிக முக்கியமான பொருளான EGCG (epigallocatechin-3-gallate) புற்றுநோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. மேலும் தேநீரில் இருக்கும் பிற பாலிஃபினால்கள் இறந்த – தேவையற்ற செல்களை அழித்து, ஆக்சிஜன் சிற்றினத்தால் ஏற்படக்கூடிய DNA சேதத்திலிருந்து உடல் செல்களை பாதுகாக்க உதவுகிறது; மேலும் கிரீன் டீயிலுள்ள பாலிஃபினால்கள் நோயெதிர்ப்பு அமைப்பின் இயக்கத்தை மாற்றியமைத்து மேம்படுத்த உதவுகின்றன (15).
பிறிதொரு ஆய்வு படிப்பினையின் கருத்துப்படி, கிரீன் டீ புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை தடுக்க உதவுகின்றன; இதில் நுரையீரல், தோல், மார்பக, கல்லீரல், மலக்குடல், கணைய புற்றுநோய்களும் அடங்கும். பசுமை தேநீரில் இருக்கும் சில முக்கிய உறுப்புகள், புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுத்து, புற்றுநோய் பாதிப்பிலிருந்து விரைவில் விடுபட உதவுகிறது (16).
கிரீன் டீயில் உள்ள EGCG, உடலின் ஆரோக்கியமான செல்களை தவிர்த்து, சேதமடைந்த செல்களை மட்டும் அழிக்கிறது(3). புற்றுநோய் சிகிச்சையில், ஆரோக்கியமாக இருக்கும் செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் செல்களாக மாறும்பொழுது ஏற்படும் வலியை குணப்படுத்த உதவுகிறது; ஆராய்ச்சியின் படி, தினமும் 4 கப் கிரீன் டீ குடிப்பது புற்றுநோயை குணப்படுத்த உதவும் (17).
நன்மை 10: இரத்த அழுத்தம்
நீண்ட காலத்திற்கு கிரீன் டீயை பருகி வருவது, இரத்த அழுத்த அளவுகளை சரியான – மேம்பட்ட அளவில் வைக்க உதவுகிறது; ஆய்வறிக்கைகள், 3 முதல் 4 கப் கிரீன் டீ பருகுவது இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைக்க உதவுவதாக கூறுகின்றன. ஒரு ஆய்வு படிப்பினையில், கிரீன் டீ குடித்து இரத்த அழுத்த அளவு குறைந்து இருந்தால், அது கரோனரி மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை 5 சதவீதம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை 8 சதவீதம் என்ற அளவில் குறைக்க வழிவகுக்கிறது (18).
பொதுவாக சிறுநீரகத்தில் உருவாகும் ஆஞ்சியோடென்ஸின் – கன்வெர்ட்டிங் என்சைம் (or ACE), காரணமாக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது; இரத்த அழுத்தத்திற்கு பரிந்துரைக்கப்படும் பெரும்பாலான மருந்துகள் ACE உருவாக்கத்தை தடுத்து நிறுத்த முயலும். ஆனால், கிரீன் டீ ஒரு இயற்கையான ACE மட்டுப்படுத்தியாக செயல்படுகிறது; மேலும் இது இந்த என்சைமின் மீது செயல்பட்டு, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது (19).
நன்மை 11: ஆர்த்ரிடிஸ்/ பலமான எலும்புகள்
EGCG -இன் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றன; உடலில் அழற்சி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற குறைபாடுகளை ஏற்படுத்தும் ஒருசில மூலக்கூறுகளின் உருவாக்கத்தை வரம்புக்குள் வைக்க உதவுகிறது. எலும்பு மற்றும் குருத்தெலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கிரீன் டீ பெரிதும் பயன்படுகிறது.
ஆர்த்ரிடிஸ் நிறுவனத்தின் கருத்துப்படி, ஆர்த்ரிடிஸ் குறைபாட்டினை சரிப்படுத்த தேவையான நன்மைகளை வழங்கும் வைட்டமின்கள் சி மற்றும் இ – இவற்றை விட பசுமை தேநீரிலுள்ள EGCG, 100 மடங்கு அதிக பயன் அளிக்கக்கூடியது ஆகும் (20).
பச்சை தேயிலை தேநீரிலுள்ள EGCG, பிற எந்த செல்களின் செயல்பாட்டையும் பாதிக்காமல், முடக்கு வாதத்தை ஏற்படுத்தக்கூடிய அழற்சி நிலைகளை குறைக்க உதவுகிறது; இது எந்தவொரு பக்க விளைவுகளும் இன்றி ஆர்த்ரிடிஸ் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
நன்மை 12: நிலைத்தன்மையை அதிகரிக்கும்
ஒரு ஆய்வு படிப்பினையை ஆராய்ந்த ஜப்பானியர் டயட், வாழ்க்கையின் நலம் மேம்பட, கிரீன் டீ உடல் நலத்தை மேம்படுத்தி உதவுகிறது; பசுமை தேநீர் உடல் உறுப்புகளுக்கு வழங்கும் ஒவ்வொரு நன்மையும், மனித உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாழ்நாட்களை அதிகரிக்க உதவுகிறது.
பிறிதொரு அமெரிக்க ஆய்வறிக்கையில், இத்தேநீர் வாழ்நாளின் நிலைத்தன்மையை அதிகரிக்க, கால்சியம் சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் – ஏனெனில், பசுமை தேநீரிலுள்ள காஃபின் உடலில் கால்சியம் இழப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு என்று கூறப்பட்டுள்ளது (21). மேலும் ஒரு ஸ்டான்ஃபோர்ட் ஆய்வறிக்கை, கிரீன் டீயை தொடர்ந்து குடிப்பவர்களில் வயது முதிர்ச்சியடையும் பருவத்தில் ஏற்படும் எக்குறைபாடுகளும் ஏற்படுவதில்லை அல்லது ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு; பசுமை தேநீரை குடிப்பவர்களில், இயக்க செயல்பாடு குறைபாடு ஏற்படுவது மிகவும் குறைவு தான் என்று எடுத்துரைக்கிறது (22).
நன்மை 13: இதய நோய்கள்
ஹார்வர்ட் மருத்துவ பள்ளி, இதயத்தை பாதுகாத்து, இதய நோய்களை தடுக்க கிரீன் டீ உதவுவதாக கருத்து தெரிவித்துள்ளது. இதய நோய்களை உண்டாக்கும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க பசுமை தேநீர் உதவுகிறது; பெரும்பாலான படிப்பினைகள், கிரீன் டீ கேப்ஸுல்கள் கூட கிரீன் டீ வழங்கும் அதே நன்மைகளை வழங்குவதாக கருத்து தெரிவித்துள்ளன (23).
ஆக்சிஜன் சிற்றின வினைகள் மற்றும் மாரடைப்பை தடுக்க, இரத்தத்தின் ஆன்டி ஆக்சிடென்ட் திறனை அதிகரிக்க கிரீன் டீ உதவுகிறது(6). அதாவது, கிரீன் டீ குடிப்பவர்களில், 31 சதவீதம் இதய நோய்கள் ஏற்படும் பாதிப்பு குறைவு என்று கூறப்படுகிறது (24).
இதய நோயை ஏற்படுத்த முக்கிய காரணமான, தமனிதடிப்பு எனும் அதிரோஸ்கிளீரோசிஸ் பாதிப்பை தடுக்க, கிரீன் டீயிலுள்ள கேட்டசின்கள் உதவுகின்றன; கிரீன் டீயின் கேட்டசின்கள், இதய நோய் ஏற்படும் வாய்ப்பை தடுக்கின்றன (25). மேலும் இது குறித்து ஆராயப்பட்டு வெளியிடப்பட்ட படிப்பினைகளில், கிரீன் டீ நல்ல கொழுப்புகளை பாதிக்காமல், LDL எனும் கெட்ட கொழுப்புகளை போக்க உதவுகிறது.
நன்மை 14: மனஅழுத்தம்
ஒரு ஆய்வு படிப்பினையின் கருத்துப்படி, ஒரு நாளைக்கு 4 கப்களுக்கு மேல் பசுமை தேநீர் பருகுவது, அந்நாளில் அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவுவதாக கூறப்படுகிறது. இந்த செயல்பாடு, கிரீன் டீயிலிருக்கும் L-தியானின் அமினோ அமிலத்தால் ஏற்படுகிறது; இந்த அமினோ அமிலம் செரோடோனின் மற்றும் டோபமைன் ஆகிய வேதிப்பொருட்களை வெளியிட்டு, மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் அறிகுறிகளுக்கு எதிராக போராட உதவுகிறது.
பிறிதொரு படிப்பினையில், எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், கிரீன் டீ மனஅழுத்தத்திற்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது தெளிவாகியுள்ளது (26). மற்றும் கிரீன் டீயில் இருக்கும் காஃபின் மனஅழுத்தத்தை குணப்படுத்த உதவுவதோடு, வருத்தம் மற்றும் கவலை உணர்விலிருந்தும் நிவாரணம் பெற உதவுகிறது.
கிரீன் டீயின் வகைகள்- Types of Green Tea in Tamil
கிரீன் டீயில் பல்வேறுபட்ட வகைகள் காணப்படுகின்றன. அவையாவன:
- ஜாஸ்மின் கிரீன் டீ
- மரோக்கன் புதினா கிரீன் டீ
- ஜென்மைக்கா கிரீன் டீ
- டிராகன்வெல் கிரீன் டீ
- ஹௌஜிச்சா கிரீன் டீ
- குகிச்சா கிரீன் டீ
- சென்ச்சா கிரீன் டீ
- ஜியோகுரோ கிரீன் டீ
- மாட்ச்சா கிரீன் டீ
- பி லு சுன் கிரீன் டீ
கிரீன் டீயை தயாரிப்பது எப்படி?- How to Prepare Green Tea in Tamil
பசுமை தேநீரை தயாரிப்பது மிக எளிதான காரியம் தான்; இத்தேநீரை தயாரிக்க எளிய பொருட்கள் மட்டுமே தேவைப்படும். பசுமை தேநீரை தயாரிக்க, ஒரு காலியான கப்பில் தேநீர் வடிகட்டியை வைத்து, அதில் பச்சை தேயிலை இலைகளை இட்டு, பின் வெந்நீரை ஊற்றி 2 முதல் 3 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்; தேநீர் நன்கு இறங்கிய பின், அதை பருகவும்.
அல்லது கிரீன் டீ பொடியை வாங்கி, அதை நீரில் இட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி கிரீன் டீயை தயாரிக்கலாம். இல்லையேல் கிரீன் டீ பைகளை வாங்கி, அதை வெந்நீர் நிறைந்த கப்பில் இட்டு பசுமை தேநீரை தயாரிக்கலாம். கிரீன் டீயை எரிவாயு அடுப்பு, அடுப்பு என எதன் உதவியும் இன்றி, சாதாரண தண்ணீர் வடிகட்டியில் இருந்து வரும் சூடு நீர் கொண்டே தயாரித்து விடலாம்.
கிரீன் டீயை எப்பொழுது அருந்த வேண்டும்?- When to Drink Green Tea in Tamil
கிரீன் டீ அருந்துவது நல்லது என்பதற்காக, எல்லா நேரங்களிலும் அருந்த கூடாது; உணவு உண்ட பின் 30 முதல் 40 நிமிடங்களுக்கு பிறகு தான் பசுமை தேநீரை பருக வேண்டும். சாப்பிட்ட பிறகு உடனடியாக பசுமை தேநீரை பருகுவது உடலில் இரும்புச்சத்து இழப்பை ஏற்படுத்தலாம்.
காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீயை குடிக்கக்கூடாது; மீறி குடித்தால், உடலில் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் கிரீன் டீயை குடிக்க கூடாது. மேலும் இரவு உறங்கும் முன் பசுமை தேநீரை குடித்து விட்டு உறங்க செல்லக்கூடாது. கிரீன் டீயை உணவு உண்பதற்கு முன் 30 முதல் 40 நிமிடங்களுக்கு முன்னதாக கூட பருகலாம்; உணவு உண்ணும் முன்னரும், உண்ட பின்னரும் தேநீர், பழச்சாறு என எதை பருகவும் ஒரு குறிப்பிட்ட அளவு இடைவெளி அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
கிரீன் டீயின் பக்க விளைவுகள்- Side Effects of Green Tea in Tamil
இதுவரை, கிரீன் டீ வழங்கிய பயன்களை படித்து அறிந்தோம்; நல்லது – கெட்டது என இரண்டும் அடங்கியது தான் வாழ்க்கை. இது வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் கூட பொருந்தும். இப்பொழுது கிரீன் டீயினால் பற்பல நன்மைகள் ஏற்பட்டாலும், இதனால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படத்தான் செய்கின்றன. பசுமை தேநீரால் ஏற்படும் பக்க விளைவுகளாவன:
- அதிகப்படியான அளவு நோய்க்குறைபாடு
ஒரு நாளைக்கு 4 முதல் 6 கப் என கிரீன் டீ குடிப்பது தலை வலி, பதற்றம், உறக்க பிரச்சனைகள், வாந்தி, சீரற்ற இதயத்துடிப்பு, தலைசுற்றல், வலிப்பு போன்ற நோய்க்குறைபாடுகளை ஏற்படுத்தி விடலாம்; இந்த பக்க விளைவுகள், கிரீன் டீயிலிருக்கும் காஃபினால் ஏற்படுகின்ற. இந்த பக்க விளைவுகள் குழந்தைகளில் அதிக தீவிரமாக ஏற்படலாம்.
- கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்
கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், ஒரு நாளைக்கு 2 கப்களுக்கு மேல் கிரீன் டீ பருகுவது பாதுகாப்பானது அல்ல; மருத்துவரிடம் ஒருமுறை கலந்தாலோசித்த பின், இதை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது.
- உதிரப்போக்கு குறைபாடுகள்
பசுமை தேநீரில் உள்ள காஃபின் உதிரப்போக்கை அதிகரிக்கலாம்; ஆகவே, உதிரப்போக்கு குறைபாடு உள்ள நபர்கள் இதை எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.
- கண் பிரச்சனைகள்
கிரீன் டீயை குடிப்பதால், கண்களில் அழுத்தம் ஏற்படலாம்; எனவே, கண் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள், கிரீன் டீயை முறையான மருத்துவ ஆலோசனைக்கு பின் எடுத்துக்கொள்வது நல்லது.
- கல்லீரல் நோய்
கிரீன் டீ சாறுகள், கல்லீரலில் எண்ணற்ற சேதங்களை ஏற்படுத்தலாம்; ஆகவே, கல்லீரல் குறைபாடுகள் உள்ளவர்கள், இதை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்.
கிரீன் டீ, மனித உடலுக்கு அற்புதமான நன்மைகளை வாரி வழங்குகிறது; கிரீன் டீ உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதோடு, சருமம், கூந்தல் என பல அழகு சார்ந்த நன்மைகளையும் அள்ளி வழங்குகிறது. பசுமை தேநீர் வழங்கும் நன்மைகளை பற்றி மேற்கண்ட பத்திகளில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தகுந்த மருத்துவ ஆலோசனையை மேற்கொண்ட பின், கிரீன் டீயை முயற்சித்து பாருங்கள்! இத்தேநீர் வழங்கும் அருமையான நன்மைகளை பெற்று வாழ்க்கையில் நலமுடன் வாழுங்கள்!
இந்த பதிப்பு தங்களுக்கு உதவியாக இருந்ததா? கிரீன் டீயை நீங்கள் பயன்படுத்தினீரா? உங்கள் அனுபவம் எப்படி இருந்தது போன்ற தகவல்களை எங்களுடன் பகிருங்கள்! பதிப்பு பயன் தரும் வகையில் இருந்தால், இதை பலரும் படித்து அறிய பரப்புங்கள்..!
Community Experiences
Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.