கர்ப்ப காலத்தில் தைராய்டு சிக்கல்

Written by
Last Updated on

In This Article

தைராய்டு ஹார்மோன் என்பது மனித உடலின் உடற்செயலிய வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் ஒரு மிக முக்கிய ஹார்மோன் ஆகும் மற்றும் கர்ப்ப காலத்தில் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு இது மிக முக்கியமானது ஆகும். ஆனால், பொதுவாக பெண்கள் கருத்தரிக்கும் பொழுது அதாவது கர்ப்ப காலத்தில், அவர்தம் உடலில் தைராய்டு ஹார்மோனின் அளவு அதிகரித்தோ அல்லது குறைந்தோ காணப்படும்; மேலும் இது ஒரு சில அறிகுறிகளையும் வெளிக்காட்டலாம். தைராய்டு ஹார்மோன் அளவில் ஏற்படும் மாற்றங்களை ஒரு சில பரிசோதனைகள் மூலம் அறிந்து தைராய்டின் அளவுகளை அடிக்கடி கண்காணித்து கொள்ளலாம் மற்றும் ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களை உண்டாக்கி, தைராய்டு ஹார்மோனின் அளவை சரியான அளவில் பராமரிப்பது எப்படி என்றும் படித்து அறிந்து கொள்ளலாம்.

MomJunction அளிக்கும் இந்த பதிப்பில், கர்ப்ப காலத்தில் தைராய்டு சுரப்பி – ஹார்மோனின் பங்கு என்று விரிவாக படித்து அறியலாம்; மேலும் தைராய்டு பிரச்சனையை உண்டாக்கும் காரணிகள் யாவை, இது எப்படி கர்ப்பத்தை பாதிக்கும் மற்றும் இதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை பற்றியும் இங்கு படித்து அறிந்து கொள்ளலாம்.

தைராய்டு சுரப்பி

தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி, இது கழுத்தின் கீழ் பகுதியில் அதாவது ஆதாமின் ஆப்பிள் என்று கூறப்படும் பகுதிக்கு கீழாக அமைந்துள்ளது; இச்சுரப்பி வண்ணத்துப்பூச்சி வடிவில் காணப்படும். பல உடற்செயலிய மாற்றங்களை, உடற்செயலிய இயக்கங்களை கட்டுப்படுத்தும், ஆற்றலை பராமரித்தல், நெஞ்செரிச்சல், உடல் வளர்சிதை மாற்றம் போன்ற உடலியல் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ஹார்மோனை இச்சுரப்பி உற்பத்தி செய்கிறது (1). தைராய்டு ஹார்மோனின் அளவு மிகவும் அதிகமானால், அந்நிலையை ஹைப்பர் தைராய்டிசம் (hyperthyroidism) என்றும், தைராய்டு ஹார்மோனின் அளவு மிகவும் குறைந்தால், அந்நிலையை ஹைப்போ தைராய்டிசம் (hypothyroidism) என்றும் வழங்குவர். கர்ப்ப காலத்தின் பொழுது இவற்றில் எந்த நிலை ஏற்பட்டாலும், அது கர்ப்பத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

தைராய்டு சுரப்பி கர்ப்பத்திற்கு எவ்வாறு உதவுகிறது?

கருவில் வளரும் சிசுவின் ஆரோக்கியம் மற்றும் கருவின் நரம்பு மண்டல வளர்ச்சியில் தைராய்டு ஹார்மோன் ஒரு முக்கிய, குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது; முதல் ட்ரைமெஸ்டரின் பொழுது கருவறையில் உள்ள குழந்தைக்கு தாயின் உடலில் இருந்து நஞ்சுக்கொடி வழியாக தைராய்டு ஹார்மோன் அளிக்கப்படும்; இக்காலகட்டத்தில் தைராய்டு ஹார்மோனிற்காக கரு, தாயை சார்ந்து இருக்கும். 12 ஆவது வார கர்ப்பத்தில் குழந்தையின் உடலிலேயே தைராய்டு ஹார்மோன் சுரக்க தொடங்கிவிடும்; ஆனால், 18 ஆவது அல்லது 20 ஆவது வாரம் வரை, குழந்தையின் உடலால்  உடற்செயல்பாடுகளுக்கு தேவையான அளவு தைராய்டு ஹார்மோனை சுரக்க முடியாது (2).

கர்ப்ப காலத்தில் தைராய்டு ஹார்மோன்களின் பங்கு என்ன?

தைராய்டு சுரப்பி ட்ரைஐயோடோதைரோனைன் [triiodothyronine (T3)] மற்றும் தைராக்சின் [thyroxine (T4)] போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்து, அவற்றை இரத்த ஓட்டத்தில் சேர்த்து விடும். இந்த ஹார்மோன்கள் இரத்த ஓட்டம் வழியாக இதயம், எலும்புகள், மூளை, தோல், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற வெவ்வேறு உடல் உறுப்புகளை சென்றடைந்து, அவற்றின் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தும்.

உடலில் ஹார்மோன்களின் அளவு குறைந்து காணப்படுவதை அறிந்து, மூளையின் ஒரு பகுதியான ஹைப்போதலாமஸ் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்த முயலும் சமயத்தில் இந்த இரண்டு ஹார்மோன்களும் தைராய்டு சுரப்பியில் இருந்து சுரக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. ஹைப்போதலாமஸ் பகுதி TSH எனும் தைராய்டு தூண்டுதல் ஹார்மோன் எனும் ஹார்மோனை சுரந்து உற்பத்தி செய்யும்; இது பிட்யூட்டரி சுரப்பியை தூண்டி T3 மற்றும் T4 ஹார்மோன்களை வெளியிடச் செய்யும். இம்மூன்று ஹார்மோன்களில் சமநிலையற்ற நிலை ஏற்பட்டால், இதனால் இரண்டு தைராய்டு நிலைகள் ஏற்படலாம். அவற்றை பற்றி கீழ்க்கண்ட பத்திகளில் விரிவாக படிக்கலாம் (3).

கர்ப்ப காலத்தில் தைராய்டு நிலையை வளர்ப்பதில் உள்ள அபாயங்கள் என்ன?

இரண்டு தைராய்டு நிலைகளில் எந்நிலை ஏற்பட்டாலும் அதனால் ஆபத்து ஏற்படுவது உறுதியே! கீழ்க்கண்ட ஆபத்து நிலைகள் உண்டாகலாம்:

  1. தைராய்டு செயலிழப்பு ஏற்பட்டால், அது முதல் ட்ரைமெஸ்டரின் பொழுது மற்றும் இரண்டாம் ட்ரைமெஸ்டரின் பாதியில் கர்ப்பிணியின் உடலில் சர்க்கரை அளவை அதிகரித்து விடலாம் (4).
  2. கர்ப்ப காலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் ஹைப்போ தைராய்டிசம் ஏற்பட்டால், அது கருவில் வளரும் சிசுவின் மூளை வளர்ச்சியை பாதிக்கலாம் (5).
  3. அதிக தைராய்டு செயல்பாடு மற்றும் குறைந்த hCG கொண்ட பெண்களில், பிரீகிளாம்ப்சியா (preeclampsia) எனும் முன்சூல்வலிப்பு ஆபத்து ஏற்பட்டு விடலாம் (6).
  4. தன்னிச்சையான நோயெதிர்ப்பு குறைபாடுகள் கொண்ட பெண்கள் யாரேனும் தைராய்டு நிலையை முன்பு கொண்டிருந்தால் அல்லது குடும்ப உறுப்பினர்களின் மரபில் தைராய்டு சுரப்பி செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் தைராய்டு சுரப்பி செயலிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு (7).

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் குறைபாடுகள் குறித்து தொடர்ந்து படித்தறியுங்கள்.

தைராய்டு நிலைகளில் உள்ள முக்கிய வகைகள் யாவை?

தைராய்டு ஹார்மோன் தொடர்பாக ஏற்படும் பாதிப்பு நிலைகள் இரு வகைப்படும்; அவையாவன: ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம்.

1. அதிதைராய்டிசம்/ ஹைப்பர் தைராய்டிசம்

இந்நிலையில், தைராய்டு சுரப்பி உடலுக்கு தேவையான அளவை விட, அதிக அளவு தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்துவிடும்; தைராய்டு சுரப்பி அதீத செயல்பாட்டு நிலையில் இருக்கும் பொழுது இந்நிலை ஏற்படும். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1% மக்கள் ஹைப்பர் தைராய்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இந்நிலை மனிதர்களின் உடற்செயல்பாடு மற்றும் இதயத்துடிப்பை அதிகரித்துவிடும். ஹைப்பர் தைராய்டிசம் என்பது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகம் உண்டாகும் (8) (9).

2. ஹைப்போதைராய்டிசம்

தைராய்டு சுரப்பியால் போதுமான அளவு T4 ஹார்மோனை சுரக்க முடியவில்லை எனில், அதன் விளைவாக ஹைப்போ தைராய்டிசம் ஏற்படலாம். தைராய்டு சுரப்பி சரிவர செயல்படாமல் இருந்தால் அல்லது ஹைப்போதலாமஸ்/ பிட்யூட்டரி சுரப்பி செயல்படாமல் இருந்தால் இந்நிலை ஏற்படும். மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 5% மக்கள் ஹைப்போ தைராய்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்; சாதாரணமாகவே, இக்குறைபாடு ஆண்களை காட்டிலும் பெண்களில் தான் அதிகம் ஏற்படுகிறது (10).

கர்ப்ப காலத்தில் இவ்வகை தைராய்டு நிலை ஏற்பட்டால், அது சில குறிப்பிட்ட உடலியல் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

கர்ப்ப காலத்தில் ஹைப்பர் தைராய்டிசம்

கர்ப்ப காலத்தில் இது அரிதாக ஏற்படும் ஒரு விஷயம் ஆகும்; ஆனால், கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனை ஏற்பட்டால் அது எப்படி ஏற்பட்டது, என்ன காரணம், என்ன அறிகுறி, இதன் விளைவுகள் என்னென்ன என்பது போன்ற தகவல்களை அறிந்து வைத்திருந்தால் இக்குறைபாட்டை எளிதில் கையாளலாம்.

ஹைப்பர் தைராய்டிசத்திற்கான காரணங்கள்

கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒரு காரணத்தினாலும் அதிகப்படியான தைராய்டு ஹார்மோன் சுரப்பு ஏற்படலாம்.

  1. கல்லறைகளின் நோய்: கிட்டத்தட்ட 80 முதல் 85% வரையிலான கர்ப்ப கால ஹைப்பர் தைராய்டிசம் ஏற்பட்ட விவகாரங்கள், கல்லறைகளின் நோய் எனும் நோய்க்குறைபாட்டால் ஏற்பட்டவையாக திகழ்கின்றன. எது எப்படி இருப்பினும், இந்நிலை 1000 பேரில் 1 அல்லது 2 நபர்களுக்கு ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையால் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகம் செயல்பட்டு, தைராய்டு சுரப்பியை பெரிதாக்கி – அதனை அதிக அளவு தைராய்டு ஹார்மோனை சுரக்கச் செய்கிறது (11).
  2. ஹைபரெமஸிஸ் கிராவிடாரம்: கர்ப்ப காலத்தில் அதிகப்படியான குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டால், அது கர்ப்பிணி பெண்களில் ஹைப்பர் தைராய்டிசம் ஏற்பட்டிருப்பதை குறிக்கும் (12).
  3. மற்றவை: சில இதர, அரிய நிலைகளில், கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதி தைராய்டிசம், சுரப்பியில் முடிச்சுகளின் உருவாக்கம், அதிக அளவிலான hCG மற்றும் கர்ப்பகால ஹைப்பர் தைராய்டிசம் போன்றவற்றை உள்ளடக்கும்(13).

ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள்

ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கும், இதர பெண்களுக்கும் வெவ்வேறு விதமான அறிகுறிகள் ஏற்படலாம்; இங்கு பொதுவாக  பெண்களுக்கும் ஏற்படக்கூடிய சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன (14):

  • எரிச்சல் மற்றும் பதட்டம்
  • குழப்பம் மற்றும் அதிகரித்த வியர்வை
  • உடையக்கூடிய கூந்தல் மற்றும் தோல் மெலிந்து காணப்படுதல், நடுங்கும் கைகள், பலவீனமான கைகள் மற்றும் தொடை தசைகள்
  • எடை இழப்பு மற்றும் தூங்குவதில் சிக்கல்
  • உயர் இரத்த அழுத்தம் மற்றும் விரைவான இதய துடிப்பு

கர்ப்ப காலத்தில் ஹைப்பர் தைராய்டிசத்தின் விளைவுகள்

கர்ப்பிணி பெண்களில் ஏற்படும் இது போன்ற ஒரு அரிதான நிலையால், சில குறிப்பிடத்தக்க, கவனிக்கப்படாத சிக்கல்கள் உருவாகலாம் (15).

அன்னையரில் உருவாகும் விளைவுகள்:

  • நஞ்சுக்கொடி சீர்குலைவு
  • நச்சுக்குருதி
  • தைராய்டு நெருக்கடி
  • முன்கூட்டிய பிரசவம்/ குறை பிரசவம்

குழந்தைகளில் உருவாகும் விளைவுகள்:

  • குறைந்த பிறப்பு எடை
  • கர்ப்ப கால வயதிற்கு சிறிய, குறைந்த அளவு
  • கருப்பையக வளர்ச்சி குறைபாடு

அடுத்ததாக, கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹைப்போ தைராய்டிசத்திற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள் மற்றும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் ஹைப்போ தைராய்டிசம்

கர்ப்ப காலத்தில் ஹைப்போ தைராய்டிசம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவது மிகவும் கடினமான விஷயம் ஆகும்; ஏனெனில் இதன் அறிகுறிகள், கர்ப்ப கால அறிகுறிகளை ஒத்தவை.

ஹைப்போ தைராய்டிசத்திற்கான காரணங்கள்

ஹைப்போ தைராய்டிசத்தை ஏற்படுத்தும் சில பொதுவான காரணிகள்:

  1. ஹாஷிமோடோவின் தைராய்டிடிஸ்: இந்த தன்னிச்சையான நோயெதிர்ப்பு குறைபாடு, கர்ப்ப காலத்தில் ஹைப்போ தைராய்டிசத்தை உண்டாக்கலாம். இந்த நிலையில் நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகளை அனுப்பி, சுரப்பியில் உருவாகியுள்ள செல்களை அழிக்க முயலும். மேலும் இது தைராய்டு சுரப்பியின் அளவை பெரிதாக்கும், கோய்டெர் (goiter) அதாவது குரல் வளை சுரப்பியில் ஏற்படும் வீக்கம் என்று அழைப்பர் (16).
  2. இரும்புச்சத்து குறைபாடு: கர்ப்பிணிகளின் உணவு முறையில் போதுமான அளவு, உடல் செயல்பாடுகளுக்கு தேவையான அளவு அயோடின் இல்லையெனில், அது கர்ப்ப காலத்தில் தைராய்டு ஹார்மோனின் அளவுகளை குறைத்துவிடலாம் (16).

ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள்

ஹைப்போ தைராய்டிசம் என்பது தைராய்டு ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் குறைபாட்டால் ஏற்படும் நிலை ஆகும்; இதனால் உடற்செயலிய வளர்சிதை மாற்றங்கள் மெதுவாக நடைபெறலாம். இந்நிலையை சுட்டிக்காட்டும் அறிகுறிகள் மிக இலேசானவை அல்லது இந்நிலைக்கான அறிகுறிகள் கர்ப்ப கால அறிகுறிகளை ஒத்துக் காணப்படுகின்றன.

  • எடை அதிகரிப்பு மற்றும் முகத்தின் வீக்கம்
  • சோர்வு
  • மலச்சிக்கல், கூச்ச உணர்வு அல்லது கையில் வலி, மற்றும் தசைப்பிடிப்பு
  • கரடுமுரடான குரல், முடி மற்றும் தோலில் ஏற்படும் மாற்றங்கள்
  • மெதுவான இதய துடிப்பு மற்றும் கவனம் செலுத்துவதில் சிக்கல்

கர்ப்ப காலத்தில் ஹைப்போ தைராய்டிசத்தின் விளைவுகள்

ஹைப்போ தைராய்டிச குறைபாட்டினை சரி செய்யவில்லை எனில், அதனால் சில தீவிர சிக்கல்கள் ஏற்படலாம் (17).

அன்னையரில் உருவாகும் விளைவுகள்:

  • தன்னிச்சையான கருச்சிதைவு
  • முன்சூல்வலிப்பு
  • பெரினாட்டல் இறப்பு
  • அப்ரப்டியோ நஞ்சுக்கொடி

குழந்தைகளில் உருவாகும் விளைவுகள்:

  • முன்கூட்டிய பிறப்பு
  • சாதாரண எடையை விட குறைந்த எடை
  • குறைந்த மன திறன்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தைராய்டு நிலைகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை தடுக்கலாம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசத்தை கண்டறிதல்

கர்ப்பிணிகளின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை பரிசோதித்து, தைராய்டு சுரப்பியின் செயலிழப்பை பற்றி கண்டறிய மருத்துவர்கள் சில சோதனைகளை பரிந்துரைப்பார்கள்; அதில் உள்ளடங்கும் முக்கிய பரிசோதனைகளாவன:

  • T3 -க்கான சோதனை
  • T4 -க்கான சோதனை
  • தைராய்டு ஆன்டிபாடி சோதனைகள்
  • தைராய்டு தூண்டுதல் சோதனைகள்

இந்த பரிசோதனைகள் முக்கியமாக T4 மற்றும் TSH ஹார்மோன் அளவுகளை மதிப்பிட்டு, கர்ப்பிணி பெண்களில் ஏற்பட்டுள்ள தைராய்டு நிலையை குறித்து கண்டறியலாம். உதாரணத்திற்கு TSH ஹார்மோனின் அளவு அதிகமிருந்து, T4 ஹார்மோன் குறைவாக இருந்தால், அது ஹைப்போ தைராய்டிசத்தையும், T4 ஹார்மோன் அதிகப்படியாக இருந்தால் அது ஹைப்பர் தைராய்டிசத்தையும் குறிக்கும் (18).

பரிசோதனைகளில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில், மருத்துவர்கள் தைராய்டு நிலைக்கான சிகிச்சை முறையை பரிந்துரைப்பர்.

ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசத்திற்கான சிகிச்சை முறைகள்

ஹைப்பர் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகிய இரண்டு நிலைகளுக்கும், அந்நிலைகளை குணப்படுத்த மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹைப்பர் தைராய்டிசத்தை உரிய நேரத்தில் குணப்படுத்தினால் மட்டுமே மேற்கொண்டு சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். பொதுவாக தைராய்டு எதிர்ப்பு மருந்துகளாக (ATDs) ப்ரோட்ரக் கார்பிமசோல் (prodrug carbimazole), மெதிமசோல் (methimazole) மற்றும் புரோபில்தியோரசில் (propylthiouracil) போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு தைராய்டு ஹார்மோனின் அதீத உற்பத்தியை தடுத்து நிறுத்த உதவுகின்றன (19).

பொதுவாக, லெவோதைராக்சின் மருந்து ஹைப்போ தைராய்டிசத்தை குணப்படுத்த பரிந்துக்கப்படுகிறது; தைராக்சின் மருந்தின் அளவு, தைராய்டு ஹார்மோன் நிலையின் தீவிரத்தை பொறுத்து பரிந்துரைக்கப்படும் (20). தைராய்டு நிலைகளை சரிவர பராமரித்து அவற்றிலிருந்து விடுபட்டு நலம் பெற, குறிப்பிட்ட உணவு முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தைராய்டு செயலிழப்புக்கான ஊட்டச்சத்து குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தைராய்டு செயலிழப்பை சரிப்படுத்த உதவும் ஊட்டச்சத்து குறிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஹைப்பர் தைராய்டிசத்திற்காக:

கீழ்க்கண்ட உணவு முறை குறிப்புகள், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹைப்பர் தைராய்டிசத்தை அதாவது அதிகப்படியான தைராய்டு ஹார்மோன் அளவுகளை சரியான அளவுக்கு கொண்டுவர உதவும்.

  1. ஐயோடின் நிறைந்த உணவுகளான டல்ஸ், கெல்ப் கடல் கஞ்சா போன்றவற்றை உட்கொள்வதை எல்லைக்குள் வைக்கவும்; ஐயோடின் சத்துக்களை கொண்ட சப்ளிமெண்ட்டுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் (21).
  2. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான வெள்ளை பீன்ஸ், பருப்புகள், சிறுநீரக பீன்ஸ், கோழி மற்றும் செலினியம் நிறைந்த உணவுகளான பிரேசில் நட்ஸ், பிரட், பிரௌன் ரைஸ், பொறி போன்றவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொண்டால் தைராய்டு பிரச்சனைகளை தவிர்க்கலாம் (22).
  3. ஜிங்க் எனும் துத்தநாகம் நிறைந்த உணவுகளான ஆய்ஸ்டர்கள், மாட்டிறைச்சி, யோகர்ட், பூசணி விதைகள் & வைட்டமின் டி நிறைந்த உணவுகளான ஆரஞ்சு சாறு, டூனா மீன், வாள் மீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகள் போன்றவற்றை உட்கொண்டால், ஹைப்பர் தைராய்டிசத்தால் ஏற்படும் ஜிங்க் மற்றும் இதர ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்யலாம் (23) (24).
  4. நைட்ரேட் நிறைந்த உணவுகளான பதப்படுத்தப்பட்ட உணவுகள், கருவுற்ற காய்கறிகள் மற்றும் குளூட்டன் கொண்ட உணவுகளான கோதுமை, ரை, பார்லி போன்ற உணவுகளை, கர்ப்ப கால ஹைப்பர் தைராய்டிச குறைபாடு கொண்ட பெண்கள் தவிர்க்க வேண்டும் (25) (26).

ஹைப்போ தைராய்டிசத்திற்காக:

தைராய்டு ஹார்மோனின் அளவை அதிகரிக்க, செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்:

  1. ஐயோடின் நிறைந்த உணவுகளான முட்டைகள், பால் பொருட்கள், மீன் மற்றும் கடல் உணவுகளை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் (27).
  2. உடலில் தைராய்டு ஹார்மோன் சரியான அளவில் இருந்து, செயல்பட ஜிங்க் மற்றும் செலினியம் போன்ற தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்; தாதுச்சத்துக்கள் நிறைந்த சில உணவுகளான முட்டைகள், சிக்கன், பிரேசில் நட்ஸ் மற்றும் மீன் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும் (28).
  3. குளூட்டன் மற்றும் கோய்ட்ரோஜென்கள் போன்றவை ஹைப்போ தைராய்டிசம் கொண்டுள்ள நபர்களில் தீங்கினை ஏற்படுத்தி விடலாம்; ஆகவே இத்தகைய சத்துக்களை கொண்ட உணவுகளான நிலக்கடலை, டோபு, முட்டைகோஸ், கீரை, பார்லி, ரை, கோதுமை போன்றவற்றை தவிர்க்க வேண்டும் (29) (30).

உணவு முறையுடன் கூடுதலாக, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் மட்டுமே தைராய்டு நிலைகளை சமாளித்து, அவற்றால் சிக்கல்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க முடியும்.

கர்ப்ப காலத்தில் தைராய்டு சிக்கல்களைத் தவிர்ப்பது எப்படி?

வாழ்க்கை முறையில் சில குறிப்பிட்ட மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம், தைராய்டு ஹார்மோன் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாகும் உடலியல் சிக்கல்களில் இருந்து விடுபட்டு வாழலாம்.

  1. புகை பிடித்தல் தைராய்டு சுரப்பி செயலிழப்பை ஏற்படுத்தலாம்; எனவே, கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் நபர்கள் அல்லது கர்ப்பமாக இருக்கும் பெண்கள் புகை பிடித்தலை கைவிட வேண்டியது அவசியம் (31).
  2. சோயா உணவுகளை அதிகப்படியாக உட்கொள்வது கர்ப்ப காலத்தில் தைராய்டு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்; ஆகவே சோயா உணவுகளை உட்கொள்வதை குறைத்துக் கொள்ளவும் (32).
  3. தொடர்ந்து தைராய்டு அளவுகளை சோதித்து வரவும்
  4. கர்ப்ப காலத்தில் தைராய்டு ஹார்மோன்களை சரியான அளவில் வைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

தைராய்டு ஹார்மோன் நிலை என்பது சமாளிக்க முடியாத அளவுகளை எட்டும் பொழுது மட்டுமே அதனால் பாதிப்பு ஏற்படும்; அத்தகைய நிலைகளில் மட்டுமே அதைக்குறித்து கவலைப்பட வேண்டும். சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறை மேலாண்மை, மருத்துவர் பரிந்துரைத்த முறையான மருந்துகள் ஆகியவற்றை சரியாக எடுத்துக் கொண்டால், மேற்கொண்டால் தைராய்டு நிலைகளை எளிதில் கட்டுக்குள் வைக்கலாம்; மேலும் தொடர்ந்து தைராய்டு ஹார்மோன் அளவுகளை பரிசோதித்து கொள்வது நல்லது. கர்ப்ப காலத்தில் சரியான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மேற்கொண்டால், தைராய்டு பிரச்சனை ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம்.

கர்ப்பிணிகள் மட்டும் இல்லாமல், அனைவருமே உடலில் தைராய்டு ஹார்மோன்கள் கூடாமல், குறையாமல் சரியான அளவில் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்; தைராய்டு ஹார்மோனை சரியான அளவில் பராமரிக்க முயல வேண்டும். தைராய்டு பிரச்சனையை சந்தித்த அனுபவம் உங்களுக்கு உண்டா? தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட, நீங்கள் மேற்கொண்ட வழிமுறைகள் பற்றி கீழே உள்ள கமெண்ட் பகுதி வாயிலாக எங்களுடன் பகிருங்கள்.

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles