பூண்டின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Garlic (Lahsun) Benefits and Side Effects in Tamil

Written by
Last Updated on

‘காட்டேரிகளையும், தீய சக்திகளையும் விரட்ட பூண்டு இருந்தால் போதும்’ – இது பழங்காலத்தில் இருந்தே பிரபலமாக இருக்கும் பழமொழி; இந்த பழமொழி உண்மை என்று நம்பப்பட்டு வருகிறது. இந்த பழமொழியை ஒரு விதத்தில் உண்மை என்றே கூறலாம்; எப்படி என்று கேட்கிறீர்களா? பூண்டினை அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறுபட்ட நோய்களையும், ஆரோக்கிய குறைபாடுகளையும் தடுத்து, அவற்றை போக்க உதவுகிறது. மேற்கூறிய பழமொழிக்கு வேண்டுமானால் சான்றுகள் இல்லாமல் போகலாம்; ஆனால், பூண்டின் இம்மருத்துவ குணங்களுக்கு போதிய சான்றுகள் உள்ளன.

உணவில் பூண்டினை வறுத்தோ, நறுக்கியோ, நசுக்கியோ, அரைத்தோ, பாதியாகவோ அல்லது முழுதாகவோ சேர்த்தால், சுவை குறைந்த உணவும் கூட அட்டகாசமானதாகி விடும்; ஆகையால், பூண்டினால் ஏற்படும் சரும, ஆரோக்கிய, கூந்தல் நன்மைகள், பயன்கள் பற்றி படித்தறிந்து பயன்படுத்துங்கள்.

பூண்டின் மருத்துவ பண்புகள் – Medicinal Properties of Garlic in Tamil

பூண்டில் அல்லிசின், சல்ஃபர், ஜிங்க் மற்றும் கால்சியம் போன்ற அத்யாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன; இவை ஆன்டி பையாட்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்தி, ஆரோக்கிய நன்மைகளையும் அழகு நன்மைகளையும் வழங்குகின்றன. பூண்டினில் செலினியம் எனும் தாதுச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது; இந்த செலினியம் சத்து புற்றுநோய்க்கு எதிராக போராடவும், வைட்டமின் இ சத்துடன் இணைந்து உடலின் ஆன்டி ஆக்சிடென்ட் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரத்தத்தை மெலிதாக்க உதவும் சாலிசிகேட் சத்து பூண்டில் அடங்கியுள்ளது; இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய சுற்றோட்ட ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.

இன்றைய நாட்களில், பூண்டின் மருத்துவ மூலிகை குணம், மேலும் மேலும் வளர்ந்து கொண்டே தான் செல்கிறது; பரந்த அளவிலான ஆரோக்கிய குறைபாடுகளை, அதிக மற்றும் பயனுள்ள வகையில் சரி செய்ய பூண்டு உதவும் என பல ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் (1). உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் மற்றும் பூண்டினை ஒரு இயற்கை மருத்துவ பொருளாக பயன்படுத்தலாம் என பல பத்தாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர். இப்பொழுது, பூண்டு எத்துணை சக்தி வாய்ந்த ஒரு இயற்கை மூலிகை என்றும், அதனால் ஏற்படக்கூடிய பயன்கள் என்னென்ன என்றும் தெளிவாக பார்க்கலாம்.

பூண்டின் நன்மைகள் – Benefits of Garlic in Tamil

பூண்டில் அதிகப்படியான மருத்துவ பண்புகள் நிறைந்துருப்பது போல், எக்கச்சக்க ஆரோக்கிய, அழகு நன்மைகளும் நிறைந்துள்ளன. அவற்றை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் – Health Benefits of Garlic in Tamil

பூண்டு, இதய நோய்களை தடுப்பது, நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, பல்வேறு புற்றுநோய்களை தடுப்பது என பலதரப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது; ஆய்வு படிப்பினைகளின் அடிப்படையில், இங்கு பூண்டு வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.

நன்மை 1: உடல் எடை குறைதல்

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பும் நபராக இருந்தால், நிச்சயம் பூண்டினை உட்கொள்ள வேண்டும்; ஏனெனில், உடல் எடை அதிகரிப்பின் ஆணி வேர் காரணத்தை கண்டறிந்து, அதனை களைந்தெறிய பூண்டு உதவுகிறது; இது கெட்ட கொழுப்புகள் மற்றும் அடிபோஜெனிக் திசுக்கள் உடலில் உருவாவதை தடுத்து, தெர்மோஜெனிசிஸ் திசுக்களின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது (2) (3).

உடல் எடை குறைக்க எடுத்துக்கொள்ள வேண்டிய பூண்டின் அளவு
உடல் எடையை குறைக்க 3-4 பல் பூண்டுகளை சாப்பிடலாம்.

நன்மை 2: இரத்த அழுத்தம்

உடலின் இரத்த அழுத்த அளவை 10 mmHg (சிஸ்டோலிக் அழுத்தம்) இதிலிருந்து 8 mmHg (டயஸ்டாலிக் அழுத்தம்) ஆக குறைக்க, ஒரு முதிர்ந்த பூண்டில் இருக்கும் பயோ-ஆக்டிவ் சல்ஃபர் மற்றும் S-அல்லில்சிஸ்டெய்ன் போன்ற பொருட்கள் உதவுகின்றன. உடலில் இரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக திகழ்வது சல்ஃபர் ஆகும் மற்றும் ஆர்கானிக் சல்ஃபரை உடலுக்கு அளிப்பதன் மூலம் உடலில் இரத்த அழுத்த அளவை ஒரு கட்டுக்குள் வைக்கலாம் (4). சூடு சிகிச்சையை மேற்கொண்டால், அல்லிசின் அழிந்துவிட வாய்ப்புண்டு.

இரத்த அழுத்தத்தை குறைக்க தேவையான பூண்டின் அளவு
சமைக்கப்படாத அல்லது காயவைக்கப்பட்ட பூண்டினை உண்டால் தான், அல்லிசின் சத்தினை பெற முடியும்.

நன்மை 3: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்

Diabetes
Image: IStock

உடலின் வளர்சிதை மாற்ற குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோய் தான் நீரிழிவு நோயாகும்; இது ஏற்பட முக்கிய காரணமாக திகழ்வது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகும். இந்திய IICT -இல் இருக்கும் அறிவியலாளர்கள், எலிகளுக்கு வெள்ளைப்பூண்டினை அளித்து நடத்திய சோதனையில், எலிகளின் உடலில் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் ட்ரைகிளிஸெரைட் போன்றவற்றின் அளவு குறைந்து காணப்படுவதாகவும், இன்சுலின் அளவு அதிகரித்திருப்பதாகவும் கண்டறிப்பட்டுள்ளது (5). அதனால், நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒருவர் அல்லது சர்க்கரை நோயாளி, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைத்து, இன்சுலின் அளவை அதிகரிக்க பூண்டினை சாப்பிடலாம்.

சர்க்கரை நோய்க்கான பூண்டின் அளவு
நீரிழிவு நோயை தடுக்க அல்லது அதை எதிர்த்து போராட, சமைக்கப்படாத 2-3 பூண்டுப்பற்களை உட்கொள்ளலாம்.

நன்மை 4: இருமல் மற்றும் சளி

வெள்ளைப்பூண்டில் இருக்கும் நோய்த்தொற்றுகளை எதிர்க்கும் பண்புகள், உடலில் ஏற்படும் இருமல் மற்றும் சளி போன்ற சாதாரண நோய்களை நொடியில் குணப்படுத்தி விடும் தன்மை கொண்டவை. பூண்டினை பயன்படுத்தி, அதன் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை கொண்டு இந்த இருமல், சளி பிரச்சனைகளை எளிதில் விரட்டிவிடலாம்.

இருமல் மற்றும் சளியை போக்க பூண்டினை எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு
வெற்றிலையின் காம்பு, பூண்டு, திப்பிலி, வசம்பு ஆகியவற்றை அரைத்து, வெந்நீரில் சேர்த்து கஷாயம் செய்து பருகலாம்.

நன்மை 5: கொலஸ்ட்ரால்

அமெரிக்கன் அறிவியலாளர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் கொண்ட மனிதர்களை பூண்டினை உட்கொள்ள வைத்து நடத்திய சோதனையில், ஹைப்பர் கொலஸ்டெரொலெமிக் அளவினில், LDL கொலஸ்ட்ரால் 10% குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில், கல்லீரல் செல்களில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது; ஆராய்ச்சியாளர்கள் மேலும் நடத்திய சோதனைகளில், வெள்ளைப்பூண்டில் காணப்படும் நீர் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய உறுப்புகள், உடலில் கொலஸ்ட்ரால் சேர்வதை 20-60% குறைக்க உதவுகின்றன என்பது போன்ற தகவல்கள் வெளிவந்துள்ளன (6).

இரத்த அழுத்தத்தை குறைக்க தேவையான பூண்டின் அளவு
சமைக்கப்படாத 1-2 பூண்டுப்பற்களை, தினந்தோறும் உண்டு வந்தால், LDL கொழுப்பின் அளவு குறையலாம்.

நன்மை 6: இதயம்

ஆராய்ச்சியாளர்கள், வெள்ளைப்பூண்டு எல்லாவித இருதய நோய்களையும் தடுக்கும் தன்மை கொண்டது என்பதற்கான எல்லா சான்றுகளையும் கொண்டுள்ளார்; பூண்டு, உடலின் கொலஸ்ட்ரால், கொழுப்பு, ட்ரைகிளிஸெரைட் சீரம், பிளேட்லெட் திரட்டல் போன்றவற்றை குறைத்து – ஆன்டி ஆக்சிடென்ட் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகிறது. அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் குறைபாட்டிற்கு எதிராக போராடும் தன்மை கொண்டதாக வெள்ளைப்பூண்டு விளங்குகிறது (7),(8).

இதய நோய்களை தடுக்க, எடுத்துக்கொள்ள வேண்டிய பூண்டின் அளவு
காலையில் நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங் செய்யும் முன், பூண்டினை பச்சையாக உண்பது இதய நோய்களை தூரத்தில் வைக்க உதவும்.

நன்மை 7: ஆர்த்ரிடிஸ்

Arthritis
Image: IStock

வயது அதிகரித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, உடல் எலும்புகள் பலவீனமடையலாம்; அதாவது, எலும்பு முறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற குறைபாடுகள் இளம் வயதிலேயே ஏற்படலாம். ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆர்த்ரிடிஸ் ஆகிய நோய்க்குறைபாடுகளுக்கு எதிராக போராடும் தன்மை பூண்டில் நிறைந்துள்ளது. ஒரு ஆய்வில், அறிவியலாளர்கள் எலிகளுக்கு பூண்டு எண்ணெயை அளித்து நடத்திய சோதனையின் முடிவில், எலும்பு பாதிப்பை ஏற்படுத்த காரணமான ஓவரியெக்டமி எனும் பொருளின் அளவை குறைக்க பூண்டு எண்ணெய் உதவியுள்ளது கண்டறிப்பட்டுள்ளது (9). பிறிதொரு அறிஞர்கள் கூட்டம் நடத்திய சோதனையில், எலும்பை அழிக்கக்கூடிய என்சைம்களின் செயல்பாட்டை குறைத்து, எலும்பை சேதத்திலிருந்து காக்க டைஅல்லைல் டைசல்ஃபைடு உதவுகிறது என்று தெரிய வந்துள்ளது (10).

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உண்ண வேண்டிய பூண்டின் அளவு
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த பச்சையான 2-3 பூண்டுப்பற்களை உண்ணலாம்.

நன்மை 8: கர்ப்பம்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வெள்ளைப்பூண்டினை உட்கொள்வதால், உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும், உயர் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை போன்றவை கட்டுக்குள் இருக்கும், மேலும் அபயகரமான நோய்களை தடுக்க உதவும். கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டினை உண்பதால் பல நன்மைகள் விளையும்; ஆனால், அளவு அதிகமானால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். ஆகையால் உரிய மருத்துவ ஆலோசனைக்கு பின் உட்கொள்வது நலம் பயக்கும்.

கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய பூண்டின் அளவு
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் 2-4 பூண்டுப்பற்களை தினமும் சாப்பிடலாம்.

நன்மை 9: நோயெதிர்ப்பு அமைப்பு

பூண்டினில் காணப்படும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள், இயற்கையில் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் ஆகும்; இவை உடலில் ஏற்படும் விஷத்தன்மையை போக்கி, ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. இந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், உடல் நோய்தொற்றுக்கு உள்ளாவதை அல்லது DNA பிறழ்வுகள் மற்றும் தொந்தரவுக்குள்ளான செல் செயல்பாடுகள் போன்றவற்றை தடுக்க உதவுகிறது. பூண்டினை உட்கொள்வது, உடலில் வெவ்வேறு வகைப்பட்ட நோயெதிர்ப்பு செல்களை அதிகரிக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் (11).

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான பூண்டின் அளவு
ஒவ்வொரு நாளும் 1-2 பச்சையான பூண்டுப்பற்களை உட்கொள்வது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

நன்மை 10: கல்லீரல்

Liver
Image: IStock

கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிந்தால், அது கல்லீரலை பலவீனமாக்கி விடலாம்; மது பழக்கம் இல்லாத நபர்கள் சந்திக்கும் கல்லீரல் கொழுப்பு பிரச்சனையை போக்க பூண்டு பயன்படுகிறது. கல்லீரல் அழற்சியை சரி செய்ய S-அல்லைல்கேப்டோசிஸ்டெய்ன் (SAMC) உதவுவதாகவும், பூண்டு எண்ணெயின் ஆன்டி ஆக்சிடேட்டிவ் பண்புகள் மது பழக்கம் இல்லாத நபர்கள் சந்திக்கும் கல்லீரல் கொழுப்பு குறைபாட்டை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை(12),(13).

அழற்சி கொண்ட கல்லீரல் கொழுப்பை குறைக்க உண்ண வேண்டிய பூண்டின் அளவு
நறுக்கிய, பச்சையான 1-2 பூண்டுப்பற்களை கீரை ஸ்மூத்தியுடன் சேர்த்து பருகுவது கல்லீரல் கொழுப்பை தடுக்க உதவும்.

நன்மை 11: புற்றுநோய்

பூண்டில் உள்ள டைஅல்லைல் டைசல்ஃபைடு, ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கவும், பூண்டிலிருக்கும் செலினியம் புற்றுநோய்க்கு எதிராக போராடவும், டிஎன்ஏ பிறழ்ச்சி மற்றும் கட்டுக்கடங்காத செல் பெருக்கம், மெட்டாஸ்டாஸிஸை தடுக்கவும் உதவுகின்றன(14). சைன அறிவியலாளர்கள் நடத்திய மருத்துவ பரிசோதனையில், புற்றுநோய் கட்டிகள் ஏற்படும் பாதிப்பை 33% குறைத்து, 52% வயிற்றில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்க பூண்டு உதவுகிறது என்று கருத்து வெளியாகியுள்ளது (15). அதனால், புற்றுநோயை தடுக்க விரும்பும் நபர்கள், தங்களது உணவு முறையில் பூண்டினை சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

புற்றுநோயை தடுக்க/ எதிர்த்து போராட, உண்ண வேண்டிய பூண்டின் அளவு
தினமும் காலையில் 1 சமைக்கப்படாத பூண்டுப்பல்லை உண்டு வரலாம்.

நன்மை 12: பூஞ்சை நோய்த்தொற்று

நம்மில் சில நபர்களுக்கு நீண்ட நேரம் தண்ணீர் உள்ள இடத்தில் அல்லது தண்ணீர் உள்ள இடத்தில் இருந்தால், கால் மற்றும் பாதங்களில் பூஞ்சைத்தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு. இத்தகைய ஒவ்வாமை உள்ளவர்கள் தங்களது உணவு முறைகளில் பூண்டினை சேர்த்து கொண்டால், அது ஒவ்வாமையை போக்க உதவும்.

பூஞ்சைத்தொற்றை போக்க பூண்டினை பயன்படுத்த வேண்டிய முறை
பூஞ்சைத்தொற்று ஏற்பட்டுள்ள உடல் பாகங்களை வெந்நீரால் கழுவிய பின், பூண்டு சாறு எடுத்து அந்த இடங்களில் தடவி வருவது நல்ல பலன்களை அளிக்கும்.

நன்மை 13: சிறுநீரக நோய்த்தொற்று

Kidney infections
Image: IStock

UTI பிரச்சனைகளை தடுத்து, குணப்படுத்த உதவும் பழம் கிரான்பெர்ரி ஆகும்; ஆனால், பூண்டும் இப்பழத்திற்கு சளைத்தது அல்ல. சிறுநீரக சுவர்களில் பிரிவை ஏற்படுத்தி, UTI பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் சூடோமோனாஸ் எரூஜினோசா எனும் நோய்க்கிருமியை தடுத்து, குறைபாட்டினை குணப்படுத்தும் தன்மை பூண்டில் உள்ளது என்று அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்(16). மேலும் இ-கோலை பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கவும் பூண்டு உதவுகிறது (17).

UTI மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றுகளை தடுக்க , உட்கொள்ள வேண்டிய பூண்டின் அளவு
UTI மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றுகளை தடுத்து, அவற்றை எதிர்த்து போராட 3-4 பூண்டுப்பல்களை உண்ணலாம்.

நன்மை 14: இரைப்பை அழற்சி

வயிற்றில் அசௌகரியம் அல்லது சீரற்ற செரிமான அமைப்பு ஆகியவை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கெடுக்கும் அம்சங்களாகும்; ஆகையால், குடல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள், பூண்டினை உட்கொள்ள வேண்டியது அவசியம். குடல் பகுதியில் நல்ல மற்றும் தீய பாக்டீரியாக்களின் வேறுபாட்டை அறிந்து, எண்டிரோ பாக்டீரியா போன்ற தீமை விளைவிக்கும் கிருமிகளை அழிக்க பூண்டு உதவுகிறது (18). ஹெலிகாப்டர் பைலோரி எனும் நோய்த்தொற்றுகளை தடுக்க பூண்டு உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் (19).

குடல் பகுதிகளில் ஏற்படும் தொற்றை போக்க உட்கொள்ள வேண்டிய பூண்டின் அளவு
அறை வெப்பநிலை கொண்ட அல்லது குளிர்ந்த நீர் மற்றும் 1 பூண்டுப்பல்லை, காலை உணவுக்கு முன் உட்கொள்ளவும்.

நன்மை 15: இரத்த சர்க்கரை

உயர் இரத்த சர்க்கரை தான், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற மேலும் பல நோய்கள் ஏற்பட அடிப்படை காரணம் ஆகும்; உயர் இரத்த சர்க்கரையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கண்டிப்பாக பூண்டினை தங்களது உணவு முறையில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். குவைத் அறிவியலாளர்கள் வேகவைத்த மற்றும் சமைக்கப்படாத பூண்டுகள் குறித்து நடத்திய சோதனையில், பச்சையான பூண்டுகள் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை குறைக்க அதிகம் உதவியதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன (20). ஆகையால், சமைத்த பூண்டுகளை விட பச்சையான பூண்டுகளை உண்பது, இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்.

இரத்த சர்க்கரையை குறைக்க, உண்ண வேண்டிய பூண்டின் அளவு
3-4 பச்சையான பூண்டுப்பற்களை உண்டு வருவது, இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்.

நன்மை 16: காய்ச்சல் மற்றும் சாதாரண சளி

Fever and common cold
Image: IStock

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் பூஞ்சை எதிப்பு பண்புகள், நம் உடலை காய்ச்சல் மற்றும் சளி போன்ற தொந்தரவுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு ஏற்பட்டிருக்கும் சமயங்களில், பூண்டினை உணவில் சேர்த்துக் கொண்டால், அது இத்தொந்தரவுகளில் இருந்து விடுபட உதவும்.

பூண்டினை பயன்படுத்த வேண்டிய முறை
காய்ச்சல் 102 டிகிரிக்கு மேல் இருந்தால், பூண்டு சாறினை எடுத்து உள்ளங்கால் மற்றும் கைகளில் தடவி, தேய்ப்பது காய்ச்சலை குறைக்க உதவும்; மேலும் பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து சூப் செய்து பருகுவது சளித்தொந்தரவை குறைக்க உதவும்.

நன்மை 17: தொண்டை புண்

தொண்டையில் ஏற்படும் புண்கள் அல்லது காயங்கள், ஹெர்பெஸ் சிம்ப்லெக்ஸ் வைரஸ் தொற்றுகளால் ஏற்படலாம்; இந்த காயங்கள் மற்றும் புண்கள் அதிக வலியை ஏற்படுத்தலாம். நாடி, மூக்கு, உதடுகளை சுற்றிய பகுதி போன்ற இடங்களில் வலி ஏற்படலாம்; இந்த காயங்கள் பரவும் தன்மை கொண்டும் இருக்கலாம். இதை குணப்படுத்த பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் உதவுகின்றன என்பதை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

தொண்டைப்புண்ணை குணப்படுத்த தேவையான பூண்டின் அளவு
1-2 பூண்டுப்பற்களை உண்பது, தொண்டைப்புண்களை குணப்படுத்த உதவும்.

நன்மை 18: ஆஸ்துமா

முற்காலத்தில் இருந்தே சளி மற்றும் ஆஸ்துமா கோளாறை குணப்படுத்த பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது; ஒரு சிறப்பான கடுகு – பூண்டு எண்ணெயை சூடுபடுத்தி, அதைக்கொண்டு மூக்கு, தொண்டை, நுரையீரல் பகுதி போன்ற இடங்களில் மசாஜ் செய்து வருவது மார்பு சளியை போக்க உதவும். இப்பொழுது, ஆஸ்துமாவுடன் இணைந்து ஏற்படக்கூடிய ஹைப்பர் சென்சிட்டிவிட்டியை குணப்படுத்த பூண்டு உதவுவதாகவும், அதனுடன் கூடுதலாக சளித்தொந்தரவையும் குணப்படுத்த பூண்டு உதவுகிறது என்றும் அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் (21), (22).

ஆஸ்துமா மற்றும் சளியை சரி செய்ய உண்ண வேண்டிய பூண்டின் அளவு
2-3 பச்சையான பூண்டுப்பற்களை உண்பது ஆஸ்துமா மற்றும் சளித்தொந்தரவுகளை குணப்படுத்தலாம்.

நன்மை 19: காது வலி

Ear pain
Image: IStock

பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி மைக்ரோபையல் பண்புகள், காது மற்றும் காது சார்ந்த உறுப்புகளில் ஏற்படும் நோய்த்தொற்றை போக்க உதவும் என்று கூறப்படுகிறது; இதை உறுதி செய்யும் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

காதில் ஏற்படும் நோய்த்தொற்றை குறைக்க உட்கொள்ள வேண்டிய பூண்டின் அளவு
2-3 பூண்டுப்பற்களை பச்சையாக உட்கொள்ளலாம்; உட்கொள்ளும் முன் மருத்துவ ஆலேசனையை மேற்கொள்ளவும்.

நன்மை 20: ஈஸ்ட் நோய்த்தொற்று

ஈஸ்ட் தொற்று என்பது அதிக மனஅழுத்தம் மற்றும் தர்ம சங்கடத்தை உண்டாக்கக்கூடிய ஒரு நோய்த்தொற்று ஆகும். ஈஸ்ட் தொற்றை குணப்படுத்த, பூண்டு ஒரு இயற்கை தீர்வாக அமைந்துள்ளது; கேண்டிடா நோய்த்தொற்றுகளை போக்க பூண்டு உதவும் என அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் (23). பிறிதொரு ஆய்வில், ஈஸ்ட் தொற்றை போக்க பூண்டு ஒரு பயனுள்ள மருந்தாக அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் (24).

ஈஸ்ட் தொற்றை சரி செய்ய சாப்பிடவேண்டிய பூண்டின் அளவு
தினமும் 2-3 பூண்டுப்பற்களை உட்கொள்ளலாம்; பூண்டு சாறினை தொற்று ஏற்பட்ட இடத்தில் தடவுவதை தவிர்க்கவும்.

நன்மை 21: பல் வலி

Tooth pain
Image: IStock

பூண்டில் இருக்கும் அல்லிசின் ஆன்டி மைக்ரோபையல் பண்புகளை கொண்டது மற்றும் இவை பல் பிரச்சனைகள், பற்களை சுற்றி ஏற்பட்டுள்ள அழற்சி போன்றவற்றை குணப்படுத்த உதவுகின்றன (25). வாயை கழுவ உதவும் மவுத் வாஷ் பொருட்கள் பூண்டிலிருந்து எடுக்கப்படுவதாகவும், அவை அதிக பயனை வழங்குவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் (26). குறிப்பாக பூண்டு சேர்க்கப்பட்ட பற்பசை மற்றும் மவுத் வாஷ் போன்றவற்றை பயன்படுத்துவது பல் தொடர்பான பாதிப்புகளை தடுக்க, குறைபாடுகளை போக்க உதவும் (27).

வாய் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ள வேண்டிய பூண்டின் அளவு
பல் வலி மற்றும் இதர பல் கோளாறுகள் கொண்ட நபர்கள், தினமும் ஒரு பச்சையான பூண்டுப்பல்லை வாயில் போட்டு மெல்லலாம்.

பூண்டின் சரும நன்மைகள்- Skin Benefits of Garlic in Tamil

பூண்டு எனும் இயற்கை மூலிகை ஆரோக்கிய பயன்களை மட்டும் அல்லாமல் சில சரும நன்மைகளையும் அளிக்கிறது; அப்படி பூண்டு வழங்கும் சரும நன்மைகள் என்னென்ன என்று இந்த பகுதியில் பார்க்கலாம்.

நன்மை 1: முகப்பரு/ பருக்கள்

pimples
Image: IStock

பூண்டில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடென்ட், ஆன்டி மைக்ரோபையல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், சருமத்தில் விஷத்தன்மை கொண்ட பொருட்கள், முடிய குழிகள், பாக்டீரியா நோய்த்தொற்றுகள் போன்றவற்றால் ஏற்படும் முகப்பரு மற்றும் பருக்களை போக்க உதவுகின்றன (28).

பருக்களை போக்க பூண்டினை எப்படி பயன்படுத்த வேண்டும்?

1 பூண்டுப்பல்லை உண்டு, பின் ஒரு தம்ளர் குளிர்ந்த நீரை பருக வேண்டும்; உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை சருமத்தை கழுவவும்.

நன்மை 2: சொரியாசிஸ்

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் தன்னிச்சையான நோய் சொரியாசிஸ் ஆகும்; சிவந்த, தடித்த, எரிச்சலான, அரிப்பது போன்ற உணர்வு, உச்சந்தலை, முழங்கைகள், முழங்கால்களில் ஏற்படலாம் – இவையே இந்நோயின் அறிகுறிகளாகும். பூண்டினை உண்பதால், இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது; ஆனால், நோயின் தாக்கத்தை குறைக்கலாம். அழற்சியால் உண்டான சொரியாசிஸ் நோயை, அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட பூண்டினால் குறைக்க முடியும். ஆனால், இதை நிரூபிக்க எந்த ஒரு அறிவியல் ஆதாரங்களும் இல்லை.

சொரியாசிஸை போக்க பூண்டினை எப்படி பயன்படுத்த வேண்டும்?

லீக், புரோக்கோலி மற்றும் பீட்ரூட் சாறுடன் 3 பூண்டுப்பல்களை பச்சையாக கலந்து உட்கொள்ளுங்கள்.

நன்மை 3: சிரங்கு

வறண்ட, அரிப்பை ஏற்படுத்தும், சீரற்ற, கடினமான மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் சரும பாதிப்பு, சிரங்கு என்று அழைக்கப்படுகிறது; இது ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய அழற்சி பாதிப்பு ஆகும். பூண்டில் அதிகளவு அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், அது சிரங்கை குணப்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால், இதை உட்கொள்ள ஆரம்பிக்கும் முன், மருத்துவ கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

சிரங்கை குணப்படுத்த பூண்டினை எப்படி பயன்படுத்த வேண்டும்?

1-2 பூண்டுப்பற்களை பச்சையாக, அறை வெப்பநிலை கொண்ட நீருடன் சேர்த்து உட்கொள்ளவும்.

நன்மை 4: படர்தாமரை

தடகள வீரர்களின் பாதங்களில் அல்லது பிற மக்களின் உடலில் பூஞ்சை அல்லது ஈஸ்ட் தொற்றால் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பு டினியா பெடிஸ் எனும் படர்தாமரை ஆகும். பூண்டில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், படர்தாமரையை குணப்படுத்த உதவும்.

படர்தாமரையை குணப்படுத்த பூண்டினை எப்படி பயன்படுத்த வேண்டும்?

லீக் ஜூஸுடன் 2 பூண்டுப்பற்களை சேர்த்து காலை வேளையில் உட்கொள்ளலாம்.

நன்மை 5: கொப்புளங்கள்

சருமத்தில் ஏற்படும் கொப்புளங்களை குணப்படுத்தும் தன்மை பூண்டில் நிறைந்துள்ளது; பூண்டில் காணப்படும் ஆன்டி மைக்ரோபையல் பண்புகள் உடலில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி இருக்கும் கிருமிகளை அழித்து, பாதிப்பை போக்க உதவும்.

கொப்புளங்களை குணப்படுத்த பூண்டை எப்படி பயன்படுத்த வேண்டும்?

புதிதான பூண்டில் இருந்து சாறெடுத்து, அதனை கொப்புளங்கள் இருக்கும் இடத்தில் தடவி 30-40 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்; இதை தினமும் ஒரு முறை அல்லது இருமுறை செய்யலாம்.

நன்மை 6: வயதாவதை தடுத்தல்

Preventing aging
Image: IStock

மனஅழுத்தம், ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள், வருத்தம், அழற்சி, ஜீன்கள் போன்ற மேலும் பல காரணங்களால் உடல் தோற்றம் – அதிக வயதானவர் போன்று தோன்றலாம்; வெள்ளைப்பூண்டில் உள்ள S-அல்லைல் சிஸ்டெய்ன் சருமத்தை புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாத்து, சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. பூண்டில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை ஆக்சிஜன் ரேடிக்கல்களை அழித்து, வருத்தம் மற்றும் அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. மேலும் ஆய்வக சோதனையில், வெள்ளைப்பூண்டு மனித உடல் செல்களை பிணைக்க உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து கூறுகின்றனர் (29), (30).

சுருக்கங்களை போக்க பூண்டினை எப்படி பயன்படுத்த வேண்டும்?

காலையில், எலுமிச்சை மற்றும் தேனுடன் சேர்த்து ஒரு பச்சையான பூண்டுப்பல்லை சேர்த்து உட்கொள்ளலாம். நறுக்கிய பூண்டுகளை திரிபலா நீரில் சேர்த்து கூட காலை வேளைகளில் பருகலாம்.

நன்மை 7: வரித்தழும்புகள்

வரித்தழும்புகள் உடலில் ஏற்பட்டால், முதலில் எல்லோரும் ஆசைப்படும் ஒரே விஷயம், அவற்றை எப்படியாவது போக்கிவிட வேண்டும் என்பது தான்; வரித்தழும்புகள் நிலைத்தன்மை கொண்டவை, ஆனால் சருமம் நெகிழ்வுத்தன்மை கொண்டது. வரித்தழும்புகளை குறைக்க, சூடான பூண்டு எண்ணெயை, ஆலிவ் அல்லது கடுகு எண்ணெயுடன் சேர்த்து, தழும்புகள் உள்ள இடத்தில் மசாஜ் செய்யலாம்.

வரித்தழும்புகளை போக்க பூண்டினை எப்படி பயன்படுத்த வேண்டும்?

கடுகு எண்ணெயை 2-3 பூண்டுப்பற்கள் சேர்த்து சூடு செய்து கொள்ளவும்; பின்பு எண்ணெயை ஆற வைக்கவும். எண்ணெயை சூடாக இருக்கும் போதோ அல்லது ஆறிய பின்னரோ மசாஜ் செய்ய பயன்படுத்தலாம்.

பூண்டின் கூந்தல் நன்மைகள் – Hair Benefits of Garlic in Tamil

வெள்ளைப்பூண்டினால் விளையும் ஆரோக்கிய மற்றும் அழகு பயன்களை பற்றி பார்த்து அறிந்தோம். இப்பொழுது பூண்டு வழங்கும் கூந்தல் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

நன்மை 1: முடி உதிர்வு

Hair loss
Image: IStock

இன்றைய நாளில் முடி உதிர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக திகழ்ந்து வருகிறது; மாசுபாடு, தூய்மையற்ற நீர், தீய உணவு பழக்கங்கள், அழுத்தம் மற்றும் மேலும் பல காரணிகளால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. பூண்டு ஜெல், முடி உதிர்வை தடுத்து – கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் (31).

முடி உதிர்வை தடுக்க, பூண்டினை எப்படி பயன்படுத்த வேண்டும்?

கீரை ஸ்மூத்தியுடன் 1 பூண்டுப்பல்லை பச்சையாக சேர்த்து உட்கொள்ளலாம்; சமைத்த உணவுடன் வெள்ளைப்பூண்டினை சேர்த்து உண்டால், முடி உதிர்வை தடுக்கலாம்.

நன்மை 2: பொடுகு

பூண்டில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட், ஆன்டி மைக்ரோபையல் பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், தலையில் ஏற்படும் பொடுகு போன்ற பாதிப்புகளை போக்க உதவுகின்றன.

பொடுகை போக்க பூண்டினை எப்படி பயன்படுத்த வேண்டும்?

பூண்டினை நசுக்கி, அதை தேனுடன் சேர்த்து உச்சந்தலையில் மசாஜ் செய்ய வேண்டும்; நன்கு மசாஜ் செய்த பின் தலைக்கு குளித்து விடவும்.

பூண்டின் ஊட்டச்சத்து மதிப்பு – Garlic Nutritional Value in Tamil

பூண்டில் ஃபிளவோனாய்டுகள், ஒலிகோசாச்சரைட்கள், அல்லின், அல்லிசின், அதிகளவு சல்ஃபர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன; இந்த அட்டவணை மூலம் பூண்டின் ஊட்டச்சத்து மதிப்பு பற்றி படித்து அறியுங்கள் (32)

ஆற்றல்149 கலோரி7.5%
கார்போஹைட்ரேட்கள்33.06g25%
புரதம்6.36g11%
மொத்த கொழுப்பு0.5g2%
கொலஸ்ட்ரால்0 mg0%
நார்ச்சத்து உணவு2.1g5.5%
வைட்டமின்கள்
ஃபோலேட்கள்3ug1%
நியாசின்0.700mg4%
பேன்டோதெனிக் அமிலம்0.596mg12%
பைரிடாக்சின்1.235mg95%
ரிபோஃபிளோவின்0.110mg8%
தையமின்0.200mg17%
வைட்டமின் ஏ9 IU1%
வைட்டமின் சி31.2mg52%
வைட்டமின் இ0.08mg0.5%
வைட்டமின் கே1.7ug1.5%
எலக்ட்ரோலைட்கள்
சோடியம்>153mg>10%
பொட்டாசியம்>401mg>8.5%
தாதுக்கள்
கால்சியம்181mg18%
காப்பர்/ தாமிரம்0.299mg33%
இரும்பு>1.70mg21%
மக்னீசியம்25mg6%
மாங்கனீசு1.672mg73%
பாஸ்பரஸ்153mg22%
செலினியம்14.2ug26%
ஜிங்க்>1.160mg10.5%
பைட்டோ ஊட்டச்சத்துக்கள்
கரோட்டின் – B5ug
கிரிப்டோ சாந்தின் – B0ug
லூடெய்ன்-ஜியாசாந்தின்16ug

பூண்டின் வகைகள் – Types of Garlic in Tamil

பூண்டில் பலதரப்பட்ட வகைகள் உள்ளன; அவையாவன: மென்மையான பூண்டு, சில்வர்ஸ்கின் பூண்டு, கூனைப்பூ பூண்டு, மற்றும் கடின பூண்டு ஆகியவை ஆகும். மென்மையான பூண்டு என்பது பொதுவான வகையை சேர்ந்த, சந்தைகளில் கிடைக்கக்கூடிய மிருதுவான, பேப்பர் போன்ற தோல் கொண்ட, கிரீம் போன்ற வெள்ளை நிறத்தில் இருக்கும் பூண்டு ஆகும்; இப்பூண்டின் வெளிப்பகுதியில் இருக்கும் பல்கள், உட்பகுதியில் இருப்பவற்றை காட்டிலும் அளவில் பெரியனவாகும். சில்வர் பூண்டு, வெளிப்புறத்தில் இலேசான பிங்க் நிறத்திலும், பலத்த வாசத்துடனும் இருக்கும். கூனைப்பூ பூண்டு என்பது நடுத்தர சுவை மற்றும் எண்ணிக்கையில் குறைந்த ஆனால், அளவில் பெரிய பூண்டுப்பற்களை கொண்டிருக்கும்; சில சமயங்களில் இப்பூண்டு பர்ப்பிள் நிற வண்ணம் கொண்ட காகிதம் போன்ற தோல்களை கொண்டிருக்கும். கடின பூண்டு பர்ப்பிள் நிற வெளிப்புறத்தை கொண்டது; கடினமானது, மரத்தண்டுகளை கொண்டது. கடின பூண்டில் மூன்று வகைகள் உள்ளன; அவையாவன – ரோகாம்போல் பூண்டு, பீங்கான் பூண்டு, ஊதா நிற பட்டை பூண்டு ஆகியவை ஆகும் (33).

பூண்டினை சாப்பிட உதவும் சிறந்த வழி – Best Way to Eat Garlic in Tamil

பூண்டினை சமைக்காமல் அப்படியே உண்பது தான், ஆரோக்கியம், சருமம், கூந்தல் தொடர்பாக ஏற்படும் எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபட உதவும்; கொதிக்க வைத்து, வறுத்து, பொரித்து, மேலும் பல வழிகளில் பூண்டினை சமைத்து உண்பது, அதன் குணப்படுத்தும் பண்புகளை அழித்துவிடும். ஆகையால், காலை வேளைகளில் சிறு பூண்டு பல்களை எடுத்து வாயில் போட்டு, ஒரு தம்ளர் தண்ணீர் குடித்துவிடலாம்; முதலில் பாதி பூண்டை கடித்து விழுங்கி, பின் முழுவதுமாக மென்று விழுங்கிவிடவும். பூண்டினை பாஸ்தா, பிரட், குழம்பு வகைகள், சாலட்கள், சூப்கள், பருப்பு மற்றும் மேலும் பல வகைப்பட்ட உணவுகளில் சேர்த்தும் உட்கொள்ளலாம்.

பூண்டை சேமித்து வைப்பது எப்படி?- How to Store Garlic in Tamil

பூண்டினை தேர்ந்தெடுக்கும் பொழுது, அதனை கையில் வைத்து, அதன் ஈரத்தன்மை மற்றும் மென்மையை உணர முடிந்தால், அவற்றை உடனடியாக வாங்காமல் இரத்து செய்து விடவும்; நன்கு கடினமாக, இலேசாக இருக்கும் பூண்டினை வாங்கலாம். பூண்டினை தினந்தோறும் பயன்படுத்தும் நபர்கள், பெரிய பூண்டினை வாங்கி, பூண்டு பல்களை பிரித்தெடுப்பதை கடினமாக உணரலாம்; இதை எளிதில் உரிக்க, முதலில் பூண்டினை சூரிய ஒளியில் காய வைத்து, பின் ஒரு பௌலில் எடுத்துக்கொள்ளவும். பின்பு அந்த பௌலை ஒரு தட்டு கொண்டு முடி, நன்கு ஆட்டவும்; இந்த செயல்முறை ஒரு நிமிடத்தில் பூண்டுப்பற்களை பிரித்தெடுக்க உதவும்.

பூண்டை அறை வெப்பநிலையில் சேமிக்கலாம் அல்லது சூரிய ஒளியில் உலர்த்திய பின்னர், பூண்டினை அறை வெப்பநிலையில் சேமிக்கலாம்; நல்ல காற்றோட்டம் உள்ள, வறண்ட மற்றும் இருட்டான இடத்தில் பூண்டை சேமிக்கவும். பூண்டை ஜிப் லாக் கொண்ட பையில் போட்டு கூட சேமிக்கலாம்; உரித்த பூண்டுகளை எண்ணெய் அல்லது வினிகரில் போட்டு சேமிக்கலாம்.

பூண்டினால் ஏற்படும் பக்க விளைவுகள் – Side Effects of Garlic in Tamil

பூண்டு சாப்பிடுவதால், எக்கச்சக்க நன்மைகள், பயன்கள் ஏற்பட்டாலும் ஒரு சில பக்க விளைவுகள், எதிர்மறை விஷயங்கள் நிகழத்தான் செய்யும். அவ்வகையில், பூண்டினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

கெட்ட வாசம்

பூண்டினை அதிகம் உண்பது, உடலில் பலத்த மற்றும் கடுமையான கெட்ட வாசத்தை ஏற்படுத்தலாம்.

குமட்டல், நெஞ்செரிச்சல், வாந்தி

அதிக அளவு சமைக்கப்படாத பூண்டுப்பல்களை உண்டால், சில சமயங்களில் தலைசுற்றல், நெஞ்செரிச்சல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

குடல் சார்ந்த பிரச்சனைகள்

அதிகமான அளவு பூண்டினை உண்பது வயிற்றில் எரிச்சல் மற்றும் குடல் பகுதியில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

உடல் சூடாதல்

அளவுக்கு மீறி பூண்டுப்பல்களை உண்பது உடலை அதிக சூடாக்கி விடும் மற்றும் இதனால் அதிக வியர்வை போக்கு ஏற்படலாம்.

மைக்ரைன் எனும் ஒற்றை தலைவலியை தூண்டிவிடும்

பூண்டு, மைக்ரைன் எனும் ஒற்றை தலைவலியை தூண்டும் தன்மையை கொண்டது; ஆகவே, ஏற்கனவே இப்பிரச்சனையை கொண்டவர்கள் பச்சையான பூண்டினை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கண் பார்வையை பாதிக்கும்

அளவு மீறி பூண்டினை உட்கொண்டால், அது கண் பார்வையில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்; ஹைபிமா அல்லது கண்ணின் உட்புறமாக இரத்தப்போக்கு ஏற்படுதல் பிரச்சனை அதிகளவு பூண்டு உட்கொள்ளும் நபர்களில் கண்டறியப்பட்டுள்ளது.

குறைந்த இரத்த அழுத்தம்

ஆம், ஹைப்பர்டென்க்ஷன் ஏற்படாமல் தடுக்க பூண்டு உதவுகிறது; ஆனால், அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது குறைந்த இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

தோல் எரிச்சல்

அதிகளவு பூண்டினை உட்கொள்வதால் சரும தடிப்புகள், சருமம் சிவந்து போதல், சீரற்ற மற்றும் எரிச்சலான சருமம் போன்ற ஒவ்வாமை குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

பிறப்புறுப்பு நோய்த்தொற்றை அதிகப்படுத்தும்

பூண்டினை அளவாக சாப்பிட்டால், அது பிறப்புறுப்பு நோய்த்தொற்றை தடுக்கும்; ஆனால், அளவுக்கு அதிகமாக உண்டால், அது பிறப்புறுப்பு நோய்த்தொற்றை அதிகரித்துவிடும்.

கல்லீரல் கோளாறு

அதிகப்படியான அளவு பூண்டினை உட்கொள்வது விஷமாக மாறி விடலாம் மற்றும் இந்த விஷத்தன்மையை வெளியேற்ற கல்லீரல் அதிகளவு வேலை செய்ய வேண்டியிருக்கும்; இதனால், கல்லீரல் கோளாறுகள் ஏற்படலாம்.

பூண்டினை தவிர்க்க வேண்டிய நபர்கள் யார்? – Who Should Avoid Garlic in Tamil

பூண்டு உண்பது பலருக்கு நன்மைகளை அளித்தாலும், ஒரு சில குறிப்பிட்ட குறைபாடு அல்லது பிரச்சனை கொண்டவர்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடலாம்; ஆகையால், கீழ்க்கண்ட நபர்கள் பூண்டு உண்பதை கட்டாயமாக தவிர்த்து விட வேண்டும்.

  • கர்ப்பிணி பெண்
  • பூண்டு குறித்த ஒவ்வாமை கொண்ட நபர்கள்
  • வயிற்றில் அல்சர் கொண்டவர்கள், IBS & IBD பிரச்சனை கொண்டவர்கள், குடல் சார்ந்த அறுவை சிகிச்சை செய்தவர்கள்
  • மருத்துவர் பூண்டினை உண்ண அறிவுறுத்தாதவர்கள்/ அனுமதிக்காதவர்கள்

பழங்காலத்தில் இருந்து நம் முன்னோர்கள் பூண்டினை சமையல், மருத்துவம், அழகு என எல்லா விஷயங்களுக்கும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்; அக்காலம் முதல் இக்காலம் வரை தவிர்க்க முடியாத ஒரு தனித்துவமான பொருளாக பூண்டு விளங்குகிறது. பூண்டில் இருக்கும் வித்தியாச சுவை, உணவுக்கு புது சுவையை வழங்குவதோடு, உடலுக்கு பற்பல நன்மைகளை வாரி வழங்குகிறது. ஆனால், நன்மை வழங்குகிறது என்பதற்காக அளவுக்கு அதிகமாக உட்கொள்வது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே, மருத்துவ ஆலோசனைக்கு பின், தேவையான அளவு மட்டும் உண்பது நன்மை பயக்கும்.

இப்பதிப்பில் பூண்டினை உண்பதால் ஏற்படும் ஆரோக்கிய, சரும, கூந்தல் நன்மைகள், பூண்டின் பயன்கள், பூண்டின் பக்க விளைவுகள் என அனைத்து தகவல்களை பற்றியும் தெளிவாக படித்து அறிந்தோம். பூண்டினை நீங்கள் எந்தெந்த விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுத்துவீர்கள் மற்றும் எப்படி பயன்படுத்துவீர்கள்? பூண்டினால் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட நன்மை என்ன என்பது போன்ற விஷயங்களை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! இந்த பதிப்பு பயன் அளிக்கும் வகையில் இருந்தால், மற்றவருக்கு பயன்பட இதை பரப்பவும்!

Was this article helpful?
thumbsupthumbsdown
Latest Articles