சிறுவர்களுக்கான சிறந்த கதை புத்தகங்கள்
In This Article
சிறுவர்களை அறிவுரை சொல்லி வளர்த்துவதை விட எளிதானது அவர்கள் கையில் ஒரு கதை புத்தகத்தை கொடுத்து வளர்ப்பது. காரணம் நாம் சொல்வதில் பாதி மட்டுமே அவர்களின் விளையாட்டு மனம் கிரகிக்கும். மீதி வெறும் காற்றில் பறந்து போகும். ஆனால் ஒரு அறிவுரையை, வாழ்வின் அறத்தை நாம் குழந்தைகளுக்கு கதைகளின் வாயிலாக கடத்தினோம் என்றால் அது பல வருடங்களுக்கு அவர்கள் மனதில் பதிந்து நிற்கும்.
இப்போதைய அவசர யுகத்தில் கதைகள் சொல்ல நேரம் இல்லாத பெற்றோர்கள் அல்லது கதை கேட்க அமரும் வயதை கடந்து விட்ட குழந்தைகளுக்கு கதை புத்தகங்கள் பரிசளிப்பது பல நன்மைகளை அவர்களுக்கு வழங்கும். அந்த வகையில் சிறந்த 10 சிறுவர் கதை புத்தகங்களை நாங்கள் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறோம். முடிந்தால் 10 புத்தகங்களையும் வாங்கி விடுங்கள். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக மாறும் மாயம் இந்த புத்தகங்களில் ஒளிந்திருக்கலாம்.
நீதி கதைகள்
எழுத்தாளர் தமிழ் மாந்தன் கைவண்ணத்தில் அமேசான் கிண்டில் வடிவில் இந்த புத்தகம் இலவசமாக படிக்க கிடைக்கிறது. பல பொதுவுடைமை கதைகளை இணைத்து இந்த புத்தகத்தை இவர் உருவாக்கி இருக்கிறார். அமேசான் மூலம் நேரடியாக தனது புத்தகங்களை வெளியிட்டு புத்தக வெளியீட்டாளராகவும் ஆகி இருப்பதாக குறிப்பிடுகிறார்.
குட்டிக் கதைகள்
சுட்டிக்குழந்தைகளுக்கான குட்டி கதைகள் என தன்னுடைய அமேசான் புத்தக விற்பனை பக்கத்தில் இவர் குறிப்பிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட கதைகள் இந்த புத்தகத்தில் இருக்கிறது. இந்த புத்தகம் உங்கள் குழந்தைகளின் நேரத்தை பயனுள்ளதாகும்.
900+ தமிழ்க்கதைகள்
லட்சுமி என்பவர் வெளியிட்டிருக்கும் இந்த புத்தகத்தின் மூலமாக குழந்தைகள் அனைவரும் நற்பண்புகளை கற்று கொள்வார்கள் என்று கூறி இருக்கிறார். உங்களால் எதிர்பார்க்க முடியாத 900க்கும் மேற்பட்ட கதைகள் குழந்தைகளின் கற்பனை வளத்தை அதிகரிக்க இந்த புத்தகம் உதவுகிறது.
சிறுவர்களுக்கான 10 செட் கதை புத்தகங்கள்
இனிகோ என்பவர் குழந்தைகளுக்கான 101 கதைகளை 10 செட்களில் தொகுத்து கொடுத்திருக்கிறார். குழந்தைகளுக்கு தேவையான நீதிகளை கதைகள் வடிவில் இருக்கிறது. சிறிய குழந்தைகளின் மனதை சிற்பி போல செதுக்குகிறது இந்த கதைகள்.
தெனாலி ராமன் கதைகள்
குழந்தைகளுக்கான நீதி கதைகள் என்றதும் அதில் நிச்சயமாக இருக்க வேண்டிய புத்தகம் தெனாலி ராமன் கதைகள்தான். நா. மணிவாசகம் இந்த கதைகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அமேசான் கிண்டில் வடிவத்தில் வெளியாகிறது.
சுவாரஸ்யமான குட்டிக் கதைகள்
இந்த சுவாரஸ்யமான குட்டி கதைகள் உங்கள் செல்ல கண்மணிகளுக்கானவை. இதனை அழகாக தொகுத்திருப்பவர் ஸ்ரீனிவாஸ் ராம் என்பவர் ஆவார். அமேசான் கிண்டில் வடிவத்திலும் கிடைக்கிறது. புத்தகமாகவும் கிடைக்கிறது.
பிச்சைக்காரன்
இந்த கதையை தேவிகா வாசு எழுதி இருக்கிறார். ஒரு மன்னர் பின்னணி கொண்ட கதையில் வரும் ஏழை பிச்சைக்காரன் பற்றிய கதை என்கிற முன்னுரையை விற்பனை தளத்தில் கூறியிருக்கிறார். அமேசான் கிண்டில் வடிவத்தில் இலவசமாகவும் புத்தகமாகவும் பெறலாம்.
குழந்தைகளுக்கான கதைகள்
மணிவாசன் மூலம் தொகுக்கப்பட்ட இந்த புத்தகம் அமேசான் கிண்டில் வடிவத்தில் வெளியாகி இருக்கிறது. 3 முதல் 18 வயது வரையிலான அனைத்து பருவத்தினருக்கும் ஏற்ற வகையில் இந்த புத்தகம் உருவாகி இருக்கிறது.
பாட்டி சொன்ன கதை
கதைகள் என்றாலே பாட்டிகள் சொல்கின்ற கதைகள் தான் சுவாரஸ்யமானதாக இருக்கும். ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி என்று அவர்கள் ஆரம்பிக்கும் கதையின் கருவானது மிகவும் அழகானது. இதனை தொகுத்து வழங்கி இருப்பவர் பாரதி. உங்கள் குழந்தைகளின் மழலை பருவம் பாட்டிகளின் கதைகளை அறியாமல் கடக்க வேண்டாம். வாங்கி விடுங்கள்.
முடிவுரை
உங்கள் குழந்தைகளை நல்லவிதமான முறையில் வளர்க்க வேண்டும் என்ற உங்கள் கவலைகளை பாதியாக குறைக்க இந்த கதை புத்தகங்கள் உதவி செய்கிறது. அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வளர வேண்டியது உங்கள் கைகளிலும் இருக்கிறது. புத்தகங்களை பரிசளியுங்கள். நீங்களும் படியுங்கள்.
Community Experiences
Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.