உதடுகளுக்கான லிப் ஸ்கிரப்பை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? – How to Make Lip Scrub at Home in Tamil
பெண்கள் அனைவருக்கும் தங்கள் அழகின் மீது ஒரு தீராத பேரார்வம் இருக்கத்தான் செய்யும்; தன்னுடைய முகம், உடல் அமைப்பு, உடை, அலங்காரம் என அனைத்தும் அழகாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் எண்ணுவர். அழகை குறித்து கவலைப்படாத பெண்கள் வெறும் சிலரே! அழகை பற்றி சிந்திக்கும் பெண்கள் குறிப்பாக அதிக கவனம் செலுத்தி பார்த்துக் கொள்வது தங்கள் முகத்தை தான். முகத்தில் உள்ள உறுப்புகளான உதடு, கன்னங்கள், கண்கள் ஆகியவற்றை அழகாக பராமரித்தால் தான், ஒருவரின் முகம் அழகுடன் திகழும்.
முகத்தில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் தனித்தனியே பிரத்யேகமான அழகு குறிப்புகள் உள்ளன; இந்த பதிப்பில் உதடுகளுக்கான பிரத்யேக அழகு குறிப்புகளை காணவிருக்கிறோம். உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்; உதடுகள் விரிசல்கள் மற்றும் வெடிப்புகள் இன்றி இருந்தால் தான் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். அழகான உதடுகள் இருந்தாலே, முகத்தின் அழகு ஒரு படி மேம்பட்டு விடும். உதடுகளை ஈரப்பதத்துடன், வெடிப்புகளின்றி வைத்துக் கொள்ள முறையான, சரியான லிப் ஸ்கிரப்பை பயன்படுத்த வேண்டும்; கடைகளில், செயற்கை முறைகளில் – வேதிப்பொருட்கள் கலந்து தயாரித்து விற்கப்படும் லிப் ஸ்கிரப் உதட்டின் சருமத்திற்கு நன்மை பயப்பதற்கு பதிலாக பக்கவிளைவை ஏற்படுத்தி விடலாம்.
ஆகவே இயற்கை முறையில், வேதிப்பொருட்கள் எதையும் சேர்க்காமல் தயாரிக்கப்படும் லிப் ஸ்கிரப்களே உபயோகிக்க சிறந்தவை. அப்படிப்பட்ட சரியான உதடுகளுக்கான லிப் ஸ்கிரப்பை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று இந்த பதிப்பில் தெளிவாக, விரிவாக, படிப்படியாக பார்த்து அறிவோம்.! பதிப்பில் கூறப்பட்டுள்ள செய்முறை விளக்கம் உதவியாக இருப்பது போல் உணர்ந்தால், படித்து முடித்ததும் பலரும் பயனடைய இப்பதிப்பை பரப்புங்கள்..!
In This Article
லிப் ஸ்கிரப் செய்வதற்கு தேவையான பொருட்கள்
ஒரு லிப் ஸ்கிரப்பில் இரண்டு உறுப்புகள் இருக்கும். அவையாவன: தளர்த்தி மற்றும் ஊட்டச்சத்து அளிக்கும் உறுப்பு ஆகியவை ஆகும். லிப் ஸ்கிரப்பில் இருக்கும் ஊட்டச்சத்து அளிக்கும் உறுப்பு மற்றும் ஈரப்பதம் கூடிய தளர்த்தி கொண்ட லிப் ஸ்கிரப்பை உதடுகளின் மீது தடவுவது மிக எளிய காரியமே! இவ்வாறு தடவுவதால் உதடுகள் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்; இது தவிர ஏராளமான நல்ல மாற்றங்கள் உதடுகளில் ஏற்படும். இவ்வாறு உதடுகள் அழகானால், அது முக அழகு மற்றும் அழகான தோற்றம் ஆகியவற்றை ஏற்படுத்த வழிவகுக்கும்.
இப்பொழுது இத்தகைய உதடுகளுக்கான லிப் ஸ்கிரப்பை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்றும், அதற்கான படி நிலைகள் என்னென்ன என்றும் பார்க்கலாம்.
லிப் ஸ்கிரப் செய்தல் மற்றும் அதை பயன்படுத்துதலுக்கான படி நிலைகள்
பொதுவாக குளிர்காலங்களில் சரும அழகு அதிகமாகவே பாதிக்கப்படும்; கோடை காலங்களிலும் வெயிலின் தாக்கத்தால் சில சரும பாதிப்புகள் நேரலாம். சருமத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத காலங்கள், இலையுதிர் காலமும், வசந்த காலமுமே ஆகும்; இருப்பினும் காலம் எத்தகையதாக இருந்தாலும் சருமத்தின் மீது முறையான பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், எக்காலத்திலும் சரும அழகு கெடாதவாறு பார்த்துக் கொள்ளலாம். அழகான சருமம் மற்றும் கவர்ச்சியான உதடுகளை பெற செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்தலாம் அல்லது வீட்டிலேயே இயற்கை முறையில் கிடைக்கும் அழகு குறிப்புகளை உபயோகிக்கலாம்; இல்லையேல் அழகு நிலையங்களுக்கு சென்று செயற்கை சாயங்களை, வேதிப்பொருட்கள் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தலாம்.
ஆனால், இதில் எது அறிவார்ந்த செயல் என்று பார்த்தால், ஒவ்வொருவரும் தனது சரும வகைக்கு ஏற்ற அழகு சாதன பொருட்களை வீட்டிலேயே இயற்கை முறையில் தயாரித்து கொள்வது தான். இப்பொழுது இந்த பகுதியில் வீட்டிலேயே லிப் ஸ்கிரப்பை செய்வது எப்படி என்று படித்து அறியலாம்:
- லிப் ஸ்கிரப் தயாரிக்க, எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் அதிக தீங்கு விளைவிக்காத ஒரு பொருளாக திகழ்வது சர்க்கரை தான். ஆகையால் சர்க்கரை தான் லிப் ஸ்கிரப் தயாரிப்பில் முதன்மையான உப பொருளாக விளங்கவிருக்கிறது; வீட்டிலேயே லிப் ஸ்கிரப் தயாரிக்க வெள்ளை சர்க்கரை மற்றும் நாட்டுச்சர்க்கரை என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால், இரண்டு சர்க்கரைகளும் வெவ்வேறு விதமான பலன்களை வழங்கும்.
- உதடுகளை அழகாக்கும் லிப் ஸ்கிரப்பை தயாரிப்பது குறித்து பார்க்கும் பொழுது, உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும் பொருட்களும் அவசியம். ஆகையால் உதடுகளை மிருதுவாக்க உதவும் பொருட்களை லிப் ஸ்கிரப் தயாரிப்பில் சேர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆகவே இருப்பதிலேயே மிகச்சிறந்த மற்றும் அதிகப்படியான மென்மையை தரக்கூடிய பொருட்களான தேன் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை லிப் ஸ்கிரப் தயாரிப்பில் பயன்படுத்தி கொள்ளலாம்.
- லிப் ஸ்கிரப் தயாரிக்க மிருதுத்தன்மை, முக்கிய நன்மை ஆகியவற்றை வழங்கும் பொருட்களை தேர்ந்தெடுத்த பின், மிக முக்கியமாக, கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டியது லிப் ஸ்கிரப்பிற்கு சுவை வழங்கும் பொருளை தான். ஏனெனில் லிப் ஸ்கிரப்பை உதடுகளின் மேல் பயன்படுத்தும் பொழுது, அதன் சுவை முகத்தை சுழிக்க வைக்காத வண்ணம் இருக்க வேண்டியது அவசியம். ஆகவே லிப் ஸ்கிரப்பிற்கு அருமையான சுவையை வழங்க, லிப் ஸ்கிரப் தயாரிப்பில் பட்டையை சேர்த்துக் கொள்ளலாம். இது லிப் ஸ்கிரப்பிற்கு சுவையை வழங்குவதோடு, நல்ல வாசத்தையும் தரும். பட்டை என்பது ஒரு இயற்கை சரிப்படுத்தி என்றே கூறலாம்; அதிலும் சருமம் மற்றும் உதடுகளில் ஏற்படக்கூடிய சரும பாதிப்புகளை சரிப்படுத்த பட்டை பெரிதும் பயன்படும். வீட்டின் சமையலறையில் கிடைக்கும் சர்க்கரை, பட்டை, தேன் போன்றவற்றை கொண்டே ஒரு அருமையான லிப் ஸ்கிரப்பை தயாரித்து விடலாம்.
இப்பொழுது வீட்டிலேயே லிப் ஸ்கிரப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்; அதிலும் குறிப்பாக சர்க்கரை சேர்த்த லிப் ஸ்கிரப் செய்வது எப்படி என்று ஒவ்வொரு படி நிலைகளாக பார்க்கலாம்.
படிநிலை 1: ஒரு சுத்தமான கண்ணாடி பௌலை எடுத்து கொள்ளுங்கள்
முதலில் ஒரு நல்ல கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; அதில் தேவையான பொருட்கள் அனைத்தையும் கலந்து, நன்கு கலக்கி கொள்ளுங்கள். இதில் 1 தேக்கரண்டி வெள்ளை சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள்.
குறிப்பு: நாம் இப்பொழுது எடுத்துக் கொள்ளும் தேவையான பொருட்களின் அளவு, மூன்று முறைகள் மட்டுமே பயன்படுத்த உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். மூன்று முறைகளுக்கும் மேல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ லிப் ஸ்கிரப் தேவைப்படும் நபர்கள் அதற்கேற்ற அளவில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
படிநிலை 2: நாட்டுச்சர்க்கரையை சேர்க்கவும்
இப்பொழுது அரை தேக்கரண்டி நாட்டுச்சர்க்கரையை எடுத்து, கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும். பதிப்பின் முற்பகுதியில் எந்த சர்க்கரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று கூறி இருந்தோம்; இரண்டு சர்க்கரைகளும் வெவ்வேறு வித நன்மைகளை அளிப்பதால், கூடுதல் நன்மைகளை பெற, இச்செய்முறையில் லிப் ஸ்கிரப் தயாரிக்க இரண்டு சர்க்கரைகளையும் பயன்படுத்துகிறோம்.
படிநிலை 3: தேனை கலக்கவும்
கிண்ணத்தில் உள்ள கலவையில் அரை தேக்கரண்டி தூய்மையான தேன் சேர்த்து கலக்கி கொள்ளவும்; தேவையான அளவுக்கேற்ப, தேவையான தன்மைக்கேற்ப தேனை சேர்த்துக் கொள்ளவும்.
படிநிலை 4: தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கொள்ளவும்
தேவையான பொருட்கள் அனைத்தையும், தேவையான – சரியான அளவில் எடுத்து ஒன்று சேர்த்து கொள்ளவும்
படிநிலை 5: கலவையில் பாதாம் எண்ணெயை சேருங்கள்
கிண்ணத்தில் தயாரித்து வைத்திருக்கும் கலவையில் பாதாம் எண்ணெயை சேருங்கள்; இவ்வாறு பாதாம் எண்ணெயை சேர்ப்பது ஒரு அருமையான லிப் ஸ்கிரப்பை செய்ய உதவும். இது மிகவும் பிசுபிசுப்பாக இருக்காது மற்றும் எண்ணெய் போன்ற உணர்வும் இருக்காது. இது சருமத்திற்கு அதிக நன்மைகளை வழங்க உதவும்.
படிநிலை 6: பட்டை பொடியை சேர்க்கவும்
மேற்கண்ட முறையில் தயாரித்து வைத்து இருக்கும் கலவையில் சிறிதளவு பட்டை பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள்; இது லிப் ஸ்கிரப்பின் சுவையை மாற்றி அமைக்கும் மற்றும் குண்டான உதடுகளை போக்கி, மெல்லிய அழகான உதடுகளை பெற உதவும். ஆனால், இந்த முறை எல்லோருக்கும் ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம்; ஆகவே சருமத்திற்கு ஏற்ற அழகு குறிப்பு முறையை பற்றி மருத்துவரிடம் கலந்தாலோசித்து உபயோகிக்கலாம்.
படிநிலை 7: பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளுங்கள்
கொடுக்கப்பட்ட கலவைகளை ஒன்றாக சேர்த்து, ஒரு மிருதுவான பேஸ்ட்டை தயாரித்து கொள்ளுங்கள்.
படிநிலை 8: உதட்டின் மீது தடவுங்கள்
மேற்கூறிய படிநிலைகளில் தயாரித்த லிப் ஸ்கிரப் பேஸ்ட்டை உதடுகளின் மீது தடவி, நன்கு மிருதுவாக தேய்த்து விடவும். சிறு சிறு அளவில், இந்த லிப் ஸ்கிரப் பேஸ்ட்டை எடுத்து 2-3 முறைகள் உதடுகளில் தடவி வரவும்; வாயின் ஓரங்களிலும் இப்பேஸ்ட்டை தடவலாம். பின்னர் சற்று நேரம் ஊற வைத்து, மிதமான சுடுநீர் கொண்டு உதடுகளை கழுவி விடுங்கள்; பிறகு தேவைப்பட்டால், வாசலின் அல்லது லிப் பால்மை உதடுகளின் மீது தடவிக் கொள்ளலாம். இவ்வாறு செய்வது உதடுகளுக்கு ஊட்டச்சத்து அளித்து, ஈரப்பதம் கொடுக்க உதவும்; ஒரு முறை இதை உதடுகளின் மீது தடவினால், அடுத்த 2 மணி நேரங்களுக்கு உதடுகளில் லிப் பால்ம் தடவ வேண்டிய அவசியம் இல்லை என்றே கூறலாம்.
மேலே கூறப்பட்டுள்ள படிநிலைகளின் படி, லிப் ஸ்கிரப்பை வீட்டிலேயே தயாரித்து விடலாம்; ஆனால், தேவையான நேரங்களில் எல்லாம் அதை பயன்படுத்தும் வகையில், லிப் ஸ்கிரப்பை பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டியது அவசியம். அடுத்து வரும் பத்தியில், வீட்டில் தயாரித்த லிப் ஸ்கிரப்பை சேமித்து வைப்பது எப்படி என்று காணலாம்.
லிப் ஸ்கிரப்பை சேமித்து வைப்பது எப்படி?
எப்பொழுதும் வீட்டில் எந்த ஒரு அழகு குறிப்பையும் தயாரிக்கும் பொழுதும் ஒரேயடியாக – ஒட்டு மொத்தமாக அதிக அளவில் தயாரித்து வைத்து விடாமல், தேவையான அளவு – சிறிய அளவில் மட்டுமே செய்து பயன்படுத்துவது அறிவில் சிறந்த செயல் ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம் தயாரித்த அழகு குறிப்புகள் அதிக வீரியத்துடனும், புதிதாகவும் இருக்கும்; பெரும்பாலும் எப்பொழுதெல்லாம், வீட்டில் அழகு குறிப்புகளை தயாரிக்கிறீரோ அந்த நேரங்களில் எல்லாம் ஒரு வாரத்திற்கு தேவையான அளவு அழகு குறிப்பை மட்டும் தயாரித்து கொள்ளவும்.
இவ்வாறு தயாரித்த லிப் ஸ்கிரப் போன்ற அழகு குறிப்பை சுத்தமான, வறண்ட மற்றும் காற்றுப்புகாத புட்டியில் இட்டு சேமித்து வைக்க வேண்டும்; ஆனால், லிப் ஸ்கிரப்பை சேமிக்கும் முன்னர் புட்டியை வெந்நீர் கொண்டு நன்கு கழுவி கொள்ளவும். இவ்வாறு வெந்நீர் கொண்டு கழுவுவதன் மூலம் புட்டியில், நோய்க்கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதை தடுக்க முடியும். புட்டியில் லிப் ஸ்கிரப்பை இட்டு, அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு வார காலத்திற்கு சேமிக்கலாம்.
லிப் ஸ்கிரப் வழங்கும் நன்மைகள்
லிப் ஸ்கிரப்பையோ அல்லது வேறு எந்த அழகு பொருளையோ ஒருவர் பயன்படுத்த வேண்டும் எனில், அவற்றால் அந்நபர் குறிப்பிட்ட அளவு பயன்களை அடைய வேண்டியது அவசியம். இந்த பகுதியில் வீட்டில் செய்யப்படும் லிப் ஸ்கிரப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்:
- உதடுகளை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது
- உதடுகளை வெடிப்புகளின்றி வைத்துக் கொள்ள உதவும்
- உதடுகளை விரிசல்களின்றி வைத்துக் கொள்ள உதவும்
- உதடுகளுக்கு ஊட்டச்சத்து அளிக்க உதவுகிறது
- உதடுகளில் காணப்படும் இறந்த மற்றும் தேவையற்ற செல்களை நீக்க உதவுகிறது
- உதடுகளின் மீது காணப்படும் கறைகள் மற்றும் வடுக்களை போக்க உதவும்
- உதடுகள் வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும்
- மென்மையான உதடுகளை பெற உதவும்
- தொடர்ந்து உதடுகளின் மீது லிப் ஸ்கிரப்பை பயன்படுத்தி வந்தால், கவர்ச்சிகரமான உதடுகளை பெறலாம்
- நன்கு தடித்த, குண்டான உதடுகளை பெற உதவும்
- உதடுகளில் காணப்படும் மாசுக்களை அகற்ற உதவும்
- உதடுகளை தளர்த்த உதவும்
- உதடுகளை தூய்மையாக வைக்க உதவும்
வீட்டிலேயே லிப் ஸ்கிரப்பை செய்ய உதவும் இதர பொருட்கள்
வீட்டிலேயே லிப் ஸ்கிரப்பை செய்ய, இந்த சர்க்கரை, தேன், பாதாம் எண்ணெய் இவற்றை தவிர வேறு பொருட்களை பயன்படுத்தி, வெவ்வேறு முறைகளில் லிப் ஸ்கிரப் தயார் செய்யலாம். இந்த பகுதியில் வீட்டில் இருந்தே லிப் ஸ்கிரப் செய்ய உதவும் இதர பொருட்கள் என்னென்ன என்று காண்போம்:
தேங்காய், புதினா, காஃபி, சாக்லேட், பட்டை, தேன், சர்க்கரை, ஆரஞ்சு தோல், பப்புள்கம், ரோஜா இதழ்கள், பால், எலுமிச்சை, பாதாம், வெண்ணிலா சுவை, வைட்டமின் ஈ, கடல் உப்பு, ஆஸ்பிரின், நாட்டுச்சர்க்கரை, ஷீ வெண்ணெய், கிவி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பொருட்கள் வீட்டிலேயே லிப் ஸ்கிரப் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகின்றன; இவை அனைத்தும் மிக பிரபலமான லிப் ஸ்கிரப் வழிமுறைகளாக விளங்குகின்றன. இவை அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடியவை மற்றும் இவற்றை கொண்டு வீட்டிலேயே லிப் ஸ்கிரப் செய்யலாம்.
வீட்டிலேயே லிப் ஸ்கிரப்பை செய்ய உதவும் வேறு வழிமுறைகள்
வீட்டில் லிப் ஸ்கிரப் செய்ய உதவும் இதர உப பொருட்களை பற்றி முந்தைய பதிப்பில் பார்த்தோம்; எந்தெந்த பொருட்களை கலந்து லிப் ஸ்கிரப் தயாரிக்க வேண்டும் மற்றும் லிப் ஸ்கிரப் செய்ய உதவும் முக்கிய, வேறு விதமான வழிமுறைகள் என்னென்ன என்று இந்த பத்தியில் பார்க்கலாம்:
- தேங்காய் மற்றும் தேன் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக தேங்காய் மற்றும் தேன் பயன்படுத்தப்படும்.
- புதினா லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக மின்ட் எனப்படும் புதினா பயன்படுத்தப்படும்.
- நாட்டுச்சர்க்கரை மற்றும் தேன் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக நாட்டுச்சர்க்கரை மற்றும் தேன் பயன்படுத்தப்படும்.
- சாக்லேட் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக சாக்லேட் பயன்படுத்தப்படும்.
- பட்டை லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக பட்டை பயன்படுத்தப்படும்.
- ஆரஞ்சு தோல் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக ஆரஞ்சு தோல் பயன்படுத்தப்படும்.
- பப்புள்கம் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக பப்புள்கம் பயன்படுத்தப்படும்.
- கிவி & ஸ்ட்ராபெர்ரி லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக கிவி மற்றும் ஸ்ட்ராபெர்ரி பயன்படுத்தப்படும்.
- காஃபி மற்றும் தேன் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக காஃபி மற்றும் தேன் பயன்படுத்தப்படும்.
- பாதாம் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக பாதாம் பயன்படுத்தப்படும்.
- ரோஜா இதழ்கள் மற்றும் பால் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக ரோஜா இதழ்கள் மற்றும் பால் பயன்படுத்தப்படும்.
- எலுமிச்சை லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக எலுமிச்சை பயன்படுத்தப்படும்.
- வெண்ணிலா தேங்காய் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக வெண்ணிலா சுவை, தேங்காய் பயன்படுத்தப்படும்.
- வைட்டமின் ஈ லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக வைட்டமின் ஈ பயன்படுத்தப்படும்.
- புதினா சாக்கோ காஃபி லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக புதினா சாக்கோ காஃபி பயன்படுத்தப்படும்.
- ஆஸ்பிரின் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக ஆஸ்பிரின் பயன்படுத்தப்படும்.
- கடல் உப்பு மற்றும் சர்க்கரை லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக கிவி மற்றும் ஸ்ட்ராபெர்ரி பயன்படுத்தப்படும்.
- ஷீ வெண்ணெய் – சர்க்கரை லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக ஷீ வெண்ணெய் – சர்க்கரை பயன்படுத்தப்படும்.
அழகு என்பதை என்ன தான் உடல் தோற்றம் தீர்மானித்தாலும், ஒருவர் கொண்டிருக்கும் அழகை மேலும் அழகாக்கி காட்ட புன்னகை என்பது அவசியம்; அப்புன்னகை அழகானதாக இருக்க, அழகான உதடுகளும் அவசியம். உதடுகளை அழகாக்க சந்தையில் கிடைக்கும் செயற்கை அழகு சாதன பொருட்களை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தாமல், இந்த மாதிரியான முறைகளில் காசை கரியக்காமல் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உதடுகளை அழகாக்க முயற்சியுங்கள்.
மேலும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினால், பக்க விளைவுகள் ஏதும் ஏற்படலாம்; அதுவே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவுகள் இன்றி, அழகு சார்ந்த பலன்களை மட்டும் பெறலாம். மேலும் நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் அல்லது இயற்கை முறை அழகு குறிப்புகள் உங்கள் உடல் தன்மைக்கு பொருந்துபவையா, அவற்றால் உடலின் சருமத்தில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது போன்ற விஷயங்களை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து, முறையான மருத்துவ ஆலோசனை செய்த பின் பயன்படுத்த தொடங்குவது நல்லது.
நீங்கள் வீட்டில் என்னென்ன அழகு குறிப்புகளை முயற்சித்துள்ளீர்கள்? வீட்டில் தயாரித்த அழகு சாதன பொருட்கள் எத்தகைய பலனை தந்தன? நீங்கள் லிப் ஸ்கிரப் தயாரித்தது உண்டா? என்பது போன்ற தகவல்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக எங்களுடன் பகிருங்கள்!
Community Experiences
Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.