பீரியட்ஸ் என்றாலே பயம் வருகிறதா ? மாத விலக்கு வலிகளை நீக்கும் வீட்டு வைத்தியங்கள்

Written by
Last Updated on

மாதாமாதம் குறிப்பிட்ட தேதி வந்தாலே ஒரு சிலருக்கு உள்ளுக்குள் பயம் வருகிறதா ? மாதவிலக்கு ஆரம்பிக்கும் முன்னும் பின்னும் மற்றும் மாதவிலக்கு நாட்களிலும் ஒரு சில வலிகளால் தொடர்ந்து அவதிப்படுகிறீர்களா? இவற்றை எல்லாம் நானும் அனுபவித்திருக்கிறேன். ஆனால் இன்று என்னுடைய 40களில் கூட மிக ஆரோக்கியமான முறையில் மாதவிலக்கினை நான் எதிர்கொள்கிறேன். இதற்கான சில ரகசியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மாதவிலக்கு அல்லது மாதவிடாய் வலி ஏற்பட காரணங்கள்

மாதவிலக்கு வரும்போது உங்கள் கருப்பையின் தசைகள் சுருங்கி, கட்டமைக்கப்பட்ட உதிரம் சிந்த உதவுகிறது. சில நேரங்களில் நீங்கள் நரம்பு பிடிப்பை அனுபவிப்பீர்கள், அவை உங்கள் தசைகள் இறுகுவதால் ஏற்படலாம். சில பெண்கள் குமட்டல், வாந்தி, தலைவலி அல்லது வயிற்றுப்போக்கு போன்றவற்றை அனுபவிக்கலாம். மேலும் சில அறிகுறிகளும் ஏற்படலாம்.

  • அதிக இரத்த போக்கு
  • உங்கள் முதல் குழந்தையைப் பெற்றிருத்தல்
  • 20 வயதிற்குட்பட்டவர், அல்லது உங்கள் மாதவிலக்கு ஆரம்பித்திருக்கும் சமயம்
  • உங்கள் கருப்பையை பாதிக்கும் ஹார்மோன் புரோஸ்டாக்லாண்டின்களின் அதிக உற்பத்தி அல்லது உணர்திறன் கொண்டிருத்தல்
  • உங்கள் கருப்பையில் ஏற்படும் வளர்ச்சிகள், எண்டோமெட்ரியோசிஸ் (அசாதாரண கருப்பை திசு வளர்ச்சி) மற்றும் பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகளின் பக்க விளைவுகள்

போன்றவையும் மாதவிலக்கு நேரங்களை மிகவும் சோதனைக்குள்ளாக்குகிறது

மாதவிலக்கு வலி நீக்க பாட்டி வைத்தியங்கள்

1. உளுந்து

உளுந்து மாமிசத்திற்கு இணையான புரதச் சத்து கொண்ட ஒரு தானியம். பெண்கள் வயதுக்கு வரும் சமயங்களில் உளுந்து கஞ்சி செய்து கொடுத்தால் அவர்களுக்கு இடுப்பெலும்பு பலமாகும். ஒரு பெண்ணிற்கு இடுப்பெலும்பு மிக முக்கியமானது. மனித சமூகத்தை அழியாமல் காப்பதில் பெண்களுக்கு தனி பங்கு உண்டு. மாத விலக்கு நாட்களில் அல்லது அதற்கு முன் 2 நாள்களுக்கு உளுந்து கஞ்சி அல்லது உளுந்து களி செய்து சாப்பிடலாம். உடனடி பலன் கிடைக்கும் ((1), (2)).

2. துவர்ப்பு உணவுகள்

துவர்ப்பான உணவுகள் கர்ப்பப்பையை பலமாக்குகின்றன. உடலின் நச்சுக்கள் வெளியேற துவர்ப்பு சுவை பெரிதும் உதவுகிறது. மாதுளம்பழ தோல், வாழைப்பூ மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட உணவுகளை நீங்கள் சேர்த்துக் கொள்வது உங்கள் மாதவிலக்கு சமயங்களை வலி இல்லாததாக மாற்றி விடும் ( (3)).

3. உலர் பருப்புகள்

சக்தியை அதிகரிக்க உலர் பருப்புகள் பெரிதும் உதவுகின்றன. பாதாம் பருப்பு , உலர் பருப்பு, மற்றும் அக்ரூட் பருப்பு போன்றவற்றை மாதவிலக்கு காலங்களில் எடுத்துக் கொள்வது உங்கள் ஆற்றலை அதிகரிப்பதால் வலிகளை தாங்கும் தெம்பு வரும். இதனால் வலி ஏற்பட்டாலும் அதனை சுலபமாக கடந்து விட முடியும் ( (4)).

4. கறிவேப்பிலை

கறிவேப்பிலையை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்றவை குறையும்.

5. விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் எப்போதும் ஒரு அற்புதமான மருந்தாக செயல்படுகிறது. மாதவிலக்கு காலங்களில் தொப்புளில் சிறிது விளக்கெண்ணெய் வைப்பது வயிற்று வலி, சூட்டு வலி போன்றவை நீங்கும் ( (5)).

6. சிவப்பு அரிசி புட்டு

ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் பெண்கள் சிவப்பரிசி புட்டு போன்ற உணவை வாரம் ஒருமுறை எடுத்துக் கொள்வது ரத்தப்போக்கு நேரங்களை மட்டுப்படுத்தும் ( (6)).

7. வெந்தயம்

வெந்தயம் உடல் சூடு குறைக்கும் மருந்தாக பயன்படுகிறது. வாரம் ஒருமுறை அல்லது இருமுறை வெந்தயம் சார்ந்த உணவினை எடுத்துக் கொள்வது மாதவிலக்கு நேர வலிகளை நீக்குகிறது ( (7)).

8. நார்ச்சத்துள்ள காய்கறிகள்

நார்ச்சத்துள்ள காய்கறிகள் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். காரணம் மாதவிலக்கு காலங்களில் மலச்சிக்கல் ஏற்படலாம். அதனால் நார்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழச்சாறுகள் எடுத்துக் கொள்வதால் மலசிக்கல் ஏற்படாமல் அதனால் ஏற்படும் வலிகளை அனுபவிக்காமல் இருக்க முடியும் ( (8)).

9. நல்லெண்ணெய்

நல்லெண்ணெய் உடல் சூட்டை தணிக்கும். எனவே நல்லெண்ணெய் சேர்க்கப்படும் உணவுகளை சாப்பிடும் போது உடலானது சமநிலை அடைகிறது. மாதவிலக்கு நாள்களில் ஏற்படும் சூட்டு வலியினை நீக்குகிறது ( (9)).

10. புதினா

புதினா சாறு என்பது வயிற்றில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்க பெரும் உதவி செய்கிறது. எனவே தினமும் சில புதினா இலைகளை மெல்வதோ அல்லது புதினா இணைத்த உணவுகளை உண்பதோ கருப்பைக்கு நன்மை பயக்கும். மாதவிலக்கு நாட்களை வலியின்றி கடக்க உதவும் ( (10)).

11. இஞ்சி

உடலில் உள்ள கிருமிகள் நீங்க இஞ்சி பெரிதும் உதவுகிறது. பெரும்பாலும் மாதவிலக்கு நேரங்களில் நாட்பட்ட உதிரம் வெளியேறுவதாலும் கிருமிகளாலும் இடுப்பு வலி போன்றவை ஏற்படுகின்றது. இஞ்சி டீ அல்லது இஞ்சி நீர் அந்த சமயங்களில் எடுக்கலாம். அடிக்கடி சாப்பிட வேண்டாம் ( (11)).

12. ஏலம்

உடல் வலி மருந்தாக பயன்படும் பொருள்களில் ஒன்றாக ஏலக்காய் பயன்படுகிறது. மாதவிலக்கு காலங்களில் பாலில் ஏலக்காய் போட்டு காய்ச்சி குடித்து வருவதால் வயிற்று வலி உடல் சோர்வு போன்றவை நீங்கும் ( (12)).

13. நீர்ச்சத்து உணவுகள்

தர்பூசணி , வெள்ளரி முள்ளங்கி போன்ற நீர்ச்சத்துள்ள பழங்களை காய்களை எடுப்பது மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் நீர் வறட்சியை சரி செய்கிறது.

14. மோர்

மாதவிலக்கு காலங்களில் குளிர்ச்சியாக இருக்க மோர் உதவி செய்கிறது . மோர் உடலுக்கு கெடுதலும் செய்யாது என்பதால் ஒரு நாளைக்கு மூன்று டம்ளர் வரை மோர் பருகலாம். இதனால் உடல் சூட்டால் ஏற்படும் மாதவிலக்கு துன்பங்கள் நீங்குகின்றன.

References

1. Impact of Protein Supplementation and Care and Support on Body Composition and CD4 Count among HIV-Infected Women Living in Rural India: Results from a Randomized Pilot Clinical Trial by NCBI
2. Hepatic and serum arginase and ornithine transcarbamylase activities of rats maintained on diets of different protein quality by Pubmed
3. Anti-hemorrhagic activity of Punica granatum L. flower (Persian Golnar) against heavy menstrual bleeding of endometrial origin: a double-blind, randomized controlled trial by NCBI
4. Major dietary patterns in relation to menstrual pain: a nested case control study by NCBI
5. Review – Ricinus cmmunis – Ethnomedicinal uses and pharmacological activities by Pubmed
6. Relationship between Diet, Menstrual Pain and other Menstrual Characteristics among Spanish Students by NCBI
7. Effects of Fenugreek Seed on the Severity and Systemic Symptoms of Dysmenorrhea by NCBI
8. The effects of a low-fat/high-fiber diet on sex hormone levels and menstrual cycling in premenopausal women: a 12-month randomized trial (the diet and hormone study) by Pubmed
9. Aromatherapy for Managing Pain in Primary Dysmenorrhea: A Systematic Review of Randomized Placebo-Controlled Trials by NCBI
10. Evaluation of mint efficacy regarding dysmenorrhea in comparison with mefenamic acid: A double blinded randomized crossover study by NCBI
11. Efficacy of Oral Ginger (Zingiber officinale) for Dysmenorrhea: A Systematic Review and Meta-Analysis by NCBI
12. Effect of Medicinal Herbs on Primary Dysmenorrhoea- a Systematic Review by NCBI
Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles