தேனின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Honey Benefits, Uses and Side Effects in Tamil

Written by Dinesh
Last Updated on

இந்த உலகில், தேனினை விரும்பாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது; விதி விலக்காக, ஒரு சிலருக்கு தேனை பிடிக்காமல் இருக்கலாம். இதை உணவில் சேர்க்கும் பொழுது, இயற்கையாக கூடுதல் சுவையை உணவு பெறுகிறது; பிற எந்த ஒரு செயற்கை இனிப்பூட்டிகளும், தேன் வழங்கும் இச்சுவைக்கு நிகராக முடியாது. தேனை ஆங்கிலத்தில் Honey – ஹனி என்று வழங்குவர்.

தேன் தனித்துவமான சுவையை வழங்குவதோடு, பற்பல நன்மைகளையும் அளிக்கிறது; தேன் வழங்கும் அற்புத நன்மைகளை பற்றி இந்த பதிப்பில் படித்து அறியுங்கள்.!

தேனின் வகைகள் – Types of Honey in Tamil

தேன் என்பது 80% சர்க்கரை மற்றும் 20% நீரை கொண்டது; 1 தேக்கரண்டி தேனில் 64 கலோரிகள் உள்ளன. தேனில் பல வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது; மிகவும் பிரபலமான
தேனின் வகைகள் குறித்து கீழே காணலாம்:

  • Manuka – மனுகா
  • Buckwheat – பக்வீட்
  • Wildflower – வைல்ட்ஃப்ளவர்
  • Alfalfa – அல்ஃபாஃபா
  • Blueberry – ப்ளூபெர்ரி
  • Orange blossom – ஆரஞ்சு ப்ளாஸ்ஸம்
  • Clover – க்ளோவர்

மேற்கூறிய தேனின் வகைகளில் மனுகா வகை தேன் தான், மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.

தேனின் நன்மைகள் – Benefits of Honey in Tamil

தேன் அற்புதமான நன்மைகளை வழங்குகிறது என்று முன்பே கூறியிருந்தோம்; தேன் வழங்கும் ஆரோக்கிய, சரும, கூந்தல் நன்மைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

தேன் வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் – Health Benefits of Honey in Tamil

இயற்கையில் கிடைக்கும் வரப்பிரசாதமான தேன் அதிக நன்மைகளை வழங்கக்கூடிய ஒன்று; இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைக்க, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை தடுக்க என பல ஆரோக்கிய பயன்களை தேன் வழங்குகிறது. தேன் மற்றும் எலுமிச்சையை சேர்த்து ஒரு கலவையாக உட்கொள்ளும் பொழுது, அது மேலும் அதிக பயன்களை அளிக்கும்; தேனையும் நீரையும் கலந்து உட்கொள்ளும் பொழுதும் அதிக நன்மைகள் கிடைக்கும். தேன் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு காணலாம்:

நன்மை 1: உடல் எடை குறைத்தல்

தேனில் இருக்கும் இயற்கையான, தனித்துவமான இனிப்பு, உடல் எடையை குறைக்க உதவும் ஒரு சரியான உணவு ஆகும்; உணவு மற்றும் பானங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தினால், உடலில் பல நன்மைகள் ஏற்படும்.

காலை மற்றும் இரவு உறங்க செல்லும் முன் ஆகிய இரு நேரங்களிலும் சூடான பாலில், ஒரு தேக்கரண்டி தேனை கலந்து சில காலத்திற்கு பருகி வந்தால், மூளையின் கட்டளையால் நமக்குள் ஏற்படும் இனிப்பு உணவுகள் மீதான ஆசையை எளிதில் போக்கி விடலாம். தேனில் இருக்கும் இனிப்பு, செயற்கை சர்க்கரையில் இருக்கும் இனிப்புகளை காட்டிலும் வித்தியாசமாக, நல்ல – ஆரோக்கியமான முறையில் செயல்படுவதாக பல ஆய்வுகள் கருத்து தெரிவித்துள்ளன (1).

நன்மை 2: இருமல் மற்றும் சளி

இருமலுக்கு தேன் ஒரு மிகச்சிறந்த, பயனுள்ள மருந்து என பல ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கின்றன. ஒரு ஆராய்ச்சியில், இரவில் தேனை அளிப்பது இருமலால் அவதிப்படும் குழந்தைகள் நிம்மதியாக உறங்க உதவும் என்பதை நிரூபித்துள்ளது; மேலும் இந்த ஆய்வில், தேன் ஒரு டெக்ஸ்ரோம்த்ரோபனாக அதாவது இருமல் மருந்துகளில் காணப்படும் ஓர் முக்கிய பொருளாக செயல்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும், 1 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் மிகவும் அரிதாக ஏற்படும் கிளாஸ்டிரீயம் பாக்டீரியாவால் உண்டாகும் ஃபுட் பாய்சன் அதாவது உணவு விஷம் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்(4). குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி தொந்தரவுகளுக்கு மருந்தாக, தேனை அளிக்கும் முன் மருத்துவரிடம் ஒருமுறை கலந்தாலோசிப்பது நல்லது.

மற்றொரு ஆய்வில், தேன் அளிக்கப்பட்ட குழந்தைகளில் சளி மற்றும் இருமல் தொல்லைகள் அடிக்கடி ஏற்படுவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது(5). மேலும் அடர்த்தி குறைந்த தேனை காட்டிலும், அடர்த்தி நிறைந்த தேனையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுவும், அடர்த்தி நிறைந்த தேனில் தான் அதிக ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் அடங்கியுள்ளன என்பதுவும், நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இருமலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு இரவில் ஒரு தேக்கரண்டி தேனை அளிப்பது, அவர்கள் நன்கு படுத்து உறங்க உதவும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூடான எலுமிச்சை சாறு கலந்த நீர் மற்றும் தேன் கலந்த கலவை, சளித்தொந்தரவை குணப்படுத்தவும், தொண்டையில் ஏற்படும் நெரிசலை போக்கவும், நீர்ச்சத்து இழப்பை தடுக்கவும் பயன்படுகிறது (2). தேனை உட்கொள்வது, 2 நாட்களில் சளித்தொந்தரவை குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது (3).

நன்மை 3: நீரிழிவு நோய்/ இரத்த சர்க்கரை

Diabetes Blood Sugar
Image: Shutterstock

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேனினை எடுத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் உங்கள் மனதில் உள்ளதா? – இதோ அதற்கான விடை. தேனில் இருக்கும் குளுக்கோஸ் அளவு 45 முதல் 64 வரை மாறுபடுகிறது; இது சராசரியான அளவு தான். தேனை உட்கொள்வதால், உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து, இரத்த சர்க்கரையின் அளவு குறையும் என்று பல ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவிக்கின்றன. தேன், உடலின் திரவத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை (குறைந்தது 8 மணி நேரங்களுக்குள்ளாக) குறைக்க உதவும்; உடலில் இன்சுலின் அளவை சமநிலைப்படுத்த உதவும் C-பெப்டைடு சத்தினை அதிகரிக்க தேன் பயன்படுகிறது. ஆகையால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு அரைக்கரண்டி தேனினை தேநீர், ஓட்ஸ் உணவு அல்லது யோகார்ட்டில் கலந்து உட்கொள்ளலாம்.

தேனினை உட்கொள்வது உடல் எடையை குறைக்கவும், சர்க்கரை நோயாளிகளின் உடலில் உள்ள இரத்த கொழுப்பை குறைக்கவும் உதவும் என்று ஈரானியர்கள் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது (4). மற்றொரு ஆய்வில், நீரழிவு நோய்க்கு எதிரான மருந்துகளை தேனுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால், அது சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக பலன்களை வழங்கும் (5).

சில ஆய்வறிக்கைகள், தேன் மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை; இரண்டும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளன. ஆகையால், சர்க்கரை நோயாளிகள் தேனை உட்கொள்ள தொடங்கும் முன் மருத்துருவரிடம் ஒருமுறை கலந்தாலோசித்து கொள்வது பாதுகாப்பானது (6).

நன்மை 4: காயங்கள்/ புண்கள்/ தீக்காயங்கள்

காயங்கள் மற்றும் குறிப்பாக தீக்காயங்கள் ஆகியவற்றின் மீது தேனை தடவுவது, அவற்றில் காணப்படும் இறந்த, தேவையற்ற செல்களை நீக்கி, தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் (மூட்டுக்களில் ஏற்படும் குறைபாடு அல்லது இறுக்கம்) ஏற்படாமல் தடுக்க உதவும் (7). இலேசான தீக்காயங்களை முதலில் தண்ணீரால் கழுவிய பிறகு, அதன் மீது நீங்கள் தேனை தடவலாம்.

மற்றொரு ஆய்வில், காயங்களை குணப்படுத்த உதவும் சிறந்த மருந்து தேன் என்று கண்டறியப்பட்டுள்ளது; நோய்க்கிருமிகளுக்கு எதிரான பண்புகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. பிற சிகிச்சை முறைகள் காயங்களை குணப்படுத்துவதில் தோல்வி அடைகையில், தேன் காயங்களை குணப்படுத்தும் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது; தேனின் காயங்களை குணப்படுத்தும் விகிதம் அதிகமாகவும் காணப்படுகிறது (8). காயங்கள் மீது தேனை தடவிய சிறிது நேரத்தில், நல்ல மாற்றங்கள் ஏற்படும் (9).

அல்சர் மற்றும் நாள்பட்ட காயங்களை குணப்படுத்தவும் தேன் உதவுகிறது (10).

நன்மை 5: உயர் இரத்த அழுத்தம்

high blood pressure
Image: Shutterstock

2011 ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வு படிப்பினையில், தேன் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்று பரிந்துரைக்கப்படுகிறது; இந்த ஆய்வில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள், எலிகளில் அதிக கலோரிகளை நடத்தப்பட்ட சோதனையில் சரியான பலன்களை அளித்ததன் மூலம் சரிப்பார்க்கப்பட்டது.

மற்றொரு மலேசியன் ஆய்வறிக்கையும் இதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளது (11).

நன்மை 6: கொலஸ்ட்ரால்

சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வில், 30 நாட்களுக்கு 70கி தேனை உட்கொண்டு வந்தால், உடலின் கொலஸ்ட்ரால் அளவு 3 சதவிகிதம் குறைவது கண்டறியப்பட்டுள்ளது; மற்றொரு ஆய்வில், உடலின் கொலஸ்ட்ரால் அளவு 8 சதவிகிதம் குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், தேன் உடலில் நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

ஜெர்மன் ஆய்வு படிப்பினையில், சர்க்கரைக்கு பதிலாக பெண்கள் தேனை உட்கொண்டால் அது நல்ல பலன்களை (கொலஸ்ட்ராலை குறைக்கும்) அளிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது (12). மற்றும் BBC rஅறிக்கையின் கருத்துப்படி, தேன் கொலஸ்ட்ராலுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது (13). இறந்த அல்லது தேவையற்ற செல்களின் பாதிப்பில் இருந்து, உடலை பாதுகாக்க தேன் உதவும்.

இதய ஆரோக்கியம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த தேன் உதவுகிறது. உணவு முறையில் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்துவது ஒரு புத்திசாலித்தனமான செயல் ஆகும் (14).

நன்மை 7: ஆற்றலை அதிகரிக்கும்

தூய்மையான தேனில், என்சைம்கள், புரதங்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவை குறைந்த அளவே காணப்படும்; இது ஒருவரின் உடலுக்கு தேவையான ஆற்றல் அளவை சரிவர பங்களிக்க உதவுகிறது.

செயற்கையான இனிப்பூட்டிகளை காட்டிலும், இயற்கையான தேன் மிகவும் ஆரோக்கியமானது மற்றும் அதிக ஆற்றலை அளிக்ககூடியது. ஒரு ஆய்வு படிப்பினை, உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு நேரிடும் சமயங்களில், குளுகோஸிற்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறது (15).

நன்மை 8: எலும்புகளை பலப்படுத்தும்

தேன் மற்றும் கால்சியம் சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன; தேனை தேவையான அளவு எடுத்துக் கொள்பவர்களின் உடலில் கால்சியத்தை உறிஞ்சும் திறன் அதிகரித்து காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உணவு முறை சார்ந்த காரணிகளில், கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்களை அதிகம் உறிஞ்சும் திறன் தேனில் தான் காணப்படுகிறது.

நன்மை 9: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தேனில், அதாவது குறிப்பாக மனுகா தேனில் ஆன்டி பாக்டீரியா செயல்திறன் கொண்ட மெத்தில் கிளையோக்சல் அதிகளவு காணப்படுகிறது. இந்த மெத்தில் கிளையோக்சல் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

உடலின் நோயெதிர்ப்பு செல்கள், நோயெதிர்ப்பு செயல்பாடுகளுக்கு அனுப்பும் இரகசிய தகவல்களான சைடோக்கின்களின் உற்பத்திக்கு மெத்தில் கிளையோக்சல் உதவுகிறது.

நன்மை 10: இதய நோய்கள்

Cardiovascular diseases
Image: Shutterstock

தேனில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் இதயத்தை பாதுகாக்க உதவும்; இரத்தத்தில் கெட்ட கொழுப்பை ஏற்படுத்த காரணமான காரணிகள் மற்றும் ஆக்சிஜனேற்றத்தை உண்டு செய்யும் இணைந்த டயன் காரணிகள் போன்றவை உருவாவதை தடுக்க தேன் உதவுகிறது. இதன் மூலமாக இதய ஆரோக்கியம் தானாக மேம்படுகிறது.

தமனி இரத்தக்குழாய்களில் மெட்டல் அடைப்புகள் மற்றும் மாரடைப்பு ஆகியவை ஏற்படுவதை தடுக்க தேன் உதவுகிறது (16). இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க பாலிபினால்கள் கூட உதவுகின்றன; பாலிபினால்கள், இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படும் ஆபத்தை தடுக்க உதவுகிறது என்று பல ஆய்வறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன (17).

நன்மை 11: நகங்களை பலப்படுத்தும்

தேன் நகங்களை பலப்படுத்தும் என்பதற்கு போதிய ஆதாரம் கிடைக்கப் பெறவில்லை; ஆனால், தேன் நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் மற்றும் கால் நகங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றை குணப்படுத்தவும் தேன் உதவும் என்று ஒரு ஆய்வு பரிந்துரைக்கிறது (18).

நன்மை 12: ஆஸ்துமா

Asthma
Image: Shutterstock

ஆஸ்துமா நோயாளிகளில் ஏற்படும் இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை குணப்படுத்ததேன் உதவுகிறது. காற்று உள்வந்து, வெளி செல்லும் மூச்சுக்குழாய்களில் காணப்படும் சளி அடைத்து காணப்படுவது ஆஸ்துமா நோயாளிகள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை ஆகும்; இந்த பாதிப்பை குறைக்க தேன் உதவுகிறது.

பிறிதொரு படிப்பினையில், தேன் ஆஸ்துமாவை குணப்படுத்த சரியான பலன்களை அளிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது (19).

நன்மை 13: வாய் ஆரோக்கியம்

ஒரு சர்வதேச இதழின் கருத்துப்படி, பல் வலியை குணப்படுத்த மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேன் உதவுகிறது என்று கருத்து வெளியாகியுள்ளது (20). ஆனால், இது குறித்த தெளிவான ஆராய்ச்சி, ஆதாரம் ஆகியவை கிடைக்கப் பெறவில்லை. ஆகையால், பல் மருத்துவரிடம் சரியான கலந்தாய்வு மேற்கொண்ட பின், தேனை உட்கொள்ளவும்.

நன்மை 14: புற்றுநோய்

Cancer
Image: Shutterstock

தேனில் காணப்படும் பினோலிக் கலவைகள், புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை கொண்டவை மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கும் தன்மை கொண்டவை ஆகும். தேனில் இருக்கும் அழற்சிக்கு எதிரான பண்புகள், புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோயை தடுக்க உதவும்; உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, அது புற்றுநோய்க்கு எதிராக போராடும் சக்தியினை தேன் உடலுக்கு நல்குகிறது (21).

ஏற்கனவே ஏற்பட்டுள்ள புற்றுநோய் பரவுவதை தடுக்கும் பண்புகள் தேனில் நிறைந்துள்ளன; மேலும் ஒரு சுவாரசியமான தகவல் என்னெவெனில், தேன் ஆரோக்கியமான செல்களை தவிர்த்து, சேதமடைந்த புற்றுநோய் செல்களை மட்டும் தேர்வு செய்து அழிக்கின்றது.

சில ஆராய்ச்சிகள், புற்றுநோய் உள்ளவர்கள் சூடுபடுத்தப்பட்ட தேனை விட, தூய்மையான தேனை அப்படியே உட்கொள்வது நல்லது என்ற கருத்தை வெளியிட்டுள்ளன (22). புற்றுநோய் உள்ளவர்கள், தேனை உட்கொள்ள தொடங்கும் முன், மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் தேனை எடுத்துக் கொள்வது நல்லது.

தேன் வழங்கும் சரும நன்மைகள்- Skin Benefits of Honey in Tamil

தினந்தோறும் தேனை முகத்தில் தடவுவதால், எண்ணற்ற நன்மைகளை பெறலாம்; தேனை பயன்படுத்தி முகத்தில் ஏற்படும் முகப்பரு, வடு, கரும்புள்ளிகள் ஆகியவற்றை போக்க உதவும். மேலும் இது வறண்ட சரும பிரச்சனைகளையும் தீர்க்க உதவும்; தேன் வழங்கும் சரும நன்மைகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்:

நன்மை 1: முகப்பரு/ தழும்புகள்

சருமத்தில் இருக்கும் குழிகளில் காணப்படும் அழுக்குகளை உறிஞ்சி, சருமத்தை சுத்தப்படுத்த தேன் பயன்படுகிறது; தேன் ஒரு இயற்கை ஆன்டி செப்டிக்காக இருப்பதால், அது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. முகத்தில் தேனை மெல்லிய படலமாக, கழுத்து பகுதிக்கு வழிந்து சென்று விடாமல் இருக்குமாறு தடவி, 30 நிமிடங்கள் அதனை அப்படியே விட்டுவிடவும்; பின் முகத்தை சாதாரண தண்ணீர் கொண்டு கழுவவும்.

ஆனால், தேனை முகத்திற்கு அல்லது சருமத்திற்கு பயன்படுத்தும் முன், ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்று பேட்ச் பரிசோதனை செய்து, சரி பார்த்துக் கொள்வது நல்லது. சிறிதளவு தேனை, சருமத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தடவி, 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் கழுவவும். சருமத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்தால், மேற்கொண்டு பயன்படுத்தலாம்.

மேலும் பாக்டீரிய தொற்றினால், முகப்பருக்கள் ஏற்பட்டிருந்தால் அதை போக்க தேன் உதவும்; தேன் ஒரு நல்ல ஈரப்படுத்தியாக இருப்பதால், அது முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகளை குணப்படுத்தவும் உதவும். ஆனால், இது தொடர்பான சரியான ஆராய்ச்சி தகவல்கள் கிடைக்கவில்லை.

நன்மை 2: சரும நிறத்தை வெண்மையாக்கல்

Whitening of skin color
Image: Shutterstock

தேனை பயன்படுத்தி, எண்ணற்ற வழிகளில் சருமத்தை வெண்மையாக்கலாம்; தேனில் இருக்கும் ஆன்டி பாக்டீரியா பண்புகள் உடலில் ஏற்படும் அழற்சியை சரி செய்ய உதவுகின்றன மற்றும் தோலை நோய்க்கிருமிகள் தாக்காமல் பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தை ஈரப்படுத்த பயன்படுகிறது.

தேன் மற்றும் யோகர்ட் ஆகிய இரண்டையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்; 1 தேக்கரண்டி தூய யோகர்ட், 1 ½ தேக்கரண்டி தேன் ஆகியவற்றை நன்கு கலக்கவும். இந்த கலவையை சருமத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெந்நீர் கொண்டு கழுவவும். இதை தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

நன்மை 3: சுருக்கங்கள்

தேன் ஒரு இயற்கை ஈரப்படுத்தி; இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். இது சருமத்தில் உள்ள சுருக்கங்களை ஈரப்படுத்தி, போக்க உதவும்; வறண்ட, எரிச்சலடைந்த, சென்சிட்டிவான சருமத்தை குணப்படுத்த உதவும். மேலும் தேனில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள், சருமத்தில் முதுமை தோற்றம் ஏற்படுவதை தடுக்க உதவும்.

சருமம் என்றும் இளமையாக இருக்க, ஒரு தேக்கரண்டி தேன், அதற்கு சமமான அளவு பப்பாளி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு – இவற்றை ஒன்றாக கலந்து, கலவையை சருமத்தில் தடவி, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். சருமத்தை ஊற வைக்கையில், இலேசாக சருமத்தின் மீது மசாஜ் செய்வது, இரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவும்; சருமத்தை இருக்கமாக்க உதவும். பின்னர் சருமத்தை வெந்நீர் கொண்டு கழுவி, ஒரு துவைத்த துணி கொண்டு, மெதுவாக துடைத்து விடவும்.

சருமத்தை மிருதுவாக, சுருக்கங்கள், கோடுகள் இன்றி வைக்க தேன் உதவுகிறது; சருமத்தில் ஏற்படும் சுருக்கத்திற்கான நிரந்தர தீர்வு தேன் அல்லது தேன் மாஸ்க் அல்ல. மேலும் எல்லா வித தேன் மாஸ்க்குகளும், எல்லோருக்கும் பொருந்தாது; தோல் மருத்துவரிடம் ஆலோசித்து, உங்கள் சரும வகைக்கேற்ற தேன் மாஸ்க்குகளை பற்றி அறிந்து, அவற்றை பயன்படுத்துங்கள்.

நன்மை 4: வறண்ட சருமம்

Dry skin
Image: Shutterstock

யோகர்ட் மற்றும் தேன் கலந்த கலவை, வறண்ட சருமம் மற்றும் சீரற்ற சருமம் ஆகிய பிரச்சனைகளை சரி செய்ய உதவும்; இவை இரண்டிலிருக்கும் ஆன்டி பாக்டீரியா பண்புகள், சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த உதவும். மற்றும் தேனில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் காணப்படுகின்றன; மேலும் இது சருமத்தை ஈரப்பத அளவை அதிகரிக்க உதவுகிறது.

1 தேக்கரண்டி சர்க்கரை சேர்க்காத, தனிப்பட்ட சுவை சேர்க்காத யோகார்ட்டை, 1 தேக்கரண்டி தேனுடன் கலந்து, அதனை சருமத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு வெந்நீரால் சருமத்தை கழுவி விடலாம்; இது நல்ல மாற்றத்தை அளிக்கும்.

நன்மை 5: வெடிப்புகள் கொண்ட உதடுகள்

வெடிப்புகள் உள்ள உதடுகளின் மீது தேனை பயன்படுத்துவது, இந்த பிரச்சனையை போக்க உதவும்; இரவு உறங்க செல்லும் முன், சிறிதளவு தேனை உதடுகளின் மீது தடவி, அதை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். சருமம் மற்றும் உதடுகள் தேனை உறிஞ்சி உள்ளிழுப்பதனால், சருமத்தில் உள்ள கோளாறை தேன் எளிதில், விரைவில் போக்கிவிடும்.

தேன் விரிசல்கள் கொண்ட உதடுகளை சரி செய்யவும் உதவும்; ஆனால், மருத்துவ ஆலோசனை பெறாமல், தேனினை உதடுகளின் மீது தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டாம்; மீறி வைத்திருந்தால், அது கிளாஸ்டீரியம் நச்சேற்றத்தை உண்டு செய்து விடும்.

நன்மை 6: சருமத்தை சுத்தப்படுத்தும்

அழுக்கடைந்த மற்றும் தூசு படிந்த சருமத்தை சுத்தப்படுத்த தேன் உதவும்; இயற்கை எண்ணெய்களின் உதவியின்றி, தேனினால் இதனை செய்ய இயலும். அரை தேக்கரண்டி தேனை, கை விரல்களில் எடுத்துக்கொண்டு, அதனை கைகளில் தேய்த்து சூடுபடுத்திக் கொள்ளவும்; வேண்டுமெனில் சில துளிகள் நீரையும் தேனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனை சருமத்தில் மெதுவாக தடவி, வெந்நீரால் சருமத்தை கழுவவும்; பின் சருமத்தை ஆற வைத்து, வேண்டுமெனில் டோனரை பயன்படுத்தி நல்ல பலன்களை பெறலாம்.

தேன் வழங்கும் கூந்தல் நன்மைகள்- Hair Benefits of Honey in Tamil

தேனில் இருக்கும் சில முக்கிய பண்புகள், உச்சந்தலையில் ஏற்படும் கோளாறுகளை நீக்கி, முடி வளர்ச்சியை தூண்ட உதவும்; தேனினால் ஏற்படும் கூந்தல் நன்மைகளை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

நன்மை 1: தலைமுடி வளர்ச்சி

Hair growth
Image: Shutterstock

தேன் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் என்பது பற்றிய போதிய ஆதாரம் இல்லை எனினும், இதை மருத்துவ ஆலோசனைக்கு பின் பயன்படுத்தி பார்ப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை; தேனினை ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தினால், அது முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

ஆலிவ் ஆயில் சூடாகும் வரை, அதை சாதாரணமாக சூடுபடுத்தவும்; சூடான எண்ணெயுடன், 2 தேக்கரண்டிகள் தேனை சேர்த்து (வேண்டுமெனில் முட்டையின் வெள்ளைக்கருவையும் சேர்த்து கொள்ளலாம்) நன்கு கலக்கவும். பின் இதனை பயன்படுத்தி தலைமுடியை ஈரமாக்கவும்; தலையை 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும். பிறகு எப்பொழுதும் போல் தலையை ஷாம்பூ பயன்படுத்தி கழுவவும். இந்த கலவை வறண்ட கூந்தலை சரிப்படுத்தவும் உதவும்.

நன்மை 2: பொடுகு

தலையில் ஏற்படும் பொடுகை போக்க தேனை அப்படியே பயன்படுத்துவது நல்லது; தேன் மற்றும் நீரை, 9:1 என்ற விகிதத்தில் கலந்து கொள்ளவும். அக்கலவையை கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்; இதனை 3 மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிடவும்; பின் கழுவவும், இந்த செயல்முறையை வாரம் ஒருமுறை செய்து வரவும்.

நன்மை 3: உச்சந்தலையை சுத்தப்படுத்தும்

1 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட நீர் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்; தலையை ஈரமாக்கிய பின், இந்த கலவையை கொண்டு உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் நன்கு கழுவி விடவும்; இதனை தொடர்ந்து தலைக்கு கண்டிஷனரை பயன்படுத்தவும்.

தேன் மிகவும் அருமையான நன்மைகளை வழங்குகிறது; ஆனால், அப்படிப்பட்ட தேனை பற்றி நீங்கள் ஒரு முக்கிய விஷயத்தை அறிய வேண்டியது அவசியம் – அது தேனை எப்படி பயன்படுத்துவது, தேனினை உணவு முறையில் எப்படி சேர்த்துக் கொள்வது என்பது தான். அது குறித்து கீழே படித்தறியுங்கள்.

தேனை பயன்டுத்துவது எப்படி?- How to Use Honey in Tamil

தேனை தினசரி பயன்படுத்துவது மிகவும் எளிதான விஷயம் ஆகும்; தேனை கீழ்க்கண்ட வழிகளில் தினமும் பயன்படுத்தலாம்:

  • சாலட் உணவுகளில் தேனை தேவையான அளவு சேர்த்து உட்கொள்ளலாம்
  • தேநீரில் சர்க்கரை சேர்ப்பதற்கு பதிலாக, தேனை சேர்த்து பருகலாம்
  • இரவு தூங்க செல்லும் முன், பாலில் தேன் கலந்து பருகலாம் மற்றும் இதனை ஒரு தினசரி பழக்கமாக்கி கொள்ளலாம்.

தேனினால் ஏற்படும் பக்க விளைவுகள் – Side Effects of Honey in Tamil

தேனினால் பல நன்மைகள் ஏற்படினும், ஒரு சில பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு; அவ்வகையில் தேனினால் ஏற்படும் பக்க விளைவுகளாவன:

  • ஒவ்வாமை (அலர்ஜி)

செலரி, மகரந்தம் சார்ந்த சென்சிட்டிவிட்டி அல்லது தேனீ சார்ந்த ஒவ்வாமைகளை கொண்ட நபர்கள், தேனை பயன்படுத்துவதில் இருந்து விலகி இருக்க வேண்டும்; தேன் கூடு தொடர்பான அலர்ஜி, உதடு அல்லது நாக்கில் அழற்சி, மூச்சுத்திணறல், குரல் மாறுபாடுகள், பெரு மூச்சுத்திணறல் போன்ற குறைபாடுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

  • இதர பக்க விளைவுகள்

சரியற்ற இதய துடிப்பு, மங்கிய பார்வை, தலை சுற்றல், டையேரியா, பலவீனம், காய்ச்சல் ஆகிய அசௌகரிய பிரச்சனைகளை தேன் ஏற்படுத்தலாம் மற்றும் சில நபர்களின் உடலில் தேன் ஒரு நஞ்சாக, போதை பொருளாக மாறலாம். உதிரப்போக்கு நேரும் வாய்ப்பை தேன் அதிகரித்து விடலாம்.

  • கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தேனை உபயோகிக்கலாம் என்பதை உறுதிப்படுத்த, போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை; தேனில் இருக்கும் சில பொருட்களால் இப்பெண்மணிகளுக்கு அபாயம் நேரிடலாம்; ஆகையால், கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உரிய மருத்துவ ஆலோசனை இல்லமல் தேனை உபயோகிக்க வேண்டாம்.

நம்மில் பலருக்கு தேன் ஒரு பிடித்தமான உணவாக இருந்திருக்கும்; உங்களுக்கும் பிடிக்கும் அல்லவா? தேனை நாம் தினந்தோறும் பயன்படுத்தும் ஒரு உணவாக அமைத்து கொண்டால், பல நன்மைகளை பெறலாம். இதை நாம் ஒவ்வொருவரும் செயல்படுத்தினால், தேனினால் நிகழும் மாற்றங்கள் நமக்கே பயனளிக்கும்; எனினும், உரிய மருத்துவ கலந்தாய்வுக்கு பின் தேனை பயன்படுத்துவது சாலச் சிறந்தது.

தேன் மற்றும் அது குறித்த இந்த ஒட்டு மொத்த விவரங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா என்பதை கமெண்ட் பாக்ஸ் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்..!

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles