உடல்நலத்தை காக்கும் இலவங்கப்பட்டையின் 10 பயன்கள்! – Cinnamon Benefits in Tamil

Written by Dinesh
Last Updated on

இலவங்கப்பட்டை ஒரு ஆற்றல் வாய்ந்த மசாலா பொருளாகும். இதன் நறுமணத்திற்காக மட்டுமல்லாமல் இதிலுள்ள சக்திவாய்ந்த மருத்துவ குணங்களுக்காகவும் பல ஆயிரம் ஆண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலவங்கப்பட்டையிலுள்ள முக்கிய பண்புகளான ஆண்டி ஆக்ஸிடென்ட், புற்றுநோய், நீரிழிவு நோய், மனக் கோளாறு, மூட்டு வீக்கம் போன்ற நோய்களை ஏற்படுத்தும் மூலக்கூறுகளை எதிர்த்து போரிடுகிறது. இப்படிப்பட்ட சக்திவாய்ந்த இலவங்கப்பட்டையின் பலன்கள் தெரிய வேண்டுமென்றால் தொடர்ந்து கீழே படியுங்கள்.

இலவங்கம் மரத்திலிருந்து எடுக்கப்படும் பட்டையே இலவங்கப்பட்டையாகும். சுவையும் நறுமணமும் கொண்ட இவை பெரும்பாலும் இலங்கையில் வளர்கின்றன. இலவங்கப்பட்டையில் பல வகைகள் இருந்தாலும், எல்லாம் ஒன்று அல்ல. இலவங்கப்பட்டையில் உள்ள படிக (கவுமாரின்) உள்ளடக்கம் தான் இதனை வேறுபடுத்துகிறது.

பொதுவாக இலவங்கப்பட்டையில் இருக்கும் கவுமாரின் என்ற பொருள் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதனால், இலவங்கப்பட்டையை எடுத்துக் கொள்ளும்போது குறைவான கவுமாரின் இருக்கும் இலவங்கப்பட்டையை தேர்வு செய்யுங்கள்.

இலவங்கப்படையில் நான்கு வகை உள்ளது. Different Types Of Cinnamon (And Which Is The Best)

  1. இந்தோனேசிய இலவங்கப்பட்டை (இதில் ஒரு கிலோவுக்கு 2.15 கிராம் படிக வகை (கவுமாரின்) இருக்கிறது)
  2. சைகான் இலவங்கப்பட்டை (இதில் ஒரு கிலோவுக்கு 6.97 கிராம் உள்ளது)
  3. கசியா இலவங்கப்பட்டை (இதில் ஒரு கிலோவுக்கு 0.31 கிராம் உள்ளது)
  4. சிலோன் இலவங்கப்பட்டை (இதில் ஒரு கிலோவுக்கு 0.0-017 கிராம் மட்டுமே உள்ளது)

அசல் இலவங்கப்பட்டை அல்லது மெக்சிக்கன் இலவங்கப்பட்டை என்றும் சிலோன் இலவங்கப்பட்டை அழைக்கப்படுகிறது. மற்ற எல்லாவற்றையும் விட பாதுகாப்பான இலவங்கப்பட்டை இதுவே. ஆனால் மற்றவற்றில் இருந்து இதனை எப்படி அடையாளம் கண்டுகொள்வது? நீங்கள் இலவங்கப்பட்டையை தூளாக வாங்கினால் கண்டுபிடிப்பது சிரமம். ஆனால் குச்சியாக வாங்கும் போது, எவற்றில் மெல்லிய அடுக்கு உள்ளதோ அவையே சிலோன் இலவங்கப்பட்டையாகும்.

உங்களுக்கு தேவையான சிலோன் இலவங்கப்பட்டை குச்சியை அமேசான் தளத்தில் வாங்கலாம். இதை நீங்கள் பல உணவுகளில் சேர்த்து பல அற்புதமான நன்மைகளை பெறுங்கள்.

இலவங்கப்பட்டையின் பலன்கள் என்ன?: (What Are The Benefits Of Cinnamon?)

1. இலவங்கப்பட்டையில் உள்ள சக்திவாய்ந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள்:

சக்திவாய்ந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட்டான பாலிபீனால் இலவங்கப்பட்டையில் நிரம்பியுள்ளது. மசாலா பொருட்களில் இலவங்கப்பட்டையில் தான் அதிகமான ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் உள்ளன. பாலிபீனால் தவிர பீனாலிக் ஆசிட் மற்றும் இதர ஃபிளவனாய்டுகளும் இலவங்கப்பட்டையில் உள்ளன. நமது ரத்தத்தில் நைட்ரிக் ஆசிட் உயராமல் குறைக்க உதவுகிறது இலவங்கப்பட்டை.

2. உங்கள் உடலில் வீக்கம் வராமல் பாதுகாக்கிறது

பல்வேறு வகையான வீக்கங்களை குறைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது. மற்ற மசாலாவோடு சேர்த்து இலவங்கப்பட்டையை நமது உணவில் பயன்படுத்தும் போது உங்களுக்கு தேவையான எதிர்ப்பு அழற்சி கிடைக்கிறது.

3. புற்றுநோய் வராமல் தடுக்கிறது

இலவங்கப்பட்டை புற்றுநோய் கட்டியை ஆரம்பக்கட்டத்திலேயே அழித்து, அது பரவவிடாமல் தடுக்கிறது. மேலும் இலவங்கப்பட்டையில் உள்ள பாலிபீனால், மூளை புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

4. உங்கள் இருதயத்தை பலப்படுத்துகிறது

நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை நிலைப்படுத்தி நெஞ்சு வலி வராமல் தடுக்கிறது இலவங்கப்பட்டை. பல விலங்குகளில் செய்யப்பட்ட ஆய்வின் படி ரத்த அழுத்தத்தை குறைக்க இலவங்கப்பட்டை பயன்படுவதாக தெரியவந்துள்ளது.

கொழுப்பு அதிகமான உணவை உண்பதால் ஏற்படும் உடல் நலக் கோளாறுகளையும் தீர்க்க இலவங்கப்பட்டை உதவுகிறது. உங்கள் உணவில் கொழுப்பை குறைக்க விரும்பினால், உடனடியாக இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

5. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது

இலவங்கப்பட்டையை சாப்பிடுவதால் நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் இலவங்கப்பட்டையை எடுத்துக்கொள்ளக் கூடாது. டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இலவங்கப்பட்டையை உணவில் எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாக குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

6. ஜீரனசக்தியை அதிகரிக்கிறது

இலவங்கப்பட்டையில் உள்ள எண்ணெய் சக்திவாய்ந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகளை கொண்டுள்ளது. செரிமானப் பாதையில் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்து இவை போராடுகிறது. நீங்கள் தினமும் அருந்தும் காலை தேனீரில் ஒரு சொட்டு இலவங்கப்பட்டை எண்ணையை சேர்த்து பருகுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

7. பற்களை பலப்படுத்தும்

பல் வலியை போக்க கூடிய சக்தி இலவங்கப்பட்டையில் உள்ளது. வாய் தொற்று மற்றும் துர்நாற்றத்தை போக்கவும் இலவங்கப்பட்டை பயன்படுகிறது. இலவங்கப்பட்டை குச்சியை மெல்வதால் அல்லது இலவங்கப்பட்டை தண்ணீரை வைத்து கொப்பளிப்பதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது.

8. தொண்டை வலியை குணப்படுத்துகிறது

இலவங்கப்பட்டையில் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகளும் ஆண்டி ஆக்ஸிடெண்ட்களும் இருப்பதால், எளிதாக தொண்டை வலியை போக்குகிறது. டீ ஸ்பூன் அளவு இலவங்கப்பட்டை தூளை நீங்கள் அருந்தும் தேனீரில் கலக்கி குடித்தால் உங்களுக்கு தேவையான நிவாரனம் கிடைக்கும்.

9. உங்கள் தோலின் நலத்தை மேம்படுத்தும்

முகப்பருவை போக்க சிறந்த மருந்து இலவங்கப்பட்டையில் உள்ளது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், மூன்று மேஜைக் கரண்டி தேனோடு ஒரு டீ ஸ்பூன் இலவங்கப்பட்டையை கலக்குங்கள். அந்த பசையை எடுத்து உங்கள் முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். பத்து நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் உங்கள் முகத்தை கழுவுங்கள். தீங்கு ஏற்படுத்தும் பாக்டீரியாவை இலவங்கப்பட்டை எதிர்த்து உங்கள் தோலின் ஈரத்தை மீடெடுக்கிறது.

முக்கிய குறிப்பு: ஒரு போதும் இலவங்கப்பட்டையை நேரடியாக தோலில் பூசாதீர்கள். அது எரிச்சலை ஏற்படுத்தும்.

10. முடி வளர உதவுகிறது

முடி வளர்வதற்கு இலவங்கப்பட்டை உதவுகிறது. உங்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர உதவி புரிகிறது இலவங்கப்பட்டை. அதற்கு முதலில் இலவங்கப்பட்டை பசையை தயார் செய்ய வேண்டும். முதலில் அரை கப் ஆலிவ் எண்ணையும் ஒரு டீ ஸ்பூன் தேன் மற்றும் இலவங்கப்பட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். தற்போது ஆலிவ் ஆயிலை அடுப்பில் வைத்து ஆவி வரும் வரை சூடு படுத்துங்கள். அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு தேனையும் இலவங்கப்பட்டையும் அதோடு சேருங்கள். நன்றாக கலக்கி, உங்கள் உச்சந்தலையில் பூசுங்கள். 15 நிமிடங்கள் கழித்து வழக்கம் போல் ஷாம்பூ போட்டு குளியுங்கள். வாரத்திற்கு ஒரு முறை இது போல் இலவங்கப்பட்டை பசையை பூசுவதால், உங்கள் முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு முடி கொட்டுவதும் நிற்கிறது.

இலவங்கப்பட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: (what Is The Nutritional Profile Of Cinnamon?)

இலவங்கப்பட்டையில் ஏராளமான கலோரிகள், வைட்டமின்கள், மினரல் சத்துக்கள் நிறைந்து கிடைக்கிறது. இதில், கார்ப்போஹைட்ரேட், நார்ச்சத்து உணவுகள், நல்ல கொழுப்பு, ஸ்டார்ச், புரேட்டீன், சர்க்கரை, ஆல்கஹால், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் கே, வைட்டமின் இ, தையமின், ரிபோஃப்ளாவின், நியாசின், வைட்டமின்பி6, ஃபோலேட், வைட்டமின்பி12, பேண்டோதெனிக் அமிலம், கோலைன்,கால்சியம், அயன், சோடியம், ஜிங்க்,காப்பர், செலினியம்,மாங்கனீசு உள்ளிட்டவைகள் இலவங்கப்பட்டையில் உள்ளது.

இலவங்கப்பட்டையை எடுத்து கொள்வது எப்படி? (How To Take Cinnamon)

  • இலவங்கப்பட்டை பொடியை சமையலில் சேர்ப்பதன் மூலம் அதிகசுவையும், மணமும் உணவிற்கு கிடைக்கிறது. ரம்மியமான மணத்தை தருவதாலும், உணவின் சுவையையை அதிகரிக்க செய்வதாலும் இதனை மசாலாவின் நாயகன் எனவும் அழைக்கின்றனர்.
  • இலவங்கப்பட்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருந்தாலும். ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைப்படி அதனை எடுத்துக் கொள்வதே நல்லது.
  • இலவங்கப்பட்டையை சூடான நீரில் போட்டு அதில் சில துளிகள் எலுமிச்சை சாறை விட்டு தேநீர் குடிப்பதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. இது கொழுப்பு அதிகம் கூடாமல் தடுக்க உதவுகிறது.

இலவங்கப்பட்டையின் விளைவுகள்: (What Are The Side Effects Of Cinnamon?)

கல்லீரல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இலவங்கப்பட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்களும், மாத்திரை மருந்து எடுத்துகொண்டு உள்ளவர்களும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். இரத்த கொதிப்பு உள்ளவர்களும், அறுவைச்சிகிச்சை செய்தவர்களும் இலவங்கப்பட்டையை தவிர்ப்பது நல்லது. மேலும், அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள உள்ளவர்களும் அறுவைச்சிக்சையின் 2 வாரத்திற்கு முன்பே இலவங்கப்பட்டையை தவிர்க்க வேண்டும்.

முடிவு

நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்தது இலவங்கப்பட்டை. இது நறுமணத்திற்காக மட்டும் பயன்படாமல் பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது என்பதை நம் கட்டுரை வாயிலாக தெரிந்து கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறோம். நீங்கள் உடல் எடையை குறைப்பவராக இருந்தால் இன்று முதலே இலவங்கப்பட்டையை எடுத்துக் கொள்ள தயாராகுங்கள்

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles